திரையிட்டு விலகாதே! -33

திரையிட்டு விலகாதே! 

அத்தியாயம் -33

Hiiii வாசகர்களே ✨

துணிகளை எல்லாம் துவைத்து, இரு நாளைக்கு வேண்டிய துணியை மட்டும் விட்டு அனைத்தையும் சூட் கேசில் பேக்கிங் செய்து முடித்தேன்!! படிக்காமல் ஜெஷ்வந்த் எனக்கு அழைத்து கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் பிளாக் செய்து விட்டேன்… அப்போதாவது நாளை தேர்வுக்கு படிக்க ஆரம்பிப்பான் என்ற இறுதி நம்பிக்கையில்!!

Pocket FM இல் கதையை டவுன் லோடு செய்து விட்டால், இன்டெர்நெட் இல்லாமலே கதை கேட்கலாம்… ஆகையால் அவன் தேர்வுகளுக்கு நான் ஏர் பிளேன் மோட் போட்டு விட்டு, வேளைகளில் மூழ்கி போய் இருந்தேன்!! வெகு நாட்களுக்கு பிறகு, ஏதோ ஒரு அமைதி மனதை சூழ அப்படியே மதிய உணவு உண்ட மயக்கத்தில் உறங்கி போனேன் நிகழ போகும் அசம்பாவிதம் தெரியாமல்!!

கதை பாட்டுக்கு ஓடி கொண்டே இருப்பதை கூட கருத்தில் கொள்ளாமல் கண் அடர்ந்து போய் இருந்த நான் திடுக்கிட்டு எழுந்தேன், என் மனம் ஏதோ யாரோ என் அருகில் நடப்பதை போல் உணர்ச்சி தோன்றவும்… லேசாக கண் விழிக்க, ஒரு ஆண் உருவம் தெரியவும், வாரி சுருட்டி அடித்து கொண்டு எழுந்து அமர்ந்தேன்!!!!

அங்கே பார்த்தால், எங்கள் ஹாஸ்டலில் பாத்ரூம் கழுவி, பெருக்கி மாப் அடிக்கும் தூய்மை பணியாளர் எனது அறையை மாப் அடித்து கொண்டு இருந்தார்…. வழக்கமாக அவர் 1:30 மணிக்கு வந்து ஆளே இல்லை என்றாலும் கதவை தட்டி வெளியவே நின்று விட்டு, பதில் வந்தால் தான் உள்ளேயே நுழைவார்!! அவ்வாறு இருக்க இன்று மட்டும் ஹாலுக்கு வந்தவர், எனது அறையில் நான் இறங்குவதை கண்டும் உள்ளே வந்து இருக்கிறார்..!!

எனக்கு பாணிக் அட்டாக் வந்து கை கால் எல்லாம் குளிர் காய்ச்சல் வந்தது போல் நடுங்க துவங்கி இருக்க, அவரோ என்னை நிமிர்ந்து பார்த்து சாதாரணமாக புன்னகைத்து விட்டு துடைத்து விட்டு வெளியேறினார்… அதை கண்டு என் கண்களோ அதிர்ச்சியில் அகல விரிந்தது!!😳 ஏன் எனில் இது வரை அவர் எங்கள் யாரையுமே நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார், தலையை குனிந்து படி வந்த வேலையை முடிந்து கொண்டு வந்த சுவடு இன்றி போய் விடுவார்…

கீழ் தளத்தில் தான், தண்ணீர் கேன் போட வரும் அங்கிள் தட்டாமல் உள்ளே வந்து பலர் இளம் பெண்கள், வேளைக்கு செல்லும் வயதான பெண்கள் என பலர் உடை மாற்றும் போது உள்ளே நுழைந்து பெரும் தலை வலியாக, அவ்வப்போது பிரச்னைகள் வரும்!! ஆனால் இது இன்று எனக்கு மட்டும் இவர் வினோதமாக நடந்து கொள்வதாக தோன்றிட, கை கரெண்ட் ஷாக் அடிப்பது போல் உதறல் எடுத்து நடுங்கியது!!

இரு கால்களுக்கு இடையில் வைத்து அழுத்தும் போது தான் மேலும் ஒன்றை கண்டு அதிர்ந்தேன்!! ஆம்! போர்வை இன்றி உறங்கி போய் இருந்தேன்… வெயில் மண்டையை பிளந்தால் கூட, இழுத்து கால் முதல் கழித்து வரை கனமான கம்பளி போர்வை எகிப்திய மம்மி போல் கட்டி சுற்றி கொண்டு தான் உறங்குவேன்!! 

