திரையிட்டு விலகாதே!
அத்தியாயம் -29
Hiiii வாசகர்களே ✨
மேக்கப் என்ன? பவுடர் கிரீம் கூட போடும் பழக்கம் இல்லை எனக்கு!! ஃபேசியல் செய்தேன், ஆகையால் முகம் மட்டும் பிரகாசமாக இருந்தது!! அதுவும் பாதி ஆட்டோவில் வருவதிலேயே மங்கி போய் விட்டது.. “அப்படி இருந்தும் நான் ஏன் சம்மந்தமே இல்லாமல், பிறரின் கவனத்தை ஈர்க்கிறேன்?!!!” என்று தான் எனக்கு மிகவும் சங்கோஜமாக இருந்தது!!
அது பற்றாக் குறைக்கு, மீண்டும் பாயசம் நிரப்பி விட்டு சென்றார்கள்… “ஐயய்யோ!! வந்த இடத்துல வோம்மிட் எடுத்துற கூடாது கடவுளே!!” என்று உணவை வீண் செய்ய விரும்பாத நான் அதை திணறி தக்கி mukki உண்டு முடிக்க, ஐஸ் கிரீம் வேறு கொண்டு வந்து வைத்தார்கள்… “போச்சு!!!” என்று எண்ணிய நான் திரு திருவென முழித்தேன், முக்கால் வாசி நபர்கள் வத்தல் குழம்பு, மோர் என்று முடித்து இலை மூடி சென்று இருக்க…
அந்த அக்கா சிரித்த படி, “சும்மா அதை கையில எடுத்துகிட்டு வா மா… என்று கை கழுவும் இடத்திற்கு அழைத்து சென்றார்.. அப்போது தான் புடவை கனம் காரணமாக தான் வயிற்றை அழுத்தி உள்ளது என்ற உண்மையை புரிந்தது எனக்கு… மீண்டும் மந்தம் உள்ளே வந்து, ஐஸ் கிரீம் உண்ணும் போது ஜெஷ்நாத் மேடையில் காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாம் கூடி, பிரேம் கிஃப்ட் கொடுத்து கேக் வெட்டி, கத்தி ஆரவாரம் செய்து கூச்சல் இட்டு கொண்டாடி கொண்டு இருந்தார்கள்…
அதை பார்த்த படியே நான் கீழே அமர்ந்து, ஐஸ் கிரீம் உண்டு முடித்து ஆட்டோ புக் செய்து இருக்க, அவன் அம்மா மீண்டும் என்னை காண வந்து இருந்தார்… “இந்தா டா…” என்று ஏதோ பையை நீட்டினார்… தாம்பூல பை என்று தேங்காய் இருப்பதை பார்த்து, புரிந்து கொண்டு நான் வாங்கி கொண்டு “தேங்க்ஸ் மா…” என்றேன் புன்னகை முகமாக… “ரொம்ப அழகா இருக்க!! நீ எப்போ ஜெஷ்வந்த் கூட படிச்ச?”
“வேலம்மாள் ஸ்கூலில மா… ரெண்டு பேரும் ஒரே வேன் தான்!!”
“ஓ!” என்ற அவர் ஏதோ கேள்வி கேட்க வந்தார், ஆனால் அதற்குள் எனக்கு ஆட்டோ ஓட்டுநர் இடம் இருந்து அழைப்பு வந்து விட, அதை ஏற்கும் முன்பாக “மா… ஆட்டோ வந்துருச்சு நான் கிளம்புறேன்!! பாய்… ஜெஷ்வந்த் கிட்டயும் சொல்லிருங்க..” என்று நான் பேசும் தமிழிலேயே அவருக்கு புரிந்து விட்டது, நான் மதுரையை சேர்ந்த பெண் இல்லை என்பது!!
“சரி பார்த்து போ மா…” என்று கை அசைத்தார், நான் காதில் அழைப்பை ஏற்று பேசி கொண்டே வெளியில் நடக்க… பெரிய மீசை வைத்த பெருசுகள் எல்லாம் வாசலில் கூடி, என்னை சந்தேக கண்ணோடு பார்த்து வைத்தனர்… நான் அதை பார்க்கும் நிலையில் இல்லை!! ஆட்டோ வந்து விட்டது, அதை பார்த்து ஏறுவதில் தான் குறியாக இருந்தேன்…
திரும்பி திரும்பி பார்க்க… ஒரு நொடி கூட ஜெஷ்வந்த் என்னை நோக்கி பார்வையை திருப்ப வில்லை..!! நிச்சயமாக அவன் இவ்வாறு என் அண்ணன் கல்யாணத்திற்கு வந்து இருந்தால், இவ்வாறு தனிமையில் ஓர் இடைத் அமர வைத்து, தனியாக சாப்பிட விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி போக விட்டு இருக்க மாட்டேன்!!
