தூரிகை 7❤️

அமுதன் அவளை பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு கிளம்பிச் சென்றவுடன் ஒருவன் அவளை பார்த்துக் கொண்டே இருக்க அவளும் பயந்து ஒதுக்குப் புறமாக இருந்த இடத்திற்கு தெரியாமல் சென்றவளை, அவன் ஒரு மார்க்கமாக பார்த்து அவளின் இடையில் கை வைத்தான்.

அவன் கை அவளின் இடையில் படவும் அவள் உள்ளம் உலை கலனை போல் போய் கொதிநிலை அடைந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதாய் பத்திரக் காளியாய்  மாறி அங்கு கீழே கிடந்த குச்சியை எடுத்து அவனை அடிக்க கை ஓங்கி ஒருவனை அடித்தும் விட்டாள்.

ஆனால், அவளை பின்னிருந்து ஒருவன் தள்ளி விட அங்கு கீழே போய் விழுந்தவளின் மேலே ஒருவன் அவளின் நிலையை அறியாமலே பாய்ந்தான்.

அவள் விடாமல், அவனிடம் கையெடுத்து கும்பிட்டு “அண்ணா!! என்னை விட்டுடுங்க அண்ணா!” என்று பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்க….

“ஏண்டி! என்னையவே அடிச்சிட்டு இப்போ என்கிட்ட கெஞ்சினா விட்டுடுவேனா, ” என்று வன்மமாக சிரித்துக் கொண்டே அவள் மீது  படரும் நேரம், கொஞ்ச தூரத்தில் அந்த இருட்டும் அவர்களின் காதும் கிழியும் அளவிற்கு ஹாரன் அடித்துக் கொண்டு அங்கு வந்து நின்றது.

அதனால் மெல்ல அவன் விலகி நின்று அந்த வெளிச்சமும் ஹார்ன் சத்தமும் மட்டுப் பட்டவுடன் அவள் மேல் பாயும் நேரம் 
“இங்க விட்டா வேற எங்கேயும் போக மாட்டாரு பாரு இங்கயே வந்து நிறுத்த சொல்றான்.” என்ற ஓட்டுநரின் புலம்பலுக்கு, “இது இங்க கடைசியா இருக்கு யாரும் வர மாட்டாங்க அதனால் சுத்தமா இருக்கும். ” என்று சிரித்த மேனிக்கு பதில் அளித்துக் கொண்டேஅந்த பேருந்தின் நடத்துனர் தன் கையில் இருக்கும் டார்ச் லைட்டை ஒளிர விட்டுக்கொண்டே அங்கிருக்கும் ஆண்கள் கழிப்பிடத்திற்கு வரவும்,,

அவளின் மேலே பாய்ந்தவன் சற்று தளரவிட்டு அந்த பக்கம் அவளை இழுத்துக் கொண்டு செல்லும் நேரம் குனிந்து அவன் கைகளை கடித்துவிட்டு வெளியே வெளிச்சத்திற்குள் ஓடி வந்து முகம் முழுக்க வியர்வையுடன், மூச்சு இறைக்க ஒரு தூணின் மறைவில் நின்று  அந்த தூணின் இருபுறமும், திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அந்த நேரம் பார்த்து,  ஓடி வந்ததில் தொண்டை வறண்டு போய் எனக்கு தண்ணீர் வேண்டும் கேட்க,  தண்ணீர் எங்காவது கிடைக்குமா? என்று கண்களை சுழல விட்டு பார்த்தவளின் கண்ணுக்கு, அங்கு ஒரு கடையில் தண்ணீர் பாட்டில் இருந்தது தெரியவும் அங்கே சென்று கடைக்காரிடம் கூடக் கேட்காமல் அந்த தண்ணீரை எடுத்து மட மடவென்று தன் புடவை நனைவது கூட பொருட்படுத்தாமல் குடித்தாள்.

வேறு ஒரு வாடிக்கையாளரிடம் காசை வாங்கிக் கொண்டு இவளை பார்த்த அவர் வெடுக்கென அந்த தண்ணீர் பாட்டிலை பிடுங்கிக் கொண்டு, “ஏன்மா! அப்படி என்ன அவசரம் காசுக் கொடுத்து வாங்கிக் குடிக்க தெரியாது, ” என்று கூறிவிட்டு அவள் அவளையும் உடையும் கலைந்து இருந்ததைப் பார்த்தவர், தவறாக புரிந்துக் கொண்டு, “அதானே! எங்கே எவன்கிட்டயோ போக வேண்டியது, அது முடிஞ்வுடனே வந்து இப்படி காசு குடுக்காமல் ரொம்ப தாகமா இருக்குற மாதிரி நடிச்சு தண்ணி குடிச்சு அவன்கிட்ட, பண்ண அதே தப்பு என்கிட்ட எதிர்பார்க்கிற அப்படி தானே,” என்ன என்று ஒரு மாதிரியாக கூறி கண்ணடித்தார்.

