திரையிட்டு விலகாதே! -3

திரையிட்டு விலகாதே! 
அத்தியாயம் -3

Hiiii வாசகர்களே ✨

பொன்னியின் செல்வன் படம் வருவதற்கு முன்பாகவே, அதில் வரும் ஆதித்ய கரிகாலன் போல் நான் அவனுக்காக அவனுக்காக தான் எல்லாம் என்று பெயரிட தெரியாத அந்த உணர்வுக்கு சந்தோஷம் என்று பெயரிட்டு தண்ணீர் பிடிக்க, அது இது என சாக்கு சொல்லி கொண்டு சுற்றி வந்தேன் அவனை காணும் அந்த ஒரு நொடிக்காக!!

ஆனால் அவனோ இறுதி வரை அதை பற்றி அறியாமல் போய் விட்டான்.. ஆம்! முதலில் எங்களுக்கு தான் இறுதி ஆண்டு தேர்வு நடத்தி முடித்து, லீவ் விட்டார்கள்!!
விரைவில் பன்னிரண்டாம் வகுப்பு துவங்குவதற்காக…

அதன் பின்னே அவனுக்கு பொது தேர்வு நடந்து கொண்டு இருந்தது… பேச எல்லாம் இல்ல, அவனை பார்க்கவும் முடியாமல், அவனின் புகை படத்தை காணும் வாய்ப்பு கூட கிடைக்காமல் மகிழ்ச்சி என்ற ஒன்றே இல்லாமல் போனது அந்த லீவ் நாட்களில்!

கிட்ட தட்ட அது காரிருள் சூழ்ந்த நாட்கள் ஆகி, வஞ்சி என் மனதில் மகிழ்ச்சி என்ற ஒன்றே மறந்து போனது… அவள் வீட்டு நிலை வேறு நாளுக்கு நாள் மோசம் அடைந்து கொண்டே வந்த ஒரு நிலை!!

நிச்சயம் காதல் கத்திரிக்காய் எல்லாம் ஒன்றும் கூடாது என சொல்லி சொல்லியே தான் வளர்த்து வந்தார் என் தாய்… ஆனால் காதல் இது தான் என்றே அறியாத பேதையாக நான் அவன் சிந்தனையில் என்னை தொலைத்து இருந்தேன்..!!
 

ஆகஸ்ட் மாதம் நான் அவனை கண்டது முதல், நவம்பர் மாதம் வரை நடந்த அனைத்துமே என் மன திரையில் படம் போல் ஓடி கொண்டே இருந்தன…

அந்த கிரிக்கெட் மேட்ச் தினம் அன்று அவன் களம் இறங்கிய விதம், எதிர் பாராமல் அவனே எங்கள் வேனில் வந்த அந்த தருணம்!

யுனிவர்சல் உங்களுக்கான வற்றை எல்லாம் அந்த அந்த சமயத்தில் உங்கள் இடத்தில் கொண்டு வந்து சேர்பிக்கும் என்பார்களே.. அதே போல் என் பதினைந்து வருட வாழ்க்கை இதற்காகவே தான், எனக்கு யார் மீதும் ஈர்ப்பு வந்ததில்லை என்று உளம் ஆற நம்பினேன்…

மொபைல் தொடு திரையில் அவனை காணா விடில் என்ன? நான் காட்டுகிறேன் உனக்கு என்று ஏதோ கேமரா வைத்து படம் பிடித்தார் போல் என் மனக்கண்ணில் அவன் காட்சிகள் தோன்றியது!!

அது நாள் வரை இரண்டு தண்ணீர் பாட்டில் கொண்டு வந்த நான் வேண்டும் என்றே அதை ஒரு தண்ணீர் போட்டிலாக்கி அவ்வப்போது எதிர் புறம் காரிடார் சென்று அவன் வகுப்பை பார்த்த படியே, அதை நிரப்பி வருவேன்…

பொது சேவை கூட செய்தது உண்டு! 
நான் செல்கிறேன் என்பதால் பலரும் அவரவர் பாட்டில்களை என்னிடம் தளி விடுவார்கள்… கை கொள்ளாமல் வாங்கி வருவேன், எல்லாம் அவனை காண்பதற்காக…

கம்ப்யூட்டர் லேப் அந்த தண்ணீர் பிடிக்கும் இடம் தாண்டித்தான் செல்ல வேண்டும்… அந்த நாலு கிளாஸ் தாண்ட எனக்கு 10 நிமிடம் பிடிக்கும், புயலென வேக எட்டு வைத்து நடக்கும் நான் ஆமை வேகத்தில் நடப்பேன்!!

வைஷூ இடம் அவனை பற்றியே பேசினாலும், அவன் மீதி எனக்கு இருந்த உணர்வை பற்றி, ஒரு நாளும் தள்ளி தவறி கூட வாயே திறந்தது இல்லை…

C பிரிவில் உள்ள ஒரு மாணவனும் என் வேன் தான், அவனுக்கு என் மீது ஒரு கண் என்பது ஒரு பெரிய புரளியாக வளம் வந்தது… அவன் அப்பட்டமாக பார்ப்பதையும் நான் கவனித்தது உண்டு..!!
அவ்வாறு பலரின் கண்கள் என் மேல் இருப்பினும், எனது கண்களோ அவன் ஒருவன் மீதே இருந்தது!!

