திரையிட்டு விலகாதே! -35 (முடிவு🩷)

திரையிட்டு விலகாதே! 

இறுதி அத்தியாயம் -35

Hiiii வாசகர்களே ✨

காலை வேண்டும் என்றே, “இரவு வழி அனுப்ப வருகிறேன்!” என சொல்லிய இரு நண்பர்களையும் அப்போதே கிளம்பி வரும் படி சொல்லி, மாட்டு தாவணியில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் சென்று நாள் முழுக்க ஷாப்பிங் செய்தேன் அனைத்து தளங்களிலும்… 

நான் செத்து ஒழிந்து போய் விட்டது போல், எனக்கு படுக்க கூட இடம் இல்லாத வீட்டிற்கு செல்ல, என் அறையில் மாட்ட அலங்கார பொருட்கள் கார் பொம்மைகள் வாங்கி கொண்டு மதிய உணவு ட்ரீட் கொடுத்து, ஹாஸ்டலுக்கு திரும்பினேன்… பேருந்தில் சென்று பேருந்தில் தான் வந்தோம்!! இன்ஸ்டாகிராமில் அனைத்து புகை படங்களையும் ஸ்டோரியாக பதிவிட்டேன்… அதிலும் குமார், அம்ஜத் இருவரையும் டாக் செய்து!! 

வழக்கம் போல் அடுத்து ஐந்து நிமிடத்தில் ஜெஷ்வந்த் அழைப்பு விடுத்தான்!! நான் அதை ஏற்கவில்லை… என் வாழ்வு ஒன்னும் அவனை சுற்றி கட்டு அமைக்க பட்டது இல்லையே!!! என் நண்பர்கள் என் இஷ்டம் நான் அப்படி தான் போவேன்… இதில் யாருக்கு நான் விளக்கம் தர வேண்டும்??! யார் இடம் பெர்மிஷன் வாங்க வேண்டும்!? 

நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்??!!!

நேற்று அவன் கேட்டானா??? 

உயிரோடு எரித்தால் கூட அவ்வளவு வலித்து இருக்காது!!

ஆகவே கீழே அந்த டீ கடையில், ரோஸ் மில்க் வாங்கி குடித்த படி நான் ஆட்டோ ஸ்டான்ட் அங்கிள் இடம் இன்று இரவு எனக்கு ஆட்டோ வேண்டும், அவர்கள் வருவார்களா? என்பதை கேட்டு சொல்லும் படி கேட்க… அந்த ஆன்டி, “இங்க வா பா ஒரு நிமிசம்!!” என்று அந்த ஓட்டுநரை நேரடியாக அழைத்து, “பாப்பா ஹாஸ்டல் காலி பண்ணிட்டு கிளம்புதான் ராத்திரி ட்ரைனுக்கு!! கொஞ்சம் வந்து அதை இறக்கி விட்டுறு…” என்க அவரோ என்னை ஒரு முறை பார்த்து விட்டு, “சரி க்கா வரேன்!! வரேன் மா நீ கிளம்பி கீழ வா… நா இங்க தான் இருப்பேன்…” என்று சென்றார்…

அன்று மாலை முதல் சித்திரை திருவிழா காப்பு கட்டு என்பதால், மழை கொட்டி தீர்த்தது கார் மேகம் சூழ்ந்து… நான் திணற திணற என் பெட்டியில் எஞ்சி இருந்த வாட்டர் பாட்டில், தட்டு வைத்து இழுத்து அமுக்கி மூடி தூக்க அது மட்டுமே எப்படியும், 40 கிலோ இருக்கும்!!! அது போக தோள் பை வேறு இருக்கிறதே… அதுவும் புடைத்து, இந்நேரம் வேண்டும் ஆயினும் வெடித்து விடும் என்ற நிலையில் இருந்தது!! இதில் உரை சாக்கு பையில், தலையணை கட்டி அதில் போர்வை, இப்போது மாற்றிய உடை திணித்து கொண்டேன்!!

