தூரிகை 16❤️

அவன் கர்ணாவிடம் பேசிவிட்டு மீண்டும் ஜிப்பில் ஏறியவன், அவளை பார்க்க… தூக்கத்தில் கதவில் இடிக்கப் போனவளை கைப் பிடித்து இழுக்கும் போது அவள் எழுந்துக் கொள்ள, அவளிடம் வம்பு இழுத்து விட்டுக் கொண்டே வந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் அவனிடம் பேச முடியாமல் கண்களை மூடியவளுக்கு உறக்கம் வந்து மெல்ல தழுவ மீண்டும் கதவின் புறம் சாயப் போனவளை இழுத்து தன் தோள் மீது போட்டுக் கொண்டான்.

முதல் முறையாக ஏனோ? இந்த இரவின் பயணம் அவனுக்கு இனிமையானதாக அமைந்து மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றியது. இத்தனை வயதாகியும் அது அவனுக்கே தெரியவில்லை…

இதெல்லாம் தான் தானா என்று அவனுக்கு தோன்றியதோ? என்னவோ? அந்த கண்ணாடியில் பார்த்து தன் மீசை முடிகளை சரி செய்து கொண்டு அந்த பயணத்தை அழகாக தொடர்ந்தான். 

வண்டி மெல்ல ஆர். ஏ. புறம் ஏரியாவினுள் நுழைய அங்கு மொத்தமும் நல்ல பிரம்மாண்டமான கட்டிடங்களே இருக்க… அதில் தனது பிரம்மாண்ட கட்டிடத்தின் முன்பு வண்டியை கொண்டு போய் நிறுத்தி ஹாரன் அடிக்கவும் அந்த ஹாரன்  சத்தத்தை கேட்டு செக்யூரிட்டி ஓடி வந்து கதவை திறந்து வணக்கம் வைக்கவும்,, அவரிடம் ஒரு சின்ன தலையசைப்பை கொடுத்துவிட்டு உள்ளே சென்ற அவனை வினோதமாக பார்த்தார். அவர்!!

பின்னே! இருக்காதா? இதுவரை  ஆண்களையே அவன் வீட்டிற்குள் அழைத்து வந்ததில்லை… அவன் மனைவி உயிரோடு இருந்தவரை அவளின் தாய், தந்தை மட்டுமே! வந்து போவர் அவர் இறந்து இதோ பத்து வருடங்கள், கழித்தும் எந்த ஆண்களையுமே அவன் வீட்டினுள் கூட்டி வந்தது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் இதுவரை அந்த ஜீப்பில் அவன் மட்டும் தான் வந்திருக்கிறான். அவன் மனைவி பிள்ளைகளை கூட ஏற்றியது இல்லை.. அது அவள் மனைவிக்கே பிடித்தது இல்லை அது வேறு விஷயம்… 

இவ்வளவு ஏன்? தொழில்முறை பேச்சு என்றாலும் கூட அலுவலகத்திற்கு வரவழைத்து தான் பேசுவான் இன்று முதல் முதலில் ஒரு பெண்ணை அதுவும் அவன் ஜீப்பில் அழைத்து வந்தால் அவனின் பார்வை எப்படி இருக்கும்.

 அதுவும் இந்த நடு இரவில் அவனை வினோதமாக பார்த்துக் கொண்டு அங்கேயே நின்றவனை கண்ணாடியில் பார்த்து வண்டியை அதன் இடத்தில் விடாமல் அங்கேயே நிறுத்தி இங்கே, ” வா!”  என்று அழைத்தான். 

அவன் அழைப்பிற்கு ஓடி வந்து நின்று, ” சார்! சார், ” என்று அழைத்ததிலே அவருக்கு உதடு தந்தியடித்து அடுத்த வார்த்தை  வரவே இல்லை. 

ஏனென்றால் அவன் தவறு செய்தால் மட்டும் தான் பேசுவான். அதனால், தான் ஏதும் தவறு செய்து விட்டோமா?  என்ற  பயம் வந்து அவனையே பார்த்து நின்றான்.

 அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சாதாரணமாக  “என்னாச்சு எதுக்கு அப்படி பாக்குறீங்க அவங்களை,” என்று கேட்டான்.

“ஐயோ!” சார் ஒன்னும் இல்ல சார்! நம்ம வண்டில இதுவரைக்கும் யாரும் வந்ததில்லை அதனால அப்படி பாத்துட்டேன். ” என்று தன் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறிவிட்டார். அவர் எப்போதும் இப்படி  நேர்மையாகத்தான் இருப்பார். அந்த நேர்மையின் காரணமாகத்தான் இத்தனை வருடங்கள் ஆகியும் அவரை தன்னுடனே வைத்து இருக்கிறான்.

“தெரிஞ்சவங்க தான் நான் இல்லாத நேரமும் பத்திரமா பாத்துக்கோங்க…” என்று தன்னை மீறி சொன்னான்.

அவரும், “சரிங்க சார்!” என்று சொல்லிவிட்டு அவரிடத்திற்கு சென்று விட்டார். அவருக்கு அமுதனின் மேல் சந்தேகமெல்லாம் இல்லை ஏனென்றால் அமுதன் பணத்தின் மீதுதான் ஆசை வைப்பானே தவிர பெண்ணின் மேல் என்றும் ஆசை வைத்ததே இல்லை. இது அவர் தெரிந்த உண்மை அவர் அங்கேயே இருந்தாலும் அமுதனை பற்றி அவருக்கு நன்றாக தெரியும். ஆனாலும் இது அவருக்கு அதிர்ச்சி தான்.

அவர்களின் பேச்சு வார்த்தை முடிந்தவுடன் மீண்டும் அவன் வண்டியில் ஏறி ஜிப்பை கொண்டு போய் அதன் இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கி வந்து அவள் கன்னங்களை மெல்லத் தட்டும் வரை அவள் உறக்கத்தில் தான் இருந்தாள். 

அவன் கன்னங்களை தட்டியும் அவள் எழுதாததால் மீண்டும் வேகமாக அவள் தோள்களை பிடித்து உலுக்கி “ஏய் எந்திரடி என்ன கும்பகர்ணனை விட மோசமா தூங்குற,” என்று எழுப்பினான்.

அவன் உலுக்கிய உலுக்கலில் அவள் எழுந்து அமரும் போது அவளின் சேலையும் சற்று விலகி விட அதைப் பார்த்தவன் சட்டென்று அவளுக்கு முதுகுக் காட்டி திரும்பிக் கொண்டான். 

ஆனால், அவள் அதை கவனிக்காமல் இறங்கப் போகவும் அவன் அந்த வழியை அடைத்துக் கொண்டு நின்றதால், “கொஞ்சம் வழி விடுங்களேன்,” என்று கேட்டாள்.

“ம்ம்ம்.. ” என்று சொல்லி வழி விட்டானே தவிர அவளை திரும்பி பார்க்கவே இல்லை… அவளோ “இவருக்கு என்ன ஆச்சு,” என்று இறங்கு போக  அவளின் போறாத நேரம் ஜீப்பில் இருந்து இறங்க தெரியாமல் வேகமாக இறங்கியதில் அந்த ஜிப்பின் மேலே அப்படியே அமர்ந்து கொண்டு, ” அம்மா!” என்று கத்தினாள்.

அவள் கத்தலில் திரும்பி ” என்னாச்சு, ” என்று பதறிக்கொண்டு திரும்பியதில் தான் அவள் இன்னும் அந்த சேலை சரி செய்யாதது தெரியவும் அவளை தூக்கிவிட்டு  முகத்தை மட்டும் அந்தப் பக்கம் திரும்பி,  “உன் டிரஸ் சரி பண்ணிக்கோ!” என்றான்.

அவன் சொன்ன பிறகுதான் அவளுக்கு சேலை விலகி இருப்பது தெரிய அதை சரி செய்து கொண்டு அவன் கைகளை விலக்கிவிட்டு “விடுங்க நானே எழுறேன்.” என்று கூறினாள்.

அவனும் அதற்கு, ” ம்ம்ம்ம்ம்…” என்றான்.

அதன் பிறகு அவனை பார்க்கவே அவளுக்கு தர்ம சங்கடமாகி போக, தலையை கீழே குனிந்து கொண்டு வந்தவள் அங்கே இருக்கும் படிக்கட்டில் காலை இடித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்தவளை கவனிக்காமல் இவன் உள்ளே சென்று, “இது தான் என்னோட வீடு உள்ள வா,” என்று அழைத்தான்.

 அவளிடம் இருந்து எந்த சத்தமும் வராமல் போக மெல்ல திரும்பிப் பார்க்கும்போது தான் தெரிந்தது. அவள் மேலே ஏறி வரும்போது படிக்கட்டில் காலை பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பது.

அதைப் பார்த்தவனுக்கு சிரிப்பதா இல்லை, முறைப்பதா இல்லை அவளை அடிப்பதா, என்று தெரியாமல் அவளிடம் சென்று, ” ஏண்டி உங்க அப்பா, அம்மா உனக்கு நடக்கவே சொல்லித் தரலையா ” என்று கேட்டான்.

“ஏன்? இப்படி கேக்குறீங்க…  என்னை பாத்தா நடக்க தெரியாத மாதிரியா இருக்கு,” என்று இவளும் பதிலுக்கு பதில் கேள்வி கேட்டாள்.

“ஆமா இந்த கேள்வியை மட்டும் நல்லா வியாக்கியனமா கேளு ஒரு ஜீப்ல இருந்து இறங்க தெரியல ஒரு படிக்கட்டு மேல ஏறி வர தெரியாமல் தொப்பு தொப்புன்னு கீழ விழறியே!” என்றான்.

“அது நான் சரியா கவனிக்கல  அதனால தான் கீழ விழுந்துட்டேன் நீங்க போங்க நான் இங்கேயே இருந்துக்கிறேன்.” என்றாள்.

“பரவாயில்லை எழுந்து வா!” என்று கையை கொடுத்தான். 

அவளால் காலை ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை… அது மறைத்துக் கொண்டு, “இல்லைங்க கொஞ்ச நேரம் போனா சரியா போயிடும் நீங்க போங்க நான் இங்கேயே இருக்கேன்.” என்றாள்.

“ஏய்… உனக்கு என்ன பைத்தியமாடி அங்க பாரு எவ்வளவு மரம் இருக்கு இப்பவே குளிருற மாதிரி இருக்கு நீ இங்கேயே இருந்தா ரொம்ப குளிர் எடுக்கும் அப்போ என்ன பண்ணுவ அதனால உள்ள எழுந்து வா!” என்றான்.

அவள் அப்போதுதான் திரும்பிப் பார்க்க அங்கு  செடி, கொடிகள் மரத்திற்காகவே ஒரு தடுப்பைப் போல் இருபுறமும் கட்டி ஒரு ரோட்டை அமைத்து அழகாக வைத்திருந்தான். மேலும் நிமிர்ந்து பார்த்த போது தான் தெரிந்தது அது காரைக்குடி அமைப்பில் பெரிய பங்களா போல இருப்பது.

அதைப் பார்த்தவளுக்கு கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து, “அம்மாடியோவ் எவ்ளோ பெரிய வீடு,” என்று மனதிற்குள் கூறிக் கொண்டு அந்தக் கண்கள் அங்கே நிலைகுத்தி இருந்தவளிடம், “பார்த்தல்ல ரொம்ப குளிர் எடுக்கும் வா! ” என்றான்.

அவன் அழைத்து கொண்டே இருக்க… பாவம் அவளால் தான் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை மெல்ல கால்களை எடுத்து வைத்தவள் மீண்டும் “அம்மா!” என்றுக் கத்தினாள்.

அதில் கடுப்பானவன், “போடி இனி இங்கேயே இரு நான் உனக்கு துணைக்கு பொன்னமாவை வர சொல்றேன்.” என்று உள்ளே சென்று “பொன்னம்மா!” என்று அழைத்தான்.

அந்த ஒரு அழைப்பிலேயே அங்கே தன் அறையில் உறங்கிக் கொண்டிருந்தவர் தன் துணிமணிகளை சுருட்டிக்கொண்டு அவர் முன் வந்து நின்று “சொல்லுங்க தம்பி, ” என்றார்.

