தூரிகை 3 ❤️

குழலி!! அமுதனின் ரத்தம் தோய்ந்த கோர முகத்தை கண்டு பயந்து ஓடிவரும் நேரம், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக ஒரு இடத்தில் அமர்ந்து அவன் வருகின்றானா?? என்று பார்க்க அவன் வரவில்லை.

“அப்பாடா,” என்று பெரு மூச்சு ஒன்றை விட்டு விட்டு, “அந்த ஆளு வரதுக்குள்ள இந்த இடத்தை விட்டு முதலில் கிளம்பிடலாம்,” என அவள் கிளம்பி பின்னே திரும்பி பார்த்துக் கொண்டே வர முன்னே இருந்த கல் தடுக்கி அவளின் சேலை நழுவியது.

 “ஐயோ!! இந்த நேரத்துல இது வேற,,” என்று அவள் சரி பண்ண சேலையை சரி செய்ய மேலே இழுக்க… அந்த சேலையின் நுனிப் பகுதி அவனின் காலுக்கு அடியில் சிக்கி இருந்தது.

 அதை எடுக்க அது ஏதோ? ஒரு செருப்பின் அடியில் சிக்கியிருந்ததை அப்போது தான் உணர்ந்தவள். யாரோ? தெரியாமல் மிதித்து இருக்காங்க போல, என்று குனிந்து அதை எடுக்க முயற்சி செய்ய  தரையில் இருந்து, மேல்நோக்கி பார்த்தால் அவன் கோர முகம் மிக அருகில் தெரிந்ததில்,,

என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தவளின் முன்னே!! பளபளக்கும் கத்தி தெரிய அவள் மீண்டும் கத்த முயற்சிக்கும் வேளை அவளின் வாயை பொத்தி அவளைக் குத்த கத்தியை பின்னோக்கி இழுத்தான். அமுதன்!!

அப்போது அவன் மிதித்துக் கொண்டிருந்த அவளின் சேலை சரசரவென கீழே சரிந்து விழ  அதைப்பிடிக்க தன்னிச்சையாக அவள் கைகளும் கண்களும் கீழே போக அவளைக் குத்த வந்தவனின் கை கீழே இறங்கி சட்டு என அவளுக்கு முதுகுக் காட்டி நின்றுக் கொண்டான். 

கத்தியை பிடித்து ஒருவனை கொன்னபோதும், இவளை வீர தீர பராக்கரமானாக துரத்தி வந்த போதும், நடுங்காத கையும், விழுகாத வேர்வையும் இப்போது அவளின் சேலை கீழே நழுவியதை கண்ட ஒரு நொடியில் வியர்க்கத் தொடங்க தன் ஒற்றை கையால் அந்த வியர்வையை சரி செய்து கொண்டிருந்தான். ஆனால், அவளின் நிழலை கவனிக்க தவறவில்லை… 

அவன் தன்னை நிழலில் கவனித்துக் கொண்டிருப்பது தெரியாமல், இதுதான் சந்தர்ப்பம் என தன் சேலையை சரி செய்து கொண்டு அவள் ஓடபோக, இதுவரை அவளை நிழலில் பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின் நிஜத்தின் தலை முடியை தனது இடது கையால் பிடித்து கீழே சாய்த்து கண்களை நேராகப் பார்க்க 

கூர்வாளின் தாக்குதலை விட அவள் கண்களின் கருவிழிகளின் தாக்குதல் அவனை அதிகமாக பாதித்தது. அவன் ஒன்னும் இளம் கன்று கிடையாது! காதலியின் கடைக்கண் பார்வை பட்டவுடன் அவள் பின்னே ஓடிச் செல்வதற்கு இருந்தாலும் அவளின் கண்கள் செய்த மாயம் என்னவோ? அது அவனுக்கே தெரியும். 

