தூரிகை 17❤️
பொன்னம்மாள் வந்து சேலையை தந்தும் அவளால் எழ முடியாமல் இருக்கவும்,, தன் சேலையை கூட மாற்றாமல் அப்படியே!! கீழ்படிக்கட்டில் கால் வைத்து மேல் படிக்கட்டில் தலை வைத்து படுத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளை கீழே விட்டவன் மேலே சென்றதும் குளியல் அறைக்குள் புகுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு இரவு உடைக்கு மாறியவன், தன் கபோர்டு திறந்து அங்கிருக்கும் பணத்தை ஒரு முறை தொட்டு மட்டும் பார்த்துவிட்டு கட்டிலில் சென்று படுத்துக் கொண்டானே தவிர அவனுக்கு உறக்கம் வரவில்லை…
அதனால், மீண்டும் ஜன்னல் புறம் வந்து நின்று இரவில் தெரியும் முதல் முறையாக நிலாவை வெறித்துப் பார்த்தான். இதெல்லாம் அவன் செய்யக்கூடியவன் இல்லை அந்த நிலாவை வெறித்துப் பார்க்கும்போது அந்த நிலாவில் கூட இப்போது அவள் முகமே தெரிவது போல ஒரு பிரம்மை!! அவனுக்குத் தோன்றியது.
“என்ன இது அவ முகம் மாதிரி இருக்கு, அவ முகம் நிலா மாதிரி இருக்கா!! இல்லை, நிலா அவளை மாதிரி இருக்கா!!” என்று யோசித்து அதையே பார்த்துக் கொண்டிருக்க…
“நிலாவை பார்த்து ரசிக்கிற அளவுக்கு அவ அவ்வளவு அழகாவா இருக்கா, ஏன்னா! நீ யாரையும் பார்த்து இப்படி யோசிக்கவில்லையே!! என்ன புதுசா அதுவும் இல்லாம அவளுக்கு ஒன்னுனா துடிக்கிற அவளை யாராவது ஒரு மாதிரியா பார்த்தா அவங்களுக்கு மிரட்டல் விடுற என்ன சங்கதி,” என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்டது.
“ஒரு பொண்ணு நடு ராத்திரில மாட்டிகிட்டு இருக்கும்போது பார்த்துட்டு சும்மாவா போவாங்க…” என்று இவனும் அதற்கு பதில் சொன்னான்.
“ஆனால், அவள் நீ கொலைப் பண்ணதைப் பார்த்தவள். அதை யாரிடமாவது சொல்லப் போறா நீ மாட்டா போற, பாரு… அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு, அதுவும் இல்லாமல், நீ இந்த மாதிரியெல்லாம் பண்ண மாட்டியே என்ன புதுசா இப்படி என்று தான் கேட்கிறேன்.” என்றது,,
” அவ கொலை பண்ணதை பார்த்திருக்கா தான் ஆனால், அதை யார்கிட்டயும் சொல்ல மாட்டா அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.. அதே போல உதவி எல்லாம் இப்போ பண்றேன்னு வச்சிக்கோ!! ” என்றான்.
ஆனால், அவனுக்கு தெரியவில்லை அவன் நம்பிக்கை ஒரு நாள் உடையும் என்று,,
“அப்படியா!! அப்போ ஒருவேளை இதுவரைக்கும் யாரையும் பார்த்து தடுமாறாத நீ, இதை உனக்கு அழுத்தமாக சொல்றேன், உன் மனைவியை பார்த்தே தடுமாறாத உன் மனசு அவளை பார்த்தவுடன் தடுமாறுதா?” என்று கேட்டது.
“நான் யாரையும் பார்த்தும் தடுமாற மாட்டேன். நீ வந்து கேள்வி கேட்கிற அளவுக்கு நான் ஒன்னும் இல்ல அதனால உன் வேலை என்னமோ அதை மட்டும் பாரு,” என்று அவன் மனசாட்சி அடக்கும் அதே நேரம்
வெளியே படுத்திருந்தவளுக்கு குளிர் ஒரு புறம் எடுக்க… முந்தானையை எடுத்து தோளில் போர்த்திக் கொண்டு கீழே இருக்கும் சேலையை கணு காலுக்கு இழுத்து விட அங்கு வீசிய காற்றில், அவளின் சேலை காலில் இருந்து மேலே ஏறவும் கீழே உள்ள தன் காலை கையில் பிடித்து இறுக்கிக் கொள்ள மேலே தூக்கவும், மீண்டும் அந்த படிக்கட்டில் இடித்துக் கொண்டு “அம்மா!” என்று அலறினாள்.
அந்த அலறல் சத்தம் கேட்டு அடுத்த நொடி அவன் கீழே மட மட வென்று அவள் அருகில் வந்து, ” ஏய் என்னடி ஆச்சு எதுக்கு கத்துன, ” என்று பதறிக் கொண்டே கேட்டான்.
அவள் ஒன்றும் இல்லை… என்பது போல் தலையை ஆட்ட, ” ஒன்னும் இல்லன்னா எதுக்குடி அந்த கத்து கத்துனா, “என்று கேட்டான்.
” நான் ஒரு வாட்டி தான் கத்துனேன் உங்க தூக்கம் கலைஞ்சு போச்சா அதனால தான் எழுந்து வந்து இருக்கீங்களா சாரிங்க… ” என்றாள்.
“நான் தூங்குனா தானே என்னோட தூக்கம் கலைஞ்சு போறதுக்கு, நீ வாய்க்கு வாய் பேசாம என் கைய புடிச்சு எழுந்து வா!” என்றான்.
“இல்லை நான் வரல நீங்க போங்க உங்க உன்னோட மனைவி தேட போறாங்க…” என்று சொன்னாள்.
அவளுக்கு ஏனோ அவனுடைய வாழ்க்கைத் தன்னால் கெட்டு விடக்கூடாது என்பதிலேயே எண்ணம் முழுவதும் இருந்தது.
இவனும் வாயை திறந்து தனக்கு யாருமில்லை என்று சொல்லவில்லை… என்பதை விட சொல்ல தோன்றவில்லை… அதனால், அதை சொல்லாமல், ” ஆமா என் மேல ரொம்ப அக்கறை தான் உனக்கு எழுந்து வா!” என்று கை நீட்டி அழைப்பவனிடம் கையை கொடுக்கவே மறுத்தாள்.
கையை நீட்டிக் கொண்டு இருந்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் கோவம் வந்து கீழே இறங்கி, ஒரு கையை தோளில் போட்டும், ஒரு கையை அவளுக்கு அடியில் கொடுத்து, தன் கைகளில் ஏந்தி கொண்டான்.
அவன் அவளை கைகளில் ஏந்திக் கொண்ட நொடி அவள் கால்களை உதறி, ” என்ன பண்றீங்க நீங்க தெரிஞ்சுதான் பண்றீங்களா என்னை இறக்கி விடுங்கள்… ” என்று குதித்தாள்.
“ஏய்… ஏற்கனவே நீ ரொம்ப வெயிட்டா இருக்க… நானே தூக்க முடியாமல் தான் தூக்கிட்டு போறேன். இதில் நீ வேற குதிச்சா, அப்படியே தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருப்பேன்.” என்று சொன்னானே தவிர அவன் பிடி இறுகிக் கொண்டே தான் இருந்தது.
அவன் சொன்னதுக்கு வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல், “நான் ஒன்னும் என்னைய தூக்கி சுமக்க சொல்லவில்லை… தயவு செஞ்சி என்னை இறக்கி விடுங்க…. ” என்று அவளும் கத்தினாளே தவிர தன் கைகளை அவன் கழுத்தில் மாலையாக கோர்த்து இருந்தாள்.
