திரையிட்டு விலகாதே!
அத்தியாயம் -27
Hiiii வாசகர்களே ✨
முன்பு போல் மை இருள் இல்லாமல், அந்த பள்ளி வளாகம் எதிரில் ஒரு வீடு கட்ட ஆரம்பித்து இருந்தனர்… அதில் எப்போதுமே வாசலில் ஒரு குண்டு பல்ப் ஒளிர விட்டு சென்று இருந்தனர்… ஆகவே அந்த வெளிச்சத்தில் இப்போது நான் என் முன்பாக வழி மறித்து வந்து நின்ற பைக்கை நிமிர்ந்து பாராமலேயே யார் என்று கண்டு கொண்டேன்!!
அமர்ந்து இருந்த அழுகை மீண்டும் பீறிட்டது!! ஜெஷ்வந்த் வெடுக்கென ஸ்டான்ட் போட்டு விட்டு இறங்கி, என்னை அவன் நெஞ்சோடு அணைத்து கொண்டான்… ஆற்றமையோடு பட் பட்டென இரு கைகளாலும் மாறி மாறி நான் அவன் நெஞ்சில் அடித்து அழுதேன்!!
அவனோ அமைதியாக அதை வாங்கி கொண்டு, என்னை அவன் இடம் இருந்து விலக விடாமல் அப்படியே என் தலையை அவன் முழங்கையோடு பிடித்து இருந்தான்!! “ஹேய்… குட்டி மா… சாரி டி!! இன்னிக்கு கிஸ் டே ல??? அதான்… உனக்கு சர்ப்ரைஸ் ஆக கிஸ் பண்ணலாம்னு பார்த்தேன்!! ஆனா… என் பழைய கதை நீ கேட்கவும் எனக்கு ரொம்ப கஷ்டமா ஆயிருச்சு அதை எப்படி வெளி காட்டுறதுன்னு தெரில.!!! அதான் உன்னை… உன் கிட்ட…. அது… அது மாறி…”
“நான் ஹாஸ்டல் போகணும்!!” என்றேன் பேசி விளக்க முயலும் அவன் இடம், அதற்கு மேல் எந்த விளக்கம் தேவை இல்லை என்பது போல் முகத்தின் முன்பாக கையை போதும் என காண்பித்து… அவன் தான் என்னை அழ விட்டான், ஆனால் என் மனமோ அடித்த தாய் இடமே ஆறுதல் தேடும் சிறு பிள்ளை போல், அவன் நெஞ்சில் துஞ்சிய படி ஆறுதல் தேடுவது எனக்கு வினோதமாக இருந்தது!! அதை எனக்கு எவ்வாறு எடுத்து கொள்வது என புலப்பட வில்லை!!
என்னை தோளோடு அணைத்த படியே, மீண்டும் ஒரு முறை சாரி கேட்டவன் பைக்கில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தான்… நானும் ஏறி அமர்ந்து கொள்ள, ஒரு 13 நிமிட பயணம் அந்த கனமான அழுத்தம் கூட்டும் அமைதியில் என்னமோ 13 நாள் பயணம் போல் தோன்றியது!! இந்த சம்பவத்தை எவ்வாறு எடுத்து கொள்வது என்றே எனக்கு தெரியவில்லை… ஆனால் என்றும் போல் நான் அந்த பாலம் மீது ஏறி இறங்கும் போது முகத்தில் வீசும் ஜில்லென்ற தென்றல் காற்றை ரசிக்க மறந்து, என்னை மீறியும் என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது!!
இம்முறை என்னை அவன் ஹாஸ்டல் இருக்கும் தெருவிற்குள் கொண்டு வந்து விடும் போது, என் வகுப்பு மாணவர்கள் இருவர் வேறு பார்த்து விட்டனர்… அவர்கள் இருவருமே ஜெஷ்வந்த் உடைய வீடு இருக்கும் அதே தெருவில் வேறு வசிப்பவர்களாம்… அவன் தான் எனக்கு முன்பாக அவர்களை முதலில் பார்த்து என் இடம் சொன்னான், நானும் பார்த்து அதிர்ந்து அவனிடம் அவர்களை எனக்கும் தெரியும் என்று சொன்னேன்!!
இருவருமே இருந்த பிரச்னை மறந்து, இப்போது திருமணம் நெருங்கும் சமயத்தில் மீண்டும் ஒரு முறை காதலித்து அவன் வீட்டில் மாட்டி விட கூடாது என்ற பயத்தில் இருவரும் செய்வது அறியாது, குழப்பத்தில் ஆழ்ந்தோம்!! அவர்கள் தேநீர் கடையில் அந்த பக்கமாக திரும்பி நின்று தான் ஏதோ உரை ஆடலில் மூழ்கி போய் இருந்தார்கள், ஆனால் எங்களை பார்த்து இருப்பார்களா? இல்லையா? என்பது எங்கள் இருவருக்கும் தெரியாது!!
