திரையிட்டு விலகாதே!
அத்தியாயம் -34
Hiiii வாசகர்களே ✨
அவனுக்கு முதல் தேர்வு நாள் இன்று, காலை எழுந்து குளித்து கோவிலுக்கு போனேன்… மார்கழி மாதத்தில் என் ரூம் மேட் அக்காவுடன் சென்று பழகிய கோவில் ஆகும் அது!! அரச மரத்தடியில், பிள்ளையார் வலது பக்கம் சிவன் இடது பக்கம் வெப்ப மரம் இருக்கும்… அந்த பூசாரியோ மாதம் முழுக்க சர்க்கரை பொங்கல் செய்து, அள்ளி அள்ளி கொடுத்து அனுப்புவார் எங்களுக்கு.!!
குட்டியாக இருந்தாலும், மன நிம்மதி கிடைக்க பெற்றதை உணர்ந்து கொஞ்ச நேரம் அதே படியில் அப்படியே அமர்ந்து விட்டேன்!! சூட் கேஸ் இப்போதே மிகவும் கனமாக இருக்கிறது… கண்டிப்பாக அது மற்றும் பாக்பேக் 🎒 மட்டும் போதாது என்று எனக்கு நன்கு தெரிந்தது!!
நான் எவ்வாறு ஹாஸ்டலில் இருந்து இரண்டு மாடி இறக்கி, தாம்பரம் ரயில்வே நிலையத்தில் கடைசி பிளாட் ஃபார்ம்மில் இருந்து தூக்கி வந்து மாடி ஏறி இறங்கி என்ன ஆக போகிறேன்!!!? என்று நினைத்தாலோ நெஞ்சில் பய பந்து உருண்டது…. “அண்ணனை ஆச்சும் ரயில்வே ஸ்டேஷன் அனுப்பு மா!!” என்றால்.
“அவன் லாம் காலேஜ் போகணும்!! உனக்காக அவ்வளோ சீக்கிரம் எழுந்து அப்புறம் அவன் கிளாஸ்ல போய் தூங்குதுக்கா?!!!” என்றார் தாய்… தந்தை ஏதோ தோன்றி, “வேணும்னா ஆட்டோ பிடிச்சு வா!! நாங்க யாரும் வர முடியாது!!” என வழக்கம் போல் எனக்கு என்ற போது கை விரித்து விட்டார்கள்…
இதே பெற்றோர்கள் தான் என் அண்ணனை, சென்னையில் வெள்ளை அபாய எச்சரிக்கை விடுத்த போதும் கண்டு கொள்ளாமல், மதுரைக்கு சென்று காலேஜ் ஹாஸ்டலில் இருந்து காலி செய்து அழைத்து வந்து பக்கத்து தெரு வீட்டில் அடுக்கி கொடுத்து குடி வைத்து விட்டு வந்தார்கள்!!! 🙂
அது தான் மிகவும் என்னை நோக அடித்தது!! மனம் ஆறாமல், “பட்ட இடத்திலேயே படும்!!” என்பது போல் அன்பு வைத்து இருக்கும் அனைவருமே என்னை மென்மேலும் எல்லை இன்று காயப் படுத்தினார்கள்!! மனம் கொண்ட ரத்த கண்ணீர் எல்லாம், வெளியில் கண்களில் கண்ணீர் தான் காட்டாற்று வெள்ளமாக கரை புரண்டு ஓடுகிறது!!!
அதே போல் தான் மாலை வந்தவனும், “ஹேய் நான் சொல்லி இருந்தேனே!!” என்று ஆரம்பிக்க, “என்ன சொன்ன?” என நான் புரியாமல் கேட்டேன்… “அதான் டி… எனக்கு உன்னோட பண்ணனும்னு!!!” என முழுதாய் சொல்லாமல் இழுத்தான்…. “என்ன பண்ணனும் புரியல!!” என வீடுபேறு சேரும் விதம் அறியாமல் குழப்பத்தில் இருந்த நான், இவன் பீடிகை புரியாமல் கேட்டேன்!!
“அது ஒன்னும் இல்ல டி……. நீ ஏறு!! நான் போற வழியில விளக்கி சொல்றேன்..” என்றான்… “ம்ம்” என்று ஏறிக் கொள்ள, அவனோ சுற்றி அடித்து ஒரு ஹோட்டலுக்கு முன்பாக வந்து நிறுத்தினான்… அது லாட்ஜ் ஓடு கூடிய உணவகம்!! அதை கண்டு சற்று அதிர்ந்து, பயம் வந்து மனதை கவ்வி கொள்ள இறங்காமல் அப்படியே அமர்ந்து இருந்தேன்!! “இறங்கி வா டி…” என்றான் ஜெஷ்வந்த்..
