தூரிகை 20 ❤️
அவள் குளித்து முடித்து வரவும் பொன்னம்மா!! அவளை விளக்கேற்ற சொல்லி அமுதனுக்கு ஆர்த்தி காட்ட சொல்ல அதன்படியே செய்துவிட்டு,, உணவு மேஜைக்கு வந்தவளையே பரிமாறு என்று சொல்லவும், அவருக்காக உணவை பரிமாற பாத்திரங்களை திறந்தவளுக்கு, அதில் ஓட்ஸ் கஞ்சியும், பச்சை காய்கறிகளின் சூப்பும், கொண்டக்கடலையும் இருக்க…
அதைப் பார்த்தவள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், ” என்ன அம்மா இதுதான் காலைல சாப்பாடா அப்ப மதியம் சாப்பாடு என்ன?” என்றாள்.
“மதியம் சிவப்பு அரிசி சோறும், அரைச்சு விட்ட சாம்பார், கோஸ் பொரியலும் பாப்பா! ஏன்?” என்றார்.
அவள் அதில் திருதிருவென முழித்துக் கொண்டே நிற்க… ” ஏன்? உனக்கு இதெல்லாம் பிடிக்காதா? ” என்றார்.
“நான் இதெல்லாம் பார்த்ததே இல்லைமா அதுக்கப்புறம் எங்கிருந்து சாப்பிடுவது அதுக்கப்புறம் எங்கிருந்து பிடிக்குமா? பிடிக்காதா? “என்று சொல்வது என்றாள்.
“ஓஓஓஓ… ” என்றார்.
“என்னம்மா வெறும் ஓஹோ தானா இப்ப எல்லாருக்குமே காலைல சாப்பாடு இதுதானா அம்மா!” என்றாள்.
“ஆமாம், உனக்கு வேணும்னா பிரிட்ஜ்ல மாவு இருக்கு தோசை ஊத்திக்கோ!” என்றார்.
“சரிங்கம்மா ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் தினமும் இதை சாப்பிடுறீங்களே உங்களுக்கெல்லாம் போர் அடிக்காதா?” என்றார்.
“போர் அடிக்கத்தான் செய்யுது ஆனால், தம்பிக்கு இந்த மாதிரி செஞ்சா தானே பிடிக்கும் அதனாலதான் இப்படி செய்யுறேன் எனக்கெல்லாம் காலைல நல்லா தலை வாழை இலை போட்டு நல்ல நெய் சொட்ட சொட்ட பொங்கலும், கெட்டியான தேங்காய் சட்டினியும் சின்ன வெங்காயம் போட்ட சாம்பார் உளுத்த வடையும் இருந்தா எப்படி சாப்பிடுவேன் தெரியுமா? ” என்று ஒரு மூச்சு பேசிவிட்டு, “என்ன பண்றது தம்பிக்கு அதெல்லாம் பிடிக்காது,” என்றார்.
“பொன்னம்மா இங்க பாருங்க சாப்பிடுறதுங்குறது வாழறதுக்காக தான் சாப்பிடறோமே தவிர சாப்பிடறதுக்காக வாழ கூடாது அதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க… அதுவுமில்லாம நீங்க சொல்ற மாதிரி எல்லாம் சாப்பிட்டா! நாம உடம்பை தூக்கிட்டு போக முடியாது உடம்பு தான் நம்மள தூக்கிட்டு போகும், ” என்றான்.
“அதுக்குன்னு 24 மணி நேரமும் ஆடு, மாடு சாப்பிடுறதையா நாம சாப்பிடுறது.. ஏங்க உங்க அம்மா! ருசியா சமைத்துக் கொடுத்ததில்லையா? அதானே அம்மா கைல சாப்பிட்டு இருந்தா அதனோட ருசி தெரிஞ்சிருக்கும் ஒருவேளை நீங்க உங்க அம்மாவையும் கொன்னுட்டீங்களோ என்னமோ?” என்று வாய் தவறி கூறி நாக்கை கடித்துவிட்டு அவன் முகத்தையே பார்த்தாள்.
அவள் அம்மா! என்று கூறும்போது பொன்னம்மா அவளின் கையைப் பிடிக்க அதை கண்டு கொள்ளாமல் எப்போதும் வாய் துடுக்காக அவனிடம் பேசுவது போல் பேசி விட்டாள்.
