தூரிகை 18❤️
அவன் அருகாமையில் தடுமாறியவள் தனக்குத்தானே இது எல்லாம் தவறு என்று கூறிக்கொண்டு அங்கிருந்து வெளியே செல்ல முடியாமல், அப்படியே தரையில் படுத்தாளே!! தவிர உறக்கம் வராமல் போக,, மெல்ல எழுந்து நிற்க முடியாமல் நின்று அந்த அறையை சுற்றி பார்த்தவளுக்கு, கண்கள் விரிந்தது ஏன்னென்றால் அந்த ஒரு அறையே இரண்டு வீடுகளை ஒட்ட வைத்தார் போல் இருந்தது.
அங்கிருக்கும் கபோர்டு, டிரெஸ்ஸிங் டேபிள், என எல்லாவற்றையும் தொட்டு பார்த்து ரசித்தவளின் மூளை, “இது வேற ஒருத்தவங்களோட வீடு வேற ஒருத்தவங்களோட அறை இங்க வந்து அவங்களோட அனுமதி இல்லாம தொடவது ரொம்ப தப்பு குழலி, என்று எச்சரிக்கை செய்ய அதிலிருந்து கையெடுக்கப் போனவளின் கண் முன்னே ஒரு டேப் ரெக்கார்ட் தெரிந்தது. அதைப் பார்த்தவள் என்ன என நினைத்ததோ? ஓடிச் சென்று அதை தொட அங்கு எஃப்எம் இருந்ததை அழுத்திவிட்டாள்.
அதை அழுத்தியவுடன் அவளுக்கு பிடித்தது போலவே நல்ல நல்ல பாடல்கள் வர, அதை நிறுத்தாமல் அப்படியே ஒரு இரண்டு நிமிடம் அங்கு நின்றவள் சரி போய் படுத்து கேட்போம். என்று மெல்ல நடந்து வந்து தரையில் படுத்து, ஒரு கையை தன் தலைக்கும் மறுக்கையை தன் நெற்றின் மேலேயும் வைத்து படுத்து கொண்டிருந்தவள். எப்போது உறங்கிப் போனாளோ?? அவளுக்கே தெரியவில்லை….
இங்கு, அவள் அருகாமையில் கண்ட உணர்வு அவனை ஏதோ செய்ய தோட்டத்திற்கு வந்து முதலில் அங்கு இருக்கும் கல்பெஞ்சில் அமர்ந்தான்.
அதில் எந்த மாற்றமும் இல்லாது போக, மெல்ல எழுந்து
குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவனுக்கு, அவள் எழுந்து நிற்கும்போது கால் கீழே ஊன்ற முடியாமல் தவிப்பது கண் முன்னே! வந்து போக மடமடவென்று மேலே அவன் அறையின் உள்ளே செல்லும் போதே!! டேப் ரெக்கார்டில் காதல் பாடல்களாக ஒலித்துக் கொண்டிருக்க…
அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், அவளை மெத்தையில் தேட அவளோ!! வெறும் தரையில் சுருண்டு படுத்துக் கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு,, சிறிது நேரத்திற்கு முன்னே மெத்தையில் சிறு பிள்ளை போல் விளையாடிது நினைவுக்கு வர,, ” இவ ஏன்? இங்க படுத்திருக்கா! இவளை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தானே கீழ போனேன் அப்படி இருந்தும் ஏன்? இவ எங்க படுத்துட்டு இருக்கா!! என்று யோசித்துக் கொண்டே அவள் அருகில் சென்று அவளை எழுப்பும் நேரம், தூங்கிக் கொண்டிருந்த அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.
வட்டமுகம் கூர் நாசி சிவந்த அதரங்கள் தான் மாநிற தேகம் காதோரம் மட்டும் இரண்டு நரைமுடிகள் அவள் 30 களின் தொடக்கம் என தெளிவாக காட்டியது.
ஆனால், சிறு குழந்தையின் முகத்தை தத்தெடுத்தது போல் அவளின் முகத்தில் எந்த கள்ளம் கபடமும் தெரியவில்லை….
அது எப்படி ஒரு பொண்ணால எதுவுமே தெரியாம இருக்க முடியும். ஆனால் இவ சொல்றது பொய் மாதிரியும் தெரியலையே!! அப்பா, அம்மா மட்டும்தான் இருக்காங்கன்னு சொன்னா அப்போ ஒரு வேலை இன்னும் கல்யாணம் ஆகலையோ? என்று அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது ஜன்னலில் அடித்த காற்றில் அவள் இடையில் இருந்த சேலை சற்று விலக.. அதில் அவளின் மாநிற இடை தெரியவும்,, சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டான். அதே நேரம் அவள் போட்டிருந்த டேப் ரெக்கார்டில்,,
கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே!!து
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே!!
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே!!
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே!!
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே,,
முதல்முறையாக இந்த பாடலை கேட்டு அவன் மனதில் சிறு பட்டாம்பூச்சி பறக்க அவளை மேலும் ஒரு முறை பார்த்தவனின் கண்ணுக்கு அவள் நெற்றியை வலியில் சுருக்க அதை பார்த்தவன், ” எதனால இப்படி பண்ணிட்டு இருக்கா ஒரு வேலை கால் வலிக்குமோ? அதனால தான் இப்படி பண்ணிட்டு இருக்கா போல என்று நினைத்தவன். வேகமாக எழுந்து அந்த டேப் ரெக்கார்டை அமர்த்தி விட்டு, ” என்ன காரியம் பண்ணிட்டு இருக்க அமுதா! ஒரு பொண்ணு தூங்கும் போது இந்த மாதிரியா பார்க்கிறது.
ஆமா யாரு அந்த மாதிரியான பாட்டெல்லாம் போட்டது பா ஒரு நிமிஷம் என்னவோ பண்ணிடுச்சுடா!! கண்ட்ரோல் யுவர் செல்ப் அமுதா!! என்றது அவன் மூளை!!
“ஒரு எட்டு மணி நேரமா அதை கண்ட்ரோல் பண்ண தெரியாம தானே தவிச்சிட்டு இருக்கேன். அது எப்படி காலேஜ் படிக்கும் போது இந்த மாதிரி இருந்தது இல்லை கல்யாணம் ஆன புதுசுல இருந்ததில்லை… நீலா (அவனின் முதல் மனைவி பெயர்) அவகிட்ட கூட இந்த மாதிரி ஒரு பீலிங்கா எனக்கு இருந்த மாதிரி ஞாபகமே இல்லையே!!
இவகிட்ட ஏன்? திரும்பத் திரும்ப என் மனசு போய்கிட்டே இருக்கு எப்படியோ போன்னு இவள விடவும் முடியாமல், அவளை யாராவது பார்த்தாலும் ஒரு மாதிரியா இருக்கு அதை தடுக்கவும் முடியாமல் நானே தவிச்சுட்டு இருக்கேன். இப்ப வந்து நீ இப்படி பண்ணாத அப்படி பண்ணாதனா எப்படி?” என்று மனது மூளையிடம் சண்டையிட்டது.
“அதெல்லாம் எனக்கு தெரியாது நீ கண்ட்ரோலா இருக்கணும்,” என்று அவனின் பிசினஸ் மூளை ஆணையிடவும் மனது தோற்றுப் போய்,, மீண்டும் தோட்டத்திற்கு செல்வதற்காக வெளியே சென்றவனின், கண்முன்னே அவள் வலியில் முகம் சுருக்கியது நினைவுக்கு வர அப்படியே கால்களை வீட்டினுள் திருப்பி,
சோபாவில் படுத்திருந்த பொன்னம்மாவை தட்டி எழுப்பினான்.
அவன் எழுப்பியதில் பதறி எழுந்தவர். “சொல்லுங்க தம்பி என்ன ஆச்சு எதுவும் வேணுமா?” என்றார்.
அவன் அமைதியாகவே இருக்க…
ஒருவேளை அந்த பொண்ணு வெளிய படுக்க வச்சுட்டு நம்ம உள்ள படுத்துதனால் தம்பிக்கு கோவம் வந்துடுச்சா என்று பதறியவர்.
“தம்பி அந்த பொண்ணு எனக்கு கால் ரொம்ப வலிக்குது அங்கிருந்து எழ முடியல நான் இங்கே இருக்கிறேன் நீங்க உள்ள போய் படுத்துக்கோங்கன்னு சொல்லுச்சு வெளியே குளிர் ரொம்ப அதிகமா இருந்ததுனால தான் நான் உள்ளே வந்து படுத்துக்கிட்டேன் எதுவும் நினைச்சுக்காதீங்க தம்பி,” என்று அவன் தான் சொன்ன வேலையை சரியாக செய்யாமல் போனதால் தன்னை திட்டி விடுவானோ? என்று அச்சம் கொண்டு தன்னிலை விளக்கம் கொடுத்தார்.
ஆனால், அவன் சாதாரணமாக, “அதுக்கு நீங்க ஏன்? இவ்வளவு பெரிய விளக்கம் கொடுக்கணும் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல பொன்னம்மா எனக்கு எனக்கு என்ன வேணும் பொன்னம்மா!! என்று அவரையே கேள்வி கேட்டு நின்றான்.
இதைக் கேட்ட பொன்னம்மாவிற்குத்தான் நடுராத்திரியில் இவனுக்கு என்னவோ ஆகிவிட்டதோ? என்று நினைத்து பயந்து விட்டார். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,,
“தம்பி நீங்க தான் வந்து என்னை எழுப்பினீங்க அது என்ன விஷயம் என்று சொல்லுங்க…” என்றார்.
அதுக்கு அவன் எதுவும் சொல்லாமல் அந்த சோபாவையே இரண்டு முறை சுற்றி வந்து மீண்டும் அவரிடமே நின்று, “எனக்கு ஒரு ஹாட் பேக்ல கொஞ்சம் சுடுதண்ணியும், அப்புறம் வந்து ஒரு கிளாஸ் பாலும் குடிக்க கொஞ்சம் தண்ணியும், நீங்க கால் வலிக்கு எப்பவும் போடுவீங்களே மாத்திரை அதுவும் கொஞ்சம் கொடுங்களேன்,” என்று எப்படியோ அவரிடம் கேட்டு விட்டான்.
