தூரிகை 19❤️

அவள் காலுக்கு ஒத்துடம் கொடுத்து விட்டு இருவரும் தனித்தனி அறையில் படுத்து உறங்கிப் போக யாருக்கும் காத்திராமல் காலை பொழுது அழகாக விடியவும்

அந்த வீட்டிற்கு வேலை செய்ய ஆட்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். அவர்களை மேற்பார்வையிடுவது மட்டுமே பொன்னம்மாவின் வேலையாக இருந்தது.

இரவு அலைச்சலிலும் நேரம் தவறி உறங்கியதாலும்,,  காலையில் தாமதமாக எழுந்து அமர்ந்தவளுக்கு எங்கு சென்று தன் வேலைகளை முடித்துக் கொள்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள். ஏனென்றால்? அந்த அறையில் எது கழிவறை எது அறை இன்றே தெரியாத அளவிற்கு எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க திரு திருவென்று முழித்து அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

ஆனால், நேரம் தவறி உறங்கினாலும் எப்போதும் போல ஆறு மணிக்கு எழுந்து, பொன்னம்மாவிடம் சென்று தனக்கு மட்டும் இல்லாமல் அவளுக்கும் சேர்த்து சமைக்குமாறு கூறிவிட்டு,, தன் உடற்பயிற்சி உடையை அணிந்து கொண்டு உடற்பயிற்சி எல்லாம் முடித்துவிட்டு ஒரு டவலில் அவன் வியர்வையை துடைத்துக் கொண்டே உள்ளே வரவும், அவனைக் கண்டவள் தன் கண்களை பெரிதாக விரித்து அவனை வைத்து கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏனென்றால், இந்த வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவன் வெறும் கட் பனியனை மட்டும் அணிந்து தன் வேர்வையை துடைத்துக்கொண்டு வர அந்தக் கோலத்தில், வந்தவனை பார்த்ததவளுக்கு வியர்க்கத் தொடங்கி விட்டது.

இதுவரை எந்த ஆண்களையும் இந்த மாதிரி பார்த்திடாததால் அவனை கண்டவளுக்கு ஒரு மாதிரியாகிப்போனது. அதனால் தன் தலையை சற்று என்று குனிந்து கொள்ள தான் அந்த கோலத்தில் இருக்கிறோம் என்று தெரியாமல் அவள் முன்னே வந்து நின்று, ” இவ்வளவு லேட்டாவா எழுவாங்க… ” என்றான்.

அவள் அவனைப் பார்க்காமலேயே “இல்ல நைட்டு லேட்டா தானே தூங்கினேன்.” அதனாலதான்  என்றாள்.

“சரி சரி உன்னோட மார்னிங் ரொட்டீன் எல்லாம் முடிந்துவிட்டது என்றால் கீழே போ அம்மா சமைச்சு வச்சிருப்பாங்க நல்லா சாப்பிடு,” என்றான்.

அவன் என்ன பேசுகிறான் என்று தெரியாமல் அவன் வாயை பார்த்துக் கொண்டிருக்க… ” நான் என்ன எனக்கு கதையா சொல்லிட்டு இருக்கேன். ” என்று சிடு சுடுத்தான்.

“உங்க கிட்ட யாரையும் கதை கேட்கல,” என்றாள். இவளும் ஒரு மாதிரியாக,,

“ஆமா நான் மைக் வெச்சுட்டு கதை சொல்றன் வாங்கன்னு எல்லாரையும் கூப்பிட்டு இருக்கேன் பாரு எழுந்தது லேட்டு என் வாயவே பாத்திருக்க போடி அந்த பக்கம், ” என்றான்.

அவள் சற்று விலகி நிற்க… “என்ன இங்கேயே நின்னுட்டு இருக்க…” என்றான்.

அவள் அதற்கு அமைதியாகவே இருக்க, ” கால் இன்னும் வலிக்குதா? ” என்று அக்கறையாகக் கேட்டான்.

“அதெல்லாம் ஒன்னும் வலிக்கல,”

” அப்புறம் என்னடி, ” என்று ஒரு மாதிரி சலித்துக் கொண்டே கேட்டான்.