“பார்த்து விட்டு தன திரும்பி கொண்டார்களா?” என்று எனக்கும் சந்தேகமாக இருந்தது… “இப்போது வகுப்பு முழுக்க இது காட்டு தீ போல் பரவி விடுமே நாளை ஒரு நாளைக்குள்.!! முதல் ஆளாக HOD மேடம் இடம் பஞ்சாயத்து வைத்து விடுவார்கள்… அப்படி ஆனால் என்ன செய்வது?!!!” என்று எனக்கு பயமே வந்து விட்டது..
“அடுத்து ஒரு வாரமோ இல்லை, கல்யாணம் முடிஞ்சு தானோ தெரியல குட்டி மா… இதுக்கு எப்போ பார்ப்பேனோ!!?? டெய்லி கால் பண்ண முயற்ச்சி பண்றேன்… மிஸ் பண்ணிராம எடுத்து கொஞ்ச நேரமாச்சும் பேசு டி!! சரியா?!! சரி நீ அக்கா கல்யாணத்துக்கு மறக்காம வந்துருங்க மேடம்… உங்க அத்தை அண்ணி என் மாமா கிட்ட எல்லாம் இண்ட்ரோ கொடுக்கிறேன்!” என்றான் ஜெஷ்வந்த் என் கையை பெட்ரோல் டேங்க் மீது பிடித்து அவன் கரங்களுக்குள் வைத்து கொண்டு!!
“சரி!!”
“சாப்பிட்டு தூங்கு டி பொண்டாட்டி… ஐ லவ் யூ!! அப்போ நான் அப்படியே கிளம்புறேன்… சரியா??”
“ம்ம்”
“ஹேய் என்னைய நிமிர்ந்து பார்த்து அழாம சொல்லு டி என் குட்டி மா லே!!”
“சரி பாய்!! பார்த்து போ…”
“ஒண்ணு சொல்லவா?!! நீ அழுதாலும் இன்னும் அழகா இருக்க…” என்று கன்னத்தை பிடித்து கிள்ளி முத்தம் கொஞ்சி விட்டு கிளம்பினான்…
சாப்பிட்டு மாடிக்கு சென்றேன் வழக்கம் போல் பாடலை ஒலிக்க விட்டு நடை பழகிய படி… ஓடிய பாடல் என்னை வெட்கம் கொண்டு சிவக்க செய்தது!!
பெண்:
முழுசா உனக்கென நான் வாழுறேன்
புதுசா தினம் தினம் என பாக்குறேன்
அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்
அளவில்லாம ஆசை வெக்கிறேன்!!
பெண்:
ஏனோ தானோ என்று போன நாளும்
எல்லாம் நீயே என்று மாறுதே!!
ஆண்:
யாரும் இல்லா நேரம் வந்த பின்னும்
உனதருகில் காதல் ஒன்று
கண்டேன் பெண்ணே
ஆண்:
லேசா அழகுல தான விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில்
உன் உதட்டுல உறையுறேன்
வாழ்க்க வாழத்தான்
உன்னோட இருக்குறேன்
உன்கூட நடக்கும் போது
மழையில்லாம நனைஞ்சு போகுறேன்
9:30 மணிக்கே படுத்து கைப்புள்ள அளவுக்கு படுத்து உறங்கும் நான், அவனுக்காக 12 மணி வரை அவனுக்கு தூக்கம் பிடிக்கும் வரை பேசி கொண்டு இருந்தேன்… 12 மணி ஆனதும், “ஹாப்பி வாலண்டைன் டே பொண்டாட்டி!” என்று அவனும் தூங்க போய் விட்டான்… நானும் உறங்குவதற்காக மொபைலை அமர்த்தி விட்டு படுத்து விட்டேன்…
ஜெஷ்வந்த் அதற்கு பின்பும், 1 மணி வரை தூங்காமல் புரண்டு கொண்டு இருந்தவன் அதன் பின்பும் எனக்கு பல மெசேஜ் அனுப்பி இருந்தான்.. பார்க்கும் பாதி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என் கணக்கின் உரையாடலில் வந்து குவிந்து இருந்தது! அது போக அவன் இறுதியாக கேட்டு இருந்தது, காலை கண் விழித்த என்னை சற்று ஆடி தான் போக வைத்தது!!
அடுத்த ஒரு வாரம் பறந்து விட்டது, 8 நாட்களும் அவன் என்னை காண வர முடியாமல் கல்யாண வேலைகளில் மூழ்கி போய் இருந்தான்… இப்போது திருவிழா காப்பு கட்டி விட்டார்கள் என்பதால், அவன் அக்காவை பக்கத்து தெரு அத்தை வீட்டில் இருந்து பெண் அழைத்து செல்வதாக சொல்லி இருந்தான் இறுதியாக… தினம் மெசேஜ் மட்டும் அனுப்பி இது நடந்தது அது நடந்தது என்று சொல்லி விடுவான், என்னிடம் என்ன நடந்தது கல்லூரியில் என கேட்டு தெரிந்து கொண்ட பின்…
விடிந்தால் அவன் அக்காவிற்கு கல்யாணம்… இவன் இன்று இரவு ஒரே அழுகை..!! “என் அக்கா விளையாட்டுக்கு சொல்லிட்டே இருந்தா நா போன அப்புறம் தெரியும் உனக்குன்னு!! இப்போ தான் எனக்கு அது மாறி லோன்லீ ஆக ஃபீல் ஆகுது… டக்குனு நாள் ஓடிருச்சு, அவளும் போயிட்டா…… நான் தான் தனியா கிடக்கேன்!!”
