திரையிட்டு விலகாதே! -32

திரையிட்டு விலகாதே! 

அத்தியாயம் -32

Hiiii வாசகர்களே ✨

அந்த தெரு முழுவதும் வீடுகள் தான் நிறைந்து இருந்தன, ஆயினும் அதற்கு நேர் எதிரில் உள்ள தெருவில் ஒரு கடைக்காரர் எங்கள் இருவரை காண்பதை நான் முதலிலேயே கண்டு கொண்டேன்!! ஜெஷ்வந்த் அதை கண்டும், “அவருக்கு எல்லாம் கண்ணு தெரியாது!” என்று சொல்லி பைக் அருகில் இறங்கி நிற்கும் என் இடை வளைத்து பிடித்து இழுக்க, நான் முரண்டு பிடிக்கவும் அதே வேகத்தில் என்னை பின்னால் தள்ளினான்… எதிர் பாரா விதமாக, கடவுள் புண்ணியம் அங்கு இருந்த காரில் மோதி தெருவில் விழாமல் போனேன்..

அதனால் எனக்கு அழுகை பீறிட்டு வரவும், “ஏதோ சரி இல்லை!” என யூகித்த அந்த எதிர் தெருவில் இருந்த கடைக்காரர் எங்களை நோக்கி வருவதற்கு ரோட்டை கிராஸ் செய்ய நின்று கொள்ள, ஜெஷ்வந்த் விரைந்து செயல்பட்டு என்னை வண்டியில் ஏற சொல்லி வேக வேகமாக அந்த தெருவில் இருந்து வெளியேறினான், அவர் வரும் முன்பாக!!

எனக்கு அந்த ஒரு நொடி, “பேசாமல் பக்கத்தில் வரும் லாரிக்குள் குதித்து விடுவோமா?!!!” என்று யோசனை வந்தது… ஜில்லிட்டு போய் இருந்த உள்ளங்கையையே வெறித்து பார்த்த படி, அதையே நனைக்கும் அளவுக்கு கண்ணீர் அருவியாய் கொட்டியது இரு கண்களில் இருந்து… பிரம்மை தான் பிடித்து இருந்தது, அவன் முகத்தை கூட காணாமல் அப்படியே இறங்கி ஹாஸ்டலுக்குள் சென்றேன்… 

போய் விழுந்தவள் தான் உடை கூட மாற்றவில்லை, கருவில் உள்ள சிசு போல் சுருண்டு படுத்த படி அழுது கொண்டே எப்போது உறங்கினேன் என்று அறியாமல் தூங்கி அடுத்த நாள் ஃபீவர் கொண்டு தேகம் அனலாய் கொதிக்க, கண் விழித்தேன்!! அலாரம் அடித்து ரூம் மேட் அக்கா அமர்த்தி விட்டு சென்று இருந்தார்… மணி இப்போது 10:30 அடித்து வாரி சுருட்டி இழுத்து அமர்ந்து கண்களை திறக்க முடியாமல் வேறு வழி இல்லாமல் எக்ஸாமுக்கு படித்தேன்…

இப்படியே ஒரு வார்த்தை கூட பதில் பேசாமல் மூன்று எக்ஸாம் முடிந்து இருந்த நிலையில், நான் பாலத்திற்கு கீழ் உள்ள டீ கடையில் ரோஸ் மில்க் குடித்தேன் மாதவிடாய் காலம் கொண்ட கிரேவிங்காக!

அன்று மாலை மீண்டும் அதே போல் ஹாஸ்டலுக்கு கீழே வந்தான் ஜெஷ்வந்த். உண்மையில் எனக்கு அவன் முகத்தை பார்க்க கூட பிடிக்கவில்லை!! 

ஆம்! “தினம் ஒரு முறை ஆவது கண்டு விட மாட்டோமா??” என்று மூன்று ஆண்டுகள் ஏங்கி கிடந்த என் மனம், இப்போது இந்த நொடி அவனை காண வெறுத்தது!!!

