திரையிட்டு விலகாதே!
அத்தியாயம் -5
Hiiii வாசகர்களே ✨
20 நிமிடம் முன்னரே, விலங்கியல் ஆசிரியை பாடம் நடத்தி முடித்து ரெஸ்ட் விட்டார்.. அவர்கள் கொஞ்சம் ஜாலி டைப் ஆகையால் அவரிடம் கேட்டு நாங்கள் இருவருமே ஆங்கில ஆசிரியையை தேடி பயணம் சென்றோம்!!
ஆம்! எங்கள் தளத்தில் இருக்கும் பதினொன்றாம் வகுப்பின் 7 பிரிவுகள், ஸ்டஃப் ரூம், மேல் தளம் எல்லாம் சுற்றி முடித்து விட்டோம், அம்மணியை எங்குமே காணோம்!!
“மச்சா கால் எல்லாம் வலிக்குது!”
“ஆமா… காணவில்லை போஸ்டர் அடிக்கணும் போல😂” என சிரித்து கொண்டே எஞ்சி இருக்கும் கீழ் தளத்திற்கு சென்றோம்!! கீழ் தளம் முழுவதும் தான் பன்னிரண்டாம் வகுப்புகள் இருக்கும்…
முதல் இரண்டு கிளாஸ் ரூமிலும் இல்லை!!
அடுத்து அந்த கடைசி சுவர் ஓரம் இருக்கும் கிளாஸ்!! அது தான் ஜெஷ்வந்த் உடைய வகுப்பு ஆகும்… அவன் காமர்ஸ் குரூப், ஆகையால் அவன் ஒரு வகுப்பிலேயே 50 பேர் இருந்தார்கள்!!
நாங்கள் தேடி சென்ற அம்மணியும், ஒன்றும் நடத்தாமல் ஒய்யாரமாக மின் விசிறிக்கு அடியில் சேர் போட்டு காற்று வாங்கிய படி அமர்ந்து இருந்தார்…
“மே ஐ கெட் இன் மேம்!???” என்றேன் இழுவையாக…
“கம் ஷ்ரேயா!!” என்றார் ஆசிரியை…
வாசலில் ஒன்றும் தெரியவில்லை…
உள்ளே நுழைந்தால் குடலை புரட்டும் அளவுக்கு கப்பு குப்பென ஆளை அடித்து தூக்கியது, வியர்வை நாற்றம்…
வைஷூ “மச்சா யாருமே குளிக்க மாட்டாங்களா டி!!” என்றால் மூக்கில் கர்சீப் வைத்து பொத்தி கொண்டு… அவள் தப்பி விட்டாள், ஆனால் நான் கர்சீப் தொலைக்கும் பழக்கம் என்பதால் ஒரு போதும் கையில் வைத்து கொள்ள மாட்டேன்…
முகத்தை அஷ்ட கோணலாக சுளித்து கொண்டு, நடந்து வந்து அந்த மகா ராணியிடம் நாங்கள் படித்து எழுதியதற்கு மார்க்கை பிச்சை கேட்பது போல் வாங்கி சென்றோம்!!
ஐம்பதுக்கு, 32 போட்டு வைத்து இருந்தாள்… இப்போது ஒழுங்காக திருத்திய பின்னர், 43 மார்க் மொத்தம் வந்தது..!! வகுப்பில் நான் இரண்டாம் மார்க் அந்த தேர்வில்…
அந்த தாராள பிரபு ஆசிரியை டோட்டல் போட்டு கொண்டு இருக்கும் போது, என் கண்கள் அந்த வகுப்பு மொத்தத்தையும் ஸ்கேன் செய்து அவனை தேடியது!!
பதட்டத்தில் எனக்கு அவன் தென்படவில்லை… ஆனால் பேப்பர் வாங்கி கொண்டு வெளியேறிய போது, வைஷூ “மச்சா அந்த அண்ணே உன்னய பார்த்து, ஏதோ பக்கத்துல இருந்த இன்னொரு அண்ணே கிட்ட பேசிட்டு இருந்தாங்க டி…”
“அப்படியா!!!?? எங்க இருந்தான்…?”
(நான் என் கூட பிறந்த அண்ணனையே அவன் இவன் என்று தான் குறிப்பிடுவேன் ஆகையால்..)
“ஆமா, நம்ம நின்னுட்டு இருந்த நேர் இருந்த ரோ வில் கடைசி பெஞ்சு…”
“ஓ!!” என்ற படி திரும்பி, படியை நோக்கி நடக்கும் போது அவள் என்னை தட்டி, அந்த வகுப்பின் ஜன்னல் வழியாக அவனின் இருப்பிடத்தை காண்பித்தாள்…
அதன் வழியாக நான் பார்த்த போது, அவனும் என்னை பார்த்து கொண்டு தான் இருந்தான்!!
அதைக் கண்டு என் மனம் பதட்டம் அடைந்து நடை எல்லாம் கோணி, இதயம் தாளம் தவறி துடித்தது… கிட்ட தட்ட குளிர் காய்ச்சல் வந்தது போல் உணர்வு!!🥶
படியில் ஏற கால் அடி எடுத்து வைக்க இயலாமல் தவித்தேன், என்னமோ என்னை அவன் கண்ணிற்கு தெரியா ஒரு கயிறை கொண்டு கட்டி இழுப்பது போல் ஓர் உணர்வு!!
இது பாச பிணைப்பா?!!
இல்லை கால தேவனின் பாச கயிறா!!?
இளம்பிடி எனக்கு புலப்படாமலேயே எப்படியோ தாரி தூரி படியேறி என் வகுப்புக்கு வந்து அமர்ந்து விட்டேன்…
அரை பாட்டில் தண்ணீர் ஒரே மிடரில் எடுத்து பருகி விட்டேன்… இன்னும் அந்த பார்வையின் ஆழம் கொடுத்த பயமும் பட படைப்பும் குறைந்த பாடு இல்லை!!
அதே போல் அடுத்த வாரம், நடந்த இன்னொரு நிகழ்வு… அவனுக்கு கம்ப்யூட்டர் லேப் அருகில் இருந்த வகுப்பு அறையில் வைத்து, பாடம் நடத்திய அவனின் வாத்தியார் அடுத்து சில நிமிடங்களில் செய் முறைக்காக அவர்களை லேப்புக்கு அழைத்து சென்று விட்டார்…
அதே வகுப்பு அறைக்கு தான், அடுத்த படியாக எங்களை அழைத்து இருந்தார் எங்களின் கணினி இயல் வாத்தியார்…
அவர்கள் கிளாஸ் முடிய வேண்டி, எங்கள் கிளாஸ் மாணவர்கள் எல்லாம் வெளியில் காத்து இருக்கும் போதும், ஜெஷ்வந்த் நான் வழக்கமாக அமரும் இடத்தில் தான் அமர்ந்து இருந்தான்…
வெளியில் போகும் போது, ஒரு மாதிரி ஒரு லுக் விட்டு என்னை கடந்து சென்றான் லேப் அறைக்குள்… எனக்கு அந்த பார்வையே என்னை ஊடு உருவி உயிர் ஆழம் தொட்டு மீண்டது!!
அவர்களுக்கு அன்று, இறுதி ஆண்டின் லேப் செயல் முறை பிராக்டிகல் தேர்வு…
ஆகையால் எங்களை அந்த ஒரு மணி நேரம் முழுவதும் அதே அறையில் தான் அமர்ந்து இருந்தோம்…
குறிப்பாக நான், அவன் அமர்ந்து சென்ற அதே இடத்தில் தான் அமர்ந்து இருக்க, எனக்கு நாணம் ஒரு பக்கம் பிடிங்கி திண்ண, குறு குறுப்பு ஒரு பக்கம் இருந்தது!! அந்த ஒரு மணி நேர வகுப்பு எனக்கு ஒரு யுகம் போல் தோன்றியது…
ஆனால் இன்றோ, அன்று கண்ட அதே குறு குறுப்பு, அவனின் அந்த பார்வையோ ஸ்பரிசமோ ஏதும் இல்லாமலேயே, நான் வீட்டில் அமர்ந்த படியே உணர்ந்தேன்!!
மெத்தையில் படுத்த படி, விட்டத்தை வெறித்து கொண்டு தூக்கம் வராமல், மன கண்ணில் அவனை மணப்பது வரை கனவு கண்டேன்…!!! ஆனால் அது எங்க அவனுக்கு தெரிய போகிறது??
இதே எண்ணத்தில் நான் மருகி மருகி என் 12 நாள் விடுப்பை கழித்து இருக்க, அடுத்த மூன்று நாளில் நானே பன்னிரண்டாம் வகுப்பு மாணவியாக கால் அடி எடுத்து வைக்க, வேனில் எக்கி கால் வைத்து ஏறினேன், ஏந்திழை என் மனம் முழுக்க கனம் கொண்ட வண்ணம் ஏந்தினேன் அவன் ஞாபகங்களை…
வேனில் அவன் இல்லை, என் முன்னால் நடந்து செல்ல அவன் இல்லை, நான் அவனை காண மேல் தளத்திலும் இல்லை, ஊடு உருவும் பார்வை பார்க்க கீழ் தளத்தில் அவனும் அங்கு இல்லை!!
நாலு பக்க கோரிடோரின் நடுவே வீட்டின் முத்தம் போல் எங்கள் பிளாக்கில் ஒரு ஒட்டீஸ் இருக்கும், அதில் தான் நாங்கள் இறை வழிபாட்டு கூட்டம் முடிந்து வந்ததும் எங்களை அமர வைத்து இருந்தார்கள்…
கிளாஸ் எங்கே இருக்கிறது என்று சொல்லி, பன்னிரண்டாம் வகுப்புக்கு செல்ல ஒரு சின்ன பூஜை செய்து பிரின்சிபால், வைஸ் பிரின்சிபால் எல்லாம் பேசி அனுப்புவதற்காக…
உரையை முடித்து கொள்ளவும், பூஜை துவங்கியது சிறிதாய் ஒரு சரஸ்வதி படம் வைத்து ஆரத்தி எடுத்து கண்ணில் ஒற்றி கொள்ள ஏழு வரிசையில் அமர்ந்து இருக்கும் எங்களுக்கு புது ஐடி கார்டு கொடுத்து, பன்னிரண்டாம் வகுப்பு அறையை கை காட்டினர்…
வைஷூ குட்டியாக இருப்பாள், ஆகையால் அவள் வரிசையில் முதலில் நின்று கொண்டு இருக்க… நான் நெட்டையாக இருப்பேன் ஆதலால், பின்னால் நின்று கொண்டு இருந்தேன்!! ஆனால் எங்களுக்கு கை காண்பித்த வகுப்பு அறையை பார்த்ததும், அவள் அங்கிருந்து எட்டி பின்னால் இருக்கும் என்னை ஒரு பார்வை பார்த்தாள்…
ஆம்! போன ஆண்டு மாணவர்களின் D பிரிவாக இருந்த அந்த வகுப்பறை இப்போது எங்கள் பேட்ச் மாணவர்களின் B பிரிவு வகுப்பு அறையாக மாற்றி இருந்தார்கள்!!
அதற்கு பிரதான காரணம், எங்கள் வைஸ் பிரின்சிபால் மேடம் அறை அதற்கு அருகில் இருப்பதால் தான், அவர்கள் எங்கள் வகுப்புக்கு தாவர இயல் எடுக்க முதல் பீரியட் பெல் அடித்ததும் உள்ளே வந்து சொன்ன முதல் விஷயம் இது தான்!!
முன் வரிசையில் இருக்கும் மாணவனை அழைத்து, கரும் பலகையை அழிக்க சொன்னார்… அதில் லாஸ்ட் டே என்று எழுதி அனைவரது பெயரும் எழுத பட்டு இருந்தது!!
விறு விருவென அந்த மாணவன் அழிக்க, ஒரு நொடியில் தான் அவனது முழு பெயரை நான் அறிந்து கொண்டேன்!!
ஆம்! அது நாள் வரை எனக்கு அவன் பெயர் ஜெஷ் என்று அனைவரும் சுருக்கி அளித்தது மட்டுமே தெரியும்!! இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட அவன் வெறும் J என்று தான் போட்டு வைத்து இருப்பான்!!
அடுத்து கீழே இருக்கும் பையில் இருந்து, புத்தகம் எடுத்து மேஜையில் வைக்கும் போது தான், அதில் அவன் பெயரை கண்டேன்!!
அவன் கட்ட கடைசியாக அமர்ந்து இருந்த மேஜை, இப்போது மாறி நான் அமர்ந்து இருக்கும் முன் வரிசையில் எனக்கு வந்து இருக்கிறது!! நான் உற்று பார்ப்பதை கண்டு, வைஷூ கூட பார்த்தாள்…
நானும் அவளும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருக்க, கண்ணாடியை தூக்கி விட்ட படி வைஸ் பிரின்சிபால் மேடம் எங்கள் முன்னால் வந்து நின்று எங்களை பார்த்து கொண்டு இருந்தார்…
நான் பாக்க அவன் பாக்க ஒரே கூத்து காமெடியா போச்சு… என்று சொல்ல தான் எனக்கு ஆசை, ஆனால் சுவர்கள், மேஜைகள், வகுப்பின் கதவு, பின்னால் சார்ட் ஒட்டும் பச்சை நிற பஞ்சு பலகை என்று எங்கு திரும்பினாலும் அவன் பெயர் தான் கன்னி என் கண்ணில் பட்டது!!
“கடன்காரன்!!! பாடா படுத்துறான்…” என்று முணு முணுத்தது என் இதழ்…😤
வாழ்வின் பள்ளி பருவத்தின் இறுதி நாள் தான், அதற்காக பிரெண்ட்ஸ் கேங் பெயரை எழுத இப்படியா ஒருவன் திரும்பி பார்க்கும் பக்கம் எல்லாம் பொறித்து வைத்து செல்வான்..???
“பொறுக்கி!!!” என்று பொறுமியது என் மனம்…
என் தலை மறைக்கிறது என்று சொல்லி, முதல் நாளே என்னை கடைசி பெஞ்சுக்கு அனுப்பி விட்டார்கள்..! வைஷூ கூட என்னோடு வந்து இருந்தாள்…
நன்றாக இரண்டு சுவற்றின் மூளையில் எங்கள் இடம், மேஜை முழுக்க முழுக்க பைத்தியக்கார தனத்தின் உச்சியில் அந்த சைக்கோ அங்கேயும் அவன் பெயரை தான் எழுதி வைத்து இருந்தான்…
அது வெறும் ஒரு மூளை இரு இடத்தில் இல்லை!! J J J என்று ஒரு கிரிக்கெட் பேட் வடிவம் வரைந்து, அதில் முழுக்க நிரம்பும் படி எழுதி ஒரு இதய வடிவம் வேறு வரைந்து வைத்து விட்டு சென்று இருந்தான்,❤️ வருங்கால மனைவி ஆன நான் மாணவியாக வருவதை முன் கூட்டியே கனித்தது போல்!!!
இது எங்கு சென்று முடிந்தது?
என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்✨
Thanks for reading மக்களே 🩷
