தூரிகை 10❤️

அவளை அந்த ரவுடிகளிடமிருந்து காப்பாற்றியதும், அவன் கேட்ட கேள்விகளில் சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லிவிட்டு அவள் பேக்கை தேட அதில் அவள் வைத்திருந்த பணமும் துணிமணிகளும் இல்லாமல், காலிப்பை மட்டுமே இருந்தது.

போனும் அவன் ரவுடிகளை அடிக்கும் போது கீழே விழுந்துவிட அதை ஒருவன் சாக்கடையில் தள்ளிவிட்டு சென்றுவிட்டான்.

அவள் எதுவும் இல்லாமல் கையறு நிலையில் அப்படியே அந்தப் பேருந்து நிலையத்தில் அமர்ந்து அழவும், அவனுக்கு அவள் அழுவது பெரிதாக தெரியவில்லை… தான் ஏன்? கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தோம் என்றானது. 

இருந்தபோதும் அவள் அழுவது ஒரு மாதிரியாக இருக்க மெல்ல அவளிடம் வந்து, “இப்ப எதுக்கு அழுகிற போன் தானே போச்சு இந்த போன்ல இருந்து உங்க அப்பா, அம்மா! இல்லை உங்க ஹஸ்பண்ட் யாருக்காவது கூப்பிட்டு பேசு,” என்று தன் போனை அவளிடம் நீட்ட அவளும் நிமிர்ந்து, ” எனக்கு யாரு நம்பரும் தெரியாது? அப்பறம் எனக்கு அப்பா, அம்மா! மட்டும் தான், ” என்று அழுத்தமாகக் கூறினாள்.

அதைக் கேட்ட அவனுக்கு எரிச்சல் ஆகி, “ஒரு பத்து இலக்க எண்களை கூடவா இந்த பெண்ணால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது அப்படி ஒரு முட்டாள் பெண்ணா!! இவள்,” என்று தன் தலையில் அடித்துக் கொண்டு அப்படியே விட்டு விட்டு செல்லலாம் என்று பாதி தூரம் சென்று விட்டான்.

ஆனால், மனம் கேட்காமல் மீண்டும் அவளிடம் வந்து, ” இப்ப நீ இங்க உட்காரந்து அழுவுறதுனால ஒன்னும் மாறிட போறது இல்லை… வேணும்னா நான் காசு தரேன் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி ஊரை போய் சேரு, ” என்றான்.

“யாரை யாரையோ கொன்ன அந்த  ரத்தப் படிந்த காசு எனக்கு வேணாம்,” என்று முகத்தில் அடித்ததைப் போல் கூறினாள்.

அதைக் கேட்ட அவனுக்கு கோவம் தலைக்கு ஏற, அதை இன்று அதிசயம் போல் அடக்கிக் கொண்டு, “உனக்கு இவ்வளவு தூரம் வந்து நான் ஹெல்ப் பண்றேன்னு நீ என்னை பத்தியே தப்பா பேசுவியா ரொம்ப திமிரு தாண்டி உனக்கு…. ” என்று பற்களை கடித்தான்.

அவளோட நிமிர்ந்து பார்த்து, ” நான் உங்ககிட்ட காசும் கேட்கல எந்த உதவியும் கேட்கல, “என்றாள். 

அவனுக்கோ ரொம்ப அவமானாகி போனது ஏன் என்றால், இதுவரை அவன் தான் அடுத்தவர்களிடம் இப்படி பேசியிருக்கிறான். தன்னை ஒருவள் இப்படி பேசியது அவனுக்கு கோவம் வந்து, ” அப்போ இங்கே கிடந்து வேற எவனாவது வருவான் அவன் கூப்பிடுவான் அவன் பின்னாடி போடி, ” என்றான்.

தன்னை பற்றி முன் பின் தெரியாத ஒருவன் அந்த வார்த்தையை சொல்லவும் அவளுக்கு சுள்ளென்று ஆக, “வந்தவங்களோட எல்லாம் போறதுக்கு நான் ஒன்னும் அந்த மாதிரி பொண்ணு இல்லை,”  என்றாள்.

“அதானே உனக்கு எவன் கூடவும் போக தெரியாது, வழி தெரியாம போக தான் தெரியும் அப்படித்தானே!” என்றான். நக்கலாக,,

அவள் அதற்கு அவனை முறைக்க… அதைப் பார்த்தவன், “இப்படி என்கிட்ட முறைச்சு பார்க்கிற வேலை எல்லாம் வச்சிக்கிட்ட வச்சுக்கோ கண்ணை நோண்டி விடுவேன்.