ஆனால், அதில் காதலும் இல்லை,  காமமும் இல்லை  அவனை அருகில் கண்ட பயம் மட்டுமே தெரிய அந்த கண்களின் கருவிழிகளில் தன் உருவத்தை கண்டு நொடிக்கு மூன்று முறை கண் சிமிட்டும், அந்த சிமிட்டலில் அவன் இதயத்தின் நான்கு அறைகளும் ஒரு முறை சடார் என்று கதவை திறந்து அந்த சிமிட்டல்களை ஏற்றுக் கொண்டு பட்டென கதவை சாற்றிக் கொண்டது.

 இளமையில் கூட தானாக துடிக்காத ஹார்மோன்கள் இப்போது, எக்கு தப்பாக எகிறி குதித்து. அவன் இதயம் அவளைத் தொட்ட வேகத்தில் இது என்னடா! இது, புது மாதிரி ஒரு மாதிரி பீல் ஆகுது என்று அவன் மனம் காற்றில் பறக்கும் மயில் இறகாக, பதின்ம வயது மாணவன் போல் வானில் பறந்து அவன் பிடி கொஞ்சம் கொஞ்சம் தளரி அவளை விடுத்தான்.

 யாரிடமும் பேசாமல் இருப்பதால் இவள் என்ன ஊமையா? இல்லை பேசினால் உன் வாயில் இருக்கும் முத்துக் கொட்டிடுமா?? இந்த பொண்ணுக்கு பேசவே தெரியாது??  நினைக்கும் அளவிற்கு அழுந்த மூடி இறுகி பேசாமல் இருக்கும் அவளின் உதடுகள் இப்போது அவன் தன்னை விடுவித்தலில் சும்மா இல்லாமல், ” ப்ளீஸ் சார் என்னை விட்டுடுங்க நீங்க கொலை பண்ணதை நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் நான் இந்த ஊரை விட்டு போயிடுறேன் சார்!! என்று கண்களில் இறைஞ்சி இப்போதா தானா!! கேட்க தோன்றும்.

அவனுக்கும் தன்னால் கத்திக்குத்து பட்டவன் தனது இரண்டாம் மனைவி சாட்சியாக வருவாள் என்று கூறியது ரீங்காரமாக  காதில் அப்போது தானா!! ஒலிக்க வேண்டும்…

 அவள் கூறியதையும் அவன் கூறியதையும் ஒப்பிட்டுப் பார்த்தவன். அவள் தலைமுடியை விட்டு, இப்போது அவளின் கைகளை இறுகப்பற்றி இழுத்ததில் அவள் வேகமாக அவன் கரடு முரடான நெஞ்சில் மோதி நின்று, எங்கேயோ? பாறையின் மேல் தான் மோதிக் கொண்டோம். என்று தலையை தேய்த்து அவனை நிமிர்ந்து பார்க்க… அப்போது தெரு விளக்கின் வெளிச்சம் பட்டு அவனின் கருமை நிற தேகம் மழை வரும் நேரத்தில் கருமேகங்களுக்கு இடையே வரும் மின்னலை போல் பட்டென பிரகாசிக்க அவனை மெய் மறந்து கண்களை கூட சிமிட்டாமல் பார்த்தாள். 

 

ஏதோ?? இதுவரை ஆண் மகனை பார்த்திடாத அளவிற்கு ஆனால், எல்லாம் ஒரு நொடி தான் அடுத்த நொடியே தன் வயதையும் தன் நிலைமையும் நினைத்து ஒதுங்கி நின்றவளின் கையை மேலும் இழுத்து, ” எப்படி உன்னோட செட்டப் பை மயக்கி ஏமாத்துற மாதிரி என்னை ஏமாற்றலாம் என்று பார்க்கிரியா!!  நீ என்ன என்னை காட்டிக் கொடுக்க மாட்டேன்னு சொல்றது காட்டிக் கொடுக்க நீ உயிரோட இருந்தா தானே!! என்று வன்மமாக சிரித்தான்..

