தூரிகை 4❤️
அமுதனிடம் எப்படியோ?? அழுது புரண்டு தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு, அங்கிருந்து சென்றவள் அந்த தெரு முனை வரை சென்றிருக்க மாட்டாள். மீண்டும் திரும்பி வந்தாள். அவனும் தன் ஜீப்பை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்.
அந்த இருட்டிலும் அவனின் கம்பீரமான நடையைப் பார்த்து ஒரு நிமிடம் நின்றவள், அடுத்த நொடியே தெளிந்து, “நம்மளை ஊருக்கு போக சொல்லிட்டாரு, நாமளும் அதைக் கேட்டுட்டு வந்துட்டோம்… ஆனால், இங்கிருந்து எப்படி பஸ் ஸ்டாண்ட் போறதுன்னு தெரியலை,, அது போறதுக்கு காசு வேணும் வயிறு வேற பசிக்குது என்ன பண்றதுன்னு தெரியல பேசாம அவர் கிட்டயே போய் காசு கேட்டு பார்ப்போமா!!” என்று யோசித்தாள்.
“அவரு உன்னை ஏற்கனவே செட்டப்பு அப்படி இப்படின்னு தப்பு தப்பா பேசிட்டு இருக்காரு. இப்ப நீ போய் காசு கேட்ட்டால் அவரு உன்னைப் பத்தி என்ன நினைப்பாரு,” என்று அவளின் மனசாட்சி கேள்வி கேட்டது.
“அதுவும் சரிதான்!! இப்போ நான் எப்படி ஊருக்கு போறது, என்று யோசித்துக் கொண்டு நின்றவளுக்கு அப்போதுதான், அவள் மண்டையில் பல்பு எரிந்து, அட நம்மளோட பேக் அந்த வீட்டிலேயே விழுந்துடுச்சு…. பேசாம அதை எடுத்துட்டு நம்ம ஓடிப் போயிடுவோம்.” என்று அவள் ஓடி வரவும்,, அவன் தன் ஜிப்பின் அருகே வரவும் சரியாக இருந்தது.
அவன் மேல் வந்து மோதும் நேரம் தன் கைகளை வைத்து அணையை போல் தடுத்துக் கொண்டு, ” ஏய்… நில்லு நில்லு, ” என்றுக் கூறினான்.
அவளும் அந்த அணையில் தடுத்து அப்படியே ஓரமாக நின்று விட, இருவரும் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொண்டு அப்படியே நின்றனர். அவள் பார்வையில் இருந்து வெளிவர முடியாமல் தத்தளித்தவன் சட்டென்று அதில் இருந்து மீண்டு, ” இப்போ எதுக்கு இப்படி பி டி உஷா ரேஞ்சுக்கு ஓடி வர,” என்று கேட்டான்.
அவள் அந்த கேள்வியில் அமைதியாகவே நின்று அவனை முறைத்தாள்.
ஒரு பெண் தன்னை முறைப்பது இதுவே முதல்முறை! அவளுக்கும் யார்? என்று தெரியாத ஒருவனை இப்படி முறைத்து நிற்பது முதல்முறையே!! ஆனாலும், முறைக்கிறாள்.
அவள் முறைத்ததில் அவள் கண்கள் என்னும் வலையில் சிக்கிய மீனாய் தவித்தான். எல்லாம் ஒரு நொடி தான், அடுத்த நிமிடம், ” நீ எதுக்கு இங்க வந்தேன்னு கேட்டேன் நீ எதுக்கு முறைச்சுட்டு நின்னுட்டு இருக்க… நான் ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்க மாட்டேன். கண்ணு முழிய நோண்டி போட்டுடுவேன் பாத்துக்கோ!” என்று ருத்தர மூர்த்தியாய் நிற்க அவள் பயந்து பின்னே நகர்ந்தாள்.
அவள் பின்னே நகர்ந்தாலும் விடாமல் அவள் கை பிடித்து, “ஏய்… இப்போ நீ எதற்கு இங்க வந்த,” என்று கர்ஜித்தான்.
அவளின் பயம், அவன் பிடித்திருந்த கைகளிலேயே தெரிய,, ஒரு நிமிடம் கண்களை மூடி திறந்து விட்டு மெதுவாக, ” இப்போ எதுக்கு இங்க வந்த, “என்றுக் கேட்டான்.
