தூரிகை 14❤️
சேகர் தன்னை நினைத்தே பரிதாபம் கொண்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான்.
அப்போது கார்குழலின் அன்னை பதறி கொண்டு இவ்வளவு நேரம் ஆகியும் சேகரிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவும்,, சேகருக்கு அழைக்க… அதை அவன் எடுக்காமல் தவிர்த்தான்.
ஆனால், காமாட்சியோ தொடர்ந்து அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் ஒரு முடிவுடன் ஃபோனை எடுத்து காதில் வைத்து, “சொல்லுங்க சித்தி,” என்றான்.
“நான் என்னப்பா சொல்றதுக்கு இருக்கு நீ தான் சொல்லணும் ஒரே பதட்டமா இருக்கு சேகரு போலீஸ் ஸ்டேஷன்ல என்ன சொன்னாங்க… அவ வீட்டுக்கு வந்துட்டாளா!! நான் போன் பண்ணாலும் சுவிட்ச் ஆப்னு வருது ஒரே பயமா இருக்குது. இதுவரைக்கும் அவ எங்கயும் வெளியே போனதில்லை சேகர். பாவம் அவளுக்கு ஒண்ணுமே தெரியாது. என்னாச்சு ஏதாச்சுன்னு ரொம்ப பதட்டமா இருக்கு. இன்னும் உங்க சித்தப்பா கிட்ட கூட விஷயத்தை சொல்லல, ” என்று ஒரு மூச்சாக பேசி முடித்தார் அவர்.
“சித்தி கொஞ்சம் பொறுமையா பேசுங்க… என்னையும் கொஞ்சம் பதிலுக்கு பேச விடுங்க…” என்று அவன் சிடுசிடுத்தான்.
“ஏம்பா ஒரு மாதிரி பேசுற போலீஸ் ஸ்டேஷன் ரொம்பவும் பேசி அனுப்பிட்டாங்களா!” என்று பதட்டமாக கேட்டார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல சித்தி…” என்றான்.
“அப்போ குழலியை நீ பாத்திட்டியா அவன் நல்லா இருக்காளா! அதனால தான் நீ நிறுத்தி நிதானமா பேசுறியா?” என்று கேட்டார்.
அதில் மேலும் கடுப்பானவன், “அவ நல்லாத்தான் இருக்குற சித்தி, நீங்க தான் அவளை நினைச்சு கவலைப்பட்டு இருக்கீங்க…” என்றான்.
“அப்போ!! அவ வீட்டுக்கு வந்துட்டாளா! அப்படின்னா அவ கிட்ட கொஞ்சம் போன் கொடேன். அவ குரலை கேட்டா தான் எனக்கு கொஞ்சம் திருப்திகரமாக இருக்கும்.” என்றார் ஒரு தாயாக பதறி,,
“சித்தி நான் உங்க கிட்ட பேசுறனால தான் ரொம்ப பொறுமையா பேசிட்டு இருக்கேன் திருப்பி திருப்பி அவளை பத்தியே பேசி என்னை டென்ஷன் பண்ணாதீங்க… ” என்று அதட்டலாக கூறினான்.
“நான் என்ன சேகர் கேட்டேன். நீ ஏன்? இப்படி பேசிட்டு இருக்க… ” என்றார்.
“இதோ பாருங்க சித்தி அவ நல்லா தான் இருக்கா அவளை நான் பாக்கல ஆனால், அவளை பத்தி நான் போலீஸ் ஸ்டேஷன்ல போய் விசாரிச்சப்ப அவ ஒரு பெரிய பணக்காரனை இரண்டாம் தரமா கல்யாணம் பண்ணிக்கிட்டாளாம் அதைத்தான் அவங்க சொன்னாங்க….” என்று கூறினான்.
அதை கேட்டவுடன் அவர் அதிர்ச்சியாகி, “என்னப்பா!! சொல்ற என் பொண்ணு அப்படி எல்லாம் பண்ண மாட்டா!! அவளை யாரோ கடத்தி வச்சி இருக்க போறாங்கப்பா!” என்று பதறினார்.
“சித்தி நீங்க மட்டும் தான் நினைச்சுட்டு இருக்கீங்க உங்க பொண்ணுக்கு ஒன்னும் தெரியாதுன்னு இங்க வந்த ஒரே நாள்ல இந்த ஊரோட பெரிய பணக்காரனுக்கு இரண்டாம் தாராமா போயிருக்கலாம் அதுவும் இல்லாம கடத்திட்டு போறவங்கக் கூட யாரும் முன் சீட்டில் ஏறி பகுமானமா உட்கார்ந்துட்டு இருக்க மாட்டாங்க இதை அவளை கண்ணால பார்த்த போலீஸ்காரர் என்கிட்ட சொன்னாரு” என்று சொன்னான்.
“நீ என்ன சொன்னாலும் என் பொண்ணு அப்படி பண்ணி இருக்க மாட்டான்னு தான் சொல்லுவேன். அவ மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. ஆனால், தயவு செய்து இதே மாதிரி உங்க சித்தப்பா கிட்ட சொல்லிடுதா டா, அவருக்கு தெரிஞ்சா வானத்துக்கும் பூமிக்குமா குதிப்பாரு…. ” என்றார்.
இதில் மேலும் கோவப் பட்டவன், “சித்தி நீங்க லூசா இல்லை.. லூசு மாதிரி நடிக்கிறீங்களா!! ” என்று தன் குரலை அடக்கி மெல்லமாக வார்த்தைகளை கடித்து துப்பினான்.
கத்தி பேசினால் தான், அக்கப்பக்கம் இருப்பவர்களுக்கு அவனுடைய குரல் கேட்டு அவன் நல்லவன் வேஷம் கலைந்து விடுமே அதனால் மெல்லமாக பேசினான்.
“ஏன்? பா இப்படி எல்லாம் பேசுற,” என்று கேட்டார்.
“பின்ன நீங்க உங்க பொண்ணு பண்றதுக்கும் நீங்க பேசுறதுக்கும் எனக்கு கோவம் தான் வருது,” என்று கூறினார்.
“நான் இன்னொரு முறை கேட்கிறேன் நீ கேட்டதெல்லாம் உண்மைதானா சேகர்,” என்று கேட்டார்.
“சித்தி என்னை பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது ஊர் ஊரா போய் பொய் சொல்லிட்டு திரியுற மாதிரி தெரியுதா?” என்று கேட்டான்.
“இல்லப்பா அவ சென்னைக்கு எப்படி வருவான்னு உனக்கு தெரியும் எனக்கும் தெரியும் வேற யாரையோ பார்த்துட்டு சொல்லுறாங்களா!! உன்கிட்ட வேற அவ சின்ன வயசு போட்டோ மட்டும் தான் இருக்கும். அதை எடுத்துட்டு போய் இருப்ப அதனாலதான் கேட்கிறேன் வேற யாரையாவது பார்த்துட்டு அவன்னு நினைச்சுக்க போறாங்க அதுக்கு தான் பா கேட்டேன்.” என்றார்.
“நூறு சதவிகிதம் அவதான் சித்தி அதுல எந்த சந்தேகமும் இல்லை ஆனால், ஒரே நாளில் எப்படி இப்படி தான் எனக்கு புரியல ஒருவேளை அந்த ஆளு காஞ்சிபுரத்துக்கு வரும்போது, வேலையில் செய்யற இடத்தில் இருந்து ஏதாவது பழக்கமா எனக்கு தெரியல அது என்னன்னு விசாரிக்க வேண்டும்,” என்று
இவன் மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தான். கேட்டுக் கொண்டிருப்பவரோ? “அப்பாடா அவன் ஏழையா பணக்காரனா! வேண்டாம். என் பொண்ணுக்குன்னு ஒரு துணை கிடைச்சிருக்கு அது தான் சந்தோஷமே! எத்தனை நாள் நான் கவலைப்பட்டு இருப்பேன்.
கடவுளே!! என் பொண்ணுக்கு இந்த வாழ்க்கையாவது நிலையா கொடுத்துவிடு,, அவ அனுபவசதெல்லாம் போதும் ஒரு சராசரி பொண்ணு அனுபவிக்க வேண்டிய எந்த சந்தோஷத்தையும் என் பொண்ணு அனுபவிக்கல இதோ இத்தனை வருஷம் ஆகியும் நான் ஒரு விசேஷத்துக்கு நல்ல முறையில போயிட்டு வரேன்.
ஆனால், என் பொண்ணுக்கு எங்கேயுமே அவளால சுதந்திரமா போக முடியல… இனிமேலாவது அந்த கஷ்டம் இல்லாம அவ நிம்மதியா இருக்கட்டும்.
அப்படி இவன் சொல்றது உண்மையா இருந்து அவளுக்கு கல்யாணம் ஆகி இருந்தா அவர் கூட நல்லபடியாக வாழ்ணும்… இது தான் என் ஆசை இது ஒன்னு மட்டும் நிறைவேத்தி கொடு ஈஸ்வரா!! அப்படி நீ நிறைவேத்தி கொடுத்துட்டா!! நான் அத செய்ற இத செய்றேன்னு வேண்டவில்லை அப்பனே! என்னால முடிஞ்சது ஒரு பத்து பேருக்கு நான் சோறு போடுறேன். என்னால் அது தான் முடியும்… என்று நினைத்தவர்.
கடைசியாக என் பொண்ணு வாழ்க்கை நல்லபடியாக அமையனும் ஈஸ்வரா என்று மனதில் பேசுவதாக நினைத்து, வாய் வழியாகவே பேசி விட்டார்.
இதை கேட்ட அவன், “என்ன சித்தி இந்த வாழ்க்கை அவளுக்கு நிலைக்கணும்னு வேண்டிக்கிறீங்க போலயே!” என்று கேட்டான்.
இவரும் அவன் நல்லவன் என்று வெள்ளந்தியாக நம்பி, “உனக்கு தெரியாத சேகரு அவ வாழ்க்கை எப்படி அமைந்ததுன்னு இந்த வாழ்க்கையாவது நல்லபடியாக அமையட்டும் என்று தான் வேண்டுகிறேன்.” என்று கூறினார்.
“நீங்க வேண்டுறது சித்தப்பாக்கு தெரியுமா?” சித்தி என்றான்.
சித்தப்பா என்ற பெயரை கேட்டவுடன் அவர்களுக்கு கை கால்கள் எல்லாம் உதறி, “ஏன்டா, அது வேற நீ ஞாபகப்படுத்துற அந்த மனுசனுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்.. நாம தான் சேகர் அவ வாழ்க்கையே நல்லபடியா மாத்தணும் அதுக்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுடா!” என்றார்.
“நான் உங்க பொண்ணுக்கு வாழ்க்கை அமைத்து கொடுத்தால் எனக்கு என்ன சித்தி லாபம்,” இருக்குது என்றான்.
“அவ உன் தங்கச்சிடா அவ சந்தோஷம் உன் சந்தோஷம் இல்லையா?” என்று கேட்டார்.
“அது எப்படி சித்தி அவளுக்கு கல்யாணம் நடக்குது புருஷன் கூட வாழ போற மத்ததெல்லாம் உங்களுக்கு சொல்லி நான் தெரிய வேண்டியது இல்லை..
ஆனால், எனக்கு என்ன சந்தோஷம் இருக்கு அது சந்தோஷமா வாழ்வது பார்த்து எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்றதுக்கு நான் என்ன அவ கூட பிறந்த அண்ணனா!! இப்ப எல்லாம் கூட பிறந்த அண்ணனுங்களே அந்த மாதிரி நினைக்கிறது இல்ல சுயநலமாக தான் நினைக்கிறாங்க… நான் மட்டும் ஏன் அப்படி நினைக்கணும்… ” என்றான்..
“என்ன சேகரு இப்படி எல்லாம் பேசுற, எதுவும் காமெடி பண்றியா?” என்று கேட்டார்.
“எது நான் காமெடி பண்ணிட்டு இருக்க அப்பன் அங்க சாக கிடக்கிறான். உன் பொண்ணுக்கு ஆம்பள துணை கேக்குது… இதுக்கு நான் ஒத்து ஊதணும்னு நினைக்கிறியா? சித்தி,” என்று கேட்டான்.
அவன் சுயரூபம் தெரிந்ததும் அவர் அமைதியாகவே இருக்க அவனேத் தொடர்ந்தான். “என்ன சித்தி அமைதியா இருக்க… இந்த இடத்தில் நீ உனக்கு வேணும்னு பா கேட்டனும்.”
இவன் சொல்ல சொல்ல அவர் கண்களில் கண்ணீருடன் அமைதியாகவே இருக்க…
“சித்தி இருக்கியா? என்றான்.”
“சொல்லுப்பா! ”
சொல்லுறேன் இரு நீ கேக்கலனாலும், நானே சொல்றேன். எனக்கு கொடுக்கிற அளவுக்கு உங்க கிட்ட ஒன்னும் பெருசா இல்ல ஆனாலும் எனக்கு அந்த ரெண்டு வீடு மேலயும் ஆசையா இருக்கு… என் பேருல அந்த ரெண்டு வீடும் வேணும்.
இல்ல அப்படின்னா இப்பவே நான் உங்க வீட்டுக்காரர் நம்பருக்கு போன் பண்ணி உன் பொண்ணு ஓடி போன விஷயத்தை சொல்லிடுவேன்.. கொஞ்ச நஞ்சமா இழுத்துகிட்டு இருக்கிறவரு அப்படியே ஒரேடியா செத்து போயிடுவார். இதே நான் சொல்றதை நீங்க கேட்டீங்கன்னா, உங்க வீட்டுக்காருக்கு டிரீட்மென்ட் பார்த்து உங்க பொண்ணு கல்யாணத்தை பத்தி எப்ப சொல்லணுமோ? அப்ப சொல்லி அவரை சம்மத்திக்க வைப்பேன்.. உங்க வசதி எப்படி? ” என்றான்.
இதைக் கேட்டு காமாட்சிக்கு ஒரு நிமிடம் இதய துடிப்பே நின்று விட்டது. ஏனென்றால், இதுவரை அவர்களின் கண்களுக்கு சேகர் என்பவர் மிகவும் நல்லவன் தங்களுக்காக எந்த பிரதிபலனும் பார்க்காமல் உதவி செய்பவன் தங்களின் மகனாகவே நினைத்து விட்டனர். அவன் சொல்வது தான் சில விஷயங்களில் வேதவாக்காகவே இருக்கும் அந்த வீட்டில், ஆனால் அவன் ஒரு விஷப் பாம்பு என்று இப்போது தான் புரிகிறது.
ஆனால், அவனுக்கு அதைப் பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லாமல், “என்ன நான் பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன் நீங்க அமைதியா இருந்தா என்ன அர்த்தம்… ”
“என்னப்பா பேச சொல்ற நீ பேசறது கேட்டு நானே அதிர்ச்சியா? இருக்கேன்.” என்றார். காமாட்சி!!
“ஓஓ நீங்க என்னவா வேணா இருந்துட்டு போங்க நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க…” என்றான்.
இந்த வீட்டை விட இப்போது அவருக்கு தன் கணவரின் உயிரும் மகளின் வாழ்க்கையுமே முக்கியமாக போக,, “சரிப்பா!! நீ என்ன சொல்லுறீயோ? அதுப் படியே கேட்கிறேன்.” என்று சொன்னதும்,,
“அப்போ ஓகே இன்னும் ரெண்டு நாளில் நீங்க என்ன பண்ணனும்னு சொல்லி நான் யோசிச்சு சொல்றேன். அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க…” என்று கூறி போனை வைத்து விட்டான்.
அவன் கூறியதை கேட்ட காமாட்சிக்கு தான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்திருக்கும் வேலை அவர் கணவர் வந்து அழைக்கவும்,, அங்கு சென்று அவரை கவனிக்க செல்ல அவரோ, தன் மகளைப் பற்றியே கேட்டார்.
இவர் சேகர் சொன்னதை எல்லாம் எதுவும் சொல்லாமல், “அவ அங்க போயிட்டாளாம் நல்லா இருக்காளாம் இப்பதான் சேகர் போன் பண்ணி சொன்னான்,”என்பதோடு முடித்துக் கொண்டார்.
காமாட்சி ஒத்துக்கொண்டதால், அடுத்த திட்டத்தை தீட்ட ஆரம்பித்தான். என்ன திட்டமாக இருக்கும் பார்க்கலாம் வரும் அத்தியாயங்களில்.…
இங்கு குழலியும், அமுதனும் சீரான வேகத்தில் வண்டியில் வரும் போது அங்கு ஒருவன் மீது மோதினர்.
தொடரும்…
