தூரிகை 5❤️

அவளை காவல் அதிகாரிடம் தன்னை அறியாமல், மனைவி என்று சொல்லி விட்டு அவளை அழைத்துக் கொண்டு,   ஐந்து நட்சத்திர ஓட்டலிருக்கு அழைத்து வந்தான். 

அங்கு வந்தும் அவள் அவன் காவல்துறைனிரடம் பேசியதையே நினைத்து மிரட்சியுடன் அமைதியாக அமர்ந்திருக்க…  அவன் வந்து திட்ட அவனுடன் சென்றாள்.

அவன் அங்கு அடிக்கடி வரும் நபர் என்பதால், அவனை இரு கரம் கூப்பி வரவேற்றனர். 

அவள் இதுவரை இது போன்ற இடங்களுக்கெல்லாம் வராததால் ஏதோ?? பஞ்சு மிட்டாய் கடையை சிறு பிள்ளைகள் வாயைப் பிளந்து வேடிக்கை பார்ப்பது போல், கையில் ஒரு கை பையை வைத்துக் கொண்டு, கண்ணையும் கழுத்தையும் மேலே அண்ணாந்து பார்த்துக் கொண்டே, சென்றவளை அங்கிருந்தவர்கள், அவளையும் அவளின் உடையையும் பார்த்து,” இங்க பாருமா இங்க எல்லாம் ஓசி சோறு போட மாட்டாங்க.. போ! போ!” அவளைத் தடுத்து நிறுத்தினர். 

“அதுதான் எனக்கே தெரியுமே வெளியே தள்ளுவண்டி கடையில நாலு இட்லி சாப்பிட்டு போக வேண்டிய என்னை கூட்டிட்டு வந்துட்டு அவர் பாட்டுக்கு முன்ன போயிட்டாரே!! ஐயோ, இப்போ எப்படி இங்க இருந்து வெளிய போய் பஸ் புடிச்சி வீட்டுக்குப் போறது, 

அம்மாக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லலாம்னாலும், போன் வேற ஸ்விட்ச் ஆஃப் ஆகி போச்சு, என்ன பண்றது,” என்று யோசித்தவள். அங்கிருந்தவர்களிடம், “அண்ணா!! இங்க இருந்து எப்படி வெளியே போறதுன்னு கொஞ்சம் சொல்லுங்கண்ணா!!” என்று பாவமாக கேட்டாள்.

“ஏன்?? உள்ள வர தெரிஞ்ச உனக்கு வெளிய போக தெரியாதா?” என்று அங்கிருக்கும் செக்யூரிட்டியும் சிடுசிடுத்தார்.

“நானா எங்க அண்ணே வந்தேன் என்னையவே ஒருத்தர் கூட்டிட்டு வந்தாரு,” என்று அப்பாவியாக சொன்னவளை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு, ” ஓ நீ கேசா, ” என்றார்.

அவர் பேசிய பாஷை அவளுக்கு புரியவில்லைனாலும், அவரின் பார்வை புரிந்துகொண்டு தன் பையை வைத்து தன் தன்னை மறைத்துக் கொண்டு, ” என்ன அண்ணே உன் பார்வையே சரியில்லை பார்த்து பேசுங்க….” என்று கண்களை உருட்டி சொல்லி வெளியே செல்லவும்,,  

இவ்வளவு விஷயம் இங்கு வெளியே நடந்து கொண்டிருக்க உள்ளே சென்றவன் தனது இருக்கையில் அமர்ந்த பிறகு தான் தெரிந்தது அவள் தன்னுடன் வராதது, “இவ வேற ஒருத்தி எங்க போனான்னு தெரியலையே” என்று  கதவை திறந்து வேகமாக வெளியே வந்து, “ஏய்… என்று அழைத்துக் கொண்டே அவளை விட வேகமாக அவள் முன் வந்து கையைப் பிடித்து இழுத்து, ” நான் போனா என் பின்னாடியே உனக்கு வர தெரியாதா? ”  என்று கணவன்  தன் மனைவியை கேட்பது போல், உரிமையாகவும் கண்கள் சிவக்க கோவமாகவும் கேட்டான்.

 “இவர் என்ன இப்படி கோவமா பாக்குறாரு… ஒருவேளை இப்பவே எல்லாரும் முன்னாடியும் என்ன கொன்னுடுவாரோ?? என்ற பயத்திலேயே கண்களை விரித்து பார்த்தவளின் கண்களை  ஒரு நொடி கூட பார்க்காமல் அவளின் பருத்தி பஞ்சு கையை வன்மையாக பிடித்துக் கொண்டு உள்ளே இழுத்துச் சென்றான். 

