நலம் தானா ஊதாப்பூவே -2

“ஏனோ தானோ வென்று இருக்க முடிவதில்லை உன் நினைவுகளின் கொதிப்பு என் உள்ளத்தை உருக்கி வழிந்ததோட  வைக்கிறதே “
 

 

…. ஊதாப்பூவின் இதழ்களில்  ஒன்று…
 

 

பாகம் -2
 

 

தன்னைப் பற்றி விஜய் என்ன நினைக்கிறான் என்று யூகித்த வர்மா தன் கைபேசியை அவனிடம் காட்ட, நிதிஷா என்று பெயர் இருக்க,  
 

 

தலையில் அடித்துக் கொண்டவன் பொக்கேவில் இருந்த பெயரும், போன் திரையில் இருந்த பெயரும் ஒன்றாய் இருக்க, “எதுக்கு டா இவ உன்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கா”
 

 

“ம்ப்ச் இப்போ இதுவா முக்கியம், கம்பெனி ஒர்க்கர்ஸ் டீடெயில்ஸ் கேட்டேனே எங்க”
 

 

வர்மா கேட்டதும் எடுத்து வந்து விட்டான். இருவருமே வேலை என்று வந்து விட்டால் வேலைக்கு தான் முக்கியத்துவம் இருக்கும். வர்மாவிடம் கோப்பை கொடுக்க, 
 

 

“யாரு இது வாரத்துல 3 நாள் பெர்மிஸ்ஸின் போட்டு இருக்குறது யாரை கேட்டு இதெல்லாம் நடக்குது”
 

 

“அவர் இங்க ரொம்ப வருஷமா வேலை செய்றவரு, வேலை செய்யும் போது அடிபட்டுடுச்சி, பஞ்ச் வைக்கும் போது சரியா வைக்க முடியல அதான் லேட் காட்டுது”
 

 

“இந்த மாதிரி சில்லியா ரீசன் சொல்லிட்டு இருக்காத புரியுதா, பர்ஸ்ட் மெஷின சரி பண்ணு’
 

 

“ஓகே சார் நான் சரி பண்ணிட்றேன்”
 

 

“இப்போ நம்ம கிட்ட இன்வெஸ்டர்ஸ் எத்தனை பேர் இருக்காங்க, கிடைக்கப் போற காண்ட்ராக்ட் மதிப்பு 5 கோடி அதுக்கு ஏத்த மாதிரி இன்வெஸ்டர்ஸ் இருக்காங்களா பாரு, இல்லைனா வேற வழி யோசிக்கணும்”
 

 

“நம்ம கம்பெனி மெயிலுக்கு ரெண்டு பேரோட டீடெயில்ஸ் அனுப்பி இருக்கேன் பாருங்க, அவங்க சரி வருவாங்கனு தோணுது”
 

 

விஜய் அனுப்பிய மெயிலைப் பார்த்தவன், மதன கோபால் இவர் தானே போன தடவ இன்வெஸ்ட் பண்ணாரு, ஆனா இவர் பேச்சு கொஞ்சம் சரி இல்லையே, நெக்ஸ்ட் சுனில் ஷெட்டி போன தடவ இவர் தான் பண்ண வேண்டியது டைமிங் மிஸ் ஆகிடுச்சு, இந்த தடவ இவரையே செலக்ட் பண்ணுவோம். இவர் பத்தி இன்னும் கொஞ்சம் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி சொல்லு”
 

 

“இவர் ஓகே தான் வர்மா, இன்னும் 15 மினிட்ஸ்ல டீடெயில்ஸ் சொல்லிடறேன்”
 

 

அலுவகத்தில் இருக்கும் தனி அறையில் ரெபிரஷ் செய்து வந்தவன் “டைம் ஆச்சு கிளம்புவோம்” தனது அறையை விட்டு வெளியே வர, 
 

 

ஆரண்யா இவர்களுக்காக காத்திருந்தாள். ஏனோ விஜய்க்கு ஆரண்யாவின் மேல் கவனம் சென்றது. இது வரை வர்மாவுக்காக நிறைய பேரை பி, ஏ வாக தேர்ந்தெடுக்க நேர்காணல் நடத்தினான். யாரையும் சரி வரும் என்று தோன்றவில்லை. வர்மாவின் குணம் அப்படி, சிறிய தவறினை கூட ஏற்றுக் கொள்ளவோ, மன்னிக்கவோ மாட்டான். பர்பெக்ட் எதிர்பார்ப்பவன் நேரம் ரொம்பவும் முக்கியம் இவள் சேர்ந்ததே இன்று தான் வர்மாவிடம் நீண்ட நாள் பழகிப் பார்த்தவள் போல் அவளின் புரிதலான செய்கையில் தான் அவள் மேல் கவனம் ஈர்த்தது.
 