“இங்க….. இது……” என்று மனம் ஏதோ அபாய ஒலி எழுப்ப அவனிடமே திக்கி திணறி வார்த்தை வராமல் கேட்டேன்!!
“ஆமா குட்டி மா!! நம்ம இன்னிக்கு ஒண்ணா இருக்கலாம்…. ஒன் ஹவர் மட்டும்!!!! நா ரொம்ப எல்லாம் உன்னய கஷ்ட படுத்த மாட்டேன் பொண்டாட்டி!! பிளீஸ் டி… என் கூட வாயேன்!! என கன்னம் பற்றி அவன் இறைஞ்சும் குரலில் கேட்பதை கேட்ட எனக்கு தான் தலை எல்லாம் சுற்றியது!!
அவன் இடம் இருந்து விலகி நின்று படி நான் ஆற்றமையில் அதிர்ந்த குரலில் “என்ன ஜெஷ்வந்த் இது என்ன விளையாட்டா???! என்னமோ ஜெஸ்ட் ஒன் ஹவர்னு சர்வ சாதாரணமா கேக்குற!!!!!? நானே எப்படி இவ்வளோ லக்கேஜ் தூக்கிட்டு தனியா போறதுன்னு முழி பிதுங்கி போய் கெடக்கேன்!!! நீ என்னடான்னா மொத்தம்மா என்னைய கிளம்ப இல்ல நடக்கவே விடாம பண்ண பிளான் போட்டுகிட்டு வந்து இருக்க!!”😕😠
“ஹேய் நான் ரூம் புக் பண்ணிட்டேன் டி..!! அவ்வளோ எல்லாம் வலிக்காது ரொம்ப எல்லாம் பயப்படாத… இப்போ எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க!! சோ கத்தாம பேசாம என் கூட வா சொல்லிட்டேன்!!!” என்று அவனும் பைக்கில் இருந்து இறங்கி, கையை பிடித்து அழைத்து கொண்டு ரிசப்ஷனுக்கு சென்றான்…
சுற்றி பலரும் குடும்பமாக உணவு உண்ண வந்தவர்கள், தங்கி இருந்து கோவிலுக்கு கிளம்ப ஆட்டோ புக் செய்து விட்டு காத்து இருந்தவர்கள் அனைவரும் என்னை ஏதோ விலை மாதுவை பார்ப்பது போல் பார்த்தார்கள்…. விலை மாது கேவலமான தொழில் என்று நான் சொல்ல வரவில்லை!! அவர்கள் சூழல், வயிற்று பிழைப்புக்காக அவர்கள் ஏற்றுக் செய்யும் தொழில் அது…. ஆனால், இந்த சமூகத்தில் அந்த புரிதல் இல்லாமல் அவர்களை ஏதோ சாக்கடை போல் அல்லவா முகத்தை சுளித்து கொண்டு பார்ப்பார்கள்!!
அங்கு பின்னால் மாட்டி இருந்த மீனாட்சி அம்மன் படத்தை தான் நான் உடலில் ஆசிட் அமிலம் ஊற்றிய நிலையில் கூனி குறுகி போய் இயலாமையோடு வெறித்து பார்த்து கொண்டு நின்றேன்!! கண் இமை முடி எல்லாம் கண்ணீர் கோர்த்து வெளி வராமல் முட்டி கொண்டு நின்றதோடு, என் கன்னி தன்மையை காக்க வேண்டி அந்த ஊரை ஆட்சி புரியும் அவளிடம் வேண்டி நின்றேன்!!
“மேடம் ஐடி ப்ரூஃப்!!” என்றார் அந்த ஆண். இரு ஆண்களும் இவன் எதற்கு என்னை அழைத்து வந்து இருக்கிறான் என்பதை பார்த்த மாத்திரம் கணித்து விட்டார்கள் என்பதால் ஒரு நக்கல் புன்னகையோடு ஏளனமாக பார்த்தார்கள்!! எனக்கு அப்படியே “பூமி பிளந்து என்னை விழுங்கி விட்டாலும் ஒரு தப்பும் இல்லை!!” என்றாகி போனதோடு தலை கவிழ்ந்து நின்றேன்…
“நீயும் என்னைய கை விட்டுட்டியா மா!!!?” என்று அவளிடம் முறையிட்ட படி.…
என் டிரைவிங் லைசென்ஸ் வாங்கி பார்த்தவர், “லோக்கல் ஐடி ஏத்துக்க முடியாது!!” என்று திருப்பி கொடுக்க, ரிசப்ஷன் ஆண் அவனை நான் அனல் பார்வை பார்த்தேன், அவன் அதில் என் வயதை கண்டு நக்கலாக பேசுவதை உணர்ந்து..!!! என் ஆதார் கார்டை பார்த்தவன், ஜெஷ்வந்த் அதை எடுத்து நீட்டினான்.…
“சார் உங்க ஐடி!!!” அதில் சென்னை வீட்டு அட்ரஸ் இருக்கவும் ஏற்பதாக தலை அசைத்து விட்டு, அவனிடம் திரும்பி கேட்டான் அந்த ஆண்…
“என்ன ஒருத்தர் கொடுத்தா போதாதா??”