அதை கேட்ட பொன்னம்மாவிற்குத்தான் மனதில் டக் டக் என்று மணி அடித்தது. ஏனென்றால் அவன் அம்மாவை மட்டும் பேசி விட்டால், யாராக இருந்தாலும் தட்டு எங்கேயோ பறந்து செல்லும் அதனால் அவனை பார்த்துக் கொண்டிருக்க…
ஆனால், அவன் எதுவும் சொல்லாமல் பாதி உணவிலேயே எழுந்து சென்று கையை கழுவிக்கொண்டு தன் வாயைத் துடைத்துக் கொண்டே வந்து அவளிடம்,
“வந்தோமா சாப்பிட்டோமா! உன் வேலை என்னமோ! அதை மட்டும் பார்த்த மாதிரி போயிட்டே இருக்கணும். தேவையில்லாததெல்லாம் கேட்கக்கூடாது கொஞ்சம் இடத்தைக் கொடுத்தா தேவையில்லாது எல்லாம் கேட்பியா? உன்னோட வேலை எல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோ எங்கிட்ட வச்சுக்காத,” என்று சொன்னான்.
அவள் அதற்கு எதையோ சொல்ல வர, “வாயை மூடு,” என்று கையை வைத்து தடுத்து விட்டு, கண்ணை மூடி எங்க அம்மாவை மாதிரி யாராலயும் சமைக்கவே முடியாதே!!
என்று தன் அம்மாவின் நினைவில் உழன்று, அவர் தனக்கு கொதிக்க கொதிக்க இருந்தால் பிடிக்கும் என்று சூடான வாலை கருவாட்டு தொக்கும், ரசம், சோறு எல்லாமே அவன் கேட்டது போல் இருக்கும்! இருந்தாலும்,
“அம்மா! எல்லாமே சூடா இருக்கு எப்படி சாப்பிட என்பான். ” இவன்!!
“சூடா சாப்பிட்டா! சாப்பாட்டோட ருசியே தனியா இருக்கும் இன்னும் கொஞ்சம் அதிகமா சாப்பிடுவன்னு என்று சொல்லி தான், எல்லாமே சுட சுட செஞ்சேன் எழிலு, உனக்கு தான் இது ரொம்ப பிடிக்குமே!! என்பார்.
அதை இப்போது நினைத்து பார்த்தவனுக்கு, ஒரு நொடி அவன் கண்கள் கலங்கியது.
நேற்று இரவில் இருந்து இன்று வரை கம்பீரமாகவே பார்த்த ஒரு மனிதனின் கண்களில் இருந்து கண்ணீர் வரவும் அவளுக்கே ஒரு மாதிரியாகிவிட,, ” ஐயோ இவரை எப்பவும் பேசுற மாதிரி பேசிட்டோமே அவங்க அம்மா மேல ரொம்ப பாசம் போல அதனால தான் அவங்க அம்மான்னு சொன்னவுடனே அவருக்கு கோவம் வந்துடுச்சு… என்று தன் மனதில் நினைத்துக் கொண்டு,
மெல்ல அவன் கையை தொட்டு, “சார் மன்னிச்சுடுங்க…” என்று சொல்லவும்,,
” உன் மன்னிப்பு தூக்கி குப்பையில் போடு இனிமே யாரைப் பத்தியும் எதைப்பத்தியும் தெரியாமல் வார்த்தையை விடாதே!! என்றுக் கூறி அதே தோரணையிலேயே நின்றவனை, ” சார் நான் தான் தெரியாமல் சொல்லிட்டேன்னு சொல்றேன்ல உங்க அம்மா ருசியா தான் சமைப்பாங்க என்னைய விட்டுடுங்க… ” என்றுக் கூறி
அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவன், நொடிக்குள் தன்னைத்தானே மீட்டுக் கொண்டு, மீண்டும் தனது இறுகிய முகத்தை வைத்துக்கொண்டு, “பொன்னமா நான் வரேன்,” என்று சொல்லிவிட்டு சென்றவன் மீண்டும் வந்து, அவளிடம் தன் சுட்டு விரலை நெற்றியில் தட்டிக் கொண்டு, ” உன் பெயர் என்னன்னு சொன்ன, ” என்று கேட்டான்.
“கார்குழலி” என்றாள்.
