தூரிகை 15❤️
அமுதனும் குழலியும் வண்டியில் வந்துக் கொண்டிருந்தனர். அவனோ எப்போதும் போல பணம் சம்மந்தப்பட்ட பாடல்களையே போட்டு கேட்டுக் கொண்டு வர, அதை பக்கத்திலிருந்து கேட்டுவளுக்குக் கடுப்பாகி தூங்கி விட்டாள்.
அந்த இரண்டு பக்க ரோட்டின் இருளும் மென்மையான தென்றல் காற்றும் முழுதாக அடித்துக் கொண்டிருக்கும் போது அவள் தலை முடி முன்னே வந்து விழுந்தது.
அவள் பேருந்தில் வந்த பயண அசதியும் இவனிடம் மாட்டிக் கொண்டு ஓடியது பிறகு அந்த நான்கு பேரிடம் மாட்டிக் கொண்டு ஓடியது என்று மொத்த களைப்பில் இருந்தவளுக்கு அந்த காற்றின் குளுமை கூட அவளுக்கு தெரியவில்லை…
இவன் மெல்ல திரும்பி பார்க்கும் போது அவள் உறங்கியது தெரியவும் பாட்டின் சத்தத்தை சற்று குறைத்து வைத்துவிட்டு அவளை காணும் போது, காற்றில் ஆடிய அவளின் ஒற்றை முடி அவனை என்னவோ செய்தது.
அவனும் இந்த வயதில் அலைபாயும் தன் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு வண்டியை ஓட்டினான்.
ஆனால், காதலிக்கவும் காதலிக்கப் படுவதற்கும் வயதே இல்லை என்பது இவனுக்கு எப்போது புரியும்…
ஆனால் என்னதான் அவன் தன் மனதை கட்டுப்படுத்தினாலும் தன்னை மீறி அவன் கண்கள் அவளை பார்க்கச் சொல்லியது.
அதனால், நொடிக்கு ஒரு முறை அவளை திரும்பி பார்ப்பது மீண்டும் ரோட்டில் கவனத்தை பதிப்பதுமாக அவன் இருந்தான்.
அது இரவு 12:30 மணிக்கு மேல் என்பதால் ரோட்டில் ரோந்து பணிக்காக கருணா அந்தபுறம் வரவும் இவன் இவளையே பார்த்துக் கொண்டு சென்றதால் கர்ணா வண்டியின் மேலே மோதி நின்றான்.
அமுதனை கண்டதும் கர்ணா வணக்கத்தை வைக்க அவன் ஒரு தலையப்பை மட்டும் கொடுத்துவிட்டு “என்ன கர்ணா என் வண்டில வந்து மோதுற,” என்று கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல ரோந்து பணிக்காக போயிட்டு இருக்கேன் நீங்க எங்க இந்த பக்கம்,” என்று கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மா ஒரு டிரைவ் போலாம் வேற ஒன்னும் இல்லை,” என்று சமாளித்தான்.
“ஓ அப்படியா சார்!” என்று கூறினாலும் அப்படியே அவன் கண்களை குழலின் மீதும் பதித்து, “ஓ இந்த அம்மா கூட தான் நைட் ரைட் போய் இருப்பார் போல,” என்று மனதில் நினைத்துக் கொண்டு அவனை ஒரு மாதிரியாக பார்த்தான்.
” என்ன காரணம் பார்வை அங்க போது என்ன விஷயம், ” என்று கேட்டான்.
அவன் கேட்டதில் பதறி, ” அச்சச்சோ ஒன்னும் இல்ல சார்!” என்றான்.
“ம்ம்ம்…” என்றான். ஆனால் அமுதனின் பார்வையும் நொடிக்கு ஒரு முறை குழலியை பார்ப்பதையும்,
கர்ணாவும் அவளைப் பார்ப்பதையும் கவனிக்க தவறவில்லை… இதை கவனித்த அமுதன், ” அப்புறம் கர்ணா அந்த வேலை முடிஞ்சிடுச்சா, ” என்று கேட்டான்.
அவன் குழலியையே பார்த்துக் கொண்டிருந்ததில் அவன் கேட்ட கேள்வியை கவனிக்காமல் இருக்க அமுதன், ” கர்ணா!” என்று அதட்ட அதில் தெளிந்தவன், “சார் சொல்லுங்க சார்!” என்றான்.
“நான் சொன்ன வேலை முடிஞ்சதா!” என்று கர்ஜிப்பது போல் கேட்டான்.
“அதெல்லாம் பர்ஃபெக்ட்டா முடிஞ்சது சார்! அவனே அவனை கத்தியால குத்தி தற்கொலை பண்ண மாதிரி செட் அப் பண்ணி கேச க்ளோஸ் பண்ணிடுவேன்,” என்றான்.
அதைக் கேட்டவன் அவன் தோளில் தட்டி, “வெரி குட் அப்புறம் இன்னொரு முறை நீ இதே மாதிரி அவளை பார்த்தேன்னா உன்னை இன்னொரு இன்ஸ்பெக்டர் வந்து தற்கொலை பண்ணதா கேஸ கிளோஸ் பண்ற மாதிரி இருக்கும் பார்த்துக்கோ!” என்று சாதாரணமாக தான் சொன்னான்.
ஆனால், கர்ணாவின் முகம் தான் பயத்தில் வெளிறியது.
அவன் வெளிறிய முகத்தை பார்த்து எதுவும் சொல்லாமல் வண்டியில் ஏறப்போனவனை தடுத்து நிறுத்தி, “சார்! சாரி சார்! இனிமே அந்த மாதிரி நடக்காது சார்! நான் தப்பான நோக்கத்துல பார்க்கலைங்க இவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி ஒரு உணர்வு இருக்கு சார் அதனாலதான் திருப்பி திருப்பி பாத்துட்டு இருக்கேன்
” என்று பொய் கூறினான்.
சேகரை பற்றி அவன் வாயை திறக்கவில்லை அதனால் ஏதாவது பின்விளைவு வருமோ? என்ற பயத்தில் ஆனால், இதை இப்போதே சொல்லி இருந்தால் பல பின்விளைவுகளை தடுத்திருக்கலாம்.
அதற்கும் அவன் நம்பாத பார்வை பார்த்து, ” சில பொண்ணுங்களை பார்க்கும்போது எங்கேயோ? பார்த்த உணர்வு வரத்தான் செய்யும் கர்ணா பார்த்து இருந்துக்கோ!” என்று கூறிவிட்டு மடமடவென்று ஜீப்பின் கதவை திறந்து காரின் உள்ள ஏறி அமர்ந்து கொண்டான்.
ஆனால், அவள் எதுவும் தெரியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
அவனுக்கோ “இவ்வளவு பெரிய கலவரம் நடக்குது இப்பயும் தூங்கிட்டே இருக்கா பாரு முட்டாள் தான் நினைச்சேன் சரியான சோம்பேறியாவும் இருப்பா போல,” என்றான்.
இவன் இப்படியே யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் அந்த ஜிப்பின் கதவில் இடிக்கப் போனவளை, மெல்ல அவள் கையை பிடித்து இழுக்கவும் அதில் தெளிந்தவள். பேருந்து நிலையத்தில் நடந்தது நினைவுக்கு வந்து கையை வேகமாக உதறிக்கொண்டு திருதிருவென முழித்து தான் எங்கே இருக்கிறோம். என்பதை கூட அறியாமல், “என்னை விட்டுடுங்க…” என்றாள்.
அவனும் அவள் நிலைமையை புரிந்து கொண்டு, “நான் ஒன்னும் பண்ணல நீ அங்க இடிக்க போன அதுக்கு தான் நான் இழுத்து விட்டேன்,” என்றான்.
அவளும் சிறுபிள்ளை போல மீண்டும் முழித்துக் கொண்டு, “சரி,” என்று நேராக அமர்ந்து கொண்டாள்.
அதன் பிறகு மீண்டும் வண்டி சீரான வேகத்தில் செல்ல அவனும் அவளை இன்னொரு ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, ” தூங்குவது என்ன தூங்குப்பா, ” என்றான்.
அவள் அப்போது நடந்ததை நினைத்துக் கொண்டு, ” இல்ல சார்! வேண்டாம். ” என்று கண்களை கசக்கி கொண்டு அமர்ந்து கொண்டாள்.
அவன் மீண்டும் பணம் சம்பந்தப்பட்ட பாட்டையே போடும்போது, ” சார்!” என்று மெதுவாக அழைத்தாள்.
அவன் திரும்பாமலேயே கரகரத்த குரலில், ” சொல்லு, “என்றான்.
“ஒன்னும் இல்ல இந்த பாட்டு கொஞ்சம் இருக்கிறீங்களா!” என்று கேட்டாள்..
“ஏன் உனக்கு பாட்டு பிடிக்காதா?” என்றான்.
” பாட்டு பிடிக்கும் சார் ஏதோ ஒரு மோகன் இல்லை பிரபு அப்படியும் இல்லைனா கூட ஒரு விஜய், அஜித் பாட்டு அந்த மாதிரியா இருந்தா பிடிக்கும் பணம் சம்பந்தப்பட்ட பாட்டையே போட்டுட்டு இருக்கீங்களா! அதனால தான் ஒரு மாதிரியா இருக்கு சார், ” என்றாள்.
“இங்க பாரு இது என்னோட வண்டி எனக்கு என்ன பாட்டு பிடிக்குதோ அதைத்தான் போடுவேன். இஷ்டம் இருந்தா கேளு இல்லனா கேட்காம வாய மூடிட்டு தூங்கு டி,” என்றான்.
இதுக்கு கேக்காமே இருந்து இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு, “இல்ல எனக்கு தூக்கம் வரல என்று அப்ப பாட்டு கேளு என்று வேண்டுமென்று காசு மேல காசு வந்து கொட்டுக் கிற நேரம் இது அந்த பாடலை போட்டான்.
“தேடி தேடி இவர் இந்த மாதிரி பாட்டு தான் போடுவாரு போல,” என்று மனதிற்குள் நினைத்தது. அவனுக்கு கேட்டிருக்கும் போல, ” ஆமா நீ இன்னைக்கு எல்லாம் தேடினால் கூட என்கிட்ட பணத்தை பத்தின பாடல் மட்டும் தான் இருக்கும். ஏன்னா ஐ லவ் மணி, ” என்றான்.
அவளுக்கோ ” இப்படி கூட ஆட்கள் இருப்பார்களா! ” என்று தோன்றியது.
“என்ன இப்படி கூட ஆட்கள் இருப்பாங்களான்னு யோசிக்கிறியா?” என்று கேட்டான்.
“ஐயோ! என்ன இவரு மனசுல நினைக்கிறது எல்லாம் அப்படியே சொல்றாரு,” என்று யோசித்துக் கொண்டே நாலாபுறமும் தலையை ஆட்டினாள்.
” நீ எல்லா பக்கமும் தலையை ஆட்டும்போது தெரியுது நீ அதுதான் நினைத்திருக்கிறேன்னு, “என்றான்.
“கடவுளே! இனிமே மனசுல கூட இந்த ஆளை பத்தி நினைக்கவே கூடாது ஆமா நான் ஏன்? இந்த ஆள பத்தி நினைக்கணும் இவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு எப்படியாவது இன்னைக்கு ஒரு நைட் ஏதோ? அந்த ஆளுங்க கிட்ட இருந்து காப்பாத்துனாரு அந்த நன்றிக்காக நாளைக்கு காலைல எழுந்து ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு மதியத்துக்கு மேல ஏதாவது ஒரு பஸ் புடிச்சு கிளம்பிடனும் என்று யோசித்தாள்.
ஆமாம், பஸ் புடிச்சு கிளம்பி வரணும்னு யோசிக்கிறியே உன்கிட்ட அதுக்கு காசு இருக்கா!” என்று அடுத்த நொடியே அவள் மூளை எச்சரிக்கை செய்ய என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்து கொண்டாள்.
அவள் அமைதியாக அமர்ந்ததை பார்த்தவன், ஓடிக்கொண்டிருந்த பாடலை நிறுத்தி விட்டான்.
அவன் நிறுத்திய அடுத்த நொடியே அவளை சட்டென்று பார்த்து மீண்டும் கண்களை தாழ்த்திக் கொண்டு, ” அப்பாடா! எப்படியோ? இதை நிறுத்திட்டாறு, ” என்று யோசித்தாள்.
அமைதியாக இருந்தவளை மீண்டும் பார்த்து, ” இப்போது நீ என்ன யோசிச்சு நான் சொல்லட்டுமா?” என்று வம்பு இழுத்தான்.
அவளோ? “என்ன இவரு நான் சும்மா இருந்தா கூட என்னை விட மாட்டேங்கிறார். இன்று குனிந்து கொள்ள… ”
“என்ன நான் கேட்டதுக்கு பதிலே வரல,” என்றான்.
” சார் நான் ஒண்ணுமே யோசிக்கல சார் கொஞ்சம் விடுங்களேன், ” என்று பாவமாக முகத்தை வைத்து கேட்டாள்.
அப்போது அந்த இரவில் தெருவிளக்கின் வெளிச்சத்தில் அவள் முகம் அப்படியே பளிரென்று பிரகாசித்தது.
அந்த முகத்தை மீண்டும் பார்க்க அவனுக்கு ஆசை இருந்து கொண்டே இருந்தது போலும் அதனால் மீண்டும் அவளையே பார்த்தான்.
ஆனால், இந்த உணர்வுக்கு பெயர் அவனுக்கே தெரியவில்லை தன் மனைவியிடம் கூட இப்படி எல்லாம் இருந்ததில்லை… அதற்கு அவளும் அவனுடன் இருந்ததில்லை… இவனும் அவனுடன் இப்படியெல்லாம் ஒன்று பேசி இருக்கிறார்கள். என்று கேட்டால் கேள்விக்குறிதான் இது அமுதனா என்பது அவனுக்கே சந்தேகமாகத்தான் இருந்தது.
அவளைப் பார்த்து, ஒரு மெல்லிய குருநகையை செலுத்தி விட்டு, ” ஒண்ணும் இல்ல, ” என்று சொன்னான்.
அவனின் அந்த சிறிய குரு நகையே அவ்வளவு அழகாக இருந்தது.
அவளோ அவன் சிரிப்பை ஏதோ எட்டாவது அதிசயம் போல் கண்களை விரித்து பார்த்து இவருக்கு சிரிப்பு கூட தெரியுமா? என்று மீண்டும் அந்த சிரிப்பு கிடைக்குமா? என்று அவனையே பார்த்துக் கொண்டிருக்க…. அவனும், ” என்னைய பாக்காம தூக்கம் வந்தா தூங்கு, ” என்று சொன்னான்.
அவளுக்கு அப்போது தான் புரிந்து “அச்சோ தெரியாம அவரை பார்த்துட்டோம் போலையே குழலி உனக்கு என்ன ஆச்சு,” என்று தன்னைத்தானே கடிந்து கொண்டு மெல்ல கண்களை மூட அவளுக்கு உறக்கம் வந்து தழுவியது. மீண்டும் கதவின் புறம் சாயப் போனவளை இழுத்து தன் தோள் மீது போட்டுக் கொண்டான்.
முதல் முறையாக ஏனோ? இந்த இரவின் பயணம் அவனுக்கு இனிமையானதாக அமைந்து. மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றியது. இத்தனை வயதாகியும் அது அவனுக்கே தெரியவில்லை…
இந்த இனிமையான பயணம் தொடருமா? பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்,,