என்னடி உன்கிட்ட உக்காந்து இப்படி பேசிட்டு இருக்கிறதுனால என்ன ரொம்ப சாப்ட் நினைச்சுட்டு இருக்கியா? இதை பாரு இப்ப கூட கத்திய கையில தான் வச்சிருக்கேன்.” என்று தன் இடுப்பில் சொருகிருந்த கத்தியை தூக்கி காட்டிவிட்டு, ” ரொம்ப பேசினா கழுத்தை அறுத்து போட்டு போயிட்டே இருப்பேன். ” என்றான்.

அவள் அதற்கும் அழுக… “ஏய்! சும்மா அழுகாத காது வலிக்குது.. ” என்றான்.

“காது வலிக்குதுனா இங்கே ஏன் வந்து உக்காந்துகிட்டு இருக்கீங்க உங்க வேலைய பாத்துட்டு போங்க…” என்றாள்.

அவள் தன் தந்தையிடமே அதிர்ந்து பேசாதவள் இவனிடம் எப்படி வாய் பேசுவதும் அதிசயம் தான் அதற்கு அவன் வாயால் பதில் சொல்வதும் அதிசயம் தான்… ஏனென்றால் இருவரும் இரண்டு துருவங்கள்.

அவள் பேசியதைக் கேட்டவனோ  கோபமுற்று அவள் தாடைகளை இறுக்கி தன் முகத்தின் அருகே கொண்டு வந்து, ” நான் கொலை பண்ணுனதை நீ பார்த்து இருக்கியே உன்னை நான் வேற உயிரோட விட்டு இருக்கேன். ஒருவேளை நாளை பின்ன நீ ஊருக்கு போகாம  இங்கேயே இருந்து போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்பளைண்ட் பண்ணிட்டா என்ன பண்றது நீ கம்பளைண்ட் பண்ணாலும் எனக்கு ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை… உன் பிரச்சனையை வேற தலையில தூக்கி சுமக்கணும் அதுக்கு அலையனும், அது எனக்கு தேவையில்லாத வேலை அதனால நீ ஊருக்கு போயிட்டா நானும் என் வேலைய பாத்துட்டு போயிட்டே இருப்பேன்.” என்று தன் முகத்தை அலட்சியமாக வைத்துக் கொண்டு, கூறினான்.

“நான் ஒன்னும் ஊருக்கு போக மாட்டேன்னு சொல்லலையே வண்டி வரல நான் என்ன பண்ணட்டும்,” மொசுன்னு மொசுன்னு அழுது கொண்டே!! கேட்டாள். 

அவனுக்கும் அவள் அழுது கொண்டே இருப்பது பாவமாகி போக, “சரி சரி வா உன்னை காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட்ல கூட்டிட்டு போய் விட்டுறேன்.  அதுக்கப்புறம் நீ எப்படியோ போ,” என்றான்.

அவளுக்கும் அதுவே சரி என பட தன் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு அவன் பின்னே சென்றாள்.

இருவரும் நல்ல வெளிச்சம் இருக்கும் பக்கம் வந்து காஞ்சிபுரம் பேருந்து நிறுத்தத்திற்கு வர அங்கு ஒரு ஈ காக்கா கூட இல்லை… இவர்கள் மட்டுமே இருந்தனர். சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு அங்கு பேருந்து தகவல் சேகரித்து வைக்கும் நபர் வந்து அமரவும் அமுதன் அவரிடம் வேகமாகச் சென்று, ” நெக்ஸ்ட் காஞ்சிபுரம் பஸ் எப்போ வரும், ” என்று கேட்டான்.

சென்னை, காஞ்சிபுரம், வேலூர் சைடுல ஏதோ பிக் போராட்டம் நடந்துட்டு இருக்கு சார்! சோ  குடியாத்தம் போய், அங்கிருந்து  வேலூர் போயிட்டு, வேலூர் ல இருந்து தான் காஞ்சிபுரம் போய் ஆகணும். காஞ்சிபுரம் பஸ் வேணுமன்னா நாளைக்கு மாலை ஆறு  மணி போல தான் வரும், ” என்று கூறி விட்டார்.

“நான் கொஞ்சம் முன்னாடி மிஸ்டர். கணேசன் கிட்ட பேசினேன்.. அவரு மார்னிங் மூணு மணிக்கு வரும் சொன்னாரே!! ” என்றான்.

அவன் மாஸ்க் அணிந்து கொண்டே இருந்ததால்,, அவர் அவன் முகத்தைக் கூட பார்க்காமல், “சார்!இது டூ மினிட்ஸ் முன்னாடி வந்த தகவல், ” என்று அதோடு முடித்து விட்டார். 