“இல்லை என் பேக் உள்ள இருக்கு, ” என்று சிறு பிள்ளை போல் கண்கள் கலங்கி கையை உள் புறம் கை நீட்டி காட்டினாள்.
“பேக் தானே!! அது இப்போ எல்லாம் எடுக்க முடியாது உன்னை விட்டதே பெருசு அதனால இந்த இடத்தை விட்டு சீக்கிரம் காலி பண்ணு, ” என்றான்.
“இல்லை, சார்… என் போன் காசு எல்லாம் அதுல தான் சார் இருக்கு ஊருக்கு போறதுக்கு ஒரு ரூபா கூட கைல காசு இல்லை, என்று பாவமாக சொன்னாள்.
“உனக்கு இப்போ என்ன காசுதான வேணும், ” என்று ஜிப்பில் ஏறி தான் அமர்ந்து ஓட்டும் சீட்டை தூக்கி அதில் அடுக்கி வைத்திருந்த பணக்கட்டுகளில் இருந்து ஒரு கட்டை அவளிடம் நீட்டினான்.
அந்தப் பணத்தை பார்த்து ஆவென வாயை பிளந்து நின்றவளை, “ஏய்.. என்ன அப்படி பார்த்துட்டு இருக்க… இந்த இத புடி,” என்று அவளிடம் நீட்டினான்.
“எனக்கு இவ்வளவு காசு எல்லாம் வேணாம் சார்… காஞ்சிபுரத்துக்கு போறதுக்கு பஸ் பேர், அப்புறம் நான் சாப்பிடல, அதனால் நாலு இட்லிக்கு காசு மொத்தமா ஒரு 300 கொடுங்க சார் போதும்,” என்றாள்..
“என்னால எல்லாம் அப்படி பிரிச்சி எல்லாம் தர முடியாது இஷ்டமா இருந்தா அதை வாங்கிக்கோ இல்லன்னா அப்படியே போ!! ” என்று கூறினான்.
“காசுன்னு மட்டும் இல்லை… சார்!! என்னோட போனும் உள்ள தான் இருக்கு,, மறுபடியும் போன் வாங்கணும்னா நான் ரெண்டு மாசம் வேலை பார்க்கணும் சார்,” என்று மீண்டும் அதே நிலையில் நின்றாள்.
அவனுக்கு இதுவரை இருந்த பொறுமை காற்றில் பறந்து, “ஏய்… இடியட் இதுக்குத்தானே மொத்தமா பணத்தை கொடுக்கிறேன் உனக்கு அறிவு இல்லை.. ஏதோ வெளியூர் பொண்ணா இருக்கேன்னு கொஞ்சம் பொறுமையா பேசினா ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கிற பாரு,” என்று சிடுசிடுத்தான்.
“சார்.. ப்ளீஸ் சார்” என்று கண்களை சுருக்கி அவள் இறைஞ்சியதில், அவன் கோவம் சற்று தணியும் நேரம், அவனுக்கு பின்புறம் போலீஸ் ஜீப் வருவதை தனது ஜிப்பின் கண்ணாடி வழியே பார்த்தவன். “சரி உனக்கு போன் தானே வேணும் வண்டில ஏறு,” என்றான்.
“சார்! என்ன விட்டிங்கனா நான் என்னோட பேக் எடுத்துட்டு போயிடுவேன். சார் நான் ஏன் உங்க வண்டியில் ஏறணும்,” என்று விடாப்பிடியாக நின்றவளை,,
போலீஸ் ஜீப் அவர்களின் அருகில் வருவதற்குள் அவளை கொண்டு போய் ஜீப்பின் அந்தப் பக்கம் நிற்க வைத்து அவள் இடையை சற்று தூக்கி விட்டு ஜிபியில் அமர வைத்து விட்டு வரவும், அவன் அழைத்த காவல்துறை அதிகாரி தனது ஜிப்பிலிருந்து இறங்கவும் சரியாக இருந்தது..
இவனைக் கண்டவுடன் மரியாதை நிமித்தமாக, ” வணக்கம் சார்!” என்று கையை தூக்கி சாதாரணமாக சொன்னான்.
