திரையிட்டு விலகாதே! -24

திரையிட்டு விலகாதே! 

அத்தியாயம் -24

Hiiii வாசகர்களே ✨

அடுத்த நாள் கல்லூரி சென்று வந்த நான், மெசின் உள்ளே துணிகளை துவைக்க போட்டு வந்து அமர அவள் மொபைல் அலறியது… ஆம்! மொபைல் வாங்கி அத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக சைலண்ட் மோட் நீக்கி இருந்தேன்!!

அவனுக்காக…🥰

ஆனால், நான் ஹலோ சொல்லியதை கேட்ட அவனோ “அன்றைய நாள் கல்லூரியில் மொக்கையாக சென்றது! அவர்கள் காலேஜ் கிட்ட தட்ட நாங்கள் பயின்ற பள்ளி போல் மிகவும் strict ஆக இருக்கிறார்கள்… ஏதேனும் விதி மீறல்கள் என்றால் உடனடியாக லெப்ட் ரைட் என ஃபைன் போட்டு காசை புடுங்கி கொள்கிறார்கள்!!” என்று புகார் வாசித்து தள்ளினான்…

“புரொபஷனல் காலேஜ் போய் சேர்ந்தா அப்படி தான் இருக்கும்!” என்றேன் நான் ஒரே வாக்கியத்தில்… ஆம்! பின்ன யூனிஃபார்ம் எல்லாம் அணிவித்து, மாணவர்களை மாட்டு மனதை போலவா கல்லூரி வளாகத்திற்குள் இஷ்டத்துக்கு மேய விடுவார்கள்!?🤷

அவன் முன்பு படித்த கல்லூரி தான் நான் ஏற்கனவே சொல்லியது போல், இருப்பதிலேயே ஜாலியான கல்லூரி… சென்னையில் லயோலா காலேஜ் போல் என்று வைத்து கொள்ளுங்களேன்!! அதில் B.Com மத்தியான நேர கல்லூரி, மதியம் 1:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை…

மூன்று ஆண்டுகள் இஷ்ட பட்ட நேரம் எழுந்து உண்டு முடித்து கல்லூரி சென்று வந்து பழகி விட, இப்போது காலை 9:30 முதல் மாலை 4:30 வரை கல்லூரி நேரம் என்று இருப்பதும் அவனுக்கு அதற்கு பழகவே மனம் ஒப்பவில்லை… பிளேஸ்மென்ட் அதிகமாக இருக்கிறது என அவன் அக்காவும் அம்மாவும் இங்கு சேர்த்து விட்டார்களாம்!

இப்போது மீண்டும் பள்ளி பருவம் போல், 6 மணிக்கு எழுந்து 7:30 மணிக்கு பொதுவாக சொல்லி இருந்த பஸ் நிறுத்தம் சென்று நிற்க வேண்டுமாம்… அதிலும் உள்ளே நுழையும் போதே, “ஹேர் கட் செய்யவில்லை! க்ளீன் ஷேவ் செய்யவில்லை! சட்டை டக் இன் செய்தாக வேண்டும்!” என்று வாசலிலேயே பிடித்து விடுகிறார்களாம்..

எனக்கா கல்லூரி முடிந்து வந்ததும் தூக்கம் கண்ணை சொக்கியது, வழக்கமாக நான் 8:45 முதல் 2:15 வரை முடித்து வந்ததும் 3:30 வரை உறங்குவேன்! என் கல்லூரி அவ்வளவு strict எல்லாம் இல்லாத போதிலும் சோறு வருகிறதோ இல்லையோ தினம், கடிகாரம் 8:20 அடிக்க தவறினாலும் நான் வெளியேறி விடுவேன்! ஆனால் இன்றோ என்னை உறங்க விடாமல் ஜெஷ்வந்த் புலம்பி தள்ளி கொண்டு இருக்கிறான்…

1 மணி நேரம் வாஷிங் மிஷின் துவைத்து முடித்து விட்டது, இவன் இன்னும் முடிக்கவில்லை… அனைத்திற்கும் ம்ம் ம்ம் என்று நான் கதை கேட்டு கொண்டே, துணையையும் மேலே கொடி கட்டி காய போட்டு வந்து விட்டேன்… இன்னும் முடிக்காமல் பேசினான்… பேச்சு வாக்கில், “என் ex எல்லாம் எவ்வளவு ரொமான்டிக் ஆக பேசுவா தெரியுமா? நீ என்ன வெறும் ம்ம் கொட்டி கதை கேக்குற மாதிரி போரிங் ஆக பேசுற!!!?” என்றானே பார்க்கணும்..

எனக்கு வந்து கூடிய கோபத்திற்கு மறு வார்த்தை பேசவில்லை… நங் நங் என படிகளில் வேகமாக இறங்கி கொண்டே, “போய் அவ கிட்டயே பேசு!”🤬 என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து ஏர் பிளேன் மோட் போட்டு விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தேன்!! 5:30 மணிக்கு எழுந்து காபி பருகி விட்டு, மொபைலை எடுக்க ஒரு மூன்று மிஸ்டு கால்கள் வந்து இருந்தது!

எனக்கு இருந்த இரண்டு அசைஞ்மென்ட் வேலையை லேப்டாப் வைத்து எழுதி முடித்து விட்டு, கீழே சென்று தோசை எடுத்து வந்தேன் இரவு உணவாக… நான் பாட்டிற்கு உண்டு முடித்து தட்டு, மதிய டிபன் பாக்ஸ் எல்லாம் கழுவி கவுத்து காய வைத்து விட்டு தண்ணீர் பிடித்து வைத்து மாடிக்கு சென்றேன், வழக்கம் போல் பாட்டு கேட்டு கொண்டே 20 நிமிடம் வெளிக் காற்று வாங்க…

பாட்டு போட்டு விட சரியாக அதன் மூன்று நிமிடம் ஓடி இருந்த வேளையில், அது இடை பட்டு போய் நின்று ஜெஷ்வந்த் என்ற பெயரை திரை காட்டிய படி அதிர்ந்தது!! ஆம், மீண்டும் நான் சைலண்ட் மோட் ON செய்து இருந்தேன் என் கை பேசியில்… அவன் ஹலோ சொல்லிய மாத்திரம், ஏற்று காதில் வைத்த நான் “என்ன புடுங்கிறதுக்கு கால் பண்ண?” என்றேன்.. அந்த பக்கம் நீண்ட நெடிய மௌனம், அதிர்ந்து போய் இருக்கிறான் என்று எனக்கு புரிந்தது… 

நான் இன்னொசென்ட் முகம் கொண்டவள் தான், குரலே வெளியில் கேட்காமல் பேசுபவள் தான் ஆனால் அதற்கு என்று எனக்கு வரும் கோபத்தை எனக்குள்ளேயே அடக்கி வைக்கும் ரகம் கிடையாது!! அம்பி போல் இருக்கும் நான், அந்நியன் ஆக மாறி விடுவேன், யாரேனும் வம்புக்கு இழுத்தால்!!

அதிலும் நானும் அம்மாவும் போடும் சண்டை எல்லாம் வீட்டின் மேல் கூரை எகிறி போய் விட்டு வந்து அமரும், டாம் அண்ட் ஜெர்ரி கார்டூனில் வருவது போல்… அது போக அண்ணனோடு வளர்ந்தவள் என்பதால், சர மாரியாக கெட்ட வார்த்தைகளும் வாயில் வரும்… அது போல் வந்தால், என் பொறுமை எல்லை கடந்து போய் விட்டது அடுத்து அடித்து துவைத்து தொங்க விட்டு விடுவேன் என்று அர்த்தம்!!

“நீ கெட்ட வார்த்தை எல்லாம் கூட பேசுவியா?!!!” 

“இன்னும் தர லோக்கல் ஆக கூட பேசுவேன்… இப்போ நீ என்னத்துக்கு கால் பண்ணன்னு சொல்லு?” 

“சும்மா பேச தான்……..”

“அவளை பத்தி பேசுறதுனா இப்போவே ஒழுங்கு மரியாதையா வெச்சுட்டு போய் வேலைய பாரு!! இன்னொரு வாட்டி அவ பேச்சு வந்துது வீடு தேடி வந்து கை காலை உடைச்சு போட்டுருவேன்!!!” 

“ஆத்தி……. சரிங்க மேடம்!!” என்றான் பவ்வியமாக… எனக்கு மறு முனையில் சிரிப்பு வந்தது, ஆனால் வெளிக் காட்டி கொள்ளவில்லை!!

“நைட்டு சாப்பிட்டியா?”

“ம்ம்…”

“இப்போ என்ன பண்ற?”

“மாடில…”

“ஓ வெயிட் லாஸ் பண்ண வாக்கிங் போறியா?!!” 

“உன் புத்திய விட என் உடம்பு ஒன்னும் மந்தம் கிடையாது!!”

“நல்லா நறுக்கு சுருக்குன்னு பேசுற!!”

“ம்ம்..”

“இங்க உன்ன மாதிரியே ஒரு குட்டி வாயாடி இருக்கா… அவ அண்ணி கிட்ட பேசணுமாம்! நான் கொடுக்கிறேன் நீ பேசு!”

“ஹான்!! அண்ணியா!!!!? நானா?!!!!!” என்று நான் பேசுவதற்குள் அந்த முனையில் இருந்து ஒரு மழலை குரல் கேட்டது…

“ஹல்லோ!! உங்க பேரு என்ன?”

“நா நா ஷ்ரேயா…”

“என் அண்ணனை நீங்க கல்யாணம் எப்போ பண்ணிக்க போறீங்க? இல்ல தாலி கட்டிட்டானா?!!”

“ஹக்!!! ஹான்….” 

“ஓ தாலி கட்டிட்டானா…!! அப்போ ஏன் நீங்க அவன் கூட வீட்டுக்கு வராம எங்கேயோ இருக்கீங்க??”

“ஹே!! அதெல்லாம் ஒன்னும் கட்டள…”

“ஓ அப்போ அவன் அக்கா போனதும் தான் நீங்க கட்டிட்டு வீட்டுக்கு வர போறீங்களா!!?” (ஜெஷ்நாத் உடைய அக்கா) என்றது அந்த முளைத்து மூன்று இலை விடாத அரை டிக்கெட்!! 

“இல்ல… இப்போதைக்கு இல்ல…”

“ஏண்டி இப்போ இல்லாட்டி அப்புறம் எப்போ கல்யாணம் பண்ணிக்க போற?!!!!” என்றான் ஜெஷ்வந்த் வெடுக்கென அந்த வாண்டு இடம் இருந்து மொபைலை பிடிங்கி ஒரு மாதிரி எரிச்சல் கொண்ட தொனியில் கேட்டான்..

“நீ வேலைக்கு போன அப்புறம்!!”

“ஹக்!!! அப்…” என்று மௌனம் நிலவியது…

“யாரு அந்த குட்டி பாப்பா??” 

“ஹான்… எங்க அம்மாச்சி வீட்டு மாடில குடி இருக்க ஃபேமிலி ஓட குழந்தை!! பேரு சுபிக்க்ஷா… மேடம் இப்போ அக்டோபர் லந்து தான் ஸ்கூல் போக ஆரம்பிச்சு இருக்காங்க..” 

“ஓ!! மூணு வயசு தானா?? எவ்வளோ பேசுறா!!!?”

“ஆமா.. அப்படியே உன்னை மாதிரி!!” 

“ஐஸ் வைக்க தேவை இல்ல!!”

“ஹான்!! அப்புறம் மேடம் ஐ நான் டெய்லி பைக்கில் ஒரு ரவுண்டு கூட்டிட்டு போகணும்… அங்க பெரிய மேடமுக்கு எப்படி??!”

“அதெல்லாம் தேவை இல்லை!!”

“பொத்திட்டு போடான்னு டிசெண்ட் ஆக சொல்றியா… ஆனா லவ் இல் வெக்கம் மானம் சூடு சுரணை எல்லாம் பாக்க முடியாது அதுனால பத்தாம் தேதி படத்துக்கு டிக்கெட் போட்டு இருக்கேன்.!!