இதுவரை அவர் அமுதனை இப்படி பார்த்ததே இல்லை அதனால் குழலி தான் அவனுக்கு சரியான துணை என்று நினைத்துக் கொண்டு அவன் சொன்னது எல்லாம் இரண்டு நிமிடங்களில் கொண்டு வந்து கொடுத்து விட்டு, ” எதுக்கு தம்பி இதெல்லாம், ” என்று கேட்டார்.
“அதுதான் நீங்களே சொன்னீங்களே அந்த பொண்ணுக்கு கால்ல அடிபட்டு இருக்குனு அதனாலதான் மேல என் ரூம்ல தான் இருக்கா சுடுதண்ணி ஒத்தடம் கொடுத்துட்டு குடுக்க சொல்லிக்கிறேன் வரேன்,” என்று விறுவிறுவென்று மேலே சென்று விட்டான்.
அதைப் பார்த்த அவருக்கு இவனுக்கு இரண்டு பிள்ளைகள் என்று இருக்கிறது. என்று யாரும் சொன்னால் கூட நம்ப மாட்டேன் அப்படியே சிறுபிள்ளை போல் நடந்து கொள்கிறானே!! என்று சிரித்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டார்.
மேலே சென்றவன் அவன் அருகே சென்று ஒரு பெருமூச்சு விட்டு எப்படி எந்த கவலையும் இல்லாம கும்பகர்ணி மாறி தூங்குறா பாரு, ” என்று நினைத்துக் கொண்டு அவள் கன்னங்களில் மெல்ல தட்டினான்.
அவன் தட்டியதில் எழுந்து அமர்ந்தவளின் மிக அருகே அமுதனை கண்டதும் சற்று பின்னோக்கி நகர்ந்தாள்.
தூக்க கலக்கத்தில் இருந்து பாதியில் எழுந்தவளுக்கு, அவன் தட்டை வைத்திருப்பது கத்தியை வைத்திருப்பது போல் தோன்ற, ” ஒரு அடி பின்னோக்கி நகர்ந்து கைகளை தன் நெஞ்சின் முன்னே வைத்து ஆட்டி, “வேண்டாம் சார்!” என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க… ப்ளீஸ் என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க… ” என்று முகத்தை மூடி அழுதாள்.
இதை பார்த்தவனுக்கு கோவமாகி தட்டை கீழே வைத்துவிட்டு முகத்தை மூடி இருந்த அவள் கைகளை மெல்ல விலக்கிவிட்டு கையை ஓங்கி “நிறுத்துடி என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது…”என்று அவள் முகத்தருகே கர்ஜித்தான்.
அவள் கர்ஜனையில் தன் இரண்டு கைகளையும் கொண்டு வாயை மூடிக்கொண்டு, ” ஒன்னும் இல்லை சார்” என்றாள்.
“ஒன்னும் இல்லை இல்ல அப்ப இங்க வந்து உட்காரு வா!” என்று சொன்னவுடன் பூனை போல நான்கு கால்களில் அந்த கபோர்ட்டில் சாய்ந்து அமர்ந்தாள்.
அந்த பயத்தில் இருந்தவளிடம், “இந்தா இதில் மாத்திரையும், தண்ணி, பால் எல்லாம் இருக்கு இது குடிச்சிட்டு உன்னோட காலுக்கு ஒத்தடம் கொடுத்துக்கோ!!” என்று தான் கொண்டு வந்தது எல்லாம் அவளிடம் நீட்டினான்.
அவள் அதை வாங்காமல் மிரட்சியுடனே அவளை பார்க்க… கன்னத்தில் மெதுவாக ஒரு அடி அடித்து தெளிய வைத்தான்.
வாங்கிய அடியில் அவளுக்கு தூக்கம் நன்றாக தெளிந்து நடந்ததெல்லாம் ஒரு முறை நினைவுக்கு வந்து அவன் சொன்னது எல்லாம் செய்து முடித்து விட்டு, ” உங்க அனுமதி இல்லாம அந்த டேபர் கார்டுல பாட்டு போட்டேன் மன்னிச்சுக்கோங்க… ” என்றாள்.
“பரவாயில்ல நீ இங்கேயே படுத்துக்கோ நான் பக்கத்துல ரூமில் படுத்துகிறேன் பாட்டு வேணுமா உனக்கு,” என்றான்.
அவள் வேண்டாம் என்பது போல் தலையை ஆட்ட அவன் அந்த அறையின் கதவை சாத்திக்கொண்டு பக்கத்து அறையில் சென்று படுத்துக் கொண்டான்.
அதன்பின் கொஞ்ச நேரம் இருவருக்கும் நேரத்திலேயே உறக்கம் வந்துவிட, உறங்கி விட்டனர். காலை பொழுது அழகாக விடிய….
அந்த விடியலில், பொன்னம்மா செய்த காரியத்தில் அவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.
தொடரும்.…
கதையின் போக்கு எப்படி இருக்கு என்று உங்கள் cmt பண்ணுங்கசெல்லம்ஸ்…