ஏற்கனவே அவர்கள் தன்னை தவறாக நடத்தியதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லை அவளால், இவர் எதுவும் தவறாக பேசியதில் கோவம் வந்து, “அண்னே!! என்ன அண்ணே ஒரு தண்ணிக் குடிச்சதுக்கே இப்படி பேசுறீங்க… தண்ணி யார் கேட்டாலும் குடுக்கணும் யாரையும் குருட்டாம் போக்குல தப்பா பேசாதீங்க…” என்று தன் சுட்டு விரலை நீட்டி  மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேசி, ” உங்களுக்கு என்ன இப்ப காசு தானே வேணும் இந்தா தரேன் இருங்க… ” என்றுக் கூறி தன் கைப்பையை தேடும் போது தான் தெரிந்தது அது அவர்கள் தன்னை இழுத்து வரும்போது விழுந்தது.

காசு இல்லாமல் போகவும் அவர் முன் அவமானம் ஆகி கண்கள் கலங்க சிறு பிள்ளை போல் கைகளை உதறி “ஐயோ!! அண்ணனே என் பேக்,” என்று   அந்த பக்கம் கையை நீட்டி வார்த்தைகள் வர மறுத்து நின்றவளை,,

சற்றும் பொருட்படுத்தாது, “என்ன பேக் காணோமா, அது காணாமல் தான் போய் இருக்கும்… ஓசி தண்ணி குடிச்சிட்டு பேச்சை பத்தியா இதுக்கு,, ஏம்மா! போமா அந்த பக்கமா, உன்கிட்ட பேசினா நான் எதுவும்  தப்பா பார்க்கிறேன் என்று சொல்லி போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணாலும் பண்ணிடுவ, ” என்று உள்ளே திரும்பி, “விமலா இந்த பொண்ணை பாரு.. காசு கொடுக்காம தண்ணி குடிச்சிட்டு ஓவரா பேசுது,” என்று தன் மனைவியை வெளியே அழைத்தார்.

வெளியே வந்தவருக்கு அவளின் தோற்றத்தை பார்த்து பரிதாபமாகி போக, ” என்னம்மா ஆச்சு இந்த தண்ணி பாட்டில் தானே வேணும், ” என்று தண்ணிர் பாட்டிலை அவளிடம் கொடுத்து விட்டு தன்,  கணவனிடம் இந்த பொண்ணு ஏதும் பிரச்சனைல மாட்டி இருக்கும் போல அதை தெரியாம பேசிட்டு இருக்கீங்க உள்ள போங்க, இந்து தன் கணவனை அனுப்பி வைத்து விட்டு இவளிடமும் திரும்பி, ” நீயும் பத்திரமா இந்த இடத்தை விட்டு வெளியே போமா!” என்றார்.

அவளும் தன் குறைகளை அவரிடம் சொல்லலாம் என்று சுற்றம் ஒரு முறை பார்த்து விட்டு, “அக்கா,” என்று அழைக்க… அவரும் தன் கையை முந்தானையில் துடைத்துக் கொண்டே முன்னே வந்து, ” சொல்லுமா!” என்று கேட்டு அவள் முகத்தையே உற்றுப் பார்த்தார்.

அவளோ?  தன் கருவிழிகளை நாலாபுரமும் சுழற்றிவிட்டு தொண்டை குழிக்குள் தன் எச்சிலை முழுங்கி விட்டு அமைதியாகவே இருந்தாள்…. “சீக்கிரமா சொல்லுமா? எனக்கு அடுத்த கஸ்டமர் பார்க்க போகணும்,” என்று இவள் அமைதியாக சிலை போலவே நின்றிததால் சற்று சிடுசிடுத்தார். விமலா!!

அவர் சிடு சிடுத்தாலும் தனக்கு இப்போது கிடைத்திருக்கும் ஒரு ஊன்றுகோல் அவர்தான் என நினைத்துக் கொண்டு மீண்டும் வலது புறம் திரும்பி பார்க்க அந்த நால்வரும் வந்து கொண்டிருந்தனர். அதனால் அவரிடம் எதுவும் சொல்லாமல், வேகமாக அங்கிருந்து  தள்ளி மீண்டும் ஒரு தூணின் பின்னே சென்று நின்று கொண்டாள்.