சத்தியமாக என்னால் அந்த பெட்டியை அசைக்க கூட முடியவில்லை!! இதில் இரண்டு மாடி இறக்கினால், இருதயம் அதன் இடத்தில் இருந்து இறங்கி செயல் இழந்து விடும் என்று தோன்றியது!!! ஆனால் தனித்து தானே செய்ய வேண்டும், உதவி கரம் என்று அளவுக்கு எல்லாம் அதிர்ஷ்டம் என்னிடம் இல்லையே… நலத்தோடு வீடு சென்று சேர்வதே, மீனாட்சி புண்ணியம் இதில் இதற்கு எல்லாம் உதவி கேட்க முடியாது என்ற நிலையில்… 

தானாக இரண்டு இரண்டு படியாய் இறக்கி, கீழே கொண்டு சென்றேன்… மறுபடி மேலே வந்து தோள் பை, தலையணை எடுத்து கொள்ள அந்த ஆட்டோ அங்கிள் கீழே இருந்த என் பெட்டியை எடுத்து உள்ளே வைத்து விட்டு, எனக்காக காத்திருந்தார்… கொட்டும் மழையில் கூடிய ட்ராஃபிக், தேங்கிய மழை நீர், தேர்தல் பிரச்சார கூட்டம் தாண்டி வந்து ஜங்ஷனில் இறங்கும் போது மணி 10:20!!!

அங்கு இருந்து நான் முதல் பிளாட்பாரம், அவனை கடந்து செல்ல அதை கூட கண்டுகொள்ளாமல் ஜெஷ்வந்த் நின்று கொண்டு அழைப்பில் ஆழ்ந்து போய் இருந்தான்… ட்ரெயின் ஏறி விட்டேன்!!! ஒரு வழியாக… ஆனால் நாய் இளைப்பது போல் மூச்சு வாங்க, அமர்ந்து இருந்தேன்!! பெட்டியை சீட் அடியில் தளி விட்டு, என் இருக்கையில் விருப்பு விரிக்க என் பின்னால் ஜெஷ்வந்த் வந்து கை வைத்து, “ஏண்டி வந்தா சொல்ல மாட்டியா??” என்று கண்களை சுழற்றி அந்த ட்ரெயினை கண்டான்…

“இது என்னடி இவ்வளோ ஜில்லுன்னு செமையா இருக்கு!! இதுல தான் வந்து போவியா??? ஒரு டிக்கெட் எவ்வளோ!!? ஆனா இது என்னடி அசிங்கமா சாக்கு பை எல்லாம் கொண்டு வந்து இருக்க!!?” என்று நிறுத்தாமல் கேள்வி கேட்ட படி என்னை இழுத்து கொண்டு, ஆள் வராத வாசல் அருகில் இருக்கும் சீட்டுக்கு அழைத்து வந்தான்… 

“ப்ச்ச் கையை விடு!!! இப்போ என்ன??? அவ்வளோ லக்கேஜ் தனி ஆளா தூக்கிட்டு உன்னைய தாண்டி தான் வரேன்!!! அது கூட தெரியாம நீ எனக்காக வெயிட் பண்ணியா??? இதை நான் நம்பனுமா??? நேத்து நீ பண்ண காரியத்துக்கு உன்னை எல்லாம்!!!! ஹ்ம்ம்… ம்ம்…” என் இதழை முற்றுகை இட்டு பேச விடாமல் சிறை செய்து, என்றும் இல்லாத அளவுக்கு வெறியோடு அழுத்தி ஆழமாக இதழை கவ்வி கபலீகரம் செய்தான்..!!!!

“ஐயோ!!! வவ்… ம்ம்… விடு!!!! விடு டா….” என்று நான் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டு, மூச்சு வாங்கியபடி நிமிர அங்கே TTR நின்று இருந்தார்!! 

அடுத்த பெரும் அவமானம்!!!! 

ட்ரெயின் தடக் என்று கிளம்பவும், எனக்கு மூச்சே நின்று விட்டது அவனோ சிரித்த படி “பாய் டி பொண்டாட்டி!!!” என்று சொல்லிக் கொண்டே நகரும் ரயிலில் இருந்து குதித்து இறங்கி கை அசைத்தான்!!

