திரையிட்டு விலகாதே!
அத்தியாயம் -28
Hiiii வாசகர்களே ✨
இரவு, 9 மணிக்கு உணவு எடுக்க போன எனக்கு மினி இருந்ததோ, பிய்ந்து போன தோசை துண்டுகள் அடி பார்த்த சட்னி தான்… அதை ஒரு கவல உருண்டை போல் எடுத்து தட்டில் போட்டு கொண்டு, சட்னி ஊற்றி மேலே எடுத்து வந்தேன்! திண்ணவே பிடிக்கவில்லை எனினும் உணவை தூக்கி குப்பையில் கொட்டி வீண் அடிப்பதும் எனக்கு பிடிக்காது.. ஆகவே உண்டு, உறங்க போனேன் கரிக்கும் நெஞ்சோடு…
காலை விடிந்தது!! வழக்கம் போல் பல் துலக்கிய படி கோரிடோரில் நின்று ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ட்ரெயின் கடப்பதை பார்த்தேன்… அனைவரும் கிளம்பிய பிறகு, பொறுமையாக ஃபேசியல் செய்து காய விட்டு குளித்து கிளம்பினேன்… என் பழைய ரூம் மேட் அக்கா விடம் சேலைக்கு பிளவுஸ் ஓடு பின் குத்தி, பல 100 போட்டோக்கள் பிடித்து வாங்கிய பரிசோடு கிளம்பினேன்!!
ஆட்டோ புக் செய்து அந்த மண்டபத்திற்கு போய் இறங்கி, அவனுக்கு அழைப்பு விடுக்க அவனோ கூல் ஆக “ஹான்.. அப்படியே உள்ள வா..!!” என சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான்… அவன் சொல்லிய நேரத்திற்கு நான் போனால், அங்கே திருமணம் முடிந்து இருந்தது.!!
அன்று கொழுத்த முகூர்த்த நாள் என்பதால், வரும் வழி எங்கும் ட்ராஃபிக்… நிச்சய தாரத்தம் அன்று வர விடாமல் செய்தவன், இப்போது திருமணத்தையும் பார்க்க விடாமல் செய்து விட்டான்.!! பின்ன, அவன் தான் “10 மணிக்கு கிளம்பி ரெடியா இரு வந்து கூட்டிட்டு போறேன்!” என சொல்லி விட்டு, 10:30 மணிக்கு அழைத்து “ஆட்டோ பிடித்து வா!” என்று சொல்லி விட்டான்… ஆகவே நான் போனதே, 11 மணிக்கு தான்!!
அது போக அனைவரும் என்னை வினோதமாக பார்ப்பதை உணர்ந்து எனக்கு ஏதோ போல் ஆனது!! அழைத்தவன் வந்து அமர கூட வைக்கவில்லை, மேடையில் நின்று யாரோ ஒருவருடன் அரட்டை அடித்து கொண்டு இருந்தான்… அவன் அம்மாவோ, புதிதாய் வந்து இருப்பவர்களை, அவ்வப்போது “வாங்க.. வாங்க..” என கீழே ஒரு நடை வந்து வணக்கம் சொல்லி விட்டு செல்கையில், என்னையும் யார் என்றே தெரியா விட்டாலும் “வா பா!” என்று சொல்லி சென்றார்…
அப்போது தான் ஜெஷ்வந்த் உடைய கல்லூரி தோழன் ஒருவன் போய் அவனை மேடைக்கு கீழே என்னை கை காண்பித்து சொல்ல, அவன் கீழே இறங்கி வருவதற்குள் சுபிக்ஷா குட்டி மேடம் அவன் அம்மா எடுத்து கொடுத்து இருந்த உடை அணிந்து இருந்தவள் என்னிடம் ஓடி வந்து, என் முழங்கால் ஓடு ஒட்டி நின்று பேச ஆரம்பித்தாள்!! அவளை தூக்கி கொண்டு ஜெஷ்வந்த் என் அருகில் இருந்த காலி சேரில் அமர்ந்து கொண்டு, “ஹே பொண்டாட்டி சேர்ரீயில செம்மைய இருக்க!” என்று இதழ் குவித்து முத்த செய்கை செய்தான்…
“பிள்ளைய கையில வெச்சுகிட்டு என்னடா பேசுற?!!”