 ஆனால், அவனுக்கு தெரியவில்லை ஏற்கனவே அவளின் கண்களில் இருந்து வந்த மின்சாரம் தாக்கி தன் இதயம் சுக்கு நூறாக உள்ளுக்குள் உடைந்து கொண்டிருப்தையும், முதல் முறையாக கத்தியை தூக்கி கொலை செய்யாமல் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதும்,,

 அவளுக்கு அவன் பேசும் வார்த்தையின் அர்த்தம் புரியாமல் அவனையே பார்த்து, “செட் அப்னா என்ன சார்… “என்று கேட்டாள் பேதையவள்!!

 அதற்கு அவன் வானமே இடியும் அளவிற்கு சிரித்து விட்டு, ” வாட் எ ஃபென்டாஸ்டிக் ஜோக், அவன் தான் உன்ன தெளிவா சொல்லிட்டானே!! நீ அவனோட ரெண்டாவது பொண்டாட்டின்னு, அவனுக்கு நீ ரெண்டாவது உனக்கு அவன் எத்தனையாவதோ? யாருக்கு தெரியும், ” என்று அவன் கேட்டதில்,,

 அவள் சற்று விலகி நின்று தன் காதுகளை பொத்திக்கொண்டு, ” அப்படி தயவு செஞ்சு பேசாதீங்க சார் இப்படி பேசுறதுக்கு என்ன கொன்னு கூட போட்டு விடுங்க… ” என்று கத்தினாள்..

அவன் அதற்கு நக்கலாக ஒரு பார்வை பார்க்க… 

“அப்படி பார்க்காதீங்க சார்!! நீங்க கொன்ன ஆளு யாருன்னு கூட எனக்கு தெரியாது இந்த ஊருல இது என்ன தெருவுன்னு கூட எனக்கு தெரியாது நான் வெளியூரிலிருந்து வந்திருக்கேன். என் சித்தப்பா மகனை பார்க்க போனவ வழி தெரியாம இங்க வந்து நின்னுட்டு இருக்கேன். என்னை தயவு செஞ்சு வார்த்தைகளால் கொல்லாதீங்க..” என்று அழுதாள்..

“ஏய்… சும்மா அழுது சீன் போடாத, அப்படியே! நீ அழுது சீன் போட்டாலும் சரி இல்ல வேற எந்த மாதிரி பண்ணாலும் சரி அதுக்கு மயங்கும் ஆளு நான் இல்லை… நீ வேற எந்த ஆம்பளைய வேணா மயக்கலாம் என்னை ஒன்னும் பண்ண முடியாது.. அதுவும் இல்லாம போலீஸ் கிட்ட ரெண்டு பாடி தராதா உத்தரவாதம் கொடுத்துட்டேன் அதையும் என்னால மீற முடியாது,” என்று அவன் கத்தியை ஓங்க

 பேசி பழகாதவளின் நாக்கு அவனின் இந்தப் பேச்சுக்கும், செயலுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி தன்னுயிரைக் காப்பாற்றுவதா இல்லை… உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தன் தந்தையின் உயிரை காப்பாற்றுவதா என்று தெரியாமல் அவள் நாவு இப்போது கெஞ்சுவதற்கு கூட அவளுக்கு ஒத்துழைக்காமல் இருப்பதே கோபமாக இருந்தது. 

 அதுவும் இல்லாமல் சென்னைக்கு தனியாக வரும்போது தனது தந்தை ஓதிய பாடங்கள் அப்படி, “என் உயிரை காப்பாத்துறேன்னு சொல்லிட்டு இந்த வயசுல உனக்கு ஒரு வாழ்க்கையை தேடிக்காதே!!”என்று கூறியது வேறு இப்போது அவள் காதில் ரீங்காரமாக ஒலித்தது. இப்போது இவன் கையில் இறந்தால் கூட யார் யாருடனோ? ஓடி விட்டேன் என்ற பட்டம் தான் அவளுக்கு சிக்கும். 