“அடப்பாவி பேரு கூட தெரியாமத்தான் இவ்வளவு நேரமா சுத்திகிட்டு இருக்கியா டா!” என்று அவன் மனசாட்சி அவனை காரி துப்பியது.
“ஏன்? அவ பேரு தெரிஞ்சு அவ பேருல நான் என்ன இடத்தையா வாங்கி ரெஜிஸ்டர் பண்ண போறேன். அவ யாரோ? எவளோ அவ பேரு என்ன ஊருன்னு தெரிஞ்சு என்ன ஆகப்போகுது…” என்று தன் மனசாட்சியை அடக்கி விட்டு அவளிடம், ” ஈவினிங் பைவ் ஓ கிளாக் ரெடியா இரு நான் வந்து உன்னை கூட்டிட்டு போய் காஞ்சிபுரம் பஸ் ஏத்திவிட்டு உன்னை அதோட தலை முழுகிடுறேன். ” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
அதைக் கேட்டவளக்கு தான் ஏதோ இதுவரை நன்றாக பேசிக் கொண்டிருப்பதை போலவும்,, இப்போதுதான் அவன் முகத்தை காட்டுவது போல அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.
அவள் பின்னே வந்த பொன்னம்மா அவளின் தோளை தொட்டு, “தம்பிக்கு உங்க அம்மா ஞாபகம் வந்துடுச்சு போல விடுமா!”
“எதுவும் தெரியாம பேசினது என் தப்பு தானே விடுங்க… ” என்று தன் கண்களில் விழுந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, எங்கு சென்று அமர்வது என்று தெரியாமல் அந்த வீட்டை சுற்றி பார்க்கலாம்… என வெளியே வந்து அங்கிருக்கும் கல்பெஞ்சில் அமர்ந்து விட்டாள்.
காரை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு வேகமாக வந்தவனுக்கு,, (அவன் வெளியில் நேற்று போல் முக்கியமான வேலைகளுக்கு மட்டுமே ஜிப்பில் செய்வான் மற்றபடி எல்லாம் கார் தான்) அடுத்தடுத்து வந்த வேலைகளில் எதைப்பற்றியும் யோசிக்க கூட அவனுக்கு நேரமே இல்லாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்க… அவன் காரியதரிசி தண்டபாணிக்கு தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது..
இரண்டு மூன்று முறை அவனை நிமிர்ந்து பார்த்து கோப்புகளில் கையெழுத்துயிட்டுக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்திற்கு மேல், ” என்ன தண்டபாணி போன் வந்துட்டு இருக்கு எடுத்து பேசுங்க… ” என்றான்.
“பரவாயில்லை சார் வீட்ல இருந்து தான் போன் வருது அஸ்யூசுவல் சாப்டீங்களா! என்று தான் கேட்பாங்க நான் அப்புறமா பேசுகிறேன் சார்!” என்றான்.
அவனும் சரி என்று சொல்லிவிட்டு அடுத்த கோப்பை கையெழுத்திடும் போது மீண்டும் தண்டபாணிக்கு அழைப்பு வர அந்த கோப்பின் இடையே பேனாவை வைத்து மூடிவிட்டு, ” எடுத்து பேசிடுங்க தண்டபாணி,” என்றான்.
அவனும் அவன் சொல்லுக்கு கட்டு பட்டு போனை எடுத்து காதல் வைத்து கையை வாய்க்கு அருகில் வைத்து “என்ன சொல்லு, ” என்றான்.
“இல்லங்க சாப்டீங்களா இல்லையான்னு கேக்க தாங்க போன் பண்ண வேற ஒன்னும் இல்லை…” என்று அந்த பக்கம் அவள் பேசியது இந்த பக்கம் அமுதனின் காது வரைக்கும் கேட்டது.
அதைக் கேட்ட அமுதனுக்கு என்ன ஆனதோ? அவனிடம் கோப்புகளை தந்து அப்புறமாக கையெழுத்து விடுகிறேன். என்று கூறி வெளியில் அனுப்பி வைத்துவிட்டு அங்கிருக்கும் நாற்காலியில் சாய்ந்து, ” நம்ம வீட்டுக்கு போனா சாப்டியான்னு கேக்குறதுக்கு கூட நம்ம அம்மாவை தவிர யாருமே இருந்தது இல்லை… ” இனியும் அப்படி யாருமே நமக்கு இல்லையா? என்று நினைத்து அப்படியே கண்கள் மூடி அமர்ந்து இருந்தவனின் கண் முன்னே! குழலியின் முகம் வந்து போனது.
