தூரிகை 11 ❤️
அவன் எப்படியோ? பேசி வெளிச்சம் உள்ள பக்கத்திற்கு அவளை டீ குடிக்கலாம் என்று அழைத்து வந்து என்று கடைக்கு அழைக்க….
அவள் முதலில் அமைதியாக இருந்து பின்பு, வர சம்மதிக்கவும் அவளுக்கு தண்ணீர் கொடுத்து குடிக்க சொன்னான்.
அந்த கடையை பார்க்க அது சந்தேகத்திற்கு இடமின்றி காசு கொடுக்காமல் தண்ணீர் குடித்தற்காக அவளை விரட்டி அடித்த கடைக்காரர் தான் அவனிடம் பவ்யமாக தண்ணீரை கொடுத்தார். அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம், “இந்தா முதலில் தண்ணீரைக் குடி,” என்று நீட்டினான்.
தன் நிலை அறிந்து குடிக்க தண்ணீர் கொடுத்தவனை பார்க்க இவனா அவனை கொன்றது என்பது போல தோன்ற அவனை வைத்துக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன் அவளின் பார்வையில் கரைந்தாலும்,
அதை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் அவன் அவளுக்கும் தனக்குமான டீ வாங்கிக் ஒன்றை அவள் கையில் கொடுத்து விட்டு, ஒன்றை தன் கையில் வைத்துக் கொண்டு, அவளுக்கு இரண்டு பிஸ்கிட்டையும் வாங்கி கொடுத்து அவள் குடித்துக் கொண்டிருக்கும் போதே!! “என் கூட என் வீட்டுக்கு வரியா?” என்று ஒரு பெரிய குண்டை சாதாரணமாக வீசிவிட்டு அமைதியாக டீயை குடித்தான்.
அவன் கேட்டது அவளுக்கு சரியாக கேட்கவில்லை போலும் அதனால் அவள் அமைதியாகவே இருக்க…
அவன் மெல்ல அவள் காதில், ” உனக்கு ஒவ்வொரு விஷயத்தையும் 40 முறை கேட்கணுமா? இப்ப இந்த பஸ் வராது, கொஞ்ச நேரம் கழிச்சுனா கூட பரவால்ல விட்டுட்டு போயிடுவேன். ஆனா இங்க.. நாளைக்கு தான் அந்த பக்கம் போற பஸ்ஸே வரும்னு சொல்றாங்க… அதனாலதான் கேட்டேன், ” என்றான்.
அதைக் கேட்டவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல்,” இல்லைங்க நான் வரல, ” என்று கூறிவிட்டு சற்று தள்ளி நின்று கொண்டாள்.
அவள் அவனிடமிருந்து தள்ளி வந்து நின்றதும் அந்த கடைக்கார பெண்மணி அவள் அருகில் வந்து நின்று, ” இவர்தான் உன் வீட்டுக்காரராமா? இவரை தொலைத்து தான் தேடிட்டு இருந்தியா, ” என்று கேட்டார்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லை அக்கா அவர் என் வீட்டுக்காரர் இல்லை, எனக்கு வீட்டுக்காரரே இல்லை…” என்று கூறிஅவர் முகத்தை பார்க்க…
“அப்போ உனக்கு என்ன பிரச்சனை ஆச்சு,” என்று கேட்டார்.
அவள் அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் தன் கைகளை பிசைந்து கொண்டே நிற்க… ” நான் தப்பா நினைக்க மாட்டேன் மா சொல்லு, ” என்று கேட்டார்.
அவள் நடந்தவற்றையெல்லாம் கூறி, “அதிலிருந்து என்னை இவர் தான் காப்பாற்றினார் இவர் யாருன்னு எனக்கு தெரியாது அக்கா!” என்று சொன்னாள்.
“சரி சரி பார்த்து பத்திரமா ஊர போய் சேரு,” என்று கேட்டு சொல்லிவிட்டு “சரி உன் ஊர் எது,” என்று அவளும் கேட்டார்.