அதை பார்த்த அவன், “எல்லாம் வாயில் தான் சொல்லுறீயே தவிர என்னை நீதான், அழுத்தமா பிடிச்சிட்டு இருக்க… ” என்றான்.
அப்போது தான், தான் அவனை அழுத்தமாக பிடித்திருப்பது தெரிந்து தன் கைகளை மெல்ல கழுத்தில் இருந்து இறக்கவும், ” ஏண்டி கையை எடுக்கிற என்னால பேலன்ஸ் பண்ண முடியல புடிச்சுக்கோ ஒன்னும் சொல்ல மாட்டேன். ” என்றான்.
“நான் ஒன்னும் புடிக்கல நீங்க என்னை இறக்கி விடுங்க முதல்ல இந்த மாதிரி பண்றதை உங்க மனைவி வந்து பார்த்தார்களா நம்ம ரெண்டு பேரையும் என்ன நினைப்பாங்க..” என்று அதிலே குறியாக இருந்தாள்.
ஆனால், அதற்கெல்லாம் அசறுபவனா அவன் அவளை விடாமல் ஒரு பூக்குவியலை போல் தூக்கி சென்று தன் மெத்தையின் மேலே கிடத்தினான்.
அந்த பஞ்சு மெத்தையில் விழுந்தவுடன், அந்த மெத்தையின் இலகு அவளை ஒரு அடிக்கு மேலே தூக்கிப் போட்டு மீண்டும் கீழே இழுத்துக் கொண்டது.
அதில் லயித்தவள், நம்மளை யாராவது பேட் எடுத்து அடிச்சாங்களா! பால் மாதிரி மேல போயிட்டு கீழ வரோமே!! என்று யோசித்துக் கொண்டே அந்த மெத்தையை தொட்டு பார்க்க அந்த மெத்தையின் மென்மையும் அதன் இலகு தன்மையையும் பார்த்தவள் அதன் மேலே சிறு குழந்தை போல் குதித்து குதித்து விளையாடினாள்.
அவள் அந்த மெத்தையை அதிசயத்து பார்ப்பதையும், வருடி கொடுத்து விளையாடுவதையும் இங்கு ஒருவன் முன் கை கட்டிக்கொண்டு பார்த்தான். இல்லை உள்ளே ரசித்துப் பார்த்தான் என்று தான் சொல்ல வேண்டும். வைத்த கண் எடுக்ககாமல் பார்த்துக் கொண்டிருக்கிறானே!!
அவன் தன்னை வைத்துக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். என்பதை அவள் பார்க்கவும் அமைதியாக கீழே இறங்கி காலை கீழே வைக்க முடியாமல் தவித்தவளின் அருகில் வந்து, ” அதுதான் கால கீழே வைக்க முடியல அப்புறம் எதுக்கு அதை ட்ரை பண்ற மேலேயே உக்காரு போ!” என்றான்.
அவள் தன் காலை கீழே வைக்க முடியாமல் பிடிப்பிற்காக கட்டிலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, ” இல்லங்க பரவாயில்லை என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க… ” என்று கூறும்போது அவள் முகம் முழுக்க வியர்க்கத் தொடங்கி விட்டது.
அவனும் அதை கவனித்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால் எதுவும் பேசாமல், அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் தன் கண்களை தாழ்த்திக் கொண்டு மெல்ல நொண்டி நொண்டி வெளியே சென்றவளின் கையை பின் இருந்து பிடித்து இழுத்து வேகத்தில் அவள் அந்த கட்டில் மேலே விழுந்தாள்.
ஆனால், அவன் அதை கண்டுகொள்ளாமல் மெல்ல குனிந்து அவளிடம், ” அது என்ன நான் என்ன சொன்னாலும் கேட்க கூடாது என்கிற முடிவில் இருக்கியா? ” என்றான்.
