நலம் தானா ஊதாப்பூவே!! – 4

“இது ஒரு அழகிய நிலாக்காலம்.. ஏனென்றால் நான் இருப்பது உன்னுடன் “
 

 

… ஊதாப்பூவின்  இதழ்களில் ஒன்று…
 

 

பாகம் – 4
 

 

மாலில் ஆரண்யா உடைகளை எடுத்துக் கொண்டிருக்க, அவள் எடுப்பதை எல்லாம் தனக்கும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தாள் நிதிஷா, ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாமல், வேறு இடத்திற்கு செல்லலாம் என்று திரும்பிய ஆரண்யாவைப் பார்த்து சிரித்த நிதிஷா, “இப்டியே ஓடிடு, வர்மா பக்கத்துல நீ இருக்கக்கூடாது” ஆரண்யாவுக்கு மட்டும் கேட்கும் படி கூறினாள்.
 

 

ஆராண்யா அமைதியாய் திரும்ப, அவள் பக்கத்தில் வந்து நின்றான் வர்மா, அவனைப் பார்த்ததும் இரு பெண்களுக்குமே அதிர்ச்சி தான்.
 

 

வேலை விஷயமாக பேசுவான் அதுவும் ஒன்றிரண்டு வார்த்தைகள் அவ்வளவு தான். இன்று பக்கத்தில் இருவரின் உடைகளும் உரசிக் கொள்வதே பெரும் அவஸ்தையாய் இருந்தது.
 

 

பக்கத்தில் நின்றிருந்த நிதிஷாவோ பொசுக்கும் பார்வையோடு இருவரையும் பார்த்து இருந்தாள்.
 

 

பக்கத்தில் ஒருத்தி இருக்கிறாள் என்ற நினைப்பின்றி, வர்மா “ஆரா எத்தனை டிரஸ் எடுத்த”
 

 

அவன் சொன்ன ஆரா என்ற அழைப்பில் தேகம் சிலிர்த்தாள் பெண்ணவள். வார்த்தை தான் வெளிவர சதி செய்தது.
 

 

அவளின் அமைதிக்கு காரணமே அவன் தானே, அவனுக்கு தெரியாமல் இருக்குமா, ஆரண்யா எடுத்த ஆடைகளைப் பார்த்தவன் “நாட் பேட், இன்னும் கொஞ்சம் பார்க்கலாமே, வா நான் செலக்ட் பண்றேன்”
 

 

வித விதமான ஆடைகளை அவள் மேல் வைத்து,   ரசிக்கும் பார்வையோடு பார்த்தவன் “நைஸ், சூப்பர், பர்பக்ட்” ஒவ்வொரு உடைக்கும் ஒவ்வொன்று சொல்ல, இவர் தெரிந்து செய்கிறாரா, இல்லை தெரியாமல் செய்கிறாரா, இத்தனை நெருக்கம் எதற்கு, இந்த ட்ரெஸை மேல வச்சு தான் பார்க்கணுமா, அவங்க தங்கச்சிக்கு தானே எடுக்குறாரு, நம்ம மேல எதுக்கு வச்சு பார்க்கணும். 
 

 

அன்னைக்கு ஏதோ பிரச்சனை மாட்டிகிட்டேன், காப்பாத்துனாரு, அவரால தானே அந்த பிரச்சனையே வந்தது. அதுக்கு தான் இப்போ இவர் செய்றதுக்குலாம் அமைதியா இருக்க வேண்டி இருக்கு’ மனதில் வர்மாவை வறுத்தெடுத்தாலும் அவன் கண்களும், ஈர்க்கும் பார்வையும், ஆடவனின் வாசமும் அவளுக்கு பிடித்து தான் இருந்தது. 
 

 

மெல்ல நகர்ந்து நின்றவள் “உங்க தங்கச்சிகிட்ட கேட்டீங்களா சார், அவங்களுக்கு பிடிக்குமா” கண்கள் உருட்டி அவள் பயந்தவாறே கேட்ட விதம் அவனுக்கு புதிது, கூர்ந்து அவளைப் பார்த்தவன் 
 

 

அவள் நகர்ந்த இடைவெளியை நிரப்பியவன் அவளின் சின்ன காதோரம் குனிந்து “இது என் தங்கச்சிக்கு எடுக்குறேன்னு உன்கிட்ட சொன்னதா எனக்கு நியாபகம் இல்லையே”
 

 

அவன் பேச்சில் இவளாக புரிந்து கொண்டதை நினைத்து தன்னையே திட்டிக் கொண்டவள், நாக்கினை மெல்ல கடித்து தன் மாதுளைப் பூ நிற இதழ்கள் வளைய சிரிப்பை உதிர்க்க, ‘இது மட்டும் எப்படி சிவந்து இருக்கிறது, லிப்ஸ்டிக் பூசியது போல் தெரியவில்லையே’
 

 

இருவரும் மