தூரிகை 12❤️

அவன் ஜீப்பை அணைக்காமலேயே ஹாரன் அடித்துக்கொண்டு தனது இடது பக்கம் இருக்கும் கதவை திறந்து வைத்து, “வா!” என்று சைகை செய்தான்.

இவள் வரமாட்டேன் என்று தலையை ஆட்டினாள்.

அதற்கெல்லாம் சளைத்தவனா நம் அமுதன் அதனால், அப்படியே அமர்ந்து இருந்தான்.

இவளும் விடாப் பிடியாக நின்றுக் கொண்டிருந்தாள்.

அவனும் மேலும் மேலும் ஹாரனை அடித்துக் கொண்டே,, “ஏய் உன்னை வான்னு சொன்னேன் டி அங்க என்ன நின்னுட்டு இருக்க…” என்று கேட்டான்.

அவன் தூரத்தில் இருந்து கொண்டே டி போட்டு அழைத்தது இவளுக்கு பிடிக்காமல் போக அவன் அருகில் சென்று, “உங்களுக்கு எத்தனை வாட்டி சொல்றது டி போட்டு கூப்பிடாதீங்கன்னு சொல்லி உங்களுக்கு புரியுமா? புரியாதா?” என்று சற்று கோபமாக கேட்டாள்.

அவள் கோபப்படும்போது அவள் மூக்கு சிவந்ததை பார்த்தவனுக்கு,, அந்த நுனி மூக்கை கிள்ளி வைத்துவிட வேண்டும் என்பது போல் தோன்றியது. ஆனால், இடம் பொருள் மற்றும் தனக்கு ஏன்? இவளிடம் இந்த மாதிரி எல்லாம் தோன்றுகிறது. அதுவும் இந்த வயதில் என் மனைவிக் கிட்ட கூட இப்படி தோன்றியது இல்லையே!! என்று தன் தலையில் அடித்துக் கொண்டு,, ” உன் நல்லதுக்கு தான் நான் சொல்றேன் நீ வரலைன்னா நான் இங்க இருந்து போக மாட்டேன்..” என்று அவன் அந்த பிடியிலேயே இருந்தான். 

இதை பார்த்தவர்களுக்கு ஒரு நிமிடம் நான் ஏற மாட்டேன், நான் ஊரை விட்டு போக மாட்டேன், ஒரு படத்தில் வருமே அது தான்  நினைவில் வந்து போனது. 

ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல்,, அவள் அப்படியே அமைதியாக நிற்க… அவன் ஹார்னை அடித்துக் கொண்டும் ஜீப்பை உறுமிக் கொண்டும் இருக்க அதை கேட்டுவளுக்கு தலைவலியே வந்து விட்டது.

” ஐயோ!” ஏன்? இப்படி பண்ணிட்டு இருக்கீங்க நான் தான் வரலைன்னு சொல்றேன்ல இது எனக்காக மட்டும் சொல்லல உங்களுக்காக தான் சொல்றேன்… நீங்க எப்படி  இந்த நைட்ல என்னையே கூட்டிட்டு போய் உங்க வீட்ல தங்க வைப்பீங்க உங்களுக்கு அது தோணவே தோணாதா? எல்லாத்தையுமே மிரட்டி சாதிக்கலாம் நினைச்சுட்டு இருக்கீங்களா!” என்று கேட்டாள்.

” அதைப் பத்தி எல்லாம் உனக்கு என்னடி கவலை நீ வான்னு தான் சொன்னேன் அவ்வளவுதான்” என்றான்.

” எல்லாம் என்ன சொல்லணும் ஒரு வழி கூட சரியா பார்த்து போக  தெரியாமல் போய், இந்த ஆளு கொலை பண்ணதை பார்த்தேன் இந்த ஆள் கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக பஸ் ஏறப்போனால் இங்கு ஒரு பிரச்சனை இந்த ஆள் வந்து காப்பாத்தணும் இருந்திருக்கு இப்ப இந்த ஆள் விடாபிடியாக வீட்டுக்கு வா ன்னு கூப்பிடுறான் எதுக்கு கூப்பிடுறான். தெரியல,, எல்லாம் என்னை சொல்லணும், ” என்று மானசிகமாக தலையில் வருத்தப்பட்டு,,

அமைதியாக நிற்பதையே பார்த்தவன், ” உன்னோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறேன் என்பது எனக்கு ஒரு மாதிரி இருக்கு நான் தப்பு பண்ணவங்களுக்கு மட்டும் தான் தண்டனை கொடுப்பேன். அதே சமயம் நான் தப்பு பண்ணேன்னு தெரிஞ்சா அவங்களுக்கு உதவி பண்ண தான் நினைப்பேன். இதுதான் நான் இதை உனக்கு இன்னும் புரியிற மாதிரி சொன்னா என் பணத்தை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் அடுத்தவங்க பணத்து மேல நான் ஆசைப்படவும் மாட்டேன்.

உன்னோட போன தொலைச்சது நான் உன்னோட பேக் தூக்கி விசிறி அடிச்சது நான் அது ரெண்டும் இருந்திருந்தால் ஒருவேளை நீ போய் இருப்பாயோ? என்னமோ? எனக்கு தெரியல காசு கொடுத்தாலும் வேணாங்குற, சரி அப்படியே காசு கொடுத்துட்டு போகலாம் அப்படின்னாலும் இப்ப பஸ் வரல நீ எப்படி போவ திருவல்லிக்கேணியோட பெருமாள் கோயிலுக்கும், சிவன் கோவிலுக்குமே உனக்கு எந்த சந்துன்னு  தெரியல நீ எல்லாம் எப்படி சுத்திட்டு போய் ஏறுவே அப்புறம் நீ போனியா இல்லையா என்றது மாதிரி எனக்கு தலையை வலித்து கொடுக்கும் அடுத்தவங்க கிட்ட போய் நான் சொல்லவும் முடியாது இதெல்லாம்… அதனால தான் சொல்றேன் ஏறு நாளைக்கு ஈவினிங் நானே கொண்டு வந்து  பஸ் ஏத்தி விடுறேன், ” என்றான்.

இதனால் இருவருக்கும் வரும் பின் விளைவு தெரியாமல்,,

ஆனால் அவன் இவ்வளவு பேசுவதே அதிசயம் தான்… அதை அறியாமல் அவளோ?

“அதெல்லாம் பரவாயில்லைங்க நான் பாத்துக்குறேன். என்னால உங்க வாழ்க்கையில எந்த பிரச்சனையும் வரக்கூடாது. உங்களை நான் முன்ன பின்ன பார்த்தது கூட கிடையாது.  இந்த டைம்ல தன் கணவர் இன்னொரு பொண்ணோட  வருவதைப் பார்த்தால் எந்த மனைவிக்கும் கஷ்டமா இருக்கும் அந்த கஷ்டத்தை நான் யாருக்கும் கொடுக்க விரும்பல என்னால யாரு குடும்பமும் கெட்டுப் போக  விரும்பல இப்படியே இருந்து என்னை யாராவது வந்து என்னைக் கடத்திட்டு போய் கொன்னாலும் பரவாயில்லை… நான் செத்துப்போன கூட அத பத்தி நீங்க கவலைப்படாதீங்க நீங்க உங்க வேலைய மட்டும் பாத்துட்டு போங்க…” என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டாள்.

நான் செத்துப் போனா கூட நீங்க வந்து கவலைப்படாதீங்க என்ற வார்த்தையே அவன் நெஞ்சத்தில் முள்ளை தைப்பது போல் இருக்க அதை அவனுக்கு உணர தெரியவில்லை…

தான் அழைத்த அவள் வராதது அவனுக்கு ஆணவத்தை ஏற்படுத்த ஜீப்பை அணைத்துவிட்டு அந்த புறம் இருந்து கீழே குதித்து அவளிடம் வந்து அவள் கையை பிடித்து இழுத்து, ” உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா எல்லாருக்கும் காட்சி பொருள் ஆகணும்னு விரும்புறியா வண்டில ஏறு, ” என்று உறுமினான்.

அவள் அவன் கையில் இருந்து தன் கையை உருவி எடுக்க முயற்சி செய்ய அவன் பிடி உடும்பு பிடியாக மாறிக் கொண்டே இருந்தது.

” என்னைய விட்டுடுங்களேன் ஏன் இப்படி படுத்தி எடுக்குறீங்க… ” என்று கேட்டாள்.

” விட முடியாது” என்று உறுதியாக சொன்னான்.

அவளுக்கு இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று வழி தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

அவள் விழித்துக் கொண்டிருந்ததை  பார்த்தவன் அவன் அருகில் வந்து “இப்ப மட்டும் நீ ஏறலைன்னா உன்ன தூக்கி போட்டுட்டு போறதுக்கு எனக்கு ரொம்ப நேரம் ஆகாது பாத்துக்கோ ” என்றான். 

அதைக் கேட்டவளுக்கு மேலும் திகைப்பு ஏற்பட அவன் கண்களை பார்த்தாள். ஆனால் அந்த கண்களில் உள்ள வீரியத்தால் கண்களை தாழ்த்திக் கொள்ள, ” உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன் வண்டில ஏறு,” என்றான்.

“நானும் வேணான்னு சொல்றனே நீங்க ஏன் போகாம இங்கே நின்னுட்டு இருக்கீங்க… ” என்று கேட்டாள்.

“ம்ம்ம் உன் மேல ஆசை அவங்க செய்யாம விட்டதை நான் செய்யலாம்னு பார்க்கிறேன் அதுக்கு தான் கூப்பிடுறேன் வரியா? ” என்றான்.

அதைக் கேட்டவுடன் அவள் உதட்டோரத்தில் ஒரு சிறு குறு நகை வந்து, ” அப்படியெல்லாம் நீங்க பண்ண மாட்டீங்க…

” என்றாள்.

“பார் ரா!! அப்படியா!! எனக்கு தெரிஞ்சு நான் அந்த மாதிரி இல்லையே!” என்றான்.

” அது உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு தெரியும் என்ன நீங்க அப்படி பண்ணனும்னு நினைச்சிருந்தா, நான் உங்ககிட்ட தனியா சிக்கும்போதே பண்ணி இருப்பீங்க… நீங்க கொலைகாரன் தான், ஆனா இந்த மாதிரி தப்பு பண்ண மாட்டீங்க நான் நம்புறேன். ” என்றாள்.

அதைக் கேட்டவுடன் தன் மீது ஒருவர் நன்மதிப்பை வைத்திருப்பதே அவனுக்கு கர்வத்தை தந்தது. நாம் இவளை முட்டாள் என்று நினைத்திருந்தோமே!! இப்படி மனிதர்களை சரியாக எடை போடத் தெரியுமா? என்று ஒரு நிமிடம் அவளை சிலாகலித்து நினைத்து, அடுத்த நிமிடமே ஒரு வழி கூட சரியா தெரியல சொல்ல தெரியல என்று மட்டமாக நினைத்து விட்டு அவளிடம், ” இதெல்லாம் கூட உனக்கு பார்க்க தெரியுமா?  ஆனா நான் எப்படின்னு எனக்கு தெரியும்.. நீ ஒன்னும் எனக்கு பாடம் எடுக்க தேவையில்லை… நான் சொன்னது மட்டும் செயிடி.. “என்றான்.

அவள் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு எங்கே தொடங்கினாலும் இங்கேயே வந்து நிற்பவனிடம் என்ன சொல்வது அதனால்,”இப்ப என்ன செய்ய சொல்றீங்க…” என்று கேட்டாள்.

” வண்டியில ஏறு நான் ஒரு விஷயத்தை இத்தனை வாட்டி யார்கிட்டயும் சொன்னதும் இல்ல கேட்டதும் இல்லை…. நீ என்னை அந்த அளவுக்கு எனர்ஜியை வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்க… இப்படியே பண்ணிட்டு இருந்தா வச்சுக்கோ போடின்னு போயிட்டே இருப்பேன் ஐந்து எண்றதுக்குள்ள நீ வண்டில ஏறலைன்னா நான் விட்டுட்டு போயிட்டே இருப்பேன். ” என்றான்.

