தூரிகை 6 ❤️
காசேதான் கடவுளப்பா…
கடவுளுக்கும் இது தெரியுமப்பா…
காசேதான் கடவுளப்பா…
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா…
கைக்கு கை மாறும் பணமே…
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே…
கைக்கு கை மாறும் பணமே…
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அவளை இறக்கிவிட்டு, இந்தப் பாடலை பாடிக்கொண்டும் பணத்தை முகர்ந்து கொண்டும் தன் வாகனத்தை தனது வீட்டை நோக்கி சீரான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான். அமுதன்!!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும் அவன் வீட்டிற்கும் கிட்டத்தட்ட 30 லிருந்து 40 கிலோமீட்டர் தூரம் இருக்கும் என்பதால்,, அந்த நேரத்தில் கூட பணத்தை விட்டு இருக்க முடியாமல்,, அதை முகர்ந்து கொண்டே அதன் மீது உள்ள காதலால் பாடலையும் பாடி கொண்டு செல்கிறான்.
அதற்கு மாறாக வந்து ஒரு மணி நேரமாகியும், பேருந்து வராமல் இருக்க அந்தப் பேருந்து நிலையத்தை சுற்றி அத்தனை கூட்டம் இருந்தும் தனித்து விட்ட பறவையாய் எங்கு செல்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தவளை ஒருவன் குறுகுறுவென பார்த்தான்.
முதலில் அவன் பார்வையில் இருந்து விலகி சற்று ஒதுங்கி நின்றாள்.
அவனின் பார்வைக்கு பயந்து ஒதுங்கி நின்றதே தனக்கான, தூண்டுகோளாக நினைத்துக் கொண்டு அவளின் அருகில் வர முயற்சித்தான்.
அங்கு ஆங்காங்கே மக்கள் கூட்டமாக இருந்தாலும் இவளுக்கு யாரிடம் செல்வது என்று தெரியாமல் ஓட்டமும் நடையுமாக அந்த இடத்தை விட்டு செல்ல முயற்சித்தாள். இவனும் அவள் பின்னாடியே சென்றான்.
ஒரு கட்டத்திற்கு மேல் ஓடியவள் அங்கு யாரும் இல்லாத தனி இடத்திற்கு தன்னை அறியாமல் வந்து விட,, அங்கிருந்து எங்கு எப்படி செல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த வேலை அவனை துரத்தியவனும் அவளிடம் வந்து நின்று, ” ஓ ஆள் இல்லாத இந்த இடத்துக்கு என்னைக் கூட்டிட்டு வருவதற்கு தான் இவ்வளவு பில்டப் பண்ணியா? நான் கூட என்னவோ நினைச்சேன் ரொம்ப பழக்கம் தான் போல” என்றான் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து!!
அவளுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது கூட புரியாமல் கையெடுத்து கும்பிட்டு விட்டு, ” அண்ணா என்னைய விட்டுடுங்க…” என்று கெஞ்சினாள்.
“அது எப்படிமா நீயா வந்து சிக்கி இருக்க உன்னை எப்படி அப்படியே விட முடியும்,” என்று மெல்ல அவளிடம் நெருங்கி, அவள் எங்கும் நகரதவாறு அவள் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டு தன் நண்பனுக்கு அழைத்தான்.
அவன் அழைப்பை ஏற்ற அவன் நண்பனும், “சொல்லு மச்சான் என்ன ஆச்சு,” என்றான்.
“மச்சான் நீ எங்க இருந்தாலும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு பேக் சைடுல இருக்கிற நம்ம இடத்துக்கு வந்துடு, அப்படியே நம்ம ஆட்களையும் கூட்டிட்டு வந்துரு…. நான் இவ்வளவு நேரத்துக்கு எதுக்கு இவ்வளவு அவசரமா கூப்பிடறேன்னு உனக்கே தெரியும், நாங்க இங்க ரெண்டு பேரும் உங்களுக்காக வெயிட்டிங் டா!” என்று சிணுங்கி கொண்டே கூறிவிட்டு ஃபோனை வைத்து விட்டான்.