எவ்வளவு சந்தோஷமாக வந்தேனோ, அதே அளவு மன சங்கடத்தோடு நான் திரும்பி சென்றேன் என் ஹாஸ்டல் நோக்கி… இதற்காக ஒரு நாள் கல்லூரிக்கு லீவ் வேறு போட்டு, போய் இவ்வாறு திரும்பி இருக்கையில் சேலை கட்டி இருந்த ஒரு சிறு மகிழ்ச்சி என்னை மனம் மாற செய்து, டைமர் வைத்து பல செல்ஃபி எடுத்து தள்ளினேன்!!
தூங்க படுத்து இருக்க, அவன் அழைத்தான்… “என்ன இடுப்பு அழகி மேடம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க!!?
“ஹான் மாடு மேச்சுட்டு இருக்கேன்!!”
“கல்யாணம் எல்லாம் முடிஞ்சு!! அக்கா அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க…” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.
“உங்க வீட்டுல தானே நைட்டு….” என்று நான் இழுத்தேன்… என் பெரியம்மா பையன் திருமணம் பார்த்த ஞாபகத்தில் நான்…
“ஹான்… அது உங்க வீட்டு வழக்க படி!! எங்க வழக்க படி பையன் வீட்டுல தான்… நீ மனசு வெச்சா என் வீட்டுலயும் நானும் அதே முகூர்த்தம் கொண்டாடுவேன்…”😁😜😘🤩
“எப்போ பாரு அதே நினைப்பா!!? போடா…”🫣
“சரி எல்லா போட்டோ அனுப்பு!! நான் அதை வெச்சு மேனேஜ் பண்ணிக்கிறேன்…”
“முடியாது போடா… ஆமா நீ எங்க இருக்க?”
“நான் வீட்டுல தனியா இருக்கேன்!! எல்லாரும் அக்கா கூட போய் இருக்காங்க… நைட்டு தானா திரும்பி வருவாங்க, வீடு பழகி கொடுத்துட்டு….”
“அது என்ன?”
“புது வீட்டுக்கு போய் இருக்கால அக்கா அதான் துணைக்கு!!”
“ஓ!! சரி சரி!!”
“ஹேய் பொண்டாட்டி வீடியோ கால் வாயேன்….”
“ஏன் டா அதுக்கு ஒரு மாதிரி பேசுற??!!”🙄
“உன்னய பார்த்த எபெக்ட் டி அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது!!!! இவ்வளவு நாளா இந்த அழகு எல்லாம் எங்கடி மறைச்சு வெச்சு இருந்த??? எப்போ பாரு லூசா ஒரு சுடிதாரு, சட்டைன்னு போட்டு சுத்திட்டு கிடக்குற..”😏🥱
“ஹான் பின்ன தினமுமா பட்டு புடவை கட்டிக்கிட்டா காலேஜ் போக முடியும்!!!???”🙃
“அதை விடு… நான் இப்போவே சொல்லிட்டேன் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீ டெய்லி சேரி தான் கட்டணும்!!”😌😍
“நீ துவைச்சு போடு… மூணு சேரி கூட காட்டுறேன்!!” என்றேன் என் கட்டிலில் குவியலாக கிடக்கும் அந்த பட்டு புடவையை பார்த்த படி… 😶🌫️
“துவச்சுருவோம்!!!” என்றான் நக்கல் தொனியில்…🤪
“பேச்சே சரி இல்லையே!!” 🧐🤔
“சாம்பாருக்கு மேல சாப்பிட முடியல யாருக்குமே… ஆனா எனக்கு மட்டும் கறி விருந்து சாப்பிட்ட மாறி முறுக்கிட்டு இருக்கு உடம்பு எல்லாம் உன்னய அப்படி பார்த்தது லந்து……!!!” 🥵🫠😉
“ஏன்??! சாப்பாடு நல்லா தானே இருந்துச்சு!!”
“அதா டி முக்கியம் காலையில ரெடி ஆகி எப்படியோ போட்டோ எடுத்திருப்ப… ஒண்ணு விடாம எனக்கு அனுப்பி வை!!”😃
“ஹேய் போ அதெல்லாம் மாட்டேன்!!”🤭
“இப்போ ஹாஸ்டலில் தனியா தானே இருக்க!! அப்புறம் நான் வந்துட்டா… கீ ன்னு கத்த கூடாது…” 😋😝
“சரி குய்யோ முறையொன்னு கத்துறேன் வந்து பாரு தில்லு இருந்தா..!!” 😂🤣
“உனக்கு இருக்கு டி… வர மாட்டேன்னு தைரியத்துல பேசுற!!!” 🙂↔️😏
“ஆமா😛😛 ஸ்வீட் ட்ரீம்ஸ்… எனக்கு தூக்கம் வருது பாய்!!” என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தாலும், மூன்று புகை படம் அனுப்பி விட்டு நிஜமாகவே உறங்கி போனேன்…
“ஹே குட்டி மா… வீட்டுக்கு வரியா டி!!!” என்றான் ஜெஷ்வந்த் அடுத்த வாரம் கல்லூரியில் நான் இருக்கும் போது…
“அது ஏன் இப்போ!!?”