“அது இல்லை, நான் போறேன்.” என்றவளின் கண்களை நேராக பார்த்து வாயின் மேலே தன் ஒற்றை விரலை வைத்து எதுவும் பேசக்கூடாது என்றான். இருவருக்கும் ஒரு நூல் அளவு இடைவெளி மட்டுமே இருந்தது. அவனின் அருகாமை அவளை மேலும் இம்சிக்க… அவன் கண்களையே பார்த்தாள்.
அவனின் சூடான மூச்சுக் காற்று, அவள் முகத்தில் பட அந்த உணர்வுக்கு பெயர் தெரிந்தாலும்.. அதை ஏற்க கூடிய நிலையிலா தான் இருக்கிறோம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையிலேயே சட்டென்று அவன் தெளிந்து எழுந்து நின்று கொண்டு அவள் முகத்தை பார்க்காமல், “நீ இங்கே இரு நான் வரேன், ” என்று விறுவிறுவென்று கீழே சென்று, தன் தோட்டத்தில் இருக்கும் கல்பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.
இங்கு எல்லாம் வந்து அமரும் ஆள் அவன் இல்லை… இன்று ஏதோ ஒரு தடுமாற்றம் அவனுள் ஏற்பட அதற்கு பெயரும் தெரியவில்லை… முன்பின் காதலித்து இருந்தால் தானே! அது காதலா இல்லை வேறு எதுவா என்று தெரியும்… ஒரு இயந்திரம் போலவே வாழ்ந்தவனுக்கு இதெல்லாம் எப்படி புரியும்,, அதுவும் இல்லாமல் அவன் அலுவலகத்தில் இருந்து எப்போதும் என்ன நடந்தாலும் பத்து மணிக்குள் வந்து பத்தரைக்குள் தூங்கி விடுபவன். இன்று இரவு இரண்டு மணி வரைக்கும் முழித்து இருப்பதே பேர் அதிசயம் தான்.
ஆனால், அது நிம்மதியான இறுக்கமா என்றால் அதுதான் இல்லை… வாழ்வின் நிலைகளை மறக்க தனக்குத்தானே எடுத்துக் கொண்ட ஆயுதம் தான் இந்த உறக்கம்… அந்த நேரத்திற்குள் உறங்க வேண்டும் என்பதற்காகத்தான் உறக்கம் வரும் வரை உடற்பயிற்சி செய்துவிட்டு வந்து படுப்பான்.
இங்கு இவளோ அந்த மெத்தையில் இருந்து கீழே இறங்கி அந்த கட்டிலின் கால் அருகே அமர்ந்து காலை குத்துக்கால் இட்டுக்கொண்டு தன் முகத்தை அதில் பதித்து, ” என்னாச்சு குழலி உனக்கு, ஏன்? இந்த மாதிரி எல்லாம் நடந்துக்கிற, இது தப்பு இல்லை உன் மனசு ஒரு நொடி அவரை பார்த்து தடுமாறுதே ஏன்? அந்த தடுமாற்றத்தை மறைக்கத்தான் நீ கோவத்தை பயன்படுத்துறியா? அவருக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு நாம வாழவே தகுதி இல்லாதவள்.
இனிமே நாம இங்க இருக்க கூடாது. ஆனால், நம்மளால் இந்த வீட்டை விட்டு இப்போ வெளியே போக முடியாது… காலை பொழுது விடிஞ்ச உடனே அவர்கிட்ட எப்படியாவது கேட்டு இந்த வீட்டை விட்டு வெளியே போகணும்… ” என்று ஒரு முடிவுடன் தரையிலேயே படுத்து கொண்டிருந்தாளே தவிர ஆனால் உறங்கவில்லை…
இங்கே கீழே அவன் மனதிற்குள் ஒரு அழுத்தம் வந்து அழுத்திக்கொள்ள என்ன செய்வது என்று தெரியாமல் மேலே வந்து செய்த காரியத்தில் அவள் பதறி, வேண்டாம் சார் என்று பின்னே நகர்ந்தாள்.
தொடரும்….