இங்கு ஒருவளுக்கோ?? அவனின் சிணுங்கலும் புரியவில்லை அவன் பேசுவதும் புரியவில்லை…. ஆனால், ஏதோ? ஆபத்தில் சிக்கி இருக்கிறோம் என்று மட்டும் புரிந்தது. அவளுக்கு வெளி உலகம் தெரியாத மழலையாய் தத்தளித்து மீண்டும் அவனிடம், “அண்ணா! நீங்க பேசுறதே எனக்கு புரியல என்னை விட்டுங்க அண்ணா!! ” என்று அந்த அரக்கனின் கையில் சிக்கிய கிளி போல் அவன் கை சிறைக்குள் சிக்கி சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டே,, அவன் கையில் இருந்து தன் கையை மீட்க எவ்வளவு முயற்சித்தாலும் அவன் கை மேலும் மேலும் இறுக்கி தன் பக்கம் இழுத்து, “நீயா வந்தா நான் எனக்கு தேவையானதை எடுத்துக் கிட்டு விட்டுடுவேன் இல்ல கொன்னு தூக்கி போட்டுடுவேன். ” என்று வார்த்தைகளை பற்களின் இடையே கடித்து துப்பினான்.
தந்தையின் சொல்லுக்கிணங்க,, தன் கணவர் இறந்தப் பின்பு கூட யாரையும் இதுவரை கண் கொண்டு பார்க்காதவள். இன்று இவன் தனக்கு தேவையானதை எடுத்துக் கொள்கிறேன் என்கிறானே! கல்லுக்கு சேலை கட்டினால் கூட பார்க்கும் சில பேர் இருக்கும் இடத்தில் ஒன்று, தைரியமாக இருக்க வேண்டும், இல்லை தன் தந்தையின் பேச்சை மீறி இப்போது தனியாக வந்து இருக்கக் கூடாது என்று ஏதோ ஏதோ? நினைத்து கொண்டே அவன் போக்கிற்கு வந்தால் அந்த கூண்டு கிளி!!
அவள் கையை பிடித்து இருப்பவனோ?? அதை பற்றி எல்லாம் யோசிக்காமல் மாமிசம் உண்ண காத்திருக்கும் கழுகு இறையை இழுத்து செல்வது போல், அவளை அங்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லவும் அவர்களின் நண்பர்களும் சரியாக இருக்க அவள் கையை விட்டு தன் நண்பர்களிடம் சென்று, “என்னடா சீக்கிரம் வந்துட்டீங்க… ” என்றான்.
அவன் பேசிக் கொண்டிருந்த நேரம் அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இது தான் நேரம் என்று அவள் தன் ஓட்டத்தை தொடரந்தாள்.
திருவல்லிக்கேணி டி 1 போலீஸ் ஸ்டேஷன் :
அவளை எங்கோ? பார்த்தது போல் தோன்றிய கர்ணாவிற்கு, அவள் 20களின் புகைப்படத்தை இன்னும் சற்று உற்றுப் பார்த்து, தன் நினைவுக்கு கொண்டு வந்தவர். வேகவேகமாக எஸ்.ஐயை அழைத்து, ” டேய் இது பெரிய இடத்து விவகாரம், உன் பிரண்டை கூப்பிட்டு ஏதாவது சொல்லி அனுப்பிவிட்டு இந்த கேஸ் தூக்கி குப்பையில் போட்டுட்டு போயிடு,” என்றார்.
“என்ன சொல்லுறீங்க சார்!! அப்படி என்ன ஆச்சு,” என்று கேட்டான். அந்த எஸ். ஐ.
கர்ணா நடந்தவற்றையெல்லாம் கூறி, ” இப்போ புரியுதா நான் ஏன்? இந்த விவகாரத்தில் உன்னை தலையிட வேணாம்னு சொல்றேன். இன்னும் ஒன்னு நீ இந்த கேஸ் எடுத்து, இதனால எதாவது பிரச்சனை வந்தா என்னை இழுக்க கூடாது, ” என்று கூறிவிட்டு அந்த போட்டோவை தூக்கி தூர வீசி விட்டு சென்று விட்டார்.
அவர் சென்றதும், அந்த எஸ். ஐ. அவன் நண்பன் சேகரை அழைக்க.. அவனும் பதறி அடித்துக் கொண்டு வந்து, “என்ன சார் இவ்ளோ சீக்கிரம் கிடைச்சிட்டாங்களா!” என்று எல்லோர் முன்னாடியும் கேட்டு அவனை மெல்ல அவன் கை பிடித்து வெளியே அழைத்துச் சென்று, ” என்னடா கிடைச்சுட்டாளா!” என்று கேட்டான். சேகர்!!
“நான் அதுக்கு கூப்பிடலடா!! ” என்று சொல்லிவிட்டு அமைதியாகினான்.
“என்னடா ஏதோ சொல்ல வந்துட்டு, அமைதி ஆகிட்ட,” என்று கேட்டான்.
“டேய் இதை இன்ஸ்பெக்டர் உன்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னாரு இருந்தாலும் நான் சொல்றேன்,” என்று இன்ஸ்பெக்டர் கர்ணா கூறியதை எல்லாம் கூறிவிட்டு, “இனி அந்த லேடியை தேடுவது விட்டுட்டு வீட்டுக்கு அடுத்த வேலையை போய் பாருடா!!” என்று அனுப்பி வைத்து விட்டான்.
அவனும் அவன் சொன்னதை எல்லாம் நம்புவதா? இல்லையா? என்று யோசனையிலேயேயும், அவளால் தனக்கு வர வேண்டிய பணமும் கைவிட்டுப் போனதையும் எண்ணிக்கொண்டே வந்தவனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தோன்ற அந்த வேலையை செய்வதற்காக படுவேகமாக தன் வீட்டிற்கு சென்று விட்டான்.
கையில் பணத்தை வைத்துக் கொண்டு, பாட்டு பாடி வந்தவனின் கையில் இருந்த பணம் கைதவறி கீழே விழவும், ” அச்சோ மை டார்லிங் கீழே விழுந்துடீயே, நீதான் எனக்கு முக்கியம், ” என்று அதனுடன் பேசிக்கொண்டே வண்டியை கொண்டு போய் ஓரமாக நிறுத்திவிட்டு, கீழே குனிந்து பணத்தை எடுக்கும் போது தான் தெரிந்தது அங்கு குழலின் போன் விழுந்திருப்பது.
பணத்துடன் சேர்த்து அதையும் எடுத்தவன், இந்த போன் யாருதா? இருக்கும். என்று ஒரு நிமிடம் யோசித்து விட்டு, ” ஓ அந்த ரெட் கலர் சேரி கட்டின லேடிது தான் இருக்கும்…
யாரோட பொருளும் நமக்கு எதுக்கு, ” என்று தூக்கி விசிறி அடிக்க போனவனின் கண் முன் அந்த போன் வாங்குறதுக்கு கூட நான் ஒரு மாசம் உழைக்கணும் சார்!! என்றுக் கூறிய அவளின் வார்த்தை நினைத்துப் பார்க்கவும், இதைக் கொண்டு போய் கொடுக்கலாமா? என்றது ஒரு மனம்,, இந்த டப்பா போனை எடுத்துட்டு போய் கொடுக்கறதுக்கு நான் திருப்பி எவ்வளவு தூரம் டிராவல் பண்ணனுமா? என்றது அவன் மூளை,,
இவன் யோசித்துக் கொண்டிருந்த போதே!! இன்ஸ்பெக்டர் கர்ணாவிடம் இருந்து போன் வந்தது. அதை எடுத்து காதில் வைத்தவன், ” சொல்லுங்க கர்ணா! நான் தான் உங்களுக்கு அமௌன்ட் நாளைக்கு தரேன்னு சொன்னேனே அப்புறம் ஏன்? இவ்ளோ நேரத்துக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்றீங்க…. ” என்று மூச்சு விடாமல் பேசினான்.
“சார் நான் அதுக்காக கூப்பிடல சார், ஒரு விஷயம் உங்க கிட்ட பேசணும் அதுக்காக தான் கூப்பிட்டேன்.” என்றான்.
“சொல்லுக் கர்ணா எதுவா இருந்தாலும் சீக்கிரமா சொல்லு,” என்று அவசரப்படுத்தினான். போய் தன் காதலிடம் கொஞ்ச வேண்டி,,
“சார்!! அது வந்து மேடம் ஓட போட்டோ காட்டி, ஒருத்தர்,” என்று ஆரம்பித்து, அனைத்தையும் கூறி முடித்து விட்டு, “இப்போ நான் என்ன சார்!! பண்ணட்டும்,” என்றார்.
“என்ன பண்ணட்டும்னா?? ” எதை பற்றி என்றான்.
“அது தான் மேடம் பற்றி,” என்று அவரே! யோசித்து முடித்த வேலையைப் பற்றிக் அவனிடம் மீண்டும் கேட்டவும், “அது தான் நீயே எல்லாமே யோசிச்சுட்டீயே அப்பறம் என்ன? என்கிட்ட வேற கேட்டுட்டு இருக்க…. ” என்றான் சற்று அதட்டலாக,,
“அது புரிது சார்!! ஆனால், ” என்று இழுத்தார்.
“என்ன கர்ணா உன் பிரச்சனை நான் எவ்வளவு முக்கியமான வேலையில் இருந்தேன் தெரியுமா? இப்போ எதுக்கு இப்படி போன் பண்ணி டார்ச்சர் பண்ணிட்டு இருக்க… நான் தான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேனே, இனி வர வேலைக்கு அட்ஜஸ்ட் பண்றேன்னு அப்பறம் வேற என்ன வேணும் உனக்கு,” என்றான்.
“அது எல்லாம் கூட மறச்சிடாலாம் ஆனால், இது லேடீஸ் விஷயம் சார்!! அது தான் கொஞ்சம் பயமா இருக்கு… ” என்றான்.
“நீ சொல்றதைப் பார்த்தா, நான் அவளை கடத்திட்டு வந்து வச்சி இருக்கேன் சொல்லுறீயா? ” என்றான்.
“எனக்கு என்னமோ? அப்படி தான் தோணுது ஆனால், இதை வெளிய சொன்னா அப்பறம் என் பாடிய எடுக்க… இன்னொருத்தன் தான் வரணும்… ” என்று இவன் மனதுடன் பேசிக் கொண்டிருக்க…. அங்கு அவனோ?” கர்ணா! கர்ணா!! ” என்றுக் கத்திக் கொண்டிருந்தான். அதில் தெளிந்தவன், “அண்ணா!! நான் போய் உங்களை அப்படி எல்லாம் சொல்லுவேனா?? ” என்றுக் குழைந்தான்.
அவன் குழைவதிலேயே புரிந்துக் கொண்டவன், அவன் இப்போது நமக்கு தேவைப்படுபவன் என்பதால்,, “நீ ரொம்ப இல்லாத மூளையை போட்டு குழப்பிக்காத எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்.” என்றுக் கூறி போனை வைத்து விட்டு, அவள் போனை தூக்கி தன் அருகில் இருக்கும் சீட்டீன் மேல் விசிறி அடித்து விட்டு, தன் காரை இன்னும் வேகமாக செலுத்தினான்.
இங்கு அவனை தள்ளி ஓடியவளை விட வேகமாக பாய்ந்து சென்று, அவளின் இடையைப் பற்றினான். அந்த அரக்கன்!!
அவன் கை தன் இடையில் படவும் அவள் தேகம் உலை கலனை போல் போய் கொதிநிலை அடைந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதாய் பத்திரக் காளியாய் மாறி நின்று அங்கு கீழே கிடந்த குச்சியை எடுத்து அவனை அடிக்க கை ஓங்கி ஒருவனை அடித்தும் விட்டாள்.
ஆனால், அவளை பின்னிருந்து ஒருவன் தள்ளி விட அங்கு கீழே போய் விழுந்தவளின் மேலே ஒருவன் பாய்ந்தான்.
தொடரும்…..