“ஹேய் அப்படியே லாம் இல்ல டா… இப்படி எல்லாம் அழாத!! அம்மா பார்த்தா அவங்களும் அழ போறாங்க… அம்மா இருக்காங்க நீ தான் அவங்களுக்கு பக்க பலம்மா இருக்கணும் இந்த மாதிரி டைம்ல!”
“இல்ல ஷ்ரேயா என்னால முடியல… ரொம்ப ஒரு மாதிரி இருக்கு டி!! அப்பாவும் இல்லாம இது வரைக்கும் நான் அம்மா அவ மூணு பேரும் இருந்தோம்… இப்போ நா காலேஜ் விட்டு வந்தா, அக்கா வாச்சும் என்னைய பார்த்துப்பா..!! நான் வீட்டுக்கு வந்துட்டேன்னு அவளாச்சும் தெரிஞ்சுப்பா… இனிமே அப்படி இல்ல லே??!!! தனி வீட்டுல நான் மட்டும் போட்டுகிட்டு கிளம்பி, திறந்து தனி வீட்டுல உள்ள வந்து இருக்கணும்!!
அதை நெனச்சா தான் என்னால தாங்கிக்கவே முடியல… எனக்கு அதான் ஆரம்பத்து லந்து அவனே பிடிக்கவே இல்ல!! நீ சொன்னான்னு தான் நான் மாப்பிள்ளை அப்டின்னே கூப்பிட ஆரம்பிச்சேன்!! இதோ அவன் தான் என் கிட்ட இருந்து என் அக்காவை பிரிச்சு கூட்டிட்டு போக போறான்!! எனக்கு அவனை பிடிக்கவே இல்ல!!!!!!”
“ஜெஷ் சின்ன புள்ளை மாதிரி இது என்ன பேச்சு… அவங்க தான் உங்க அக்காவை இனிமே பத்திரமா பார்த்துக்க போறாங்க!! உன் அக்கா ஓட லைஃப் பார்ட்னர் ஆக போறாங்க… அதுனால இப்படி எல்லாம் அவங்களை பேச கூடாது!!
உன் அக்காவுக்கு உன்னய பார்த்துக்கிறத தாண்டியும் லைஃப் இருக்கு…. சோ இப்படி எல்லாம் நீ அழுதா அவங்க ஸ்டார்ட் பண்ண போற லைஃப் நெகட்டிவ் ஆகிற போது!! கண்ணை தொட ஃபர்ஸ்ட்… போய் தண்ணி குடி… இப்படியா அக்கா விட்டு போறான்னு நெனச்சு அவ்வளோ வா அழுவது? பீவர் வந்துற போகுது!!” என்றேன் நான் உண்மையான பயத்தோடு…
அவ்வளவு தேம்பி தேம்பி விம்மி வெடித்து சிதறி அழுதான்… எனக்கே ஒரு கட்டத்தில் என்ன சொல்லி தெரிவது என்று தெரியாமல் போனது.!! ஆனால் ஒன்று, இப்படியே அவன் விடாமல் இவ்வாறு தனி வீட்டில் இருந்த படி அழுதான் எனில்,
நாளை நிச்சயம் காய்ச்சல் வந்து படுத்து விடுவான்!!
ஆகவே அவனை தேற்றினேன்… அவனும் சற்று அமர்ந்தார் போல் தான் இருந்தான்… மேல் வீட்டு சித்தி உணவு கொடுக்க, அதை ஏற்கனவே உண்டு முடித்து இருந்ததால் அப்படியே படுத்து, தூங்க முயற்சிக்கும் படி சொல்லி அவனோடு அவன் தூங்கி போகும் வரை நான் உண்ணாமல் உறங்காமல் பேசி கொண்டு இருந்தேன்!!
“நாளை விடியல் தங்கு தடை இன்றி நல்லதாய் அமைய வேண்டும்!” என நானும் கடவுளை வேண்டி கொண்டு தோசை எடுத்து வைத்து உண்டு நாளை அங்கு போவதற்காக பூ வாங்கி வந்து வைத்தேன்…
திருமணத்தில் என்ன ஆக போகிறது?
திடீரென ஷ்ரேயா சென்றால் அனைவரும் அதை எவ்வாறு ஏற்று கொள்வார்கள்?!!
என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨
Thanks for reading மக்களே 🩷