அவனும் அக்காவை காண சென்னை சென்று விட்டு தான், மூன்று நாள் கழித்து வந்து இருந்தான்… ஆகையால் தான் நேரடியாக பைக்கை பயன்படுத்தாமல் இருக்க கூடாது என்பதற்காக, இங்கு ஆஜர் ஆகி இருக்கிறான்!! வழக்கம் போல் சாரி சாரி சாரி சாரி சாரி சாரி என 1000 முறை கெஞ்சி விட்டு, என்னை பைக்கில் அமர வைத்து அவனும் அமர்ந்து எடுத்து கொண்டு பீட்சா சாப்பிட, பாக்ஸ் பீட்சா கடைக்கு அழைத்து சென்றான்…

எனக்கு ஒன்று, அவனுக்கு ஒன்று மில்க்ஷேக் நக்கெட் என்று ஆர்டர் செய்து விட்டு என்னோடு வாய் ஓயாமல் பேசினான், அக்கா வீட்டில் நடந்தவற்றை எல்லாம் சொல்வதற்காக… பில் கட்டி விட்டு கை கழுவ என் அருகில் வந்தவன், மீண்டும் பொது இடம் என இங்கிதம் பாராமல் கழுத்தோடு கை போட்டு இழுத்து அணைத்து முத்தம் இட்டு விலகினான்…

வெளியில் வரும் போது, நான் வழியில் பார்த்த ஒரு கண் கண்ணாடி ஆப்டிகல் கடையில் நிற்க சொல்லி பவர் செக் செய்து கொண்டேன்! என்னமோ தூரத்தில் இருப்பது எல்லாம் தெரியாதது போல் எனக்கு தோன்றவும், அவர்களோ “ஒன்றும் இல்லை!!” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள் இரு நிமிடங்களில்… பைக்கில் ஏறும் போது, ஜெஷ்வந்த் “நா தான் எப்போ பார்த்தாலும் ஹோட்டல் பில் கட்டுறேன்!!” என்று சொல்லி காண்பித்தான், ஆனால் அப்புறம் அவனே சிரித்து கொண்டான்..

அவன் அக்காவிற்கு திருமண பரிசு மட்டுமே நான், மூவாயிரம் ரூபாய்க்கு வாங்கி இருந்தேன்.. இவன் பைக்கின் கால் வைத்து ஏறும் பாகம் 1700 ரூபாய்க்கு வாங்கி இருந்தேன், அவன் அம்மா சிரமம் கொள்கிறார் என்று சொன்னதற்காக!! அது போக அவன் ஆசை பட்டு, ஆனால் வீட்டில் வாங்கி தர மறுக்கிறார்கள் என்பதற்காக 1400 ரூபாய்க்கு பிராண்டட் கருப்பு நிற சட்டை வாங்கி பரிசாக கொடுத்து இருக்கிறேன்… 

1000 கணக்கில் செலவு செய்த நானே அமைதியாக இருக்க, 100 கணக்கில் செலவு செய்து விட்டு என்னமோ நான் கோல்டு டிக்கர் (gold digger) போல் சொல்லி காண்பிக்கிறானே என்று எனக்கு வியப்பாக இருந்தது!! ஆயினும் என் தன் மானம் சீண்டி விட்டான், இம்முறை நான் ஹேன்ட் பேக் எடுத்து வந்து இருந்தேன் ஆகையால் நான் ஊருக்கு செல்ல வைத்து இருந்த காசில் இருந்து 500 ரூபாய் தாளை எடுத்து அவன் கையில் திணித்து விட்டு திரும்பி ஹாஸ்டலுக்குள் சென்று விட்டேன்…

இறுதி தேர்வும் முடிந்து விட்டது… அன்று நான் ஒரு முறை கேட்டதற்காக என்னை அந்த ஈகிள் பார்க் அழைத்து சென்று இருந்தான், நுழைவு கட்டணம் இருவருக்கும் 60 ரூபாய்… ராட்டினம் மற்றும் இன்னொரு ரைட் என அங்கேயும் நானே கட்டணம் செலுத்தினேன்.!! ஒருவருக்கு 70 ரூபாய், என்று எனக்கு தான் 300 ரூபாய் பழுத்தது!! 

