திரையிட்டு விலகாதே! -26

திரையிட்டு விலகாதே! 

அத்தியாயம் -26 

Hiiii வாசகர்களே ✨

“என் அக்கவுண்டன்சி டீச்சர் பிரபா தெரியும்ல உனக்கு!!?”

“ஆமா!” 

“அவ தான் பெரிய சம்பவம் செஞ்சு விட்டா…”

“அவளா??? ரொம்ப நல்லா பேசுவா எல்லார் கிட்டயும்… அப்புறம் எப்படி???!!!”

“அது அப்படி தான்… சர்வோதயா மேட்ச் அன்னிக்கு வேணும்னே நான் அசெம்பிளி நடக்குறப்போ வரலான்னு பிரின்சிபால் சார் கிட்ட மாட்டி விட்டுட்டா… அது மட்டும் இல்லாம, என்னோட எல்லா மார்க் ஷீட் கொண்டு வந்து வைஸ் பிரின்சிபால் கிட்டயும் சேர்த்து மாட்டி விட்டுட்டா…

பிரின்சிபால் சார் ஒரு பக்கம், மேட்ச் போக ரெடியாகி நின்ன என்னைய புடிச்சு ஏன் ஸ்கூல் ஷூ போடலன்னு சம்மந்தமே இல்லாம கேள்வி கேட்டு போக விடாம பிடிச்சு வெசுட்டாரு…

இன்னொரு பக்கம் வைஸ் பிரின்சிபால் மேடம் சும்மாவே ஆடும்!! இதுல பிரபா வேற சலங்கை கட்டி விட்டு இருந்தாளா கேட்கவே வேண்டாம்!! வெச்சு செஞ்சுட்டா… டீம் கேப்டன் ஆக இருந்தா மட்டும் போதுமா..? ஸ்போர்ட்ஸ் வந்து உனக்கு சாப்பாடு போடாது!! 

அகாடெமிக் இவ்வளோ பூவர் பெர்ஃபார்மன்ஸ் வெச்சுகிட்டு உனக்கு என்ன விளையாட்டு…??!!! P.Ed சார் எங்க? அவரை மொதல்ல இந்த மாதிரி படிக்காத ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் டீம்லே செலக்ட்டே பண்ண வேண்டாம்னு சொல்லணும்!!

ஆச்சு போச்சுன்னு ரெண்டு பேரும் ஒண்ணா என்னைய நிக்க வெச்சு, கட்டிட்டு இருக்க அப்போ தான் P.Ed சார் வந்தாரு!! அவருக்கு ஒரே ஷாக், நா இன்னும் கெளம்பாம நிக்கிறதை பார்த்து… டேய் அங்க பஸ் கெளம்பிருச்சு!! நீ கேப்டன் ஆக இருந்தது இங்க என்னடா பண்ணிட்டு இருக்க?? அப்படின்னு அவரு ஒரு பக்கம் கத்த ஆரமிச்சுட்டார்…

அப்புறம் தான், வைஸ் பிரின்சிபால் மேடம் அவருக்கு கால் பண்ண ஓரம் போனவங்க மறுபடி இவரை இங்கேயே பாத்துட்டு அவரை புடிச்சு ஒரே கத்து!! லெப்ட் ரைட் வாங்கி வாங்குன்னு வாங்கிட்டா..!!! இதுல பிரின்சிபால் சார் வேற தனியாக போய் என் அம்மாவை கால் பண்ணி வர சொல்லிட்டாரு!! 

சர்வோதயா மேட்ச் மட்டும் விளையாடி ஜெயிச்சு செலக்ட் ஆகி இருந்தா அப்படியே ரஞ்சி ட்ராஃபி போய் நா என் வாழ்க்கையோட கோல் அச்சிவ் பண்ணி இருப்பேன்!! ப்ச்ச் எங்க??! எதுவுமே நடக்காம அந்த ஒரு நாளில் எல்லாமே எல்லாமே என் வாழ்க்கையே புரட்டி போட்டுருச்சு… எத்தன நாள் பிராக்டீஸ் பண்ணி இருப்பேன் தெரியுமா!!? தூங்காம சாப்பிடாம… எல்லாம் மண்ணா போச்சு!!”

“ஏன் அடுத்த வருஷம் டிரை பண்ணி இருக்கலாமே!!?” 

“எங்க?? அன்னிக்கு எங்க அம்மா வந்து அழுதுட்டாங்க எல்லாரும் சுத்தி நின்னு உங்க பையன் ஒழுங்கா படிக்கல… கிளாஸ் பக்கமே வரல… முக்கியமான சப்ஜெக்ட் அக்கவுண்டசி மாடல் எக்ஸாம் ஃபைல் ஆகி இருக்கான்!! அது இதுன்னு பேசி பேசி… மொத்தமா என் அம்மா எவ்வளோ சந்தோஷமா எனக்கு பேட் வாங்கி கொடுத்தாங்களோ அவ்வளவு வெறுப்பா நான் கைல வெச்சுட்டு இருந்த கிட் பேக் அப்படி பார்த்தாங்க…

அன்னிக்கோட முடிஞ்சு எல்லாம்…. எல்லாமே….. அப்படியே வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாங்க..!! மூணாவது மாடில ஒரு வீடு பூட்டி தான் இருக்கு… அங்க தான் என் அக்கா ஓட பழைய புக் வேண்டாத சைக்கிள் எல்லாம் ஒரு ஸ்டோர் ரூம் போட்டு வெச்சதோடு என் கிட் பேக் இப்போ அதே மாதிரி வேண்டாத பொருளோட தூசி பிடிச்சு போய் கிடக்கு…” 

“அப்போ அன்னிக்கு மேட்ச்!!”

“நீ பார்த்த மேட்ச் நான் வின் பண்ணி கொடுத்துட்டேன்!! அதுனால தான் சர்வோதயா மேட்ச் செலக்ட் ஆனேன்!! ஆனா கேப்டன் இல்லாம என் டீம் மட்டும் போய் அங்க கேவலமா மொத ரவுண்ட்லே தோத்து போய் வந்துட்டாங்க…!!!!” 

“சரி டா… கஷ்டம் தான்!! ஃபீல் பண்ணாத விடு!! நேரம் வந்தா நீ மறுபடி கூட விளையாட ஆரம்பிக்கலாம்… இல்லையா இப்போ நல்ல காலேஜ் சீட் கிடைச்சு படிக்கிற… அப்படியே அதுல முன்னேறு!! 

ப்ளேஸ்மென்ட் ஆக டிரை பண்ணு… கண்டிப்பா எதுலயாச்சும் ஒண்ணுல சக்சஸ் புல்லா வருவ ஒரு நாள்!!” 

“ஷ்ரேயா அது முடிஞ்சுறுச்சா??” என்றான் ஜெஷ்வந்த் நான் சாப்பிட்டு முடித்த சிப்ச் பாக்கெட்டை பார்த்து என்னை பார்த்த வண்ணம்… ஒரு நிமிடம் நானும் அப்போது தான் என் கையில் இருந்த அந்த காலியான கவரை கீழே குனிந்து கண்டு, ஆம் எனும் விதமாக தலை ஆட்டிய படி அவனை நிமிர்ந்து பார்த்து அதிர்ந்து, இரண்டடி எடுத்து வைத்து பின்னால் நகர்ந்து போனேன்!!!

டக்கென அவன் பைக் ஒரு அணை போல் என்னை தடுத்து நிறுத்தியது… அப்போது தான், வினோதமாக இருக்கும் ஒன்றை நான் உணர்ந்தேன்!! எப்போதும் போல் அவன் பைக் மீது சாய்ந்து கொண்டு, நான் எதிரில் நின்று பேசாமல், இன்று அவன் என் எதிரில் நின்று பேசி கொண்டு இருந்தான் என்னை பைக் ஓடு ஓரத்தில் நிற்க வைத்து விட்டு!!

என்னை தடுத்தது அவன் பைக் தான் என்பதை ஒரு நிமிடம் பின்னால் திரும்பி பார்த்து உறுதி செய்த பின் அவன் முகத்தை கண்ட எனது நெற்றியில், அந்த இரவின் குளுமையிலும் வியர்வை துளிகள் உண்டாகி உருண்டோடி கன்னம் வழி கீழ் இறங்கி வழிந்து ஓடியது!! 😓😥

ஆம்! என் எதிரில் நிற்கும் ஜெஷ்வந்த் ஏதோ கழுகு தன் இறைக்கு குறி வைப்பது போல் என்னை கூர்ந்து நோக்கி அவன் பார்வையால் கூர் போட்டு கொண்டு இருந்தான்… சரியாக சொல்ல வேண்டும் என்றால், சினிமாவில் வரும் வில்லன் ஏதோ கடத்தல் செய்யும் முன் ஒரு வில்ல தனமாக புன்னகை சிந்துவார்களே, அது போல் அவன் தடித்த பிங்க் நிற கீழ் உதடு கோணல் புன்னகையில் வளைந்து இருந்தது!! 😏

கையில் அந்த 10 ரூபாய் டைரி மில்க்கை பிரித்து கொண்டு இருந்தான்… ஒரு சதுரத்தை பிட்டு என் வாயில் கொடுத்தான், “ஹான்!!” என்று தான் அதிர்ந்தேன்!!

“சாக்லேட் தானே டி… வாங்கிக்கோ!!” 

“ஹ்ம்ம்.. ஆ!!” 😲 என வாயை திறந்து நான் அதை வாங்கி கொள்ள, அவன் முகத்தில் ஒரு விஷம் போன்ற புன்னகை படர்ந்ததை கண்டு என் இதயம் தாளம் தப்பி தவறி, எகிறி வெளியே வந்து விழுந்து விடும் அளவு சத்தம் போட்டு துடித்தது!! 

அடுத்த நொடி என்னவென்று சொல்ல முடியா உணர்வுகள் என்னை பந்தாடியது, ஜெஷ்வந்த் என்னை அவன் பைக்கோடு முற்றுகை இட்டு என் இதழை அவன் இதழால் சிறை செய்து கபலீகரம் செய்தான்!! சடுதியில் இது நடந்து இருக்க, என்னால் எந்த எதிர் வினையையும் ஏற்ற முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று இருந்தேன்… 

என் ஒரு கை பைக் மீது இருக்க, அதன் மீதே அவனும் ஒரு கரம் பதித்து இருந்தான்… மறு கரத்தால், என் கன்னம் பற்றி பிடித்து இன்னும் இன்னும் ஆழமாக இதழ் சுவைத்து அந்த உஷ்ணத்தில் சாக்லேட் உருகி இருவரின் வாயிலும் பரிமாற பட்டு இருந்தது!!

எனக்கு ஏற்கனவே டைரி மில்க் சாக்லேட் சுத்தமாக பிடிக்காது, ஏதோ இன்று இவன் ஒரு துண்டு தானே கொடுக்கிறான் என்று மறுக்காமல் வாங்கி கொண்டால், அதை தொடர்ந்து முத்தம் வேறு கொடுத்து அது ஒரு மாதிரி ஆகி போனது… பிடித்தவன் தான், முதல் முத்தம் தான் ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் திணறியது எனது பெண் உள்ளம்..!!!

“இதற்காகவா அவ்வாறு இது போன்று ஒரு இடத்திற்கு அழைத்து வந்தான்…?!! காதல் கொண்டு இருந்தாலும் சம்மதம் பெற தேவை இல்லையா!!!? அதுவும் தெருவில் வைத்து இது போன்ற ஒரு காரியம் கட்டாயம் செய்து ஆக்கிரமித்து, நிச்சயம் அனுபவித்து ஆக வேண்டுமா????”

ஒரு கட்டத்தில் நாடு தெருவில் இவ்வாறு இவன் எல்லை மீறி செய்யும் செயல், என் உடலை அருவருக்க வைத்து, வாந்தி வருவது போல் ஆனது… அதிலும் இன்னும் விடாமல் மொத்தமாய் அதில் தொலைந்து போய் இருந்தவனை காண காண எனக்கு எரிச்சல் கூடி போய், உறைந்து சிலையாகி போய் நின்ற என் உடல் அவன் பிடியில் இருக்க பிடிக்காமல் திணறியது… ஒரு கட்டத்தில் என் மறு கரம், அவன் நெஞ்சில் கை வைத்து அவனை பலமாக பின் தள்ளி என்னிடம் இருந்து விளக்கி விட்டது!!!

“ஹ… ஹூ… உஹு… ஹான்…” என்று கண் எல்லாம் நீர் கோர்த்து அவ்விடத்திலேயே நின்றது நிற்க நான் அழ ஆரம்பித்து விட்டேன்!! 😫😩

“ஹேய் ஷ்ரேயா என்னடி சாக்லேட் தானே இன்னும் இருக்கு… வேணா நீயே புல்லா கூட சாப்பிடு!! அதுக்குன்னு தெருவில நின்னு அழுது என்னைய அசிங்க படுத்தாத… யாராச்சும் வந்தா என்னைய தான் தப்பா நினைப்பாங்க..!! ஒரு சின்ன விஷயத்துக்கு எல்லாம் அழுது சீன் கிரியேட் பண்ணாத….” 😕🙁 என்றான் ஏமாற்றம் அடைந்த முகத்தை வைத்து கொண்டு…

அப்போ அவன் செய்த காரியம் அசிங்கம் இல்லை!! தெருவில் நின்று பலவந்தம் செய்தது தப்பே இல்லை!! நான் அழுவது மட்டும் தான் தப்பு.. அதிலும் அப்போது மட்டும் தான் யாரேனும் வர போகிறார்களா!!? இதை பார்த்து தவறாக அவனை நினைக்க போகிறார்களா??!!! அதிலும் கேவலம் சாக்லேட்காக அழுகிறேன் என்று எவ்வளவு கீழ் தரமாக என்னை நினைத்து இருக்கிறான்!!!? 

கண்ணை ஒரு கையால் துடைத்து, வாயை மறு புறங்கையால் துடைத்து விட்டு அப்படியே பித்து பிடித்தார் போல் நான் எழுந்து அவனை விட்டு நடக்க ஆரம்பித்தேன்!! அது எந்த ஏரியா என்று அதன் பெயர் கூட தெரியாது… அங்கிருந்து எங்கு பேருந்து நிறுத்தம் என்று தெரியாது!! மகளிர் கான ஃப்ரீ பஸ் வருமா என அறியேன்!! ஆயினும் நடந்தேன்… அவனிடம் அடுத்து ஒரு நிமிடம் கூட இருக்க பிடிக்காமல்…

அதிலும் வேக எட்டுக்கள் வைத்து நடக்க நான் கிட்ட தட்ட அந்த தெருவின் முனைக்கு வந்து விட்டு இருந்தேன், என் வேகம் சற்றும் குறையவில்லை பின்னால் ஜெஷ்வந்த் ஒரு கட்டம் வரை “ஷ்ரேயா… ஹேய்… நில்லு டி!!! ஷ்ரேயா…..” என்று அந்த காலி தெரு எதிர் ஒலிக்கும் அளவு கத்தினான் நான் திரும்பி கூட பார்க்கவில்லை..!!

பிறகு அவனும் அமைதியாகி விட, சட்டென என் முன்பாக ஒருவர் வந்து இடை மறித்து நிறுத்தினார்…

Thanks for reading மக்களே 🩷

 

❤️ Loading reactions...
2 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page