திரையிட்டு விலகாதே! -9

திரையிட்டு விலகாதே! 

அத்தியாயம் -9

Hiiii வாசகர்களே ✨ 

கண்ணெல்லாம் வீங்கி, மெட்ராஸ் ஐஸ் வந்தது போல் சிவந்து உறுத்தி கொண்டே இருந்தது என் கண்கள்!! அதை விட உறுத்தியது, என் உள்ளம்…💔

உடைந்த சில் அனைத்தும் என்னை நெருஞ்சி முள் போல் தைக்க, வந்த கோபத்திற்கு அண்ணன் இடம் இருந்து கேட்டு வாங்கி கற்று கொண்ட கெட்ட வார்த்தை எல்லாம் போட்டு திட்டி விட்டேன் நான் அந்த ஆகாஷ் மானங் கெட்ட ஜந்துவை…

“உன்னய எவன் டா வெக்கமே இல்லாம, பெரிய புடு*ங்கி ம*யிறு மாதிரி மாமா வேலை பார்க்க சொன்னா புழு*தி மவனே!!!!?” 

அதற்கு அவன் பதில் பேசாமல், நான் பேசியதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பிரகதிக்கு அனுப்பி அவளை வைத்து சண்டை போட வைத்தான்…

அவளோ கூல் ஆக வாட்ஸ்அப்பில் இருந்து கடைசியாக, நான் சொன்னேன் அவன் தான் கேட்காம பேசிட்டான்!! இது தான் என் அக்கவுண்ட் பாஸ் வர்டு போய் என்ன நடந்துச்சு பாரு…” என அனுப்பி விட்டு ஆஃப்லைன் போனவள்…

இப்போது அவனை திட்டி விட்டேன் என்பதற்காக மீண்டும் ஆன்லைன் வந்து என்னோடு சண்டைக்கு நின்றாள்…

“ஏதோ ஹெல்ப் பண்ண போய் இப்படி ஆயிருச்சு!! அதுக்குன்னு இப்படியா பேசுவ நீ அவனை?!!! அவன் அப்பா கூட இப்படி எல்லாம் அவனை திட்டுந்து இல்ல.. பாவம் அவன் அழுவுரான் தெரியுமா!!” என்று அழுது அழுது காய்ச்சல் கண்ட என்னிடம் பேசிக் கொண்டு இருந்தாள்…

வைஷூ பேசிய போது நான் அவளிடம் நடந்த அனைத்தையும் சொல்ல, அவளும் கோபம் பொற்றுக் கொண்டு வந்தது!!

“மச்சா அவன் பிரேக் அப் ஆன சோகத்துல இருக்கான் ஷ்ரேயா… அதுனால இப்போதைக்கு அந்த அண்ணே கிட்ட பேசாத… கொஞ்ச நாள் போகட்டும்!!” 

அவனோ நான் கேட்ட சாரிக்கு Mm என்று ஒற்றை வார்த்தையில் அமைதி கொண்டான்… என்ன நினைத்தானோ எனக்கு தெரியவில்லை, இரவு பன்னிரண்டு மணிக்கு என்னை பிளாக் செய்து இருந்தான்…

அவனை தினம் காண, அந்த ஒரு மகிழ்ச்சி மட்டுமே இருந்த நிலையில் அதுவும் இப்போது மன் அள்ளி விழுந்தது!!

உலகத்தில் எந்த காதலும் ஆரம்பிக்கும் முன்பே முடிந்து போனதாக சரித்திரம் இருக்காது, நான் கொண்டு காதலை தவிர!!

எனக்கு அந்த உணர்வின் பெயர் தெரியாமல் இருந்து இருந்தால் கூட, இவ்வளோ வலித்து இருக்குமா என்று நான் அறியேன்!!

ஆனால், இது தான் காதல் என்று தெரிந்த ஒரு வாரத்திற்குள் மொத்தமும் அள்ளி விழுந்தது எனக்கு உயிரே பிரிந்தார் போல் வலியையும் வேதனையும் கொண்டேன்!!