“உங்க நேம் லே தானே ரூம் புக் ஆகி இருக்கு!! சோ நீங்களும் கொடுக்க தான் வேணும்!!”
“என் கிட்ட மதுரை அட்ரஸ் போட்ட ஐடி தான் இருக்கு எல்லாமே!!”
“அப்போ சாரி சார் உங்களா செக் இன் செய்ய முடியாது!!”
“என்ன!!!!? என்ன விளையாடுறீங்களா!?? நான் ஏற்கனவே ஃபுல் அமௌன்ட் கட்டி இருக்கேன்!! இப்போ வந்து இப்படி சொல்றீங்க….” என்று காட்டு காத்தாக உச்ச குரலில் கத்தினான் ஜெஷ்வந்த்…
“சார் இது பேசிக்!!! எல்லார் கிட்டயும் நாங்க ஐடி ப்ரூஃப் வாங்கிட்டு தான் அல்லோ பண்ண முடியும்… ஒன்லி பாரெண்ட்ஸ் oda வர குழந்தைகள தான் அப்படியே அல்லோ பண்ண முடியும்!! நீங்க எதுக்கு தேவை இல்லாம டென்ஷன் ஆகி கத்துறீங்க!!”
“என் கிட்ட இப்போ ஐடி இல்ல!!! அதுக்கு என்ன பண்ண சொல்றீங்க??”
“சார் நாங்க மட்டும் அதுக்கு என்ன பண்ண முடியும்!! வாங்காம உள்ள விட்டு, போலீஸ் ரெய்டு வந்தால், எங்கள் ஹோட்டலை தான் சீல் வைப்பாங்க!!!”
“அமாம் சார்!! அந்த பொண்ணுக்கு இப்போ தான் 18 வயசு ஆகி இருக்கு….” என்று என்னை சுட்டி காண்பித்து கூறினான் இன்னொரு ரிசப்ஷன் ஆண்… எனக்கு அந்த வாதம் சண்டை சச்சரவு சத்தம் எதுவுமே கேட்கவில்லை..!!! அப்படியே சினிமா காட்சியில் வருவது போல் அனைத்தும் எனக்கு மெய் மறந்து போய், அந்த இரு ஆண்களுக்கு பின்னால் சிரிப்புடன் நின்றவளை தான் கண்டேன்!! அவளுக்கு என் வேண்டுதல் கேட்டு விட்டது போலும்…
திடுக்கென ஜெஷ்வந்த் என்னை மறைத்தவாறு என் முன்னால் வந்து நின்றான்!! அதில் திடுக்கிட்டு, சுயம் தெளிந்த நான் பார்க்க சண்டை பெரிதாகி போய் இருந்தது… “சார் ஹஸ்பன்ட் ஒய்ஃப் ஆக இருந்தா கூட யாராச்சும் ஒருத்தர் ஐடி வாங்கிட்டு நாங்க விடுவோம்!! இதுல உங்களுக்கு கல்யாணம் கூட ஆகல…. என்ன மா ஆகலை தானே!!!?” என்றான் ஒருவன் என் கழுத்தில் இருந்து பார்வையை, முகத்திற்கு உயர்த்தி என் கண்ணை பார்த்து.…
“அது உங்க கவலை இல்ல!!! ஒண்ணு செக் இன் பண்ண விடுங்க… இல்லையா என் காசை திருப்பி கொடுங்க!!!” என்றான் ஜெஷ்வந்த்…
“சார் அது நீங்க புக் பண்ண வெப்சைட்டில் இருந்து தான் புக்கிங் கேன்சல் பண்ணி அப்பறமா அவங்க தான் ரீஃபண்ட் போடுவாங்க!!! எங்கள கேட்காதீங்க… நீங்க இந்த மாசம் கட்டுன காசு எங்களுக்கு அடுத்த மாசம் தான் வரும்!!!” என்று கை விரித்து விட்டனர்… ஜெஷ்வந்த் அவனுக்கே ஏதோ போல் ஆக, அதே ஆற்றமையோடு என் கையை பிடித்து விறு விறுவென வெளியில் இழுத்து வந்தான்…
“ச்சை!!!!! 2000 ரூபாய் போயிருச்சு டி!!! ஹேய்… உனக்கு கேன்சல் பண்ண தெரியுமா????? இந்த மொதல்ல அதை பண்ணு எனக்கு அந்த காசு வந்தாகணும்!” என அவன் புக் செய்த இணைய தளத்தை எடுத்து, மொபைலை என் கையில் திணித்தான்… “