அதனால், சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டக்காரன் காலில் விழுந்து தன்மானத்தையும் தன் தந்தையின் உயிரையும் காப்பாற்றியே தீர வேண்டும் என்று யோசித்தவள் சட்டென அவனின் காலில் விழ அவன் இரண்டு அடி பின்னி தள்ளி நின்று, “ச் சே என்ன பண்ற இப்போ இந்த ட்ராமாவா, அட சீ எழுந்திடு,” என்று கத்தினான்.

” சார் ப்ளீஸ்… எனக்கு அந்த ஆளு யாருன்னு கூட தெரியாது!” என்று மீண்டும் அதே பாட்டை பாட “அப்ப எப்படி அந்த வீட்டுக்கு நீ சரியா வந்த” என்று கேட்டான்..

 அவளும் நடந்த உண்மைகள் எல்லாம் கூற, அவன் அதையும் கேட்டு சிரித்தான். இன்று மட்டும் அவளால் இரண்டு முறை சிரித்து விட்டான்.

 அவன் சிரிப்பதை பார்த்தவளுக்கு தன்னிலையை நினைத்து கழிவிறக்கமும் அவன் சிரிப்பு அவளுக்கு கோபம் வர தனது மூச்சுகளை முசுமுசுவென இழுத்து விட்டு, ” சரி அடுத்தவங்களோட இயலாமை பார்த்து உங்களுக்கு சிரிப்பு வருதா? ” என்று கோபமாக கேட்டும் விட்டாள்.

 அதில் அவன் சட்டென்று தன் சிரிப்பை நிறுத்திக் கொண்டு, “ஹலோ!! நீ என்கிட்ட உயிர் பிச்சை கேட்டுட்டு இருக்க… உனக்கு கோவம் வேற வருதா?” என்று அவன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.

 “ஐயோ!” எத சொன்னாலும் நம்பாம இருக்கிறவர் கிட்ட எப்படித்தான் நம்ம நிலைமையை புரிய வைத்து இந்த இடத்தில் இருந்து தப்பிச்சு போறது தெரியலையே!! என்று அவளுக்கு மண்டை காய்ந்தது அது மட்டும் இல்லை… காஞ்சிபுரத்திலிருந்து சென்னை சென்னையிலிருந்து திருவல்லிக்கேணி வந்து தன் அண்ணன் வீட்டில் சாப்பிடலாம் என்று நினைத்தவளுக்கு இப்ப பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.

 அவள் வை பசியால் அவள் வயிற்றை தடவிக் கொண்டதை பார்த்தவன். ” இப்போ எதுக்கு வயித்து தடவுற பிரக்னண்டா எதுவும் இருக்கியா அதுக்கும் அவன் தான் காரணமா?  என்று கேட்டான். அவளும் என்ன தான் செய்வாள்.

” ஐயோ,  ஏன்? சார் நான் சொல்றது புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறீங்க அவன் யாருன்னே எனக்கு தெரியாது சார்… என்னை விட்டுடுங்க சார், ” என்று அவள் கை எடுத்து கும்பிட்டாள். 

அதில், அவனுக்கு அவள் உண்மை சொன்னதாக தோன்றியதோ என்னவோ?? “சரி விடு… பொழச்சி போ!! ” என்று பாவம் பார்த்து விட்டான்.

அவளும், மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்து அந்த தெரு முனைக்கு வந்தவள் மீண்டும் ஓடி சென்று,, அவனிடமே நின்று ஒன்று கேட்டதில்,, இவளை மன்னித்து விட்டது தவறு என்று கூட ஒரு நிமிடம் தோன்றியது அவனுக்கு…. 

 தொடரும்….

 

கதையின் போக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. அப்படியே உங்கள் விமர்சனத்தையும்… மதிப்பீட்டையும் கொடுத்துவிட்டு செல்லுங்கள்….

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மேகத்தின் தூரிகை இவள்(ன்)
915 6 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page