 அவளும் மகுடிக்கு அடங்கி பாம்பை போல் அவன் கை வளைவுக்குள் சென்று, அவனுடன் உணவு மேஜையில் அமர்ந்தாள். 

 அவன் அந்த நாற்காலியில் சாய்ந்து, இடக்கையை நாற்காலியின் சாய்வு விளிம்பிலும், வலது கையை தன் தொடையிலும் வைத்துக் கொண்டு,, அமர்ந்திருந்தான்.

அவள் அந்த ஓட்டலில் ஒளிரும் விளக்குகளை,  பொருட்காட்சியை போல் அதிசயத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன அப்படி பார்க்கிற, இதுவரைக்கும் இந்த மாதிரி இடத்திற்கெல்லாம் நீ போனது இல்லையா?” என்று கேட்டான்.

 அவள் இல்லை என்பது போல் தலையை ஆட்டவும், ” சரி சரி பசிக்குதுன்னு சொன்ன இல்ல உனக்கு என்ன வேணுமோ சொல்லு ஆர்டர் பண்றேன் வந்தவுடனே சாப்பிட்டு உன்னை கொண்டு போய் எங்க விடணுமோ அங்க விட்டுட்டு என் வேலையை பாக்க போறேன் எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு காசு, ” என்றான். 

” சார் அதுக்கு தான் நான், ” என்று அவள் வாயை திறக்க முன்னே!! அவன் தன் வாயில் ஆள்காட்டி விரலை வைத்து விட்டு, ” எதுவும் பேசக்கூடாது சாப்பிடுறதுக்கு என்ன வேணும் மட்டும் சொல்லு, ” என்று ஒரு ஆசிரியரை போல் கண்டித்தான்.

“எனக்கு, நாலு இட்லி மட்டும் போது சார்,!” என்றாள். 

“வெறும் இட்லி மட்டும் போதுமா?? தொட்டுக்க எதுவும் வேண்டாமா?” என்றான்.

” சார்! இவ்ளோ பெரிய ஹோட்டலில் இட்லி மட்டுமா தருவாங்க..  சட்னி சாம்பார் தர மாட்டாங்களா!” என்று கேட்டாள்.

“அப்போ அதுவே போதுமா? பக்கவா!!” என்று கட்டை விரலை உயர்த்திக் கேட்க அவளும்,” போதும் சார்!! ” என்றுக் கூறி விட்டு, பள்ளி மாணவர்கள் புத்தகத்தை நெஞ்சோடு அணைப்பது போல் கைப்பையை நெஞ்சோடு அணைத்து, மிரட்சியுடனே அமர்ந்திருந்தாள்.

அப்போது, அங்கு வேலை செய்யும் பேரரை சொடக்கிட்டு அழைத்து, ” அவங்களுக்கு நாலு இட்லி, சட்னி சாம்பார் எனக்கு ஒரு வெஜிடபிள் சூப் வேக வைத்த கொண்ட கடலை அவ்வளவுதான்!! கொஞ்சம் பாஸ்ட்டா வாங்க ஐ ஹேவ் நோ டைம், ” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னான்..

 அவன் வந்தால் எப்போதும் இதே தான் சொல்வான் என்பதால் அந்த பேரரும் வேகமாக சென்று அவன் கேட்டதை கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்று விட்டான்.

 அவள் ஒவ்வொரு வாய் சாப்பிடும் போதும் அவனைப் பார்த்துக் கொண்டே தான் சாப்பிட்டாள்.

 அது எப்படி இவ்ளோ பெரிய உடம்புக்கு இது மட்டும் போதுமானதாக இருக்கும்.. என்று யோசனை வேறு அந்த சிறு மூளையில்!! ஆனால், அதைக் கேட்டால் அவன் என்ன சொல்வானோ? என்ற பயத்திலேயே இவனிடமிருந்து இப்போது தப்பித்தால் போதும் என வேகமாக அந்த இட்லியை சாப்பிட்டாள்.

இங்கு காஞ்சிபுரத்திலோ?? குழலியின் தந்தை அழைத்ததில் வேகமாக ஓடி வந்து, அவர் அருகில்  பயத்துடனும அமைதியாகவும் இருந்தார். அவள் தாய் காமாட்சி!!

படுக்கையில் விழுந்திருந்தவர் தன் மனைவியை பார்த்து” ஏண்டி உன் பொண்ணு சென்னை போய் சேர்ந்தாலா! இல்லையா? இல்லை அப்படியே எவன் கூடயாவது ஓடிப் போயிட்டாளம்மா இன்னுமும் எந்த தகவலும் வரல என்னை இப்படியே படுக்கையில் படுக்க வைத்து ஆத்தாளும் மகளும்,  சாகடித்துவிட்டு அவள் கல்யாணம் கட்டிக்கிட்டு வாழ முடிவு பண்ணிட்டாளா!! என்று அவர் இந்த நிலையிலும்,  கேட்டார்.