 

ஒருவேளை இவள் வர்மாவிடம் நல்ல மதிப்பை பெற விரும்புகிறாளா, இவன் தான் யாருக்கும் அடங்காம இருக்கானே, இவ கிட்ட மட்டும் மாட்டுவானா பாப்போம்’
 

 

“ஹாய் ஆரண்யா, பரவால்லயே சொல்றதுக்கு முன்னாடியே கிளம்பி நிக்குற, வெரி குட்”
 

 

சொல்ல வேண்டியவனோ எதுவும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தான். அவளும் விஜய் சொன்னதுக்கு மெல்லிய புன்னகையை மட்டும் கசிய விட்ட படி வர்மாவை பின் தொடர்ந்து செல்ல,
 

 

“ம்ம் நல்ல பொருத்தம் தான் ” இருவரும் நடந்து செல்வதை பார்த்துக் கொண்டே சொல்ல, 
 

 

எங்கிருந்தோ பறந்து வந்த பேனா அவன் தலையில் விழ, அதிர்ச்சியுடன் இது வர்மாவோட வேலையா தான் இருக்கும். இப்போ நாம பார்க்கும் போது எதுவும் நடக்காத மாதிரி நடந்து போய்ட்டு இருப்பான். இன்னும் எதனா பறந்து வந்து தலையில விழுறதுக்குள்ள நம்மள காப்பாதிக்கணும் வர்மாவின் பின்னே சென்றான். மூவரும் மீட்டிங் நடக்கும் ஹோட்டலுக்கு வந்தனர்.
 

 

கவர்மென்ட் காண்ட்ராக்ட் கிடைக்க என்னென்ன செய்ய வேண்டும். அதற்கான டாக்குமெண்ட் தயாரித்தல், போன காண்ட்ராக்டுக்கும் இந்த காண்ட்ராக்டுக்கும் உள்ள வித்தியாசம், இவற்றை எல்லாம் பேசி இப்போதைய காண்ட்ராக்டுக்கு மதிப்பு நிர்ணயிப்பது போன்ற விஷயங்களை பேசி முடிவெடுத்தனர்.
 

 

இவர்கள் பேசுவதில் முக்கிய குறிப்புகளை ஆரண்யா குறிப்பெடுத்துக் கொண்டாள். மீட்டிங் முடிந்ததும் ஆரண்யாவை  ஏற்கனவே புக் பண்ணிய டேபிளில் சாப்பிட அமர வைத்து விட்டு, வர்மாவும், விஜயும் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். 
 

 

அவர்களுக்கு ட்ரிங்க்ஸ் பார்ட்டி ஏற்பாடு செய்யப்படிருந்தது. இருவர் மட்டும் சாப்பிடவில்லை. வர்மாவுக்கு அந்த பழக்கம் இல்லை. விஜய் எதாவது பார்ட்டி என்றால் மட்டும் குடிப்பான். ஆரண்யா உடன் இருப்பதால் வர்மா விஜயிடம் குடிக்க கூடாது என்று சொல்லி விட்டான்.
 

 

வர்மா போனை எடுக்கவில்லை. அனுப்பிய பொக்கேவிற்கும் எதிர்வினை இல்லை. தன்னை விலக்கி வைக்கிறானோ, விருப்பம் இல்லையோ, மனதில் வரமாவுடன் திருமணக் கனவுகளில் ஈடுபட்டவளுக்கு அவன் இது வரை அவளிடம் பேசியது இல்லை பிடித்தமான பார்வையும் இல்லை என்பது நெருடலாக இருந்தது. எப்படி ஒருவன் என்னை விரும்பாமல் இருக்கலாம்.
 

 

வர்மாவின் அப்பா ராஜாவர்மாவின் தொழில் முறை நண்பர் சுஷில் குமாரின் ஒரே மகள் தான் நிதிஷா. என்ஜினீயரிங் படித்தவள்.