அப்போதுதான் அவளுக்கு பொன்னம்மாவின் நினைவு வர, “ஒன்னும் இல்ல நான் கீழ போறேன் நீங்க வாங்க…” என்று மடமடவென்று தன் காலை நொண்டிக்கொண்டு சென்று விட்டாள்.

 இருவருக்குமே அது எப்படி பார்த்து ஒரு இரவிலேயே இப்படி பல நாள் வாழ்ந்த கணவன் மனைவி போல் பேசி கொள்கிறோம். என்பது ஆனால் அதற்கான விடை இருவருக்குமே தெரியவில்லை என்பது தான் உண்மை…

பொன்னம்மா அடுக்களையில்  பணி பெண்ணிடம் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க அப்போது அங்கு அவள் வந்து நின்றாள்.

அவள் வந்து நின்றதும் தன் வேலையை நிறுத்தி விட்டு, ” சொல்லு தாயி உனக்கு என்ன வேணும், ” என்று கேட்டார்.

“அம்மா! நான் எப்பவுமே சீக்கிரமா எழுந்திடுவேன் நேத்து லேட்டா தூங்கினதுனால லேட்டா எந்திரிச்சு இருக்கேன் அதுக்கு மன்னிச்சுக்கோங்க இப்போ நான் நான்” என்று இழுத்தாளே தவிர  அமைதியாகவே இருந்தாள்.

“எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லு தாயி எனக்கு உள்ள வேலை இருக்கு தம்பி இன்னும் 20 நிமிஷத்துல சாப்பிட வந்துடும் அதுக்கு சாப்பாடு ரெடி பண்ணி கொடுக்கணும் கொஞ்சம் டைம் மாறி போனாலும் தம்பி சாப்பிடாம போயிடும் எனக்கு ரொம்ப மனசு கஷ்டமாயிடும் அதனால சீக்கிரமா எதுவா இருந்தாலும் சொல்லுமா!” என்றார்.

“ஆமா இவரு அப்படியே டைம் பார்த்து தான் எல்லாமே செய்வார் கொலைகாரனுக்கு சப்போர்ட்டை பாரு இன்று மனதில் நினைத்துக் கொண்டு நான் பாத்ரூம் போகணுமா பாத்ரூம் எங்க இருக்கு..” என்று கேட்டாள்.

“அதுதான் தம்பி ரூம்லேயே இருக்குமே!” என்று கேட்டார். 

“அதில் எது பாத்ரூமுன்னு எனக்கு தெரியலமா!” என்று பாவமாக முகத்தை வைத்து சொன்னாள்.

அதில் அவர் சிரித்து விட்டு தன் அறைக்கு அழைத்துச் சென்று அவளுக்கு கழிவறையை காட்ட அவள் தயங்கிக் கொண்டே, “உங்க சேலை இருந்தா ஒன்னு குடுங்கம்மா!” என்று கேட்கவும் சேலையும், தன் மகளுக்கு என்று வாங்கி வைத்திருந்த ரவிக்கையும் உள்ளாடையும் அவளிடம் எடுத்துக் கொடுத்தார்.

அது அவளுக்கு கச்சிதமாக இருக்கவும் கழிவறைக்கு சென்று தன் காலை கடன்களை எல்லாம் முடித்து விட்டு குளித்து தலையில் துண்டு கட்டிக்கொண்டு வெளியே வெளியே வந்தாள். 

அவளை பார்த்த பொன்னம்மா, ” அழகா இருக்க தாயி ஆனால் பொட்டு வைக்கலையே பொட்டு வச்சு கொஞ்சம் நெத்தியில குங்குமம் வை தாயி, ” என்று சொல்லவும் அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் கண்ணீர் துளிர்க்க…

“என்ன ஆச்சும்மா ஏன்? இப்படி காலையிலே அழுகிற பொட்டு தான வைக்க சொன்னேன்.” என்றுக் கேட்டார்.

“அது ஒன்னும் இல்லமா, நா நா நான் பொட்டு வைக்க கூடாது,” என்று கூறினாள்.