“சரி இந்தா நீ வெச்சுக்கோ நான் பேசறேன்!”
“போடா லூசு!!”
“ஹேய் இரு ரெண்டு மேடம் ஒண்ணா போஸ் கொடுத்தால் நான் போட்டோ எடுத்துப்பேன்!!” என்ற படி மொபைலை எடுத்து, எழுந்து நின்று போட்டோ எடுக்க ஆரம்பித்தான்… அடுத்து ஒரு போஸ் கொடுக்க, எழுந்து நிற்கும் சமயம் அவன் அக்கா மேடையில் இருந்து இவனை முறைத்து பார்ப்பது நான் கவனித்தேன்!! சட்டென ஜெஷ்வந்த் “ஹே ஷ்ரேயா இங்க பாரு!!” என்றதும் நானும் திரும்பி கொண்டேன்…
“உன் காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாம் எங்க ஜெஷ்வந்த்??!”
“என் கூட படிக்கிற பொண்ணுங்க 2 ஃப்ரெண்ட் ஏற்கனவே எங்கேஜ்மண்ட் வந்துட்டாங்க… சோ இன்னிக்கு நீ மட்டும் தான் வந்து இருக்க!!! எல்லாம் பசங்க தான் இருக்காங்க…”
“என்னடா இதை இப்போ வந்து சொல்லுற?”
“சரி முகத்தை நார்மலா வெய்!! எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க…” என்றான் மூக்கை துடைக்கும் சாக்கில்…
சுபிக்ஷா இறங்கி அவள் அம்மா இடம் ஓடி விட்டாள்… ஆகவே அப்போது சுற்றிலும் ஒரு முறை பார்க்க, இருக்கும் எல்லா பெருசுகளும் என்னை தான் பார்த்து கொண்டு இருந்தார்கள்..!!
“சரி அப்போ நான் வந்து இருக்க உன் மத்த ஃப்ரெண்ட்சு கூட உக்கார்ந்துகிறேன்…”
“லூசா ஷ்ரேயா நீ?? பசங்களோட நீ எப்படி போய் உக்காருவ!!!? அவனுங்க கொஞ்சம் சரி கிடையாது… அது போக, நான் லவ் பண்ற விஷயம் என் காலேஜ் பசங்க யாருக்கும் தெரியாது!!”
“அப்புறம் நான் மட்டும் தனியா உக்காரவா?”
“சரி வா நீ…” என்றவன் என்ன நினைத்தானோ கட கடவென என் ஹேன்ட் பேக்கை வழக்கம் போல் அவன் தோளில் எடுத்து போட்டு கொண்டு, முன்னே நடந்தான் ஸ்டேஜ் நோக்கி!!! அதை பார்த்து நொடியில் எனக்கு தலையே சுற்றியது…
சட்டென திரும்பி “கிஃப்ட் என்னடி வாங்கி கையில வெச்சு இருக்க?!” என திரும்பி கேட்கும் போது தான் அனைவரையும் கண்டு, என் பேக் என்னிடமே கொடுத்தான்… “பிள்ளையார் டா!!” என்றேன் வேகமாக அதை வாங்கி என் தோளில் மாட்டி கொண்டு.
“எல்லா பூமரும் அதான் வாங்கி இருக்கு!!
நீயுமா???!!!!” என்றான் அலுப்பாக… அப்போது தான் அவனின் சொந்த காரர் ஒருவர் ஏற்கனவே போட்டோ பிடித்து கொண்டு இருந்ததால், நாங்கள் இருவரும் படி அருகில் இருந்து பேசி கொண்டு நின்றோம்!!
“இல்ல ஜெஷ்வந்த் எனக்கு வேற என்ன வாங்குறதுன்னு தெரியல கடைல… அதான் சில்வர் பிள்ளையார் வாங்கினேன்!!”