 

பிசினஸ் பார்ட்டி ஒன்றில் வர்மாவைப் பார்த்தவளுக்கு அவனின் ஸ்டைலிஷ் லுக்கும், திமிரான பார்வையும், பெண்களிடம் அவன் பார்வை செல்லவே இல்லை அவர்கள் தான் அவனை பார்வையால் மொய்த்துக் கொண்டிருந்தனர். அவனின் திமிர் அழகில் ஈர்கப்பட்டவள் அவள் அப்பாவிடம் அவனைக் காட்ட,
 

 

“இவன் வர்மா, என் பிசினஸ் பிரண்ட் ராஜாவோட பையன் தான். வெரி டேலேண்டட் அண்ட் ஸ்மார்ட்”
 

 

“டாட் ஐ லைக் ஹிம்”
 

 

அவருக்கும் வர்மாவைப் பார்க்கும் பொழுது தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற எண்ணம் இருந்தது மகளுக்கும் இதில் விருப்பம் என்றதும் மகிழ்ந்தவர். 
 

 

“எனக்கும் அந்த தாட் இருந்தது மா, இப்போ நீயும் சொல்லிட்ட, அப்பா பார்த்துக்கறேன்” 
 

 

அப்பா நம்பிக்கை ஊட்டவே, அவளும் வர்மாவிடம் பேச, சந்திக்க முயற்சி செய்தாள். இவள் மட்டும் விரும்பினால் போதுமா, அவனுக்கும் தோன்ற வேண்டுமே, அவன் குணம் புரியாமல் இதோ வர்மாவை தேடி அலுவலகம் செல்ல, அங்கிருக்கும் ஒருவனிடம் காசை கொடுத்து வர்மா எங்கிருக்கிறான் என்று தெரிந்து கொண்டவள் ஆரண்யா  மேல் நல்ல மதிப்பு  இல்லை. இவள் யார் வரமாவுடன் வரலாம் என்று தவறான எண்ணம் கொண்டு ஹோட்டலுக்கு வந்தவள், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆராண்யாவைப் பார்த்தாள்.
 

 

மாடர்னாக இருப்பாள் என்று நினைத்தவளுக்கு, அவள் புடவையில் தேவதை போல் மின்னுவது பார்த்து பெண்ணுக்கே உண்டான பொறாமை குணம் வக்கிரமாய் படிய, பணமும் திமிரும் சேர்ந்து தவறான பாதையில் செல்ல வழி வகுத்தது.
 

 

அங்கிருந்த வெயிட்டரிடம் விசாரித்து, அவனிடம் ரகசியமாக பேசியவள் மறைந்து நின்று கொண்டாள்.

 

பார்ட்டி முடிந்து அவர்களிடம் விடை பெற்று  வர்மாவும், விஜயும் வெளியே வந்தவர்கள் ஆரண்யாவைப் பார்க்க செல்ல,  ஜூஸ் டம்பளரை கையில் வைத்திருந்தவளைப் பார்த்த பொழுதே ஏதோ சரி இல்லை என்று தோன்றவே இருவரும் நெருங்குவதற்குள் ஆரண்யா  பாதி மயங்கி இருந்தாள்.
 

 

விஜய் அவள் கையில் இருந்த ஜூஸ் டம்பளரை எடுத்தவன் “வர்மா நாம ஆரண்யாவுக்கு ஆர்டர் பண்ண புட்ல ஜூஸ் சொல்லலையே”

“எஸ் நீ அந்த ஜூஸ் டம்பளரை தனியா எடுத்து வை, இதுல எனக்கு டவுட் இருக்கு”

ஜூஸ் எடுத்து அவனிடம் இருந்த கவரில் கொஞ்சம் ஊற்றி எடுத்துக் கொண்டான். “வர்மா, ஆரண்யாவை  எப்படி வீட்டுக்கு அனுப்புறது. சேர்ந்த முதல் நாளே இப்டி ஆகிடுச்சே”

வர்மா முகத்தில் எப்போதும் இருக்கும் மெல்லிய  தாடியில் கை வைத்து யோசிக்க,

விஜயோ “நான் ஆளுங்க யாருனா இருக்காங்களா பார்க்குறேன்” அவன் போனில் யாரேனும் ஆள் கிடைப்பார்களா என்று பேசி விட்டு வந்தவன்.