அவள், “காஞ்சிபுரம் அக்கா!” என்று கூறிவிட்டு மற்ற தகவல்களை அவரிடம் கூறினாள்.
“அப்படியா!! பார்த்து பத்திரமா போமா,” என்று சொல்லிவிட்டு தன் கணவரிடம் சென்று, நான் எப்போ வெளியே போயிட்டு அப்படியே பசங்களை பார்த்துட்டு வரேன் கடைய கொஞ்ச நேரம் பாத்துக்கோங்க… ” என்று தன் அவசரத்திற்காக அவள் சென்று விட்டாள். அவர்கள் இருவரும் பேசி முடித்து அவள் சென்றவுடன் அமுதன் அவள் அருகில் வந்து நின்று, ” என்னடி இந்த ஊர்ல யாரையும் தெரியாதுன்னு சொன்ன ஆனா அவங்க கிட்ட நல்லா பேசிட்டு இருந்தியே, ” என்று கேட்டான்.
அவள் அதற்கு அமைதியாகவே இருக்க..” சரியான ஊம கொட்டானா தான் இருப்ப போல பேசுறதுக்கு மட்டும் நல்லா வார்த்தைக்கு வார்த்தையே பேசுற இல்ல, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டியா? ” என்று கேட்டான்.
” அது எப்படி சொல்றது எனக்கு தெரியலங்க… ” என்று சொன்னாள்.
” வாயில தான் சொல்லணும் வேற எதுல சொல்றது, ” என்று அவனும் நக்கலாக கூற… அவள் சட்டு என்று அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.
“உன் கண்ண வச்சு உருட்டுற வேலை எல்லாம் இங்க வச்சுக்காத கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு,” என்றான்.
அவள் மெல்ல தயங்கி தயங்கி அப்போது நடந்தவற்றையெல்லாம் இவனிடம் கூறி முடித்தாள்.
அதைக் கேட்ட அவனுக்கு கோபம் தலைக்கு ஏற அந்த கடைக்காரரிடம் சென்று தான் வாங்கியதற்காக எல்லாம் காசு கொடுத்து விட்டு அவர் சட்டையை பிடித்ததில் அந்த கடைக்காரர் பதறி, “என்னங்க சும்மா இருக்கிற என்னை வந்து சட்டையை புடிக்கிறீங்க…” என்று கேட்டான்.
“ஏண்டா நீ வெச்சிருக்கறதே ஒரு டப்பா கடை இந்த கடையில உனக்கு கேட்காம தண்ணி எடுத்து குடிச்சிட்டு ஒரு குத்தமாடா அந்த பேச்சு பேசி இருக்கா அவளை பார்த்து, ” என்று கேட்டான்.
“சாரிங்க அது தெரியாம,” என்று அவன் தலையை சொறிய…
“நீ உன் பொருளுக்கு காசு கேட்டது தப்பு கிடையாது. ஆனா அதை கேட்டு தான் தப்புங்கிறேன். ஒழுங்கா அவ கிட்ட மன்னிப்பு கேளு, ” என்றான்.
அவன் மாஸ்கை அணிந்து இருந்தாலும் அவன் கண்களில் இருந்த வீரியமே அவனுக்கு பயத்தைக் கிளப்ப கையெடுத்து கும்பிட்டு விட்டு, “மன்னிச்சிடுங்க அம்மா சார் கிட்ட சொல்லி கையை எடுக்க சொல்லுங்க,” என்று கேட்டான்.
அவளுக்கு அது ஒரு மாதிரியாகி போக, “விட்டுடுங்க…” என்றாள்.