மே மாதம் இது நடந்து இருந்தது!! 

அப்போது தான் அரசாங்கம், எந்த வித இறுதி ஆண்டு தேர்வு இன்றி அனைவரும் ஆல் பாஸ் என்று அறிக்கை வெளியிட்டது…

 

அதற்கு முன்பாகவே நான் அவன் பயிலும் கல்லூரியில் B.Sc படிப்பிற்கு அட்மிஷன் வேண்டி, அப்பிளிக்கேஷன் போட்டு விட்டு இருந்த நிலையில், இப்போது ஒரு வேளை கிடைத்து விட்டால் என்ன செய்வது?? என்று பயம் கொள்ள ஆரம்பித்தது என் மனம்…

தினம் அவன் இருக்கும் இடத்தில் சென்று அவனை காணலாம் என போட்ட அட்மிஷன், இப்போது அமானுஷ்ய நிழல் போல் பயமுறுத்தி என்னை ஒரு வழி ஆக்கி இருந்தது!! பின்ன, நான் எவ்வாறு இதற்கு மேல் அவன் முகத்தில் முழிப்பேன்?!!!

அப்போது எங்கள் பள்ளிக்கு மட்டும் தேர்வுகளின் முடிவு வெகு தாமதமாக வந்தது… ஆகையால் அவர்கள் கேட்ட படி இறுதி நாளுக்குள், என்னால் என் மார்க் ஷீட் பதிவு செய்ய இயலாமல் போனது…

ரிசல்ட் வெளியானது என்று தெரிந்தும், அழைப்பு வந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் என் தாய் என்னை அழைத்து கொண்டு வேறு ஒரு கல்லூரியில் கவுன்சிலிங் செல்ல, அங்கு நான் மட்டும் தான் CBSE மாணவி!!

அனைவரும் 10th 11th 12th ஆகிய மூன்று வகுப்புகள் பொது தேர்வு மார்க் ஷீட் வைத்து இருக்க, நான் மட்டும் 10th மார்க் ஷீட் மற்றும் ஆதார் அட்டை ஓடு சென்று இருந்தேன், இரட்டை ஜடை போட்டு கொண்டு!!

ஒரு வருஷ பீஸ் பணம் கட்டி எனது சீட்டை புக் செய்து கொண்டனர்… ஒரு வாரம் டைம் கொடுத்து இருந்தனர், கூடவே ரீஃபைண்ட் கிடையாது என் திட்டவட்டமாக சொல்லி…

நான் வீட்டிற்கு வந்து பார்க்கிறேன், எனக்கு அவன் பயிலும் கல்லூரியில் இருந்து அட்மிஷன் அழைப்பு வந்து இருந்தது!!

ஆனால், நான் கேட்ட கோர்ஸ் இல்லாமல், வேறு புட் சயின்ஸ் கோர்சுக்கு…

“தினம் தினம் ரணம் வேண்டாம்!” 

என்று எண்ணிய நான், அதை அப்படியே தட்டி கழித்து விட்டேன்…

என் தாய் நினைத்தது போல் அடுத்து, ஒரு 5 நாட்களில் என் பள்ளி தேர்வுகளின் முடிவை வெளியிட்டது!! அடுத்து பிடித்து கொண்டு போய் அதை என் கல்லூரியில் சமர்பித்து விட்டு வந்தேன், நான் தனியாக அந்த ஒரு ஆண்டு பீஸ் பணத்தோடு என் சீட்டையும் தக்க வைத்து கொள்வதற்காக…

இதற்கு இடையில் ஜூன் மாதம் என்னை ஸ்கூட்டி லைசன்ஸ் வாங்க அனுப்பி விட்டார்கள், அங்கும் நான் மட்டும் தான் தனியாக வந்து செல்வேன்…

