தூரிகை 8❤️

குழலி தன் எடுக்க அந்த ஒதுக்கு புறத்திற்கு வந்தவள், பையை பார்த்தவுடன் பரவசமாக அந்த அதை எடுக்கும்போது ஒரு கை வந்து அவளின் தோளை அழுந்தப் பற்றியது.

அந்த கை அவளின் தோளை பற்றியதும் உடம்பில் உள்ள  எல்லா நரம்புகளும் முகத்தில் வந்து நின்று அந்த முகமே சொல்லியது அவளின் பயத்தை இருந்தபோதிலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திரும்பினால், அது சந்தேகத்திற்கு இடமின்றி அந்த கயவனின் கை தான் அவள் திரும்புவதற்குள் அவன் நண்பர்களுக்கு அழைப்பும் விட்டிருந்தான். 

அவர்களும் வந்து விட்டிருக்க இவள் மெல்ல தன் வாழ்க்கை அவ்வளவுதான் முடிந்து விட்டது. நினைக்கயில் அவன் அவளைப் பார்த்து ஏளனமாக சிரித்தான்.

இவளுக்கு கண்களில் கண்ணீர் வர தொடங்கியது தன் பையை கொண்டு தன்னை மறைக்க முயன்றவளிடமிருந்து பையை பிடுங்கி அவளுக்கு இடது புறம் தூக்கி வீசி அடிக்கவும் அது கிழக்குப் பக்கம் இருக்கும் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் கார்கள் நிறுத்தும் இடத்திற்கு சென்று விழுந்தது.

இதற்கு மேல் தன்னால் எங்கும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என சிலையாக நின்றவளின் கையை அவன் விட்டுவிட்டு, ” உன்னால இப்போ என்ன பண்ண முடியுமோ? பண்ணிக்கோடி, ” என்று திமிராக வேறு பேசினான்.

இதற்கு மேல் அவளால் என்ன செய்ய முடியும் அதனால் கல் போல அங்கே அப்படியே  நின்றாள்.

இங்கு வழியில் பாட்டுக் கேட்டுக்கொண்டே கர்ணாவிடம் பேசி விட்டு அவள் போனை சீட்டில் போட்டவன் கொஞ்ச தூரம் கூட சென்று இருக்க மாட்டான். அதற்குள் அவன் தன் இடது புறம் திரும்ப அவள் போன் என்னை எப்படியாவது அவளிடம் சேர்த்து விடு என்று பார்ப்பது போல் தோன்ற அப்படியே! ஒரு நொடி கண்களை மூடி யோசித்தவனின் கண் முன்னே!

 அவள் சொன்ன அந்த வாசகமே மீண்டும் மீண்டும் வந்து போக சடார் என்று வண்டியை பிரேக் போட்டு நிறுத்திவிட்டு,, வண்டியை திருப்பிக் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு விட்டான்.

நுழைவு வாயிலில் கார்கள் நிறுத்தும் இடத்தில் தன் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தன்னை அனைவருக்கும் தெரியும் என்பதால் மாஸ்க்கை அணிந்து கொண்டு நடக்கும்போது தான் அவளின் ஊர் எது என்று தெரியாது என்ற பல்பு அவனுக்கு எரிந்தது. 

அவளை பொதுவாக கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் ரோட்டின் அந்த புறமே நிறுத்திவிட்டு, “இந்த ரோட்டை தாண்டி போ!” என்றுக் கூறி சென்று விட்டான். 

அது எவ்வளவு பெரிய தவறு என இப்போதுதான் புரிந்தது. “இவ்வளவு பெரிய பேருந்து நிலையத்தில் எப்படி அவளை தேடி கண்டுபிடித்து இந்த போனை அவளிடம் ஒப்படைப்பது. தவறாக எண்ணி நம்ம வேலையை விட்டுட்டு வந்து விட்டோமோ? ” என்று யோசித்தான். ஆனால், எல்லாம் ஒரு நிமிடம்தான் முடியாததை முடித்துக் காட்டுபவன் தானே அமுதன்!! 

அதனால் நொடி பொழுதில் யோசித்து அங்கிருக்கும் பேருந்து நிலையத்தின் முக்கிய முனைய கட்டிடத்தின் உள் வேகமாக நுழைந்தான். 