” காஞ்சிபுரம்ல இருந்து சென்னை வந்து ஒரு அட்ரஸ் தேடறதுக்கே இவளுக்கு வக்க காணோம்!! இதில் இவரு சொன்ன மாதிரி  போறதுக்குள்ள பொழுது விடிஞ்சிடும்… இப்ப என்ன பண்றது இவள இப்படியே விட்டுட்டு போக முடியல… இவ கூட இருக்கவும் முடியல… எங்கேயோ? திரிஞ்சத எடுத்து என்  வேட்டிக்குள்ள விட்டது மாதிரி ஆகிப்போச்சு நான் கொலை பண்ணவன் கூட நிம்மதியா இருப்பான். ” என்று தனக்குள்ளே குமரி கொண்டான்.

அப்படி தன் மனதில் குமரி கொண்டாலும் அவளை விட்டு செல்லவும் மனம் இல்லாமல் அவளிடம் வந்து, அவர் கூறியதெல்லாம் கூறி, “இப்போ என்ன செய்யப் போற இங்க உனக்கு தெரிஞ்சவங்க வேற யாராவது இருக்காங்களா!” என்று கேட்டான்.

“எனக்கு தெரிஞ்சது எங்க அண்ணா வீடு மட்டும் தான் அவர் வீட்டுக்கே இப்போ எந்த பக்கம் போறதுன்னு நடந்த கலவரத்தில் எனக்கு தெரியவே இல்லைங்க,” என்றாள். பாவமாக!! 

அதை பார்த்து அவனுக்கு அவளை பார்த்து பாவம் வரவில்லை மாறாக முட்டாள் என்று தான் தோன்றியது.

 ஆனால், அவன் நினைக்கும் அளவிற்கு எல்லாம் அவள் முட்டாள் இல்லை..  பார்ப்பதை பார்த்த வண்ணம் பார்த்த நொடியே  துரிதமாக செய்து முடிப்பவள் தான்.

 வெளியில் எங்கு சென்று வருவதென்றாலும் சிறிது பயம் அவ்வளவே!! அதுவும் அவளின் சிறகுகளை உடைத்து விட்டு கைக்குள்ளே அடக்கி வைத்திருந்ததால் வந்த பயம் மட்டுமே!!

 அவளை சராசரியாக விட்டிருந்தாலே அவள் பலசாலியாக தைரியசாலியாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் சில பல விஷயங்களையாவது தெரிந்து வைத்திருப்பாள் 

இப்படி எல்லோர் கண்ணுக்கும் விருந்தாகி இவன் கண்ணுக்கு முட்டளாக இருக்க மாட்டாள்.

ஆனால் அவன் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், ” இப்படி சொன்னா எப்படி டி, “என்றான்.

அதில் தெளிந்தவள்,” எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ஆனா முதல்ல இந்த டி போட்டு பேசுறது நிறுத்துங்க… ” என்று தன் சுட்டு விரலை நீட்டி எச்சரித்தாள்.

அவள் நீட்டிய விரல்களை சற்று முறுக்கி, ” எனக்கும் இந்த மாதிரி கைநீட்டி பேசுறது பிடிக்காது? ”  என்று  விட்டான். 

அவன் அந்த விரலை பிடித்தப் பிறகுதான் உணர்ந்தான்  அந்த விரல் மென்மையிலும் மென்மையாக இருந்தது. அந்த மென்மையில் கரைந்தவன் அப்படியே கையை கீழே போட்டு விட்டு, அந்த உணர்வுகளுக்கு பெயர் தெரியாமல் ஒரு நிமிடம் தவித்தான்.

தனக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்திருந்தாலும் தன் மனைவியின் விரலை எல்லாம் இப்படி பிடித்ததில்லை… அதற்கு காரணம் பல உண்டு அதை நினைத்துப் பார்க்க அவனும் விரும்பவில்லை.. ஆனால், இதை புதியதாக உணர்கிறான். 

அவளுக்கும் நீண்ட நாட்கள் கழித்து ஒரு ஆணின் ஸ்பரிசம் புதிதாக தெரிந்தது. அவளின் கணவன் அவளை மிருகம் போல வேட்டையாடியதை தான் பார்த்திருக்கிறாள். அவன் முறுக்கினான். அதிலும் ஒரு மென்மை இருக்கத் தான் செய்தது. ஒரு ஆண் தொடுகையில்  மென்மையை இப்போது தான் உணர்கிறாள்.

அதன்பின் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் அவள் வலது புறத்திலும் அவன் இடது புறத்திலும் திரும்பி நின்று கொண்டனர்.