பிறகு வெளியேறி, அவன் சொன்ன திட்ட படி தங்க மயில் நாக கடைக்கு சென்றோம்! அங்கு இருவருக்கும் வெள்ளி மோதிரம் பார்க்க, என் விரலுக்கு பொருந்து எனக்கு பிடித்த மோதிரத்தை “700 ரூபா டி வேற பாரு!” என சொல்லி பொருந்தாத இறுக்கமாக இருக்கும் ஒன்றை எடுத்து கொடுத்து விட்டு, அவன் ஒன்றை எடுத்து பில்லிங் கொடுத்து விட்டான்… 700 ரூபாய் அவன் மோதிரம் எனது 300 ரூபாய், மொத்தம் 1000 ரூபாய் எனக்கு அடுத்து ஒரு செலவு..!!!

மீண்டும் ஹாஸ்டலுக்கு செல்ல, எனக்கு அதையே தான் கண்ணில் ஓடி கொண்டே இருந்தது… “எனக்கு பிடித்ததையே என் காசில் வாங்க விடாமல் செய்கிறானே… அப்போது என் எதிர் காலம் இவனுடன் என்னவாக எப்படி இருக்கும்??”

அடுத்த நாள் மாலை என்னை கிளம்பி தயாராக சொல்லி விட்டு, அவன் வந்தான் கோவிலுக்கு அழைத்து செல்வதற்காக… நானோ தினம் பயன்படுத்தும் உடை இல்லாமல், அனார்கலி சுடிதார் அணிந்து இருக்க அவனோ நேற்று அணிந்து இருந்த பழைய சட்டை போட்டு வந்து இருந்தான்!! போகும் வழி நெடுக, “ஏண்டி என்னமோ கல்யாணம் பண்ணிக்க போற மாறி ரெடி ஆகி வந்து இருக்க??!! நான் வேணா வண்டியை திருப்பவா? போய் டிரஸ் மாத்திட்டு வரியா??? எல்லாரும் உன்னய தான் பாக்குறாங்க!!!” 

“ஹான் சரி திருப்பு… நான் ஹாஸ்டலுக்கே போறேன்!! நீ ரிங் எடுத்துட்டு வீட்டுக்கு போய் நீயே வெச்சுக்கோ எனக்கு வேண்டாம்!!!” என்று குளிர்ந்த குரலில் சொன்னேன்… தலை எழுத்தை நொந்த படி அதன் பிறகு அவன் அமைதியாகி விட, அவன் பைக் நிறுத்தி விட்டு வருவதற்குள் நான் காதில் இருந்த நீளமான ஜிமிக்கையை மாற்றி, தினம் அணியும் பொட்டு போன்ற சிறிய கம்மலை ஹேன்ட் பேக்கில் வைத்து இருந்தேன், ஹாஸ்டலில் காணாமல் போய் விடுமே என்பதற்காக. அதை எடுத்து மாற்றி அணிந்தேன் கண்ணில் கண்ணீர் திரையிடுவதோடு!! 

100 பூ வாங்கி கொடுத்தான், இடை வரை நீண்டு இருக்கும் என் கூந்தலுக்கு… அரை முழம் அது!! நல்ல நாள், வெள்ளி கிழமை என்பதால் கூடமாக இருந்தது!! அந்த நீண்ட வரிசையில் நிற்கும் போதும், “எல்லாரும் உன்னை தாண்டி பார்க்குறாங்க!! எங்க போனாலும் எப்படி இப்படி ஆகுது??” என்று சொல்லி சொல்லியே என்னை மேலும் அழும் நிலைக்கு தள்ளி கொண்டு இருந்தான்…