அதை கேட்டவருக்கு கோவம் வந்து, ” அப்படியே ஓடிப் போயாவது அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையுதான்னு பார்க்கலாம்…

 இளம் வயசுல தான் ஒண்டிக்கட்டையாவே இருந்துட்டா!! சாகும்போதாவது யாரோ ஒரு துணையோட மடியில நிம்மதியா சாகட்டுமே!! கடவுளே அதுக்காகவது அவளுக்கு குடுப்பனையக் கொடு, என்று மனதார வேண்டிக் கொண்டார்.

 அது அவ இங்க  இருக்கிற வரைக்கும் அது நடக்குமான்னு தெரியல!! என்றார். 

ஆனால், என்ன எல்லாம் மனதோடு பேசிக் கொண்டது மட்டுமே!! வெளியில் கைகளை பிசைந்து கொண்டு அமைதியாகத்தான் நின்றிருந்தார்.

 இப்படி அமைதியா! இருந்து எல்லா காரியத்தையும் சாதித்துக்கொள்ளுங்கள். போய் அவ என்ன ஆனான்னு என் தம்பி மகன் கிட்ட கேட்டு எனக்கு சொல்லு என்று அனுப்பி வைத்தார்.

 அவரும் தன் மகளின் நிலையை எண்ணி கண்களில் கண்ணீர் வடித்துக் கொண்டே, மீண்டும் ஒரு முறை கடவுளிடம் வேண்டிக் கொண்டு இந்த ஆளு சொல்றதுக்காக இல்லை என்றாலும், அவ முதன்முதலாக சென்னைக்கு தனியாக போயிருக்கா அதுக்காகவது போன் பண்ணி கேட்போம் என்று அவளுக்கு அழைக்க அந்த புறம் ஸ்விட்ச் ஆஃப் என்று வரவும் பதறிப்போய் தன் கணவரின் சித்தப்பாவின் மகனிருக்கு அழைத்தார்.  

அவன் போனை எடுத்ததும், ” சேகரு தங்கச்சி வந்துட்டாளா!” என்று ஆர்வமும் பதட்டமாக கேட்டார்.

” சித்தி என்ன விளையாடுறீங்களா அவ இன்னும் வரவே இல்லை… ” என்றுக் கூறினான்.

“அதில் அவரும் பதறி, “என்னப்பா சொல்ற நான் அவளை  நாலு மணிக்கு வண்டி ஏத்தி விட்டுட்டேனே!  இந்நேரம் சென்னை டிராபிக்ல வந்திருந்தா கூட வீட்டுக்கு வந்து இருக்கணுமே பா,” என்றார். தாயாக பதறி,,

“சித்தி அவகிட்ட என்னோட அட்ரஸ் எல்லாம் சரியா கொடுத்து அனுப்புனீங்களா!” என்று அவனும் கேட்டான்..

“அதெல்லாம் சரியா தான் பா கொடுத்து அனுப்பினேன். அவ எப்படியும் வழி மறந்து போயிடுவான்னு சொல்லி தான் ஒரு, பேப்பர்ல உன்னோட அட்ரஸ் எழுதி கொடுத்து அனுப்பினேன்.” என்றுக் கூறினார்.

“அப்ப பஸ் எதுவும் மாறி போயிட்டாளான்னு தெரியல சித்தி,, நான் இன்னும் ஒரு பத்து நிமிஷம் இல்லை கால் மணி நேரம் பார்க்கிறேன். அப்படியும் அவ வரலனா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடறேன்.” என்றான்.

“அய்யய்யோ போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் வேணாம்ப்பா,” என்று அவர் பதறிபோனார்.

“போலீஸ் ஸ்டேஷன் சொன்னவுடனே ஏன்? சித்தி பதறி போறீங்கஒன்னும் பிரச்சனை இல்லை என்னோட பிரண்டு இதே ஏரியாவுல எஸ். ஐ யா இருக்கான் அவன்கிட்ட சொல்லி என்னை ஏதுன்னு பாத்துக்கலாம்.” என்று அவன் சொல்லி போனை வைத்துவிட்டு அவன் சொன்ன நேரத்திற்காக காத்திருந்தான். ஆனால்,  அவள் வந்த பாடில்லை…

அதனால், தன் சட்டையை எடுத்து மாட்டி வெளியே செல்லும் நேரம் அவன் மனைவி தடுத்து, ” ஏங்க… வந்தவளுக்கு இங்க வரத் தெரியாதா?  நீங்க வேற எதுக்கு போகணும், ” என்று கேட்டாள்.