அவளுக்கு இன்று நடந்ததை நினைத்து தலை வலி எடுக்க ஆரம்பித்தது.  இதை எல்லாம் அவள் சினிமாவாவில் பார்க்கும் போதே பயப்படுபவள். அப்படி இருக்க அது தனக்கு உண்மையாக நடந்திருக்க… அதை நினைத்தவளுக்கு  தலை பயங்கரமாக வலித்தது. இதுவரை அவனிடம் வாய்க்கு வாய் பேசும் போது இது தெரியவில்லை… இப்போது இருவருக்கிடையும் அமைதி நிலவ  அவளுக்கு தன் தாயின் நினைவு வந்து அவர் மடியில் தலை சாய்த்து விட மாட்டோமா?  என்று எண்ணிய அடுத்த நொடி கண்களில் இருந்து மெல்ல கண்ணீர் துளி எட்டிப் பார்த்து, அசதியிலும் அந்த மெல்லிய குளிர் காற்றிலும் அவள் கைகள் நடுங்க…

அதை உணர்ந்தானோ? இல்லை இந்த நேரத்தில் அவளுக்கு ஆறுதல் தேவைப்படும் என உணர்ந்தானோ? தெரியவில்லை..

 சட்டென அவள் கைகளை இறுகப்பற்றி தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு, ” நீ ஒன்னும் சின்ன பொண்ணு மாதிரி தெரியல கொஞ்சம் மெச்சுரான பொண்ணா தான் தெரியுது அதனால இதை எல்லாம் இங்கேயே தூக்கி போட்டுட்டு வீட்டுக்கு போயிடு வீட்டுக்கு போய் எதையும் சொல்லாத,,  நான் ஏன்? சொல்றேன்னு உனக்கே புரியும் என்று நினைக்கிறேன். ” என்று அவன் கூறவும் அவளுக்கு அந்த ஸ்பரிசமும், அவனின் இந்த கனிவான பேச்சும் மயிலிறகைப் போல் மெல்ல வருட,  அமைதியாக இருந்தாள். எல்லாம் ஒரு நொடி தான்

  சட்டுனு விலகி நின்று தன் கண்களை அழுந்து துடைத்துக் கொண்டவளை பார்த்து, ” டீ குடிக்கிறியா? ” என்று கேட்டான்.

அவள் அதற்கும் அமைதியாகவே இருக்க…அதில் அவன் கடுப்பாகி ” நீ குடிக்கிறியோ உனக்கு வேணுமா வேணாமா எனக்கு தெரியாது நான் இப்ப குடிக்க போறேன். ஆனால் இந்த பஸ் ஸ்டாண்ட்ல இருக்க கடை ரெண்டு கடையும்  க்ளோஸ் ஆயிருக்கு அந்த பக்கம் கடை இருக்கும் நான் போய் குடிக்க போறேன் நீ வரியா? வரலையா?  என்று அதட்டலாகக் கேட்டான்.

அவள் அமைதியாக, “வரேன், ” என்று சொல்லவும் அழைத்துச் சென்று வேலூர் பேருந்து  நிறுத்தத்தில் இருந்த டீக்கடையில், அவளுக்கு முதலில் தண்ணீரை கொடுத்து, ” குடி, ” என்றான்.

தன் நிலை அறிந்து குடிக்க தண்ணீர் கொடுத்தவனை பார்க்க இவனா அவனை கொன்றது என்பது போல தோன்றியது.

அவனுக்கு இந்த மாதிரி இடத்தில் எல்லாம் டீ குடிப்பது புதிது அல்ல… தொழில் தொடங்கிய புது எல்லாம் இங்கு வந்து கொடுத்திருக்கிறான் தான்,, நீண்ட நாட்கள் கழித்து அவனுக்கும் வளிசுவாச காற்றை சுவாசித்தது போல் ஒரு உணர்வு,, அதனால் தான் வெகு சாதாரணமாக உணர்கிறான். 

அவள் அவனையே பார்த்து கொண்டிருக்க… அவன் அவளுக்கும் தனக்குமாக டீ வாங்கிக் ஒன்றை அவள் கையில் கொடுத்து விட்டு, ஒன்றை தன் கையில் வைத்துக் கொண்டு, அவளுக்கு இரண்டு பிஸ்கிட்டையும் வாங்கி கொடுத்து அவள் குடித்துக் கொண்டிருக்கும் போதே!! “என் கூட என் வீட்டுக்கு வரியா?” என்று ஒரு பெரிய குண்டு சாதாரணமாக வீசிவிட்டு அமைதியாக டீயை குடித்தான்.

தொடரும்.…

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மேகத்தின் தூரிகை இவள்(ன்)
929 6 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page