ஒரே ஆறுதல் எந்த உடையும் விலகவில்லை என்பது மட்டுமே… ரவுண்டு நெக் டி ஷர்ட், மற்றும் ஃபுல் பாட்டியாலா பேண்ட் அணிந்து இருந்த போதும், அந்நியமான ஆண் இவ்வாறு என்னை பார்த்து சென்றது எனக்கு ஒரு மாதிரி மனம் அருவருப்பாக உணர்ந்தது!! 

என்ன செய்தும் உடல் நடுக்கம் மட்டும் நிற்கவே இல்லை!! வாந்தி வருவது போல் நெஞ்செல்லாம் இறுகி போய், நான்கு சுவர் இடைவெளி குறைந்து கொண்டே வந்து என்னை நசுக்குவது போல் உணர்ந்தேன்!! அது போக, கழுத்தோடு நெகிழி பை மாட்டி இருப்பது போல், எனக்கு மூச்சு விட முடியாமல் திணறியது… தண்ணீர் குடித்தால் கூட முழுங்க முடியாமல் உதறல் எடுத்தது..!!! நெஞ்செல்லாம் அடைத்து வியர்த்து வழிய, உதறும் கரத்தில் கஷ்ட பட்டு அம்மாவின் நம்பர் எடுத்து அழைப்பு விடுத்து மொபைலை காதில் எடுத்து வைத்தேன்…

என் அம்மாவோ நான் பேச கூட நா எழாமல் சொல்லியவற்றை கேட்டு கொண்டு சலிப்பாக, “நீயா அதுக்கு பேர் பாணிக் அட்டாக் என்று பெயர் வெச்சுகிட்டு லூசு மாறி பயப்படாத!! ஒன்னும் இல்ல அந்த அங்கிள் தான் கிளம்பியாச்சுல!!? அப்புறம் என்ன திருப்பி அப்படியே படுத்து தூங்கு!!” என்று சொல்லி அவரும் உறங்க சென்று விட்டார்…

அது வரை வராத அழுகை முட்டி கொண்டு வர விம்மி வெடித்து சிதறி அழுதேன்!! இது அசிங்கம் அவமானமாக இருந்தது… செய்வது அறியாமல், வெளியில் வேறு யார் இடம் சொல்லவும் முடியாமல் தனி அறையில் மீண்டும் அழுது கொண்டே கருவில் இருக்கும் சிசு போல் சுருண்டு படுத்து இருந்த நான், கண்கள் இருட்டி கொண்டு வர அப்படியே மயங்கி போனேன்!

மீண்டும் என்னை சுற்றி ஒரு ஆள் நடமாட்டம் தெரிய, அதே போல் வாரி சுருட்டி கொண்டு எழுந்து அமர்ந்தேன்… என் ரூம் மேட் அக்கா தான்!!! அதை கண்டு தான், நெஞ்சில் கை வைத்து ஆசுவாசம் அடைந்து மணியை கண்டேன்… அது 6:20 ஆகி இருக்க, மாடிக்கு சென்று மனம் மாற்றம் வேண்டி நடந்தேன்!! 7 மணிக்கு ஜெஷ்வந்த் கால் செய்ய, பட படத்த விழிகளோடு வேறு யாரும் இல்லை என்று கண்டு கொண்ட பின், அவன் ஹலோ சொல்வதற்குள் மூச்சை பிடித்து கொண்டு நடந்தவற்றை சொல்லி முடித்தேன்!!

அவனோ “டிரஸ் களஞ்சு இருந்தது கூடவா தெரியாம அப்படியா தூங்குவ??” என்று என் அம்மா முதலில் கேட்ட அதே கேள்வியை இவனும் கேட்டான்… எனக்கு வந்து கூடிய ஆத்திரத்தில், அழைப்பை துண்டித்து விட்டேன்!! இது வரை ஹாஸ்டல் காலி செய்து போன அனைத்து அக்காவுக்கும், வீட்டில் இருந்து அம்மா அக்கா அல்லது மாமியார் வந்து மூட்டை கட்ட உதவி செய்து அப்பா வந்து பெட்டிகளை இறக்கி கொடுத்து குடும்பமாக விடை பெற்று அழைத்து செல்வார்கள் வீட்டு பெண்ணை…

எனக்கோ, இருந்த பொருட்களை எல்லாம் நானே தான் தனியாக அள்ளி வைத்து பேக்கிங் செய்து இருந்தேன்!! அந்த களைப்பில் கண் அயர்ந்து போனது ஒரு குற்றமா…!!? ஆறுதலாக யாருக்குமே பேச தெரியாதா??!!! எது நடந்தாலும் அது என் குற்றமா???? வழக்கம் போல் 7:30 மணிக்கு அவன் கீழே வர, “நான் எங்கும் வரவில்லை!! என்று சொல்லி மறுத்து விட என் கையை பிடித்து கொண்டு தோளில் கை போட்ட படி என்னையும் ஹாஸ்டல் இருக்கும் தெரு முடியும் இடம் வரை நடந்து விட்டு வந்தோம்… 