அவள் சொன்ன அடுத்த நொடியே அவன் சட்டை காலரை விட்டு விட்டு, ” தண்ணீருக்கு எவ்வளவு காசு, ” என்று கேட்டான். அவன் அந்த தண்ணீருக்குண்டான விலையை சொன்னவுடன் தன் பையில் இருந்து காசை எடுத்துக் கொடுத்துவிட்டு வேகமாக வந்து அவள் கையைப் பிடித்து, ” வாடி போகலாம்.. ” என்றான்.
அதில் அவளுக்கு பயப்பந்து உருள, “எங்க,” என்று கேட்டாள்.
“அதுதான் முன்னாடியே சொன்னேனே!! என் கூட என் வீட்டுக்கு வா போலாம்,” என்றான்.
“நான் எல்லாம் எங்கேயும் வரல பஸ் வர ரெண்டு நாளானாலும் பரவால்ல நான் இங்கேயே வெயிட் பண்ணி போறேன்.” என்றாள்.
அதைக் கேட்டவன் சத்தமாக சிரிக்க… அந்த கடைக்காரர் அவனையே பார்த்தார். அதை பார்த்தவளுக்கு ஒரு மாதிரியாகி போக, ” சிரிக்காதீங்க… ” என்று கை எடுத்து கும்பிட்டு கேட்டவுடன் அவன் நிறுத்த, “இப்ப எதுக்கு என்னை பார்த்து எப்படி சிரிக்கிறீங்க…” என்றுக் கேட்டாள்.
“ரெண்டு நாள் நீ இங்க இருந்தா வச்சுக்கோ,, ஊருக்கு போக மாட்ட!!” என்று கூறிவிட்டு நிறுத்தி அவளை ஒரு முறை பார்த்துவிட்டு அமைதியாகினான்.
அவளுக்கு கோவம் ஏற, “எங்க போவேன்,” என்று கேட்டாள்.
“ஒன்னு வழி தெரியாம எங்கேயாவது போக இல்லை எவனாவது வந்து உன்னை ஏதாவது பண்ண ட்ரை பண்ணுவான். அப்புறம் நான் கொல்லாம விட்டது வேற ஒருத்தன் செஞ்சுட்டு போயிடுவான். நானாவது வெறும் கொலை மட்டும் தான் பண்ணி இருப்பேன் வரவனுங்க என்ன என்ன செய்வானுங்களோ எனக்கே தெரியாது,” என்றுக் கூறி தன் நாக்கை வாயில் சுழற்றிய படி,, நின்றான்.
“இப்படி எல்லாம் பண்ணாதீங்க… நீங்க முதல்ல போய் உங்க வேலைய பாருங்க…” என்றாள்.
“அது எங்களுக்கு தெரியும் நீ என் கூட வா!” என்றான்.
“நான் தான் எங்கேயும் வரலைன்னு சொல்ற இல்ல உங்களுக்கு புரியலையா?” என்று கேட்டாள்.
“இல்லை நீ வந்து தான் போவேன்.” என்றான்.
“நீங்க ஏன்? எனக்காக இவ்வளவு மெனக்கெடறீங்க உங்க வீட்ல வைஃப் ஏதாச்சு சொல்ல போறாங்க உங்க வேலை என்னவோ அதை மட்டும் பார்த்துட்டு போங்க…” என்றாள்.
ஆனால், உள்ளுக்குள்ளே பூனை வாயிலிருந்து வெளியே வந்து புலி வாயில் போய் சிக்கிக் கொள்வோமோ என்ற பயம் தான் முக்கியமான காரணமாக இருந்தது.
அவன் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், ” இங்கேயே வெயிட் பண்ணு எங்கேயும் போகாத நீ எங்க போனாலும் நான் கண்டுபிடிச்சிடுவேன் அது உனக்கே தெரியும். ” என்று கூறிவிட்டு கடைக்காரரிடம் திரும்பி, ” யோவ், ” என்றான்.
அவர் பவ்யமாக வந்து, ” சொல்லுங்கண்ணே!” என்று குழைந்தார்.