உதாரணத்துக்கு, பள்ளியில் பொது தேர்வுக்கு கீறி கிழித்து கால் நொண்டும் மேஜை எல்லாம் மாற்ற, மேஜைக்கு அடியில் இருக்கும் தட்டில் மாணவர்கள் வைத்து இருந்த ஏழு பிரிவின் புத்தகங்களையும் தூக்கி ஒரு இருட்டு அறையில் குவித்து போட்டு வைத்து இருந்தனர்…

காலை வகுப்பு முழுக்க, கிளாஸ் ஒர்க் மட்டும் வைத்து சமாளித்து விட்டு, லஞ்ச் விடுப்பில் அந்த அறைக்கு போக அதில் கூட்டம் எள் விழுந்தால், யார் காலிலும் விழும் அளவு இருக்கவே நானும் வைஷூவும் “சாப்பிட்டு வந்து பார்ப்போம்!” என்ற முடிவோடு வகுப்பில் அமர்ந்து சாப்பிடுவதற்குள், யார் என்றே தெரியா மாணவர்கள் கூட வந்து வந்து என் புத்தகங்களை கொடுத்து விட்டு சென்றனர்…

எனக்கே ஆச்சரியமாக தான் இருந்தது!!
என்னை எல்லாம் யாரும் பார்க்க மாட்டார்கள் என்று நான் எண்ணி இருக்க, ஆனால் நடந்த இந்த சம்பவம் வேறு ஒன்றை எனக்கு உணர்த்தியது!!

அது போக அவன் பெயரை நான் அறிந்து கொண்ட தினம், அது தான் என்னுடைய மனதின் மிக நெருக்கமான அவன் நினைவு…

ஜெஷ்வந்த்” என்று இன்னொரு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அண்ணா அவனை அழைத்து பேச, அந்த நொடி என் மனதில் அந்த பெயர் மைதா பசை போட்டு ஒட்டியது போல் பதிந்து போனது!!

வழக்கம் போல் பெண்கள் கோட் வேர்ட் வைத்து பேசுவதில், வைஷூ இடம் நான் பேசும் போது முழுக்க முழுக்க அவனை J அண்ணா அண்ணா அண்ணா என்றே தான் குறிப்பிடுவேன்!

அதை சொல்லும் போது என் முகமே அப்படி மலர்ந்து ஒரு புது பொலிவோடு இருக்கும், வெட்கம் பூசி கொண்ட என் பதின் பருவம் முழுக்க அவனுக்கே அர்ப்பணம் செய்ய தோன்றும்!!

அத்தோடு அவன் முகம் பார்த்த அந்த முதல் நாள்….. ஆம்! ஒரு வழியாக என் தவம் சற்று விரைவில் நிறைவேறியது… ஒரு நாள் அவன் சிரித்து சிரித்து பிற வேன் மாணவர்களோடு பேசி கொண்டு இருந்தான், கார் ஜன்னல் வழியாக நான் அதை கண்டேன்..!

அழகிய ஆழமான கரு விழிகள் என்னை காந்தம் போல் இழுத்தது… அதை விட பேர் அழகு அவனின் தெத்து பல்!!! என் அம்மாவிற்கும் இதே போல் தெத்து பல் இருக்கும், அதை நான் ரசிக்காத நாளே இல்லை, அதே போல் அச்சு அசல் இவனுக்கு இருக்கவே நான் மொத்தமாக க்ளீன் போல்ட் ஆகி விட்டேன்..!!🫠

அவனும் பள்ளி மாணவன் என்பதால், ஒன்றும் பெரிதாய் ஆர்ம்ஸ் சிக்ஸ் பேக் எல்லாம் இருக்காது, ஆனால் அவனுக்கு என்று சிக்னச்சர் தனித்துவமான ஸ்டைல் உண்டு!!

ஆண்களுக்கே உண்டான உடல் வாகு, இன்வெர்ட்டட் முக்கோண வடிவில், ஆள் அம்சமாக இருப்பான்!! 😉

அவனின் அகன்ற தோள்கள், மற்றும் பின் தலையில் இருக்கும் அலை அலையான கார் குழல் கேசம் அது கழுத்தில் m வடிவில் முடிந்து இருக்கும்!! பெரும் பாலும், வேனில் அவன் பின்னால் அமர்ந்து நான் காணும் காட்சி இது தானே!

அதை விட முக்கியமானது அவன் குரல், பதின் வயதில் குரல் உடைந்து கொஞ்சம் கட்டையாகும் அல்லவா இளவட்ட ஆண் பிள்ளைகளுக்கு… 
அந்த குரல்!! 
அதுவும் அவன் வாய் மொழியும் பொது நாள் முழுக்க கேட்டு கொண்டே இருக்கலாம் என்றே தோன்றும்..!!