அப்போது தான் அவன் விஷயத்தின் வீரியம் உணர்ந்தான் போலும், “ஹேய் என்னடி இன்னும் உன் உடம்பு லேசா நடுங்குது!!!?” என்று அதிர்ச்சியில் என் நெற்றியை தொட்டான்… மைல்ட் பீவர் இருந்தது. “ஹேய் குட்டி மா இதெல்லாம் ஒன்னு இல்ல டி!! மேலே எல்லாம் கை வெச்சுர்க மாட்டான் அந்த ஆளு… அதான் நீ யாரும் உன்னய தாண்டி நடந்து போனாலே எந்திருச்சுருவியே..!!! அப்புறம் ஏன் இவ்வளோ பயப்பிடுற???” என்று கையை சூடு பறக்க தேய்த்த படி சற்று தேற்றினான்…

“பாரு கை எல்லாம் ஜில்லுன்னு ஆகி இருக்கு!! போதும் டி அதே நெனச்சு நெனச்சு ரொம்ப பயப்படாத…” என்று தோளோடு அனைத்து விலகி, ஹாஸ்டல் அடுத்து இருந்த டீ கடையில் ரோஸ் மில்க் லேஸ் பாக்கெட் வாங்கி கொடுத்து, ஹாஸ்டலுக்குள் அனுப்பி வைத்தான்… நடுக்கம் நின்று இருந்தது தான், ஆனால் மனம் தான் அமைதி அடைந்த பாடு இல்லை.!!

“நாளைக்கு எக்ஸாம் முடிஞ்சதும் வந்து உன்னய வெளிய கூட்டிட்டு போறேன்!! நார்மலா டிரஸ் பண்ணி ரெடியா இரு…” என்று அவன் வீட்டுக்கு போன பின் குறுஞ் செய்தி அனுப்பி இருந்தான்…

“நீ மொதல்ல எக்ஸாமுக்கு படி… அப்புறமா அதை முடிச்சுட்டு வெளிய போகிறது பத்தி பிளான் போடலாம்!! தயவு செஞ்சு அரியர் இல்லாம பாஸ் ஆகுற அளவுக்காவது படி ஜெஷ் பிளீஸ் டா..” என்று நான் கெஞ்சுதலாக பேசினேன்…

“ஹேய் இது வர வரும் ஒரு அரியர் தாண்டி இருக்கு!! என்னமோ 10 15 இருக்க மாதிரி பேசுறே… நாளைக்கு மதியம் தான் எக்ஸாம், காலையில கூட எழுந்து படிச்சிருவேன்!!”

“ஐயோ சொன்னா கேளு ஜெஷ்வந்த்..!!! சீரியஸ்னஸ் இல்லாம LKG படிக்கிற ஸ்கூல் குழந்தை மாதிரி அசால்ட்டா இருக்காத… இது PG அதுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் நல்லா படி!!! UG மாதிரி ஓட்டி விட்டா எல்லாம் பாஸ் ஆக முடியாது…” 

“சரி சரி!!” என்று அலுப்பாக கேட்டு கொண்டான்!! “ஹேய் இரு டி யாரோ இன்னொரு கால் பண்றா என்னன்னு கேட்டு வரேன்!!” என ஹோல்ட் போட்டு விட்டு பேசினான்…

“குட்டி மா…. நானும் மே மாசம் சென்னை வர போறேன் டி!!!!” என்றான் துள்ளலான குரலில்… 

“என்னடா சொல்ற?!!”

“ஆமாம் டி..!! நீ பார்த்து சொன்ன கம்பெனில, ஒரு மாதம் இன்டர்ன்ஷிப் பண்ண என்னைய செலெக்ட் பண்ணிட்டாங்க!!! அதான் கூப்பிட்டு அந்த ரிசப்ஷன் லேடி சொன்னாங்க…”

“சூப்பர் டா!!” 

“ஜாலி குட்டி மா!!! உன்னையும் நான் அடிக்கடி வந்து பார்த்திட்டு போவேன்..” என்று சிலாகித்த படி கூறினான்…

“ஆமா நீ மட்டும் தான் பார்க்க முடியும்!! என்னைய லாம் வெளியவே விடவே மாட்டாங்க!!!” என உண்மை நிலையை எடுத்து விளக்கினேன்…

அது மட்டுமா!!?

ஒரே அடியாக அடுத்த நாள் அவனை விலகி,

ஒரே அடியாக ஊரை காலி செய்து கிளம்ப போகிறாளே ஷ்ரேயா… 

அதற்கு முன்னர் நடக்க போகும் அசம்பாவிதம் என்ன?

என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨ 

Thanks for reading மக்களே 🩷 

 

 

❤️ Loading reactions...
2 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page