“ஹேய் எனக்கு கால் சுளுக்கு இல்ல… பிராக்ச்சர்னு சொல்லிட்டாங்க டி!! அம்மா வேற அக்காவை குடி வைக்க சென்னை போய் இருக்காங்க… அக்கா வீடியோ கால் பண்ணா பாரேன், டிவி, வாஷிங் மிஷின், AC, பிரிட்ஜ் எல்லாமே என் அம்மா தான் காசு போட்டு வாங்கி கொடுத்து இருக்காங்க…”
“அதுனால என்னடா பொண்ணுக்கு செய்யுறாங்க!”
“ஹேய் மாமா வீட்டுல ஒண்ணுமே வாங்கல..!! எனக்கு வேற தனியா இருக்காது ரொம்ப போர் அடிக்குது… நீ ஒண்ணு இப்போவே வந்து பார்த்திட்டு போ.. அப்படி இல்ல நைட்டு ஸ்டே ஓவர் மாதிரி கிளம்பி வா.!!”
“ஜெஷ்வந்த் என்ன பேசுறன்னு புரிஞ்சு தான் பேசுறியா??!! நான் காலேஜில் இருக்கேன்… எனக்கு ஃபைனல் இயர் ப்ராஜெக்ட் போய்கிட்டு இருக்கு… இப்போ வந்து இப்படி பேசிட்டு இருக்க!!”
“ஈவினிங் வா.. இல்ல நைட்டு வரதுன்னா காண்டம் வாங்கிட்டு வா!! நான் விடிய காலையில உன்னை கூட்டிட்டு போய் ஹாஸ்டலில் விட்டுடுறேன்… உன் இஷ்டம்!!”
“வரேன் வை!!!” என்று நான் இடிந்து போய் அமர்ந்து இருந்தேன்…எனக்கு வேறு லாங் லீவ் இல்லாததால், அந்த மாதம் ஊருக்கு போக முடியாமல் முதல் முறையாக மாட்டிக் கொண்டேன்… அது போக, அவன் அக்கா கல்யாணம் முடிந்து ஒரு வாரம் கூட முழுதாய் ஆகி இருக்காத நிலையில் இவன் என்ன இப்படி எல்லாம் பேசுகிறான்??? என்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது…
“நான்கு ஆண்டு காதல் இப்படியா கை கூடிய 4 வாரத்தில் கடந்து போக வேண்டும்!????” என முட்டி கொண்டு வரும் அலையை கட்டு படுத்திக் கொண்டு, லேப் வேலைகளை செய் முறைகளை செய்ய தொடர்ந்தேன்… அது குழுவாக ஒரு பேர் ஆசிரியர் தலைமையில் செய்தோம் ஆகையால், அவர் சொல்ல சொல்ல சோம்பல் படாமல் நிற்காமல் பம்பரம் போல் சுழன்று வேலை செய்ததில் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை!!
மணி மாலை 5 என காண்பித்தது, எல்லா கண்ணாடி சாமான்களை கழுவி கவுத்து விட்டு என் கை கடிகாரம் எடுத்து அணியும் போது… வெள்ளை கோட்டை கழட்டி மடித்து பேக் உள்ளே வைத்து விட்டு, மொபைல் எடுத்து காண ஜெஷ்வந்த் மூன்று முறை அழைத்து இருந்தான்… வாட்ஸ்ஆப்பில் அவன் வீட்டு லொகேஷன் அனுப்பி இருந்தான்… அப்போது தான் அவன் விளையாடவில்லை, நிஜமாகவே வர சொல்லி இருக்கிறான் என்பது எனக்கு புரிந்தது!!
என்னை சுற்றிலும் 40 பேரும் வீட்டுக்கு பர பரவென கிளம்பி கொண்டு இருக்க, நான் மட்டும் சிலை போல் செய்வது அறியாது அமர்ந்து இருந்தேன்!! ஒரு பக்கம் பாவமாக இருந்தது எனக்கு, அவன் கால் உடைந்து போய் மாவு கட்டுடன் வீட்டில் தனியாக இருக்கிறானே என்று… மறு பக்கம் எனக்கு சொல்ல தெரியாத அளவு பயம் என்னை முழுதாய் ஆட்கொண்டு இருந்தது!! போனால், போன மாதிரி கன்னி பெண்ணாக திரும்ப முடியாதே.!!! பிரகதி போல் எல்லாம் என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது.…
ஷ்ரேயா என்ன முடிவு எடுப்பாள்??
அவள் வாழ்வே இதனால் மாற போகிறது என்பதை அவள் உணராமல் இல்லை, ஆயினும் காதல் என்ன செய்ய காத்து இருக்கிறது???
என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨
Thanks for reading மக்களே 🩷