அமுதனும் தலையை மட்டும் லேசாக அசைக்க… அவர்அவர் அருகில் வந்து, ” சார் பாடி எங்க இருக்கு,” என்று தன் கடமையில் சரியாக இருப்பதாக காட்டிக் கொண்டான்.
அமுதன், அந்த வீட்டின் திசை உள்பக்கம் கையை நீட்டி, “இங்கதான் இருக்கு டைம் இல்ல ஒரு ஆப்ன் ஹவர்ல கிளியர் பண்ணிட்டு கால் பண்ணுங்க… உங்களுக்கு நீங்க நினைச்சதை விட அதிகமான பணம் உங்க அக்கவுண்டுக்கு வந்து சேரும்,” என்று கூறினான்.
அந்த காவல்துறை அதிகாரியின் பார்வை, குழலியின் பக்கம் நொடிக்கு ஒரு முறை திரும்பி வருவதை கவனித்தவன், ” அங்கு என்ன பாக்குறீங்க.. ” என்று கேட்டான்.
“சார்! அந்த லேடி யாரு?” என்று ராகமாகவும் அவளை ஒரு மார்க்கமாகவும் பார்த்து இழுத்த இழுப்பில், இப்போது உண்மையை சொன்னால் அது அவளுக்குத்தான் ஆபத்து என்று நினைத்தானோ? இல்லை… இந்த பிரச்சனை இதோடு முடிய வேண்டும் என்று நினைத்தானோ? அது அவனுக்கே வெளிச்சம்… ஆனால், அவரிடம், “ஷி இஸ் மை ஒயிப்,” என்று தன்னை அறியாமல் சொன்னான்.
அவன் தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்து சொன்னதாலும், அவர்கள் சற்று தள்ளி நின்று பேசியதாலும், அவளுக்கு அவன் பேசியது காதில் விழாததால் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அவன் மனைவி என்று கூறிய பிறகும் அந்த காவல்துறை அதிகாரி திருத்திருவென முழித்துக் கொண்டிருக்க அவர் முன் சொடக்கிட்டு,, ” அதுதான் அவங்க யாருன்னு சொல்லிட்டேனே அதுக்கு அப்புறம் என்ன?? நீங்க… போய் உங்க வேலைய பாருங்க… ” என்று அதிகாரமாக சொன்ன தோரணையில், அவரும் அவன் பணத்திற்கு கண்ணும் கருத்துமாக வேலை செய்ய வேண்டி முன்னே சென்றவர் மீண்டும் அவனிடம் வந்து, ” சார் உங்க ஒயிப் இறந்துவிட்டதா கேள்விப்பட்டேன். ” என்று தலையை சொரிய, ” அவங்க என்னோட செகண்ட் வைஃப்… “என்றான்.
“சார் எப்போ சார் மேரேஜ் பண்ணிங்க எங்களுக்கெல்லாம் சொல்லவே இல்லையே!” என்று ஒன்னும் பல்லை இழித்துக் கொண்டு கேட்டார்.
“அது உங்களுக்கு தேவையில்லாதது நீங்க போய் வேலையை பாருங்க…” என்றுக் கூற அவரும் தன் ஆட்களோடு உள்ளே சென்றவரை, “கருணா!! அப்படியே அந்த வாசப்படியில் ஒரு பேக் இருக்கும் அது கொஞ்சம் கொண்டு வந்து குடுங்க…” என்று கூறினான்.
அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டவர், நொடி நேரத்தில் கார்குழலியின் பேக்கை கொண்டு வந்து அவனிடம் நீட்டிவிட்டு தன் கடமையைச் செய்ய சென்று விட்டார்.
அவர் அவளின் பேக்கை கொண்டு வந்து கொடுத்தவுடன் அவளிடம் நீட்டிவிட்டு, அவனும் ஏறி ஜீப்பில் அமர்ந்து வண்டியை எடுத்தான்.