“என்னது சில்வரா???!!!! வெள்ளி கிஃப்ட் ஆ வாங்கிட்டு வந்து இருக்க!!!!??” என்று மிரட்சி ஓடு விசாரித்தான்…
“ஆமா… என் அம்மா எப்போவும் வெட்டிங் போனா சில்வர் கோல்ட் கிஃப்ட் தான் வாங்கி தருவாங்க.!! அதான் நானும் சில்வர் வாங்கிட்டேன்… கோல்ட் கிஃப்ட்னா எனக்கு காசு பத்தாது!!” என்றேன் நான் குற்ற உணர்வோடு, ஏதோ கம்மியாக வாங்கி விட்டேன் என்று எண்ணி…
“ஹேய் நீ பாரு டி… சொந்த காரணங்களே யாரும் ஒன்னும் அவ்வளவா வாங்கி தரல!!
நீ சில்வர் கிஃப்ட் கொடுத்தா என்னைய தாண்டி கேள்வி கேப்பாங்க!!”
“நீ என்ன கிஃப்ட் வாங்கிட்டு வரணும்னு அப்போ முன்னாடியே சொல்லி இருக்கலாமே!! நான் இதை நவம்பர் மாசமே எங்கேஜ்மண்ட்காக வாங்கி வெச்சுட்டேன்!! வேணா நீ இந்தா போட்டோ பார்த்துக்கோ… ரொம்ப சின்னது எல்லாம் இல்ல..!!”
“ஹேய் ஷ்ரேயா உனக்கு புரியுதா இல்லையா???? நீ காஸ்ட்லி கிஃப்ட் வாங்கி இருக்க!!!! அதான் பிரச்னை!!”
“ஓ!!!” என எனக்கு அப்போது தான், அவன் சொல்ல வந்த விஷயம் புரிந்தும் புரியாதது போல் இருந்தது… அதற்குள் மேடை ஏறி விட்டோம், அக்காவின் கணவர் இயல்பாக சிரித்த முகத்துடன் கை குலுக்கி பரிசை வாங்கி கொண்டார்… அவன் அக்காவிடம் திரும்பி “ஹாப்பி மார்ரீட் லைஃப் அக்கா…” என்று வாழ்த்தி விட்டு அவர்கள் அருகிலேயே நின்று போட்டிக்கு போஸ் கொடுக்க, எதிர் பாரா விதமாக அவர்கள் அம்மாவும் வந்து என் அருகில் நின்று கொண்டார்…
அக்கா நான் கொடுத்த கிஃப்ட் அம்மா இடம் கொடுத்து விட, நானும் விடை பெற்று கீழே இறங்க போகும் சமயம் குடும்பமாக அவனை விசாரிப்பது எனக்கு கேட்டது!!
“யாரு அந்த பொண்ணு??!” என்றார் அவன் அக்கா… “கூட படிச்ச பிள்ளை க்கா!!” என்றதும்… அவன் அம்மா “அதுக்கு எதுக்கு டா வெள்ளி கிஃப்ட் வாங்கிட்டு வந்து இருக்கு?!!” என்றார் அவன் அம்மா…
“மா வெய் மா… எனக்கு என்ன தெரியும்.? அது பெரிய வீட்டு பிள்ளை, கூப்பிட்ட மரியாதைக்கு வந்து இருக்கு… வெறும் கையை வீசிக்கிட்டா வரும்!! வாங்கிட்டு வந்து கொடுத்திருச்சு… வேண்டாம்னு திருப்பியா கொடுக்க முடியும்?! நான் போறேன்!!” என சொல்லி விட்டு நழுவி கொண்டு என் பின்னால் வந்தான்…
“எம்மா…. என்ன டி நீ முன்னாடி பார்த்தா கும்முன்னு இருக்க, பின்னாடி பார்த்தா ஆளே அடிச்சு தூக்குற…?!!!! மேலே வேணா வரியா, உன்னய அப்படியே தூக்கிட்டு போய்……. அக்காவுக்கு கீழே கல்யாணம்.. தம்பிக்கு மேலே ஃபர்ஸ்ட் நைட்டு!! செம்மையா இருக்கும் லே??!!!!”
“செருப்பு மாதிரி இருக்கும்!!”