அவனைப் பார்த்ததும் புதியதாக வந்தவர்களுக்கு குழப்பம், பழைய நபர்களுக்கோ ஆச்சரியம்… ஏனென்றால், இவன் தான் இங்கு எல்லாம் வர மாட்டானே! அதனால் வந்த ஆச்சரியம் தான் அது… ஆனால், அவர்களின் பார்வைகளை எல்லாம் அலட்சியம் செய்தவன் தனக்கு வேண்டிய வேலை பார்ப்பதற்காக அந்த துறையின் தலைமை அலுவலரை அணுக அவரும் இவனை கண்டவுடன் எழுந்து நின்று இருக்கையில் அமர வைத்துவிட்டு, ” என்ன வேணும் சார் எதுக்கு இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க ஒரு போன் பண்ணி இருந்தா நானே உங்களுக்கு தேவையானதை செஞ்சு கொடுத்திருப்பேனே!” என்றார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை…” என்று சொல்லிவிட்டு, ” எனக்கு ஒரு, ” என்று  ராகமாக இழுத்தவனை அவர் வினோதமாகப் பார்த்தார்.

“என்ன வேணும்னு சொல்லுங்க சார் நீங்க இப்படி தயங்குற ஆள் இல்லையே!” என்றார்.

அதுதானே எதுவா இருந்தாலும் வெட்டு ஒன்று துண்டு ஒன்று என்று பேசுபவன் தானே அமுதன் இன்று என்ன புதிதாக ராகம் எல்லாம் இழுத்துக் கொண்டிருக்கிறான். இந்த அமுதன் அவனுக்கே புதிதாக அல்லவா தெரிகிறான்.

 அதை எப்படி அவன் வெளிப்படுத்துவான் அதனால், தன் குரலை செருமி கொண்டு, ” எனக்கு ஒரு வேலை ஆகணும். அதனால, ஒன் ஹவருக்கு முன்னாடி வரை இங்கு இருக்கிற எல்லா கேமரா வீடியோஸ டீடெயில்ஸ் எனக்கு வேண்டும். ” என்றான் அதிகாரமாக!!

“அவ்வளவு தானே சார் இதோ காட்ட சொல்றேன் சார்,” என்று அவன் அலுவலகத்தில் ஒரு நபரை அழைத்து, “சாருக்கு என்ன வேண்டுமோ? அதை செஞ்சு கொடுங்க..?” என்று அதிகாரம் இட்டு விட்டு அவன் இருக்கைக்குச் சென்றான். 

அந்த அலுவலரும் ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி வரை இருந்த வீடியோக்களை எல்லாம் அமுதனிடம் காட்டிக் கொண்டிருந்தார். அதில் அவள் எங்கும் இருப்பதாக தெரியவில்லை.

கேமராக்களில் ஒதுக்குப்புறமாக இருந்த இடம் தெரியாமல் போனது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அவள் வெளிச்சத்திற்கு ஓடி வரும் போது மட்டும் தெரிந்தது. ” இவ ஏன்? இப்படி ஓடி வரா? “என்று யோசித்தவன் அவரிடம், “கொஞ்சம் அப்படியே ரீவைண்ட் பண்ணுங்க…” என்று சொல்லி அதை பார்க்க… அங்கு அவள் தண்ணீர் குடித்ததும் மீண்டும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றது மட்டுமே!!  காட்சியளித்தது. அவள் தூணில் மறைந்து நின்றது எல்லாம் பயந்து நின்றது போல் தெரியவில்லை…. ஏன்னென்றால் அவர்கள் எந்த வீடியோக்களிலும் பதிவு ஆகவில்லை… அதனால் அவளை யாரும் துரத்தியது போல் தோன்றவில்லை ஏதோ? வழி தெரியாமல் இருப்பது போலவே தெரிந்தது. 

அதைப் மூன்று முறை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ? அவரிடம் மீண்டும், ” அந்த பக்கம் கேமரா இல்லையா? ” என்று அந்த ஒதுக்குப் புறத்தைப் பற்றிக் கேட்டான். 