அவர்கள் சென்றதைப் உறுதிப்படுத்திக் கொண்டு, காவலர் உள்ளே சென்ற பார்த்த போது தான் தெரிந்தது அங்கு ஒரே ஒரு சடலம் இருப்பது அதைப் பார்த்த பின்பு தான் “அய்யய்யோ சார் இரண்டு பாடி கிடைக்கும்னு சொன்னாரு அதுக்கு ஏத்த மாதிரி தானே! அமௌன்ட் பேசினாரு ஆனா இங்க ஒரே ஒரு பாடி தான் இருக்கு,” என்று குழம்பி அவனுக்கு… அவன் அழைக்க அவனும் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்து, ” சொல்லுங்க, ” என்றான்.
“சார்!! ” என்றானே தவிர அடுத்த வார்த்தை வரவில்லை…
” என்னனு சீக்கிரம் சொல்லுங்க…. ” என்று அந்த பக்கம் இருப்பவன் பொறுமை இழந்து கத்த தொடங்கினான்.
“சார் இங்க ரெண்டு பாடி இருக்குன்னு சொன்னீங்க.. ஆனா, ஒரு பாடி தான் சார் இருக்கு,” என்றார் அவரும் பதட்டத்துடன்,,
” ஆமா எனக்கு இன்னொரு கொலை பண்ற மூடு போயிடுச்சு… திரும்பவும் கொல்லுற மூடு வரும்போது, கொன்னுட்டு உங்களுக்கு சொல்றேன். அப்போ நம்ம அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.. ஆனா, இப்போ உங்களுக்கு பேசின பணத்தை வேலை முடிச்சிடவுடனே கொடுத்துடறேன், ” என்று போனை வைத்து விட்டான்.
அதை அருகில் இருந்து கேட்ட அவளுக்கு, “என்னது கொல்லுற மூடு போயிடுச்சா!! அப்போ இவருக்கு திரும்பவும் மூடு வந்தா என்னை கொல்றதுக்காக தான் இந்த வண்டியில் ஏத்தி கூட்டிட்டு போயிட்டு இருக்காறா?” என்று யோசித்தவள்.
” சார்! இங்கே நிறுத்துங்கள் சார் நான் இறங்கி எங்க ஊருக்கு போய்டறேன். ” என்றாள்..
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் உன்னைய வேற அவன் பார்த்துட்டான். திரும்பவும் வேற எங்கேயாவது பார்த்தா உனக்கு தான் பிரச்சனை.. அதனால நீ எந்த ஊருக்கு போகணும்னு சொல்லு நான் அந்த ஊரு பஸ் ஸ்டாண்ட்ல விட்டுட்டு என் வேலையை பார்க்க போறேன்,” என்றான்.
இது அமுதன் தானா என்று ஒரு நிமிடம் அவன் தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள சந்தேகத்திற்கு இடமின்றி அது அமுதன் தான் என்று அந்த கண்ணாடியும் பறைசாற்றியது.
அதைக் கேட்டவள் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “சார் நீங்கள் என்னை இங்கேயே இறக்கிடுங்க எனக்கு ரொம்ப பசிக்குது நான் எங்கேயாவது ஒரு தள்ளுவண்டி கடையில் நாலு இட்லியை சாப்பிட்டு என் ஊர பார்க்க போறேன்.” என்றாள்.
அவள் பசி என்று சொன்னவுடன் தான் தன் வயிறும் பசியை உணர்த்த ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் நிறுத்தி அவன் குதித்து விட்டு, முன்னே சென்று அவள் வரவை எதிர்நோக்க… அவளோ அந்த ஜிப்பிலேயே அமர்ந்திருந்ததை உணர்ந்தவன் அவளிடம் வந்து, ” மகாராணிய வான்னு கூப்பிட்ட தான் வருவீங்களோ? ” என்றான்.
” அங்க எல்லாம் கொல்லாம இவரு இங்க வச்சு தான் நம்மள கொல்ல போறாரு, ” என்ற மிரட்சியிலேயே இறங்கினாள்.
அதே நேரம், திருவல்லிக்கேணி டி 1 காவல் நிலையத்திற்கு, கார் குழலியின் இளமையான புகைப்படத்துடன் ஒருவன் உள்ளே நுழைந்தான்.
தொடரும்.…
கதையின் போக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்க… அப்படியே உங்களின் விமர்சனத்தையும், மதிப்பீட்டையும் தந்து விட்டுச் செல்லுங்கள்.…