 “அவ நம்மள நம்பி தான் சென்னைக்கு வந்து இருக்கா,, அப்படியே விடவும் முடியாது?? அதே நேரம் அவ வந்தா அந்த ஆளுக்கு மெடிக்கல் செலவுக்கு வர காசுல,, கொஞ்சம் நாமளும் எடுத்துக்கலாம்,” என்றான்.

 “எங்க டிரஸ்ட் மூலமா போறதெல்லாம் நேரா ஹாஸ்பிடலுக்கு தாங்க போகும்” என்றாள்.

” ஏண்டி அது கூட தெரியாத முட்டாளா!! நான் அந்த ஆஸ்பிட்டல்ல அதிகமா காசு சொல்ல சொன்னதே நான்தான் எனக்கு எல்லாம் தெரியும், ” என்று கூறி தன் மனைவியை அடக்கிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு திருநெல்வேலி டி1 போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான்.

அங்கே காவல் நிலையம், இரவு விளக்குகளை போட்டுக்கொண்டு வெளியில் சிவப்பு நிற ஜீப் நின்று கொண்டிருக்க…  தனது வண்டியை அந்த சிவப்பு நிற ஜிப்பின் அருகில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு,

 உள்ளே சென்று தன் நண்பனை தேடிப் பார்க்க அவன் அங்கு தான் இருந்தான்.

 இவன் உள்ளே சென்று கார்குழலின் இளமையான புகைப்படத்தை காட்டி அவளின் வந்ததுக்கானா நோக்கம்…

 எல்லாவற்றையும் சரியாக சொல்லிவிட்டு,, அதை எழுத்துப்பூர்வமாக எழுதியும் தந்து தன் நண்பனிடம், “கொஞ்சம் சீக்கிரமா கண்டுபிடித்து தாங்க சார்” என்று சொல்லி வெளியே செல்ல  எதிரே இன்ஸ்பெக்டர் கருணா உள்ளே சென்றார்.

அவர் தனது எஸ் ஐ இடம், ” என்ன திலீபன் உன்னோட பிரண்டு வந்துட்டு போற மாதிரி இருக்கு என்ன வாம், ” என்று கேட்டார்.

 அவனும் கார்குழலியின், புகைப்படத்தை காட்டி,, “இந்த பொண்ணு காணோமா,” என்று அவன் சொல்லி விவரத்தை எல்லாம் அவனிடம் கூறினான்… 

 அவருக்கு அந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தபோது எங்கோ பார்த்த நினைவு வர,, மீண்டும் மீண்டும் அதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 அமுதனும் கார்குழலியும் உணவை உண்டு விட்டு அமர்ந்திருக்க பேரர் வந்து பில் என்று வைத்து விட்டு செல்ல அமுதனிடம் திரும்பி, ” இருங்க சார் நானே காசு தரேன்!! ” என்றாள்.

அவனும், பணம் மிச்சம் என்று பில்லை அவள் புறம் நகர்த்த, அதில் வந்து தொகையை பார்த்தவளுக்கு  முழி பிதுங்கி வெளியே வந்துவிடும் போலானது நாலு இட்லிக்கும் ஒரு சூப்பிற்கும் 1200 ரூபாய் பில் என்று வந்திருந்தது..

 உடனே அவனிடம், “சார்!! வேற யாருக்கோ தரவேண்டிய பில்லை உன்கிட்ட கொடுத்துட்டு இருக்காங்க சார்,” என்று அப்பாவியாக கூறினாள்.

 “இல்லை இது நமக்கான பில்லு தான் பே பண்ணிட்டு வா!” என்று அவன் முன்னே செல்ல…  அவன் கடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்னே ஓடி, “சார் என்கிட்ட இவ்வளவு காசு எல்லாம் இல்ல என்கிட்ட சரியா 300 ரூபாய் தான் இருக்கு, ” என்றாள்.

 “அப்போ சரி நானே பே பண்ணிக்கிறேன்.’ என்று அவன் தன் காடை எடுத்து ஸ்யப் செய்துவிட்டு காசை கொடுத்து விட்டு வண்டியில் ஏறி, அவளை கொண்டு வந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு சென்று விட்டான்…

 அவள் அங்கு வந்து ஒரு மணி நேரமாகியும், பேருந்து வராமல் இருக்க அந்தப் பேருந்து நிலையத்தை சுற்றி அத்தனை கூட்டம் இருந்தும் தனித்து விட்டு பறவையாய் எங்கு செல்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தவளை ஒருவன் குறுகுறுவென பார்த்து துரத்த எதைக் கண்டாலும் பயந்து நடுங்குபவள் ஓட்டம் பிடித்தாள்.

தொடரும்.…

 

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மேகத்தின் தூரிகை இவள்(ன்)
924 6 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page