“அந்த பக்கம் இல்லை சார்  இந்தப் பக்கம் டெட் லைனோட க்ளோஸ் ஆயிடும் சார்! நீங்க யாரை இல்லை எதை பாக்குறீங்கன்னு சொன்னா நான் கரெக்டா ஐடென்டிபை பண்ணி சொல்லுவேன் சார்!! என்றுக் கேட்டவனுக்கு அவனின் கூரிய விழிகளின் தாக்குதல் மட்டுமே பரிசாகக் கிடைத்தது.

அதனால் அவன் பேசாமல் அமைதியாகி விட்டான். 

ஆனால், அமுதனுக்கோ அவனிடம் அவளைப் பற்றி சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவள் அந்த இறுதியாக காஞ்சிபுரம் பேருந்து நிறுத்ததிற்கு வந்து போனது மட்டுமே மட்டும் பார்த்துவிட்டு, “ஒருவேளை பஸ் ஏறி போயிட்டு இருப்பாளோ? அப்ப நாம எங்க போய் தேடுறது,” என்று தனக்குள் பேசிவிட்டு, ” சரி நான் தேடுனது கிடைச்சிருச்சு நான் பாத்துட்டேன்… ” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தான்.

 அவனுக்கு இவ்வளவு நேரம் வேலை செய்தனுக்கு தான் ஒன்னும் புரியவில்லை…” என்னடா அவரா வந்தாரு அவரே பாத்தாரு, எதை பார்த்தாருன்னு தெரியல சரி எப்படியும் அவருக்கு தேவையானது கிடைச்சிடுச்சு இனி நம்ம வேலையை பார்ப்போம். ” என்று அவர் சென்று தன் மேல் அதிகாரியிடம் நடந்துவற்றை குறித்து தன் வேலையை பார்க்க சென்று விட்டார்.

இங்கு வெளியே வந்தவன், “ஒருவேளை பஸ் ஏறி போயிட்டு இருப்பாளோ?” என்று  அந்த யோசனையிலேயே வந்தவன் காலில் அவளுடைய பை தட்டுப்பட அதைப் பார்க்காமல் ஒரு எத்து எட்டி உதைத்து விட்டு நிமிர, அந்த பை எங்கோ காற்றில் பறந்து தூரம் போய் விழும்போது தான் தெரிஞ்சது அதை எங்கேயோ? பார்த்த உணர்வு ஏனென்றால் அவள்தான் ஹோட்டலில் மார்போடு அணைத்த்திருந்தாளே!

 அதை பார்த்தவனுக்கு சட்டென்று அந்த நினைவு வரவும் வேகமாகச் சென்று அந்த பையை கையில் எடுத்து  திருப்பி திருப்பி பார்த்து, மீண்டும் “இதை எங்கையோ பார்த்து இருக்குனே, எங்க… ஆமா இது அவளோட பேக்குதானே! பேக் இங்க இருக்கு போன் என்கிட்ட இருக்கு அப்ப எப்படி ஊருக்கு போய் இருப்பா அவ ஆளு தான் வளர்ந்து இருக்காளே தவிர அவளுக்கு ஒண்ணுமே தெரியலை ஒருவேளை இங்கு ஏதாவது மாட்டிக்கிட்டாளா!! இவளுக்கு இதே வேலையா, இருக்குமோ? 

அவ தான் சரியான பயந்தாங்கோலி மாதிரி தெரிஞ்சாளே!! என்ன பண்ணலாம்….” என்று பலவாறு யோசித்தவனின் மூளை, “எவ எப்படி போனால் எனக்கு என்ன அவளை தேடுற நேரம், நம்ம நெஸ்ட் பில்டிங் ப்ளூ பிரிண்ட் ரெடி பண்ணா, அமௌன்ட் வரும்,” என்று தன் ஜீப்பில் ஏறி அமர்ந்து விட்டான்.

இங்கு அவளை நால்வரும் அவள் முன்னாடி நடந்துக் கொண்டே வர அவர்களைப் பார்த்து பயந்து பின்னாடியே நடந்து சென்றவளை கண்டு எள்ளலாக சிரித்து விட்டு, “அது தான் உன்னால என்கிட்ட இருந்து தப்பிக்க முடியலயே அப்புறம் ஏன்? தப்பிக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்க…. இந்த பஸ் ஸ்டாண்ட்ல இந்த ஒதுக்குப்புறம் ஏரியாவே எங்களுக்கு சொந்தமானது.  