பெரிய மேடம் பெரிய மனசு பண்ணி வரணும்!!!” 😁😅

“சனிக் கிழமை தானே யோசிக்கிறேன்!!”

“சரிங்க… இன்னிக்கும் தேசிய உணவான தோசை தானா??” 

“ம்ம்… ஆமா!!😮‍💨”

“வீடியோ கால் வந்தால் மேடம் தரிசனம் பார்த்துப்பேன்!! சின்ன மேடம் பார்க்கணுமாம்…”

சிரித்து கொண்டே வீடியோ காலுக்கு மாறினேன்… அதில் சுபிக்ஷா தான் வாய் அருகில் பெரிய மொபைலை சிறிய கையில் பிடித்து, “ஓ!! நீ தான் இப்போ பேசுனியா..? அழகா இருக்க… ஆனா இருட்டா இருக்கு!! அங்க நிக்காத பூச்சாண்டி வந்து பிடிச்சுருவான்!!” என்றாள்.

படக்கென சிரித்து விட்டு, “உன் அண்ணன் பிடிக்காம இருந்தா சரி!!” 

“ஹேய்… பிள்ளை கிட்ட போன் இருந்தாலும் எனக்கும் கேட்குது டி..!!” என்றான் ஜெஷ்வந்த் ஒரு மூளையில் இருந்து தலையை கோதிய வண்ணம் எட்டி பார்த்து. “கேட்டு போ எனக்கு என்ன?” 

“இங்க பாத்தியா நான் ஒரு பொண்ணோட ஊரை சுத்திட்டு வந்து இருக்கேன்!!” என்றான் மொபைலை வாங்கி தலைக்கு மேல் உயர்த்தி காட்டி… அங்கு சுபிக்ஷா பெரிய பிராக் ஒன்று அணிந்து, பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து இருந்தாள் குட்டி புஸ்கான் அழகாக…. “அப்போ வாலண்டைன் டே அன்னிக்கு அவங்க கூடவே டேட்டிங் போயிட்டு வாங்க சார்!!” என்றேன் நானும் நக்கலாக பதிலுக்கு…

“அது லவ் படம் லவ்வர்ஸ் பார்க்க வேண்டிய படம்… பெரிய மேடம் வந்தா தான் நல்லா இருக்கும்!!” 

“இப்போ மட்டும் குழந்தைக்கு கேட்காதா?” 

“காலேஜுக்கு ரெண்டு பேரும் லீவ் போட முடியாது டி… அதான் ஒரு நாலு நாளைக்கு முன்னாடியே செலேபிரேட் பண்ணிறலாம்!!”

“சரி சரி வரேன்!!”

“ஹைய்யா ஜாலி!!!! சித்தி சந்தேகமா பாக்குறாங்க… நான் போய் இவளை வீட்டுல விட்டுட்டு தனியா வந்து உனக்கு மறுபடி கால் பண்றேன்… மதியம் மாதிரி இருக்காம எடு.!!” 

“ஹ்ம்ம்” 

அவன் வீட்டின் மேல் மாடியில், அவன் அம்மாவின் தங்கை குடும்பம் குடி இருக்கிறார்கள்… அந்த சித்தி குடும்பத்திலும் ஒரு அக்கா, தம்பி இருக்கின்றனர்… ஆனால் இருவருமே ஜெஷ்வந்த்தை விட மூத்தவர்கள், அவன் அக்காவிற்கு இளையவர்கள்… மூன்று வீடு தள்ளி அம்மாச்சி வீடு!! 

தெருவில் பிற வீடுகளிலும் மேலும் சில தூரத்து சொந்தம் குடி இருந்தனர்… ஆகவே அவனுக்கு அந்த தெரு முழுக்க டைட் செக்யூரிட்டி எனலாம்… அவன் எங்கே எங்கு சென்றாலும் யாரேனும் பார்த்து அவன் அம்மாவிற்கு தகவல் வந்து விடும்.!!

அவர்களின் முதல் வாலண்டைன் வாரம் எவ்வாறு செல்லும்?

என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨

Thanks for reading மக்களே 🩷 

 

 

❤️ Loading reactions...
2 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page