அதைக் கேட்டவருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் யோசித்து விட்டு, ” அதுக்காமா அழுதுட்டு இருக்க போய்  பொட்டு வைத்துவிட்டு வெளியே தோட்டத்துல மல்லிகை பூ இருக்கும் அத பறிச்சிட்டு வந்து பூஜை ரூம்ல கொஞ்சம் விளக்கேத்து ஆத்தா நீயாவது,  இவ்வளவு பெரிய வீடு இருக்குன்னு தான் பேரு ஆனால், எங்க விளக்கு ஏற்றுவதற்கும் ஆள் இல்ல அதை சுத்தம் செய்வதற்கும் ஆள் இல்லை சீக்கிரம் போ தாயி, ” என்று அவள் அனுப்பி வைத்தார்.

அதைக் கேட்டவள் நான் ஏன் இந்த வீட்டுக்கு வந்து விளக்கு ஏத்தணும்.. அதுதான் உங்க வைஃப் இருப்பாங்களே ஆனா காலைல இருந்து அவங்கள ஆளையே காணோம். இதை பத்தி யார் கிட்ட கேட்கிறது என்று யோசித்துக் கொண்டு,  அந்த இடத்தில் அமைதியாகவே இருக்க…”குளிச்சு முடிச்சு வந்த உடனே விளக்கு ஏத்தினால், அது நல்லது, நாம என்ன நினைச்சு விளக்கு ஏத்தறோமோ? அது நடக்கும் அதுக்காக தான் சொன்னேன். 

 உனக்கு கஷ்டமா இருந்தா செய்யாத விடு,”  என்று சாதாரணமாக சொல்லிவிட்டு… இந்த காலத்து பொண்ணுங்களுக்கு எது சொல்றதுனே தெரியல பாவம் அந்த தம்பி தனியா கிடந்து தவிக்குது… அதுக்கு எப்போ தான் நல்ல காலம் வருமோ? என்று தனக்குத்தானே! புலம்பிக்கொண்டு  அடுக்களைக்குள் சென்று விட்டார்.

அவர் சொல்வது உண்மைதானே!! நாம் என்ன நினைத்து விளக்கேற்றுகிறோமோ? அதுதானே நடக்கும்… நாம் நல்லதே நினைத்து விளக்கு ஏற்றுவோமே நமக்குள் எதற்கு இந்த குழப்பம்… பெரியவங்க சொல்றாங்க அது செய்வோமே!!  என்று நினைத்துக் கொண்டு அவள், தோட்டத்திற்குச் சென்று மல்லிகை பூவை பறித்து அதை அழகாக தொடுத்து பூஜை அறைக்குள் செல்லும்போதுதான் புரிந்தது.

 பொன்னம்மா சொன்ன காரணம் ஏன்? என்றால் பூஜை அறை குப்பைமேடாக இருந்தது. 

அதை எல்லாம் கலைத்து அழகாக துடைத்து எடுத்து தான் கொண்டு வந்த பூவை சாமி படத்திற்கும் போட்டு விளக்கிற்கும் போட்டு விளக்கை ஏற்றி விட்டு நிமிரவும் அமுதன் மேலிருந்து கீழே வரவும் சரியாக இருந்தது.

 அவன் அணிந்திருந்த, நீதி கலர் சட்டையும் வெள்ளை நிற பேண்டும், வெள்ளை நிற கூட்டும் அவன் அழகுக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கு அவனே பார்த்துக் கொண்டிருந்தாள். 

அவனும் அவளைப் பார்த்தவன் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பின்பு தெளிந்து, “இவ என்ன குளிச்சிட்டு வந்து நிக்கிறா!! சரி, பொன்னம்மா ரூம்ல எதுவும் குளிச்சிட்டு வந்து இருப்பா சரி நம்ம போய் சாப்பிட்டு மீட்டிங் போவோம்,” என்று தனது உதவியாளருக்கு அழைத்து,, ” இங்க பாரு தண்டபாணி எந்த வேலையா இருந்தாலும் இன்னிக்கு ஈவினிங் ஐந்து மணி வரைக்கும் தான், அதுக்கு மேல எந்த மீட்டிங் கமிட்மெண்டும் வைக்காதே!! நான் இன்னும் ஹாஃப் அன் ஹவர்ல ஆபீஸ்ல இருப்பேன். அதுக்குள்ள எனக்கு நான் சொன்னதெல்லாம் ரெடி பண்ணி வைக்கிற,,  என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டு

உணவு மேஜையில் சென்று சாப்பிட அமர்ந்தவனை பொன்னம்மா, ” தம்பி இன்னைக்கு ஒரு நாளாவது போய் சாமி கும்பிட்டு வாங்களேன். ” என்றார்..

சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவன் அவர் மீண்டும் ஒருமுறை சொல்லவும்,, எழுந்து பூஜை அறைக்குள் வரும்போது, அவள் தன் வேலையை முடித்து விட்டு வெளியே வந்தவளை, ” அதுதான் தம்பி வந்து நிக்குதுல தம்பிக்கு கற்பூரம் வைத்து ஆர்த்தி காட்டுமா!” என்றார். 

நான் எப்படி இவருக்கு காட்ட முடியும் என்று அவள் அமைதியாக தயங்கிக் கொண்டே நிற்க… “ஏ பொண்ணு உன்னைய தான் சொல்றேன் கற்பூரத்தை வச்சு ஆர்த்தி காட்டி தம்பிக்கும் காட்டு தம்பிக்கு லேட் ஆகுது,” என்று பரபரத்தார்.

வயதில் பெரியவர் சொன்னதால் அவர் பேச்சை தட்ட முடியாமல், ” கடவுளே!! இவருக்கு இன்னைக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடாது. அப்படி நடந்தால் நான் தான் காரணம் ஆவேன்… ஏனென்றால் நான் எது செஞ்சாலும் அது அபசகுனமா போய் முடியும்னு எல்லாரும் சொல்லுவாங்க… ” என்று நினைத்துக் கொண்டு கற்பூரத்தை வைக்கும் போது, அவள் கைகள் நடுங்கியது.

 ஏனென்றால்,, அவளை சுற்றி இருந்தவர்கள் சிறு வயதிலேயே கணவனை இழந்ததால் அவர்கள் செல்லும் போது,  எதிரில் அவளை பார்த்து விட்டால் அபசகுணம் என்று அவளைத்தான் திட்டி விட்டு செல்வார்கள் அதன் தாக்கம் தான் இந்த நடுக்கம்…

அதைப் பார்த்தவன், ” பயப்படாம செய், ” என்று உத்தரவிட்டான்.

அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு பயப்படாமல் கற்பூரத்தை வைத்து ஏற்றி ஆர்த்தியை உள்ளே சாமிக்கு காட்டிவிட்டு அவனிடம் காட்டும்போது அவள் கண்கள் கலங்கி இருந்ததை பார்த்தான்.

அவள் கண்கள் கலங்கி இருந்ததை பார்த்தவனுக்கு என்ன புரிந்ததோ அது அவனே அறிவான். ஆனால், வெளியில், ” நான் இந்த ஆர்த்தி சாமி நல்ல சகுனம், அபசகுனம் இதெல்லாம் எதையுமே பாக்குறது இல்லை உழைப்பு ஒன்னு மட்டும்தான் நம்மளை உயர்த்தும்ன்னு நினைக்கிறவன். அதனால நீ எதை நினைச்சும் பீல் பண்ணி சீன் கிரியேட் பண்ண தேவையில்லை… எனக்கு எப்பவும் வெற்றி, எதிலும் வெற்றி தான், ” என்று அதை பொன்னமாவிற்காக தொட்டு கும்பிட்டு விட்டு உணவு மேஜையில் அமர்ந்தான்.

அவன் சொன்னது அவளுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை… ஆனால், கண்களை துடைத்துக் கொண்டு வந்து, பொன்னம்மாவிற்கு உதவி செய்தாள்.

பொன்னமாவோ நீயே பரிமாறு எனக்கு கால் எல்லாம் வலிக்குது என்று அங்கு பக்கத்தில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து அவருக்கு ஒரு தட்டை எடுத்து வைத்துக் கொண்டார்.

சரி பரிமாறுவோம் என்ன இருக்கிறது என்று அவள் அந்த பாத்திரங்களை எல்லாம் திறந்து பார்த்தவளுக்கு… அதிர்ச்சியில் கண்கள் விரிந்தது. அதை அவனுக்கு வைத்துவிட்டு கேட்ட கேள்வியில் அவன் கண்கள் கலங்கி விட்டது.

தொடரும்.…

 கதையின் போக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்க செல்லம்…

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மேகத்தின் தூரிகை இவள்(ன்)
928 6 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page