அவள் அதற்கு அசையாமல் நின்று கொண்டிருக்க… அவனும் எண்ணி முடித்துவிட்டு அவள் ஏறாமலேயே இருக்க வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

அவன் கிளம்பிய பிறகுதான் அவளுக்கு நிம்மதி பெரும் மூச்சே வர “அப்பாடா நம்மளால யாருக்கும் எந்த கெடுதலும் வரல அவரு கிளம்பிட்டாரு,” என்று திரும்பிப் பார்க்கையில்… அங்கே திறந்திருந்த இரண்டு கடையில் ஒரு கடை எப்போவோ மூடப்பட்டு விட்டிருந்தது அவள் தண்ணீர் வாங்கி குடித்த விமலாவின் கடையையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்தவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை இந்த ஒரு கடை இருக்கும் தைரியத்தில் தான் அவனையே வம்படியாக அனுப்பி வைத்து இருந்தாள். இப்போது இந்த கடையும் இல்லாமல் போக என்ன செய்வது என்று தெரியாமல் கண்களில் கண்ணீர் சுரக்க விமலாவிடம் சென்று “அக்கா! என்னக்கா எடுத்து வச்சுட்டு இருக்கீங்க…” என்று கேட்டாள்.

” இல்லமா பஸ் ஏதோ வராதுன்னு சொல்றாங்க அப்ப கூட நாங்க வச்சிருப்போம் என் புள்ளைக்கு உடம்பு சரியில்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் அதுக்கு தான் கடையை எடுத்து வைத்துவிட்டு போனால் தானே பிள்ளையை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக முடியும் எங்க அவரு வந்தாரு போயிட்டாரா? ”  என்று கேட்டாள்.

அவளும் விமலாவிடும் எதையும் மறைக்காமல் நடந்தவற்றை கூற, ” உனக்கு அறிவு ஏதாவது இருக்குதா இல்லையா இந்த டைம்ல ஒருத்தர் வந்து ஹெல்ப் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் வா என்று உதவி செய்ய வரும்போது ஏன் அதை தடுத்து அனுப்பிட்ட, ” என்று கேட்டாள்.

” என்னால அவங்க வீட்ல எந்த பிரச்சனை வரக்கூடாது இல்ல அதனால தான், ” என்றாள்.

” அது எல்லாம் தெரிஞ்சு தானே அவர் கூப்பிட்டாரு அப்படி பார்த்தேன்னா அவங்க பொஞ்சாதி நல்ல ஆளா தான் இருப்பாங்க அதை ஏன் யோசிக்கவே இல்ல நீ எல்லாம் எப்படி இங்க இருக்க போறீயோ, சரிம்மா என் குழந்தைக்கு உடம்பு முடியல நான் போறேன், ” என்று அவளும் கிளம்பி விட்டாள்.

வேலூர் பேருந்து நிறுத்தத்தில் மீண்டும் அவள் தனித்து வீழ்த்தப்படவளாக நின்று கொண்டிருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வர,, அப்போது சர் என்று மீண்டும் அவள் முன்னே அமுதனின் ஜீப் வந்து நின்றது.

அவன் கண்களாலேயே ஏறு என்றவுடன்,, இப்போது வேறு வழியில்லாமல் ஏறி அமர்ந்து கொண்டாள்.

இங்கு காவல் நிலையத்தில் இருந்து வந்த சேகரின் நிலையோ அந்தோ பரிதாபமாகி இருந்தது.

 

தொடரும்… 

மறக்காமல் கதையின் போக்கு எப்படி இருக்குன்னு, உங்கள் விமர்சனத்தை தாருங்கள்.. செல்லம்ஸ்….

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மேகத்தின் தூரிகை இவள்(ன்)
917 6 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page