இஷ்டமில்லை!” என்று ஒரு வார்த்தை சொன்னதற்காக, அவனாலேயே அது நடக்காமல் போனதோடு, என் கையாலேயே அதை கேன்சல் செய்ய வைத்த அவளின் திருவிளையாடலை என்ன என்று சொல்லி நன்றி உரைப்பது என்று புரியாமல், பாண்டிய குல பேரரசியை பார்த்து கொண்டு நின்று இருந்தேன்!!🥹
“கேன்சல் செய்தாலும், 24 மணி நேரம் முன்பாக செய்ய படவில்லை ஆகையால் காசு திரும்ப வராது!” என்று மின் அஞ்சல் வந்தது பொறுமையாக, கேன்சல் செய்த பிற்பாடு!! “ஏறு!! எல்லாம் என் தலை எழுத்து…!!!!!” என்று பல்லை கடித்த படி எதிர் தெருவில் இருக்கும் ஹாஸ்டலுக்கு சென்று என்னை இறக்கி விட்டான்…
“நாளைக்கு 10:30 மணிக்கு தானே ட்ரெயின்!! நான் தான் வருவேன்… உன் காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாம் ஒருத்தர் கூட வர கூடாது!! புரியுதா??? ஜங்ஷன் போயிட்டு கால் அடி நான் வரேன்!!” என்று சொல்லி விட்டு ஏதோ யோசித்தான்…
வெக்கம் கெட்டவன், “நா வேணும்னா உனக்கு தாலி வாங்கி தரவா?? கட்டிக்கோ நாம போய் திருப்பி கேட்டு வருவோம்!!” என்றானே பார்க்கணும், நான் கண்ணாலே பொசுக்கி விடுவது போல் முறைத்து பார்க்கவும், அப்படியே பைக்கை ஸ்டார்ட் செய்து இடத்தை காலி செய்தான்…
மேலே சென்று உடை மாற்றி விட்டு தட்டை எடுத்து கொண்டு கீழே சென்றேன்!!! இடியாப்பம் தேங்காய் பால் நன்கு சர்க்கரை சீனி தூவி❌ கொட்டி✅ ஒரு கட்டு கட்டினேன்!! மனதின் தீ எல்லாம் எனக்கு அப்படியே அவனை பொசுக்கி சாம்பல் ஆக்க வேண்டும் என்ற அளவுக்கு ஜூவாலையாக கொழுந்து விட்டு எறிவதற்கு, வேறு எதை கொடுத்து நான் அமர செய்வது??!!!
அவன் அணிவித்த அந்த மோதிரைத்தை கழட்டி, காலியாக இருந்த அலமாரியில் வீசி எறிந்தேன்… என் இதழில், ஒரு கசப்பனா புன்னகை!!! “கடைசியில் என்னையும் அவன் உடல் தேவைக்கு தானே பயன் படுத்தி இருக்கிறான்!!!?” என்ற உணர்வு என்னை அணு அணுவாக என் காதல் கொண்ட மனதை வேர் ஆழத்தோடு அறுத்து சாய்த்தது!!!
நான்கரை ஆண்டு காதல்!!!
நாடகமாக விட்டானே!!!!
கண்ணகி போல் ஒரு பாவப்பட்ட நிலமைக்கு காதல் கொண்டவனே என்னை ஆள் ஆக்கி இருக்க, அதற்கு எதற்கு மதுரை ஊரை எரித்து சாம்பல் ஆக்க வேண்டும் நான்!!?
குற்றம் புரிந்த அவனை விடுத்து!!!!
“நாளை இருக்கு அவனுக்கு..” என சபதம் எடுத்து கொண்டு, இரவின் மடியில் தலை சாய்த்து உறக்கத்தை தழுவினேன்!!
என்ன செய்ய போகிறாள் ஷ்ரேயா???
ஜெஷ்வந்த் செய்தது சரியா???
என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨
Thanks for reading மக்களே 🩷