“சைக்கோ!!!” என்று கடிந்து கொண்டு, நடக்க அப்போது தான் என் இதழ் இரண்டும் லிப்ஸ்டிக் போட்டது போல் சிவந்து வீங்கி இருப்பதை கண்டேன் வாஷ்பாஷின் கண்ணாடியில்… தலை கவிழ்ந்த படி, சங்கடத்துடன் என் இருக்கைக்கு திரும்பினேன்… சரியாக அதே TTR, சலிப்பாக என் இருக்கை என்னை கேட்டு குறித்து கொண்டு சென்று விட்டார்…

5:30 மணிக்கு எல்லாம் ஆட்டோ புக் செய்தாலும் கிடைக்காத குறைக்கு, துரத்தும் பேய் இடம் இருந்து தப்பி ஓடியது போல் மூச்சு வாங்கியபடி, கேப் புக் செய்து காத்து இருந்தேன்!! 20 ரூபாய் தான் அதிகம், போட்ட உடன் கன்பார்ம் ஆகி ஓட்டுனர் வந்து விட்டார்.. அவரே பெட்டியை எடுத்து உள்ளே வைத்து விட, நான் விக்கு விக்கு என தனியாக பயணித்தேன்!! 

மணி 6:30 ஆகி இருக்க, கேப் கட்டணம் கொடுக்க “200 ரூபாய் வேண்டும்” என்று வீட்டை நெருங்கியதும் அழைப்பு விடுக்க, அண்ணன் வந்து கொடுத்து விட்டு இருவரும் பெட்டியை தூக்கி கொண்டு இரண்டு மாடி ஏறினோம்… ஆண் மகன் அவனாலேயே அந்த பெட்டியை தனி ஒரு ஆளாய் தூக்க முடியவில்லை!! இதில் நான் எவ்வாறு அத்தனை முறை தனித்து தூக்கி வந்தேன் என்று வியந்தபடி, குளித்து உடை மாற்றி 8 மணி வரை உறக்கத்தில் ஆழ்ந்தேன், ஹாலில் படுத்து!!

முன்பே அப்பிளிக்கேஷன் போட்டு இருந்தது போல், எனக்கு M.Sc படிப்பிற்கு அட்மிஷன் கால் வந்தது என் வீட்டு அருகில் இருக்கும் தனியார் பல்கலை கழகத்தில் இருந்து… உடனே அழைத்து சென்று, பீஸ் பணம் கட்டி விட்டு என் அம்மா என்னை வீட்டுக்கு அழைத்து வரும் போது, “ஆமா ஊருக்கு வர தானே காசு எடுத்த??? அப்புறம் ஏன் மறுபடி காசில்லாத மாதிரி கால் பண்ணி கூப்பிட்ட காலையில??” 

“சேஞ்ச் இல்லையாம்!!” என்று அடித்து விட்டேன் நிகழ போகும் அசம்பாவிதம் தெரியாத தெரிவையாக நான்… 

ஆம்!! ஜூன் மாதம் வீட்டில் நான் மதியம் உறங்கும் நேரம், என் மொபைலில் இருந்த அவனின் கால் ஹிஸ்டரி நாங்கள் இருவரும் எடுத்து கொண்ட புகைப்படங்கள் என்று ஒன்று விடாமல் என் பெற்றோர்கள் இருவரும் பார்த்து விட்டார்கள்…. நல்ல வேளை, அவன் இரவில் அனுப்பிய 18+ குறுஞ்செய்திகளை படிக்கவில்லை… நானே அதை வாரா வாரம் டெலிட் செய்து விடும் பழக்கம் கொண்டு இருந்ததால்..!!

பிறகு என்ன?

“அனைத்து பெற்றோர்களை போல தான், என் அவர்களும் அவன் ஜாதி என்ன நம்ம ஜாதி என்ன??? அவன் மூஞ்சிய பார்த்தியா… கேவலம் பொறுக்கி மாதிரி இருக்கான்!! போயும் போயும் உனக்கு லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையா?? கிஸ் எல்லாம் கூட பண்ணி இருக்கீங்களா?? இல்லை அதை எல்லாம் தாண்டி, எல்லாமே முடிஞ்சுறுச்சா???!!! வெக்கமா இல்ல!!!” என்று ஹவுஸ் அரெஸ்ட் போல் செய்தார்கள், வார்த்தைகளால் தினம் என் உயிரை வதைத்து…. 