மீனாட்சி அம்மன் பாதத்தில் வைத்து இருவரும் மாற்றி கொண்டோம்!! என் விரலில் அது நுழையவே இல்லை, அவனுக்கோ அது லூசாக இருந்தது… எங்கள் பொருந்தாத ஜோடி பொருத்தம் போல்..!! பிரசாத கடையில் அப்பம் வாங்கி உண்டு கொண்டே, தூரல் மலையில் பொற்றாமரை வைத்துக் படியில் அமர்ந்து நான் சரியில்லை என்று உணர்ந்தும் என் வாழ்வு கையை மீறி போகிறது எண்ணி பார்த்த படியே, அந்த தங்க தாமரையை வெறித்து பார்த்து கொண்டு இருந்தேன்!!

பெரும் மூச்சுடன், “போகலாம்!!” என்று சொல்லி எழுந்து நடந்தேன்… அவனுக்கு எங்கு போனாலும் தண்ணீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும், தினம் சந்திக்க செல்லும் போது அதற்காகவே நான் தண்ணீர் பாட்டிலோடு தான் செல்வது உண்டு!! இன்று ஏதோ மறந்து விட்டதால், தாகம் என்று பிரேக் அடித்து நின்று விட்டான்… அவனுக்கு தான் வீசிங் வருமே, ஆகையால் ஐஸ் கட்டியை நீக்கி விட்டு கரும்பு ஜூஸ் வாங்கி கொடுத்து குடிக்க வைத்தேன்!!

துறை மழை சற்று வலுக்க, நனைந்த படியே இருவரும் என் ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தோம்!!! அங்கே நான் அவனோடு வந்து இறங்குவதை பார்த்த அந்த அக்காவின் அம்மா, “ஐ!!! தங்கம் சிலை மாதிரி அழகா இருக்கியே டா இன்னிக்கு….” என கன்னம் பிடித்து கொஞ்சி விட்டு சென்றார்… ஜெஷ்வந்த் காதில் புகை வராத குறை தான்!! “மழை பெருசா ஆகிறதுக்குள்ள வீட்டுக்கு போ!!” என்று அதற்கு மேல் பேசாமல், நானும் படி ஏறி அறைக்கு வந்து விட்டேன்…

தலை துவட்டி, உடை மாற்றும் போது தான் ஒன்றை உணர்ந்தேன்!! மோதிரம் அணிந்து இருக்கும் விரல் மட்டும் உணர்வுகளே இல்லாமல், ஜில் என்றாகி மரத்து போய் இருந்தது!! சோப்பு போட்டு மோதிரத்தை, ஒரு மணி நேரம ஆகும் முன்பாகவே கழட்ட வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது… எனக்கு மனம் ஏதோ போல் ஆகி விட்டது!!😟 

இது நிச்சய தாரத்த மோதிரமோ, கல்யாண மோதிரமோ இல்லை, Promise ring ஆகும்… Promise ring என்பது இரண்டு பேருக்கிடையே உள்ள வாக்குறுதியை குறிக்கும் ஒரு மோதிரம்!!

அது காதல், நம்பிக்கை, எதிர்கால உறுதி (எதிர்காலத்தில் திருமணம் செய்வது) என்பவற்றைச் சின்னமாகக் காட்டுகிறது…

அது உடனடியாக உடைந்து போனது போல் ஆயிற்று, வலித்தாலும் பரவாயில்லை என்று நான் வேறு கரம் மாற்றி போட்டு கொண்டேன்!! ம்ம் ஹ்ம்ம் அந்த கையிலும் அதே போல் விரலுக்கு ரத்த ஓட்டம் தடை பட்டு, மரத்து போனது!! 

இவளின் எதிர் காலமும் இதே போல் தான் உணர்ச்சிகள் மரத்து போய் ஜடம் போல் வாழ போகிறாளா ஷ்ரேயா?!!!

என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨ 

Thanks for reading மக்களே 🩷 

 

❤️ Loading reactions...
2 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page