அப்போது, காலையில் பேசியது நினைவுக்கு வர மேலும் அவன் மனதில் பாரம் கூடி போனது.
மீண்டும் அவர் அவனின் காரியதரிசி தண்டபாணி அவன் முன் வந்து நின்று, ” சார்! சார், ” என்றான். அவன் அவசரம் இல்லாமல் இப்படி எல்லாம் வரமாட்டான் என்பதால், தன் எண்ணத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, “சொல்லு தண்டபாணி என்ன வேண்டும்,” என்றான்.
“சார் நீங்க… ஈவினிங் பைவ்க்கு மேல எந்த அப்பாயின்மென்ட் வைக்க வேணாம்னு சொன்னீங்க ஆனா அந்த பெங்களூர் பில்டிங்க்கு இன்னைக்கு நைட் அங்க வர சொல்லி சார் இப்பதான் கால் பண்ணி சொன்னாங்க என்ன பண்ணலாம்…” என்று தயங்கி தங்கி கேட்டான்.
“ஒரு 2 மினிட்ஸ் சொல்றேன்.” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்து விட்டான்.
தண்டபாணிக்கு ஒரே ஆச்சர்யம் தான் ஏனென்றால் தன்னுடைய பாஸ் எப்போதும் எதற்கும் கால அவகாசமே எடுத்துக் கொள்ள மாட்டார். இது என்ன புதிததாக என்று யோசித்துக் கொண்டே வந்தவன் அவருக்கு என்ன கஷ்டமோ என்று தன் வேலை பார்க்க சென்று விட்டான்.
இங்கு அவன் காலையில் கண் கலங்கி நின்றது. குழலிக்கு ஒரு மாதிரியாவே போக பொன்னம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காமல், அவன் வந்த பிறகு இரண்டு திட்டாவது வாங்கிக் கொண்டு தான் சாப்பிட வேண்டும் என்று எதுவும் சாப்பிடாமலேயே இருந்தாள்.
இங்கு தனது காரியதரசியிடம் இரண்டு நிமிட கால அவகாசம் வாங்கியவன் வீட்டிற்கு அழைத்து பொன்னம்மாவிடம், ” நான் இப்போ அவசரமா பெங்களூர் போக வேண்டியது இருக்கு பொன்னம்மா தவிர்க்க முடியாத சிச்சுவேஷன் கொஞ்சம் அந்த பொண்ணு கிட்ட சொல்லி, ஒரு ரெண்டு நாளைக்கு மட்டும் இருக்க சொல்லு நான் பெங்களூர் போயிட்டு வந்துட்டு கூட்டிட்டு போறேன்னு சொல்லிடு, ” என்று அவர் பதிலை கூட எதிர்பார்க்காமல் போனை வைத்து விட்டான்.
இதை பொன்னம்மா!! குழலியிடம் கூற காலையில் அவன் இருந்த மனநிலை கண் முன் வந்து போக வேறு வழி இல்லாமல் அவளும் ஒத்துக்கொண்டாள்.
அதன் பிறகு, அவன் பெங்களூர் வேலையை முடித்துக் கொண்டு வர, அவனிடம் அவள் மீண்டும் மன்னிப்பு கேட்க அவன் எதுவும் பேசாமல் பாராமுகமாகவே, “நானே உன்னை உங்க வீட்ல டிராப் பண்ணுறேன் கிளம்பு,” என்று மட்டும் சொல்லிவிட்டு அதன் பதில் எதிர்பார்க்காமல் விறு விறுவென்று தன்னறைக்கு சென்று விட்டான்.
“ஏனோ? அவன் அடித்தது கூட வலிக்கவில்லை இப்போது எப்படி பாராமுமாக செல்வது மனதின் ஒரு ஓரத்தில் வலியை கொடுக்க…. சோர்ந்த மன நிலையிலேயே அவள் காஞ்சிபுரத்திற்கு கிளம்பினாள்.
அதன் பின் அவனும் தயாராகி வர, இருவரும் கிளம்பி காஞ்சிபுரத்திற்கு சென்றனர். அங்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்,,
தொடரும்.…
கதையின் போக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்க செல்லம்ஸ்.…