அவள் செய்கை புரியாமல் விழித்த விமலா, சிறிது நொடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தவர். ” அக்கா ரெண்டு செட்டு பணியாரம் குடுங்க
.. ” என்று அடுத்த வாடிக்கையாளரின் குரல் கேட்கவும் அந்தபுறம் சென்று விட்டார்.

இவ்ளோ! அவர்கள் வருகிறார்களா? என்று எட்டி எட்டி பார்த்து தன்னை எவ்வளவுக்கு எவ்வளவு சுருக்கிக்கொள்ள முடியுமோ? அந்த அளவிற்கு அந்த தூணில் சுருக்கி கொண்டாள்.

அவள் ஒன்றும் பெரிய உடல்வாகு எல்லாம் இல்லை ஒல்லியான தேகம் தான் இருந்தாலும் சிறிய கைவளைவாவது தெரிந்து விட்டால் தன் நிலைமை மோசமாகி விடுமோ? என்று பயந்து அந்த தூணிற்குள்ளே தன்னை மறைத்துக் கொள்ள முயற்சித்தாள்.
 

அவளைத் தேடி வந்தவர்களுக்கு அவள் கிடைக்காமல் போகவும் அந்த நால்வரில் ஒருவன், ” டேய் மச்சான் அந்த லேடி நமக்கு இல்ல வாடா போகலாம்… ”  என்று அழைத்தான்.

“இல்லடா இதுவரைக்கும் நான் புடிச்ச எந்த பொண்ணையும், இல்லை லேடியையும் நான் தொடாம விட்டது இல்ல இவ என்னையவே அடிச்சுட்டு இந்த பஸ் ஸ்டாண்டுக்குள்ளேயே சுத்திட்டு இருக்கா எப்படி டா விட முடியும்… அது எல்லாம் முடியாது,” என்றான்.

“நீ சொல்றதும் சரிதான் மச்சான் சரி வா இன்னொரு முறை தேடிப் பார்ப்போம்.”  என்று அவளுக்கு எதிர்ப்புறம் சென்று சுற்றிவர இவளோ அவர்கள் வருகிறார்களா என்று எட்டிப் பார்த்தவள் அவர்கள் இல்லாததால், அந்த பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரம் பேருந்துகள் வந்து நிற்கும் இடத்தை நோக்கி மெல்ல நடந்தாள்.

உள்ளுக்குள்ளோ, “ஐயோ! குழலி உன்கிட்ட காசு இல்லையே எப்படி பஸ்ல போவ,” என்று குமறல் வேறு ஒரு புறம் கேட்டது.

“பஸ்ல ஏறுறவங்க யாராவது காஞ்சிபுரம் போனா அங்க போயிடலாம். பஸ் ஸ்டாண்ட்ல போய் இறங்கிட்டா அங்க முருகேஷ் அண்ணன் டீக்கடை இருக்கு இல்ல அவர் கிட்ட வாங்கி கூட கொடுத்துவிடலாம் நமக்கு அவர மட்டும் தானே தெரியும்,” என்று பலவாறு யோசித்துக்கொண்டே அந்த பேருந்து நிறுத்தத்திற்கு வரவும் அப்போது காஞ்சிபுரத்திற்கு செல்ல வேண்டிய கடைசி பேருந்தும் சென்று விட்டது.

அவளின் நல்ல நேரமோ இல்லை கெட்ட நேரமோ அந்த பேருந்து நிறுத்தத்தில் அவள் மட்டுமே இருந்தாள். அது வேறு அந்த பேருந்து நிலையத்தின் கடைக்கோடி நிறுத்தம் காஞ்சிபுரம் பேருந்து நிறுத்தமாக இருந்தது.

அதுதான் கடைசி பேருந்து என்று தெரியாமல்,, அங்கிருக்கும் சிறிய பேருந்து தகவல் மையத்திற்கு சென்று, “அண்ணே காஞ்சிபுரத்துக்கு அடுத்து எப்ப பஸ் வரும்,” என்று கேட்டாள்.