அதற்கு மேல், அவனின் அரும்பு மீசை…
அதை பிடித்து திருகி அழகு பார்க்க, கை பர பரவென தோன்றும்!!

ஆறு மாணவர்களும், பள்ளி வளாகத்திற்குள் வேன் நுழைந்ததும் தான் டை கட்டிக் கொள்வார்கள்! அதே போல் ஒரு நாளில், அவன் மட்டும் டை 👔 நீட்டி கொண்டே இருந்தான்…

ஆறு பேரில், ஒருவனுக்கு மட்டும் தான் அதை கட்ட தெரியும்… நான் என் அண்ணாவுக்கு என் தாய் கட்டுவதை பார்த்து பார்த்து கற்று கொண்டு இருந்தேன், ஆதலால் எனக்கும் தெரியும் என்று அன்று அவன் டையை வாங்கி என் கழுத்தில் போட்டு கட்டி கொடுத்தேன்!!

அவன் தேங்க்ஸ் என்று பரபரப்பில் சொல்லி விட்டு, தோள் பையை எடுத்து மாட்டி கொண்டு உள்ளே நுழைந்தான்… ஆனால் எனக்கோ அந்த தருணம், அவன் வாசம் என் நாசியில் ஏறி இருக்க, நாள் முழுவதும் பாவை நான் பழரச குவளையில் விழுந்த எறும்பு போல் கிறங்கி போய் கிடந்தேன்!!

அதை விட அவன் கை விரல்கள்!!
அப்பப்பா என்னவென்று சொல்லி வர்ணிப்பது என்றே தெரியாது…

“இது எப்படி உனக்கு தெரியும்?” என நீங்கள் கேட்கலாம்…

ஆம்! தினம் மாலை நான்கு பேர் நடு இருக்கையில் திணித்து கொண்டு அமர்ந்து இருப்பதால், அவன் திரும்பும் பக்கம் நான் இருக்கவே பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் என் இடம் தான் அவன் பள்ளி பையை கொடுப்பான்!!

அதை கொடுக்கும் போது, அவ்வப்போது அவன் விரல் என் விரல் தீண்டி என் உடல் எங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் சிலிர்த்து அமர்ந்த நேரங்களும் உண்டு!!

அது ஒரு ஊதா நிற பேக் ஆகும், அதை நான் கால் அடியில் வைத்து கொள்ள மாட்டேன்!! என்றுமே அதை என் பை அருகில் தான் என்னோடு நான் அமர்ந்து இருக்கும் இருக்கையில் பக்கத்தில் வைத்து அனைத்து பிடித்து கொண்டு அமர்ந்து இருப்பேன்…

அதை மற்றவர்கள் பார்க்க, நான் அது விழாமல் பிடித்து இருப்பது போல் தெரியும், ஆனால் உண்மை அது அல்ல என்று கள்ளி என் ஒருவலுக்கு மட்டுமே தெரியும்!! 😅🙈

அவன் பொருள் ஒன்று என்னிடம் இருப்பது, என்னவோ காதல் மயக்கம் கொண்ட காதை எனக்கு அவனே என்னோடு இருப்பதாக ஒரு ஆனந்தம்!!

இன்ஸ்டாகிராம் பார்த்ததில், அவன் பிறந்த நாள் அறிந்து கொண்டேன்!! அது போக அவனுக்கு ஒரு அக்கா, அம்மா இருப்பதையும் தெரிந்து கொண்டேன்…
ஆனால், டிரைவர் அங்கிள் பேசுவதை வைத்து அவனுக்கு அப்பா இல்லை, தவறி விட்டார் என்பதை தெரிந்து கொண்டேன்!

அது என்னவோ என் இழப்பு போல் எனக்கு அன்றைய நாள் முழுவதும், மனம் பாரம் ஆகி போய் சோகமே உரு கொண்டு என் மனம் சுனங்கி, அவன் கஷ்டம் என் கஷ்டம் போல் உணர்ந்து கண்ணீர் விட்டு அழுதேன்!!

ஆக, அவனின் அம்மா பள்ளி ஆசிரியர். அக்கா இன்ஜினியரிங் பட்டதாரி, இப்போது அவளும் வேலைக்கு செல்கிறாள்… அதையும் தாண்டி இருவரும் இவனை படிக்க வைத்து பார்த்து கொள்கிறார்கள், இவனின் கனவை கூட சப்போர்ட் செய்து..!!

ஒரே ஒரு முறை பார்த்த, அவன் அக்காவின் பட்டம் பெரும் நாள் போட்டோவில் இருந்து அவனை மட்டும் இன்றி, அவன் குடும்பம் மீதும் மதிப்பும் மரியாதையும் நேசமும் கொண்டேன்!!

இது எங்கே சென்று முடிந்தது?
என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்….

அடுத்த அத்தியாயத்தில்,
என் மீது அவனின் முதல் ஸ்பரிசம்!!

Thanks for reading மக்களே 🩷
 

 

❤️ Loading reactions...
3 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page