“😁😁 எப்படியும் நாடம்மலேயே வா போக போகுது!! அப்போ இருக்க டி உனக்கு… ஆமா நான் எப்படி இருக்கேன்னு சொல்லவே இல்ல…”
“ம்ம்… நல்லா தான் இருக்க!! ஆனா ஏன் ஒரு மாதிரி தாங்கி தாங்கி நடக்குற??”
“முந்தா நேத்து கிரிக்கெட் விளையாட போனேன் ஏரியா பசங்களோட… கல்லு பிரட்டி விட்டு கால் சுளுக்கீருச்சு!!”
“ஐயய்யோ…”
“ஒன்னும் இல்ல குட்டி மா… பதறாத!! ஹேய் எல்லாரும் உன்னய தாண்டி பாக்குறாங்க..!! நார்மல் சேலையாச்சும் கட்டி இருக்கலாம்… அப்படியே லெப்ட் உள்ள போ…”
“கல்யாணத்துக்கு போய் நைட்டு டிரஸ் உடையா வர சொல்ற??”
“அதுக்கு நீ ஏண்டி கல்யாண பொண்ணு மாறி காஸ்ட்லி சேரி கட்டி இருக்க!!?”
“இது ரொம்ப எல்லாம் காஸ்ட்லி இல்ல ஜெஷ்வந்த் வெறும் 8000 ரூபாய் தான்!!”
“ஏண்டி அது காஸ்ட்லி இல்லையா உனக்கு?!!! என் அம்மாவும் இன்னிக்கு 8000 சேரி தான் டி கட்டி இருக்காங்க…”
“என்னடா எல்லாத்துக்கும் எதாச்சும் சொல்ற???? அப்போ முன்னாடியே சொல்லி இருக்கணும் லே!! போ😓”
“அக்கா… இந்த பிள்ளைய உங்க கூட உக்கார வெச்சு சாப்பிட மட்டும் வைங்களேன்!! சரி ஷ்ரேயா நீ அந்த அக்கா கூட போ…”
“எங்க?!!” என்று முன்னால் பார்க்க, அங்கு பந்து நடக்கும் இடம் இருந்தது… வேக வேகமாக நிரம்பி வரும் இருக்கையில், அவன் சொல்லிய அக்கா ஒரு சேரில் சென்று அமர்ந்து, “இங்க வா பாப்பா!!” என்று அடுத்த சேர் நீட்டி சொன்னார்… நானும் சென்று அமர்ந்து கொள்ள, விறு விருவென விருந்து உணவு பரிமாற பட்டது!!
சாம்பார் சாதம் தாண்டாத நான், ரசம் வந்து விட்டேன் அதற்கு மேல் முடியாமல் திணற, அந்த அக்கா சிரித்து கொண்டார்… எனக்கு என்னவோ, “அவர் ஜெஷ்வந்த் என்னோடு நடந்து கொண்டே பேசி வந்த அனைத்தையும் கேட்டு விட்டார்!!” என்று மனதில் தோன்றி சந்தேகம் எழுந்தது… அப்போது தான் பாயசம் குடித்த படி, சுற்றிலும் அனைவரையும் பார்த்தேன்…
எல்லோரும் நார்மல் பட்டு புடவை அணிந்து மெல்லிய கோல்டு செயின் மட்டும் கழுத்துக்கு அணிந்து இருந்தார்கள்… ஏன் கல்யாண பொண்ணு ஆகிய அவன் அக்கா கூட, மேக்கப் ஆர்டிஸ்ட் கொண்டு வந்த கவரிங் நகையை தான் அணிந்து இருந்தார்… “எல்லாம் ஒரு காரத்திற்காக தான் இருக்கும்!!” என்று என் மூளைக்கு அப்போது தான் தோன்றி உணர்ந்து கொண்டது!!
மீண்டும் அவன் அம்மாவை சந்திக்கும் ஷ்ரேயா!! இம்முறை என்ன ஆகும்!!?
கூடி நின்று இருவரையும் சந்தேகம் கொண்டு விசாரிப்பார்களா??!! என்ன?
என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨
Thanks for reading மக்களே 🩷