எனக்கு வீட்டிலேயே அடைந்து கிடப்பது ஏற்கனவே பழகியது, என்பதால் புதிதாய் தெரியவில்லை… மொபைலை வாங்கி சிம் கார்டை உடைத்து தூக்கி போட்டு விட்டு இருந்தனர்… நான் வழக்கம் போல் டிராயிங் செய்வதில், பொழுதை கழித்து நாட்கள் ஓட…

ஆகஸ்ட் கல்லூரி திறந்தது, விடு ஜூட் என ஒருத்தர் கூட வரவில்லை என்றாலும் நான் மட்டும் சனி கிழமை கூட கல்லூரிக்கு சென்று அமர்ந்து விட்டு மாலை தான் வீடு திரும்பினேன்!! 

ஒரு மதன் நன்றாக சென்ற நிலையில், “கல்யாணம் கட்டி வைத்து விட வேண்டும்!” என்று அடுத்த மாதத்தில் இருந்து ஏழரையை கூட்ட ஆரம்பித்து இருந்தனர்… என் தந்தை வழி சொந்தத்தில், எனக்கு சித்தப்பா முறை வேண்டும் என்ற ஒருவனை மாப்பிள்ளையாக முடிவு செய்தனர்..!! பெண் பார்த்து, நிச்சய தேதி கல்யாண தேதி வரை முடிவாகி போய் இருக்க…. 

ஒரு கட்டத்தில் 10 நாள் தொடர்ந்து அழுது அழுது கெஞ்சி, கூத்தாடி எதுவுமே வேளைக்கு ஆகவில்லை… கல்லூரியில் பார்க்கும் அனைவருமே, “மெட்ராஸ் எய் வந்தார்ச்சா???!” என்று கேட்கும் அளவு விழிகள் வீங்கி சிவந்து நடை பிணம் போல் திரிந்தேன்!! அந்த சமயத்தில், நான் என் கல்லூரி முடித்து வீட்டிற்கு வரும் வழியில், அழுது கொண்டே கீழ்கட்டளை ஏரி கரையில் நின்று நேரத்தை நடத்துவேன்!!

அதில் இருக்கும் ஃபவுண்டன் ⛲ போன்ற அமைப்பில், வெயிலில் சில சமயம் ரெயின்போ 🌈 தெரியும்!!! சில நேரங்களில் “அழாதே!!” என ஆறுதல் வார்த்தை சொல்வது போல் அதில் பலமாக காற்று வீசி, சாரல் வந்து என் முகத்தில் என்னை அமைதி அடைய செய்யும்!! இன்று அனைவரும் கிஞ்சித்தும் ஈவு இரக்கம் காட்டாமல், கை விட பட்ட நிலையில் நான் அஃதே ஏரியில் குதித்து என் உயிரை திறக்க வேண்டி அதன் அருகில் சென்றேன்!!

 

கை விரலில், அவன் அணிவித்த மோதிரம் இன்னும் இருந்தது!!! அதையே வெறித்து பார்த்து கொண்டே, மீனாட்சி அம்மன் முன்பாக மாற்றி கொண்ட அந்த தருணத்தை நினைத்தேன்…. இறுகி மரத்து போனது, விரல் மட்டும் இல்லையே… இந்த மாதங்களில் என் உணர்வுகளும் உள்ளமும் உடம்பும் தானே!!! ஆகையால், அந்த சிறு வலி இப்போது எனக்கு பெரிதாய் தெரியவில்லை!! கால் பாட்டிற்கு நிற்காமல் நடக்க, என் மொபைல் அலறியது!! 

பிரகதி என்று பெயர் காட்டியது என் மொபைலின் தொடு திரை…. பல மாதங்கள் கழித்து அழைத்து இருந்தாள், “ஹேய்!! என்னடி உனக்கு எதாச்சும் பிரச்னையா?? எனக்கு ஏதோ மாறி இருந்துச்சு அதான் கால் பண்ணேன்!!” 

“இல்ல.. எனக்கு வாழவே பிடிக்கல…..” என்று நடக்கும் அனைத்தையும் கூற அவளுக்கே தலை சுற்றி போனது!!!