” இவங்கள இந்த இடத்தை விட்டு எங்கேயும் போகாம பத்திரமா பாத்துக்கோ எங்க உன்னோட வைஃப், ” என்று கேட்டான்.
“அவங்க வெளிக்கு போயிருக்காங்க அது இல்லாம இந்த பஸ் ஸ்டாண்டோட அந்த முக்குல தான் ஒரு ரூம் இருக்கு அங்க தான் நானும் என் பொண்டாட்டி புள்ளைங்க இருப்போம் அங்க என் பிள்ளைங்க சாப்பிட்டுச்சானு பாத்துட்டு வர போயிருப்பா!” என்று சொன்னார்.
“சரி சரி எப்படியோ போ இப்போ இவங்களை இந்த இடத்தை விட்டு நகராமல் பார்த்துக்கொள்,” என்று தன் பாக்கெட்டில் இருந்து ஒரு ஆயிரம் ரூபாய் காசு எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு, “பார்த்துக்கொள்,” என்று சொல்லிவிட்டு சென்றான்.
அவரும் அந்த 1000 ரூபாய்க்கு மரியாதை கொடுத்து தன் வியாபாரத்தையும் பார்த்து அவளையும் ஒரு கண் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அந்த கடைக்காரருக்கு சொல்லாமல் சென்றிருந்தாலே அவள் எங்கும் சென்றிருக்க மாட்டாள்.
ஏனென்றால் அந்த பேருந்து நிலையம்தான் மயானத்தை தத்து எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனால் அவள் எங்கும் சென்றிருக்க மாட்டாள் தான். அது அவனுக்கும் தெரியும்,, இருந்தாலும் ஒரு முன்னெச்சரிக்கை… இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை எல்லாம் இல்லை என்றால் அவன் இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை கட்டி ஆள முடியாதே!!
அவள் தன் தலையில் அடித்துக் கொண்டு, ” ஏன்? இவர் என்னை இப்படி பண்றாருனு தெரியல ஒருவேளை கூட கூட்டிட்டு போய் கொல்லுவாரோ? ஆனா அவருக்கு அவங்க வைஃப் என்ன சொல்லுவாங்க என்ற பயமே இல்லையா ஒருவேளை இவரோட ராஜ்ஜியமா தான் இருக்கும் வெளியே கொலை பண்றவரு வீட்ல மட்டும் எப்படி அமைதியா இருப்பாரு இவரு தன்னை கொன்னுடுவாங்கன்னு நினைச்சு அந்த அம்மா அமைதியா இருக்கும் போல,, கொஞ்ச நேரம் இவர் கூட இருக்கிறதே எப்ப கொலை பண்ணுவாருன்னு பயத்தோட நம்ம இருக்கிறோமே அந்த அம்மா எல்லாம் வருஷ கணக்குல இருக்கும்ல, ” என்று அவளுக்காக இவள் பரிதாபப்பட்டாள்.
அவன் வேகமாக தனது ஜிப்பை எடுத்துக்கொண்டு வந்து அவள் முன் நிறுத்தினான்.
அவள் அதற்கெல்லாம் அசராமல் அமைதியாக இருக்க… அவன் ஜீப்பை அணைக்காமலேயே ஹாரன் அடித்துக்கொண்டு தனது இடது பக்கம் இருக்கும் கதவை திறந்து வைத்து, “வா!” என்று சைகை செய்தான்.
இவள் வரமாட்டேன் என்று தலையை ஆட்டினாள்.
அதற்கெல்லாம் சளைத்தவனா நம் அமுதன் அதனால், அப்படியே அமர்ந்து இருந்தான்.
இவளும் விடாப் பிடியாக நின்றுக் கொண்டிருந்தாள்.
இவள் இப்படி செய்வதற்கு என்ன செய்யக் காத்திருக்கிறானோ??
தொடரும்..…
கதையின் போக்கு எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லிட்டு போங்க செல்லம்ஸ் ❤️