இங்க பகலிலே ஒரு ஈ காக்கா வராது இப்போ இந்த நைட் ல வாய்ப்பே இல்லை… அதனால உனக்கு என்கிட்ட அட்ஜஸ்ட் பண்ணி போறது தவிர வேற வழியே இல்லை… திரும்பவும் சொல்றேன் நீயா வந்தா உயிரோடு இருப்ப… இல்லை அதுக் கூட இருக்காது.” என்றான்.

என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து நின்றவளை மூன்று புறமும் சூழ்ந்துக் கொண்டனர்.

“இனி நம்ம வாழ்க்கை அவளோ தான் இதுக்கும் தன் தந்தை நான் தான் ஏதோ? இந்த வயதில் (ஆனால், அவளுக்கு அப்படி ஒன்றும் பெரிய வயது இல்லை.. 33 தான் ) இவர்களை மயக்கி இங்குக் கூட்டிட்டு வந்தாகத்  நினைப்பார். என்ன வாழ்க்கை இது, நான் என்ன பெரியதாக அப்படி என்ன ஆசைப் பட்டு விட்டேன். தன்னை நேசிக்கும் ஒருவன், அம்மா! என்று அழைக்க ஒன்றோ இரண்டோ பிள்ளைகள் அவ்வளவு தானே!! ஒரு சராசரி பெண்ணுக்கு உண்டான சாதாரண விஷயம் கூட தனக்கு கிடைக்காத அளவிற்கு நான் பாக்கியசாலி போல திருமணம் நடக்கக் கூடாத வயதில் திருமணம் நடந்தது. 

வாழ்க்கை தொடங்கும் முன்னே! அது முடிந்து விட்டது. அதன் பிறகு வயது பெண்ணிற்கே உரிய எந்த சந்தோசத்தையும் அனுப்பவிக்கல இப்போது எந்த தவறும் செய்யாமல்,,  வழி தெரியாமல் வந்தவளின் வாழ்க்கையே இப்படி தடம் தெரியாமல் மாறும் என்ன கனவா கண்டடேன். கடவுளே!! என்னை இப்படி கஷ்டமாக்கி பார்ப்பதற்குத் தான் என்னை படைத்தாயா? இதற்கு என்னை போன்ற ஒருத்தியை உருவாக்காமலே இருந்து இருக்கலாம் குறைந்த பட்சம் அந்த நேரமாவது உனக்கு மிச்சம் ஆகி இருக்கும்.” என்று யோசித்துக் கொண்டு பின்னே நடந்தவளை அவர்கள் சூழும் நேரம் அவளின் கையை பின்னிருந்து ஒருவன் பிடித்து இழுக்க அவன் மேலே விழுந்தாள்.

மேலே விழுந்தவளின் அருகில் வந்து,  “ஓஓ உனக்கு எங்களைப் பிடிக்கலை இவனைத் தான் பிடிச்சு இருக்கு போல அது தான் அவன் இழுத்தவுடனே இப்படி பச்சக்குன்னு ஒட்டிக்கிட்ட,” என்று அந்த நால்வரில் ஒருவன் சொன்னான்.

அவன் சொன்ன பிறகு தான் நாம் ஒருவன் மேல் மோதி நின்றிருப்பத்தை உணர்ந்தவள் நிமிர்ந்துப் பார்த்தாள். 

அவள் அவனை விட்டு விலகப் பார்க்க… அவன் மேலும் தன்னுடன் இறுக்கி நிறுத்திக் கொண்டான்.

அவள் விலக, அவன் இழுக்க… இப்படியே சென்றுக் கொண்டிருக்க… அவன் ஓங்கி ஒரு அரை அவள் 

கன்னத்தில் விட்டதில் அவளுக்கு பொறிக் கலங்க அப்படியே!! கன்னத்தில் கை வைத்து நின்று விட்டாள்.

தொடரும்.…

கதையின் போக்கு எப்படி இருக்குனு சொல்லுங்க செல்லம்ஸ்… 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மேகத்தின் தூரிகை இவள்(ன்)
931 6 5
1 Comment
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page