அவள் தான் உறவை நான் விளக்கவும், “டீ!!!! நீ சொல்றதை வெச்சு பார்த்தா அவன் உனக்கு சித்தப்பா முறை டி!!!! அட கண்றாவியே….. நீ ஏதோ நாய்க்காக எல்லாம் ஒண்ணு செத்து போக வேண்டாம்… இவ்வளோ ஏதோ குலை குத்தம் பண்ண மாறி பேசுற வெட்டுக்கு ஒன்னும் நீ போய் தினம் கஷ்ட பட தேவையே இல்ல!! பேசாம என் வீட்டுக்கு கிளம்பி வா..!!!” என்றாள்…

“சரி சாவல!!” என்று என் கால்கள் அப்படியே பின் வாங்கின… அவளோ அழைப்பை துண்டித்து விட்டு, லொகேஷன் அனுப்ப… நானோ என் கையில் இருந்த மொபைல், தோளில் இருந்து காலேஜ் பேக் என்று அனைத்தையும் அங்கேயே கீழே போட்டு விட்டு, “ஆஆஆஆஆஆஆஆ” என்று வெம்பி செத்து போன மனதின் அழுத்தத்தை, அடி தொண்டையில் இருந்து இறக்க வேண்டி கத்தி ஆதங்கமாக வெளியேறினேன்…

போக வருபவர்கள் எல்லாம் பார்க்கிறார்களா?? என்ன நினைப்பார்கள்??? என்று எல்லாம் எனக்கு கவலை இல்லை!!!! 

கத்தி முடித்து, தொண்டை எல்லாம் கிழிந்தது போல் எரிச்சல் கொண்டு நா வறண்டு போய் இருக்க, மூச்சு வாங்கிய படி கண்ணீரை புறங்கையால் துடைத்து தள்ள, அந்த மோதிரம் கீறியது…. வந்த எரிச்சலில், கோபத்திலும், ஆதங்கத்தில் “எந்த சிறையும் எனக்கு இனி தேவை இல்லை!!!! எந்த ஆணும் எனக்கு இனி வாழ்வில் துணையாக தேவையே இல்லை!!!!” என்று சொல்லிக் கொண்டே, வெறுப்புடன் அதை கழட்டி, முடிந்த மட்டிற்கும் எக்கி தூக்கி அதை தண்ணீரில் விட்டு எறிந்து, திரும்பி பாராமல் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு என் வீட்டிற்கு சென்றேன்!!!

“தானாக தேர்ந்து எடுத்த போரிலேயே வென்று விட்டு முழுதாய் மீண்ட நான், என் தனிமையை பயன் படுத்தி கொள்ள முயன்ற அந்த நரியின் தந்திரத்தில் இருந்து சமாளித்து வெளியேறிய எனக்கு, என்னை இந்த புவி உலகத்தில் ஈன்று வளர்த்து, வாழ்வையே வெறுக்க செய்து இருந்த பெற்றோர்களையும் என்னால் சமாளிக்க முடியும்!!!” என்ற தைரியத்தோடு அடுத்த போருக்கு தயாரான நிலையில், வீட்டு வாசலில் வந்து வண்டியை நிறுத்தி இறங்கி உள்ளே சென்றேன்!!!!

பாதியில் படிப்பு நிறுத்து விடப்பட்டு, வீட்டில் முடங்க போகும் நிலையில் இருக்கும் 

என் வாழ்வை மீட்டெடுக்க!!! 

என் சுயத்தை மீட்டு எடுக்க!!!

எனக்கு என்று என் சொந்த அடையாளத்தை உருவாக்கி கொள்ள.…

என் லட்சியத்தை அடைய, எப்படி பட்ட போர் ஆயினும் இறுதி மூச்சு, இறுதி துளி உதிரம் உடலில் இருக்கும் வரை போராடுவேன்!!!

இழப்பதற்கு இனி உயிர் மட்டும்

இருக்கிறது எஞ்சி போய் என்னிடத்தில்⚡

மாலை எபிலோக் வரும் 

காத்து இருங்கள்….👑

Thanks for reading மக்களே 🩷 

 

❤️ Loading reactions...
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page