“இனி எந்த ஊருக்கா இருந்தாலும் அடுத்து இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு தான் வரும்,, ” ஏன்னா!! ஏதோ? வர வழியில் ஏதோ? போராட்டம் நடக்குதாம், அதனால், எல்லா பஸ்ஸும் அப்படியே யூட்டன் அடைச்சு போகுதாம்… இதோ இப்ப பாரு நாலு மணிக்கு அப்புறம் இப்பதான் ஒரு பஸ் வந்தது.. நான் ரெண்டு மணி நேரம் என்று சொல்றது சும்மா பேச்சுக்கு தான், ” என்று சொல்லிவிட்டு அவர் தன் வேலையை பார்க்க எழுந்து சென்று விட்டார்.

அவளுக்கோ ஐயோ!! என்று ஆனது அத்தனை வெளிச்சம் இருந்தும் அந்த பேருந்து நிறுத்தம் ஏதோ!! இரவில் தெரியும் மாயனம் போல் காட்சியளித்தது.

கையில் ஒற்றை ருபாய் காசு இல்லை… இங்கு திக்கும் தெரியாது, திசையும் தெரியாது. திருவிழாவில் காணாமல் போன குழந்தைப் போல் முழித்துக் கொண்டிருந்தவளின் சிவப்பு நிற சேலையோ??

அவளை கழகுப் போல் தேடும் எட்டு கண்களுக்கும் ஒரு சேர  தூரத்தில் நின்று இருந்தது தெரிய அவர்கள் ஒருவரை ஒருவர் கைதட்டி சிரித்துக்கொண்டே அவளை நோக்கி வந்தனர்.

அவளுக்கும் அப்போது தானா, மண்டையில் பல்பு எரிந்து, ” பஸ் வர இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்னு சொல்றாங்க… நாம ஏன்? கொஞ்சம் மெது மெதுவா நகர்ந்து நம்ம பேக்கை ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரக் கூடாது,” என்று அவள் மூளை எக்கு தப்பாக யோசனை தந்தது.

அதனால், அவளும் அவர்கள் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருந்தவளின் கண்களுக்கும் அவர்கள் தென்பட 
அவள் பார்ப்பதை பார்த்தவர்கள் ஒன்றும் அறியாதவர்கள் போல் அவளுக்கு முதுகு காட்டி சென்று விட்டனர்.

அப்பாடா! என்று தன் நெஞ்சின் மேல் கை வைத்து, ” அவங்களுக்கு நம்ம இருக்கிறது தெரியல போல அதனால திரும்பிட்டாங்க இதுதான் நமக்கு நேரம் அதனால நம்மளோட வேல எடுத்துட்டு வந்துடலாம்… ” என்று வெகுளித்தனமாக யோசித்தாலும் அவர்கள்  கண்களில் படாதவாறு ஒளிந்து மறைந்து அவ் இடத்திற்கு சென்றாள்.

அவர்களும் தங்களுக்குள், “அவ நம்மளை பார்க்கிறாளா பாருடா!” என்று தங்களுக்குள் கிசுகிசு கிசுகிசுத்துக் கொண்டு மெல்ல திரும்பி பார்க்க அவள் அங்கு இல்லாதது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்து, “ச்சே, கிடைச்சவள மிஸ் பண்ணட்டுமா டா! அதனால நாலு பேரும் நாலா பக்கமும் போய் தேடலாம் எல்லாரும் போனை கையில் வச்சிக்கோங்க… யாருக்கு அவ கிடைச்சாலும் உடனே போன் பண்ணனும்… ” என்று தங்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு,, நால்வரும் நான்கு புறமும் பிரிந்து அவளைத் தேடினர்.

இவளும் இவளை பார்க்காமல் திரும்பி சென்று விட்டதாக நினைத்துக் கொண்டு, தைரியம் கலந்த நிம்மதியில் அவளை இழுத்துச் சென்று அந்த இடத்திற்கு சென்றாள்.

அவள் நினைத்தது போலவே அந்த பேருந்து நிலையத்தின் வடக்கு புறம், இருக்கும் ஆண்கள் சிறுநீரகம் கழிக்கும், இடத்தில் அவளுடைய கைப்பை இருக்க… அதை ஆனந்தமாக சிரித்துக் கொண்டே சுற்று முற்றும் பார்த்து அந்த கைப்பையை எடுக்கும் நேரம்,,

அவளின் தோள் பட்டையை ஒரு கை அழுந்தப் பற்றியது.

தொடரும்…..
 

கதையின் போக்கு எப்படி இருக்கு என்று தங்களின் மதிப்பீட்டையும் விமர்சனங்களையும் கொடுத்து விட்டு செல்லுங்கள்…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மேகத்தின் தூரிகை இவள்(ன்)
930 6 5
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page