“வர்மா  பேசி இருக்கேன் டா இப்போ சொல்றேன்னு சொல்லி இருக்காங்க” சொல்லி விட்டு பார்க்க, அங்கு வர்மாவும் இல்லை, ஆரண்யாவும் இல்லை. அங்கே தேடிப் பார்த்து விட்டு, வர்மாவுக்கு அழைக்க,

“மச்சான் ஆரண்யாவ காணோம்” பதட்டத்துடன்  விஜய் கேட்க,

“காருக்கு வா டா”  வர்மா வேறு எதுவும் சொல்லாமல் அழைப்பை துண்டிக்க,

விஜய் வேகமாக வர்மாவின் காருக்கு சென்றான். “மச்சான் அவளை காணோம் டா, எழுந்து போய்ட்டு இருப்பாளோ, பாவம் டா பார்த்தா ரொம்ப நல்ல பொண்ணா தெரியுது, எங்க போய்ட்டாளோ தெரியல” விஜய் பேசிக் கொண்டே போக,

விஜய் புலம்புவதை காதில் வாங்கமல் காரினை ஸ்டார்ட் செய்தவன் “இப்போ வர ஐடியா இருக்கா, இல்லை இங்கயே நின்னுகிட்டு புலம்பிட்டு இருக்க போறியா”

ஹோட்டலை பார்த்துக் கொண்டே  காரின் முன் பக்கம் ஏறி அமர்ந்தவன். “ச்சே எப்படி அந்த பொண்ணு எழுந்து போனதை பார்க்காம விட்டேன். மயக்கமா இருந்தாலே” முனகிக் கொண்டே வந்தவன் வர்மாவின் பக்கத்தில் பெண்கள் பயன்படுத்தும் கர்ச்சீப் இருக்க,

அவனுக்கு தான் தெரியுமே பெண்கள் பக்கம் திரும்பாதவன் பக்கத்தில் எப்படி இந்த கர்ச்சீப் வர்மாவிடம் கேட்கலாமா என்ற யோசனையில் வர,

“ரொம்ப யோசிக்காத, இது ஆராண்யா கர்ச்சீப், வர்மாவின் பதிலில் அதிர்ந்தவன்,

“அப்போ ஆரண்யா”

வர்மா பின்னே திரும்பி பார்க்க, ஆரண்யா காரின் பின் சீட்டில் படுத்திருந்தாள் இன்னும் மயக்கம் தெளியவில்லை.

வாயைப் பிளந்து பார்த்த விஜய் “2 நிமிஷம் தான டா போன் பேசினேன் அதுக்குள்ள காருக்கு எப்படி டா தூக்கிட்டு வந்த” வர்மா தூக்கி வந்ததை நம்ப முடியாமல் கேட்க,

“நீ வேணும்னா ட்ரை பண்ணு, என்ன நடக்குதுன்னு பாப்போம்”

“எதே நான் மயங்கணுமா, எதுக்கு அங்கேயே விட்டுட்டு வந்துடவா, எனக்கு எதுவும் தெரிய வேணா பா” பயந்த படி விஜய் சொன்னதில் சிரித்தவன்,

“எடுத்துட்டு வந்த ஜூஸை லேப்க்கு அனுப்பி ரிப்போர்ட் வாங்கு”

“ஓகே டா அனுப்பிடுறேன்”

“இவ வீடு தெரியாதே டா எப்படி இவளை கூட்டிட்டு போறது, அவ போன் எங்க இருக்கு, விஜய் எட்டிப் பார்க்க,

வர்மா எந்த பதட்டமும் இன்றி அமைதியாய் கார் ஓட்டுவதில் மட்டும் கவனமாய் இருந்தவன். அரை மணி நேரத்தில் ஒரு வீட்டின் முன் நிறுத்த,

“இது எந்த இடம்” விஜய் சுற்றிப் பார்க்க,

வர்மா”இது ஆரண்யா வீடு “

காரிலிருந்து இறங்கியவன் ஆரண்யாவை தூக்கிக் கொண்டு அவள் வீட்டிற்கு சென்றான்.

விஜய்க்கு தான் “இவன் என்ன இன்னைக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சியா கொடுக்கிறான். நாம நினைச்சது நடந்துடுமோ”  வர்மாவின் செயலில் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டு இருந்தான்.

விஜய் நினைச்சது நடக்குதா பாப்போம் அடுத்து வரும் அத்தியாயங்களில்….

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page