அவனும் அவரை வெளியே அழைத்துச் சென்று, ” இவங்க நம்ம வீட்டுக்கு கெஸ்ட் இப்போ இவங்களால நடக்க முடியல அவங்க இங்கேயே இருப்பாங்க… நீங்க இங்க துணைக்கு இருங்க அவங்களுக்கு பெட்ஷீட் குடுங்க முடிஞ்சா உங்களுக்கு நான் இப்போ பொங்கலுக்குன்னு டிரஸ் எடுத்து கொடுத்த சாரியை அவங்களுக்கு குடுங்க சேஞ்ச் பண்ணிக்கிட்டோம் நான் போய் தூங்குறேன். ” என்று சென்று விட்டான்.

பொன்னம்மாவிடம் மட்டுமே இந்த அமைதி ஏனென்றால் அவர் அவனுக்கு 16, 15 வயதிலேயே அவர் தாய் தந்தை இழந்த போது கூடவே இருந்தவர். 

அதனால், அவரிடம் மட்டுமே அந்த பொறுமை.. செய்வானோ? இல்லையோ? நிச்சயமாக ஒரு முறை காது கொடுத்து கேட்பான்.

அவன் சென்று பிறகு வெளியே வந்த பொன்னம்மாவிற்குத்தான் குழலியை பார்த்ததும், ஏனோ? இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி வந்து அவர் மனதில் ஒட்டிக்கொண்டு இயல்பாக அவளின் அருகில் வந்து அமர்ந்து அவள் தலையை மெல்ல வருடி கொடுக்க அவளுக்கு தன் தாயை கண்டது போலவே இருந்தது.

ஆனால், உடனே குழலிக்கு தான், இந்த நடு இரவில் ஒரு ஆணுடன் அடுத்தவர்கள் வீட்டில் வந்ததை இவர்கள் என்ன நினைப்பார்களோ? என்று யோசித்து ஒரு மாதிரி இருந்தாள்.

அவள் பொன்னமாவை அவனின் அன்னையென நினைத்துக் கொண்டு, ” இவர் என்ன நினைப்பாங்கன்னு தெரியலையே தப்பா நினைச்சிடுவாங்களோ? ” என்று பயத்திலேயே அவளுக்கு கைகள் சற்று உதிர ஆரம்பித்தது.

அவர் மீண்டும் அவள் தலையை வருடி கொடுத்து, ” இப்ப எதுக்கு தாயி பயப்படுற, ” என்று கரிசனமாக கேட்டதில் அவள் நெஞ்சில் சாய்ந்து கொண்டு, “நான் எந்த தப்பும் பண்ணலைங்க அம்மா!” என்றாள்.

“அது எனக்கு தெரியும். ” என்றார்.

அவள் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் கண்களில் நன்றி உணர்ச்சியுடன் பார்க்க கண்களில் இருந்து தானாக கண்ணீர் வந்தது அவர் அதை துடைத்துக் விட்டு, ” எதைப் பற்றியும் கவலைப்படாமல் தூங்கு, அப்பறம் சேலை எதையும் மாத்திக்கிறியா? ” என்று கேட்டார்.

“சேலை மாத்தணும் தான் மா ஆனால், காலு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியல ரொம்ப வலிக்குது..” என்றாள்.

“என்னமா அதை இப்ப சொல்ற அதை நீ தம்பிகிட்டே சொல்லி இருக்கலாம் இல்லை,” என்று கேட்டார்.

அவள் அதற்கு எதுவும் சொல்லாமல் இருக்க அவர் உள்ளே சென்று எண்ணெய் காய்ச்சி அவள் காலில் மெல்ல தேய்த்து விட்டதில் சற்று வலி மட்டுபடவும், ” அம்மா கால் வலி இப்ப பரவாயில்ல நீங்க உள்ள போய் தூங்குங்க… ” என்று அனுப்பி வைத்தாள். அவரும் வயது மூப்பின் காரணமாக உள்ளே சென்று சோபாவில் படுத்திருந்தார்.

இவள் உடையை மாற்றாமலேயே அப்படியே உறங்கி விட்டாள். அவன் சொன்னது போலவே குளிர் எடுக்க ஆரம்பித்தது.

அவனும், மேலே சென்றானே தவிர அவனுக்கு தூக்கமே வர வில்லை…. அப்போது, கீழே இருந்து, “அம்மா” என்ற அலறல் கேட்டது.

தொடரும்.…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மேகத்தின் தூரிகை இவள்(ன்)
933 6 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page