காலை 7 மணிக்கு குளிர குளிர சைக்கிள் எடுத்து கொண்டு தெப்பக்குளம் வந்து, பயிற்றுவிப்பாளினி அம்மா வருவதற்காக காத்து இருப்பேன்!! அங்கே, மற்ற பெண் பிள்ளைகளை எல்லாம் அவரவர் வீட்டில் இருந்து அண்ணன், அப்பா வந்து இறக்கி விட்டு அவர்கள் முடிக்கும் வரை காத்து நின்று, கை தட்டி உற்சாக படுத்தி ஓட்ட வைத்து பயிற்சி முடிந்ததும் அழைத்து செல்வார்கள்…

இவ்வளவு ஏன்?

என் வீட்டில் என் அண்ணனை கூட தனியாக அனுப்பாமல், ஆட்டோ வைத்து அனுப்பி விட்டார்கள்… அதுவும் கார் பைக் இரண்டிற்கும் சேர்த்து!!

நான் கெஞ்சி கேட்டும் கூட, ஸ்கூட்டி பயிற்சிக்கு தான் அனுப்பி விட்டு இருந்தனர்… ☹️ 

வர வர என் குடும்பம் என் மீதே பாகுபாடு காட்டுவதை நான் வெகுவாக உணர்ந்த தருணம் அதுவே!! மனது, காதலின் இழப்பை விட மிகவும் வலித்தது!!

காரணம் இன்றி ஏன் இவ்வாறு எனக்கு இதை செய்ய வேண்டும்???

நான் என்ன பாவம் செய்தேன்!!!?

இவ்வாறு வீட்டில் குடும்பத்தோடு இருந்தும், தனிமையில் வாழ்ந்தவள் தான் ஷ்ரேயா ஆகிய நான்!!

இது எல்லாம் போக, ஒரு சண்டை எழுந்ததில் நான் சமீப காலமாக உணர்ந்த இந்த பாகுபாடை பற்றி சொல்லி விட..

என் அண்ணன் நானே எதிர் பார்க்காத விதமாக, “இவ ஒரு பையனை லவ் பண்றா ம்மா… அன்னிக்கு தடுப்பூசி போட போறப்ப சண்டை போல, அழுதுட்டே இருந்தா!!” என்று ஒரு ஆட்டோம் பாம் எடுத்து வீசி விட்டான், காற்று வாக்கில் போற போக்கில்..

அவ்வளவு தான், என்னை என் பெற்றோர்கள் வறுத்தெடுத்து திட்டி, கழுவி ஊற்றி, நார் நாராக கிழித்து, வெட்டி போடாத குறையாக களி போல் என்னை கிண்டி விட்டார்கள்…

என் அம்மா அடுத்து கேட்டும் கூட, அவன் யார் என்று நான் மூச்சு கூட விடவில்லை!

மிதித்து கூட கேட்டார்கள், நான் விடாமல் அழுகை கொண்டேனே தவிர, வாயை திறக்கவில்லை..!!! உயிர் போனாலும், அவனுக்கு இதனால் பிரச்னை வரும் என்று உணர்ந்து இருந்த நான் வாய் திறக்க மாட்டேன்!!

காதலித்து மாட்டி கொண்டு வீட்டில் அடி வாங்கி கேள்வி பட்டு இருப்பீர்கள்!!

ஆனால், என் கதை வித்தியாசமானது!!

எப்படி என்று நான் சொல்லி தான் உங்களுக்கு விளங்க வேண்டும், என்பது அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்!

அந்நாள் முதல் என்னை என் வீட்டில் பாகுபாடு பார்த்து வந்தவர்கள், மொத்தமாக என்னை வெறுத்து ஒதுக்கி ஏதோ அசிங்கத்தை பார்ப்பது போல் பார்த்தனர்..!!

அதை எல்லாம் பொருட் படுத்தாமல் நான் தினமும் அவன் பிளாக் செய்ய பட்டு இருப்பதால், காட்டிய வெற்று கணக்கு பக்கத்தை போய் பார்க்காமல் இல்லை!!

ஆகஸ்ட் மாதம் வந்தது, என் கல்லூரியில் எனக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஆரம்பித்தனர்.. வழக்கம் போல் தான், சென்ற ஒரு வாரம் முழுக்க ஸ்டூடன்ட் இன்டக்ஷன் புரோகிராம் நடந்து ஏறியது!!

இன்னும் சில நாட்களில் அவன் பிறந்த நாள், அதற்காக நான் ஆவலாக காத்து இருந்தேன்!! 

பிளாக் செய்து இருப்பதால், போன முறை மாதிரி ஒரு வாழ்த்து கூட சொல்ல முடியாது!! ஆனால், அதுனால் என்ன?

எனக்கு அவன் பிறந்த தேதி ஒரு சிறப்பு நாள் தான்!! 🥰

என் பெரியப்பா, அவர் மகனின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க வந்து இருந்தார்… பெரிய அண்ணன், அவர் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே ஒரு பெண்ணை காதலித்து கொரோனா முடியும் வரை காத்து இருந்து வீட்டில் பேசி, சம்மதம் வாங்கி இருந்தார்கள்…

என் பெரியம்மாவுக்கு இதில் சுத்தமாக உடன் பாடு இல்லை!! ஆனால், அவரின் தங்கை ஆன என் தாய் தான், பேசி பேசி ஒப்புக் கொள்ள வைத்த நல்லவரே!!

ஆனால் அப்படியே அழைப்பை துண்டித்து விட்டு, அவரின் முன்னால் வியந்து போய் அமர்ந்து இருந்த எங்கள் இருவர் இடமும்

“அண்ணன் காட்டிய வழின்னு யாராச்சும்

லவ் பண்றேன்னு வந்தீங்க…. 

சொத்துல சல்லி பைசா கிடையாது பார்த்துக்கோங்க சொல்லிட்டேன்!!” 

என அப்பட்டமாக அந்நியன் போல் மிரட்டல் விடுத்தார் என தாய், அதுவரை அம்பி போல் அக்கா இடம் பேசியவர்…

“இது நாள் வரை, கிட்ட தட்ட 16 ஆண்டுகளாக சிரித்த முகமாக பார்த்து இருந்த அவருக்கும் ஒரு இருண்ட பக்கம் கூடின இன்னொரு முகம் இருக்கும்!” என்று நான் கனவிலும் நினைக்கவில்லை… ஆகவே, அம்மா ம்மா என்று பின்னால் சுற்றி திரியும் நான், அன்று முதல் அவர் இடம் இருந்து அச்சம் கொண்டு விலக ஆரம்பித்தேன்!!

சேலை தான் கட்ட வேண்டும் என்று என்னை கட்டாய படுத்தி ஒன்றை எடுத்து கொடுத்து விட்டார்… அதற்கு மேட்சிங் பிளவுஸ் தைத்து வரவும், அந்த ஆவலில் அந்த மரகத பச்சை நிற கிருஷ்ணர் பாப்பா முகம் நெய்து இருக்கும் பட்டு புடவையை எடுத்து நான் கட்டி பார்த்தேன்!!

அது நான் எதிர் பார்த்ததை விட, அழகாக இருந்தது!!😍

ஆகவே, என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி போட்டு இருந்தேன், இருந்த 47 போல்லோவெர்சு வடிகட்டி, ஹைட் செய்து தான் பதிவிட்டேன்!!

எதிர் பாரா விதமாக, அன்று மாலை எனக்கு ஒரு குறுஞ் செய்தி வந்தது.…

யார்? என்ன பேசி இருந்தார்கள்?

என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨ 

Thanks for reading மக்களே 🩷 

 

 

❤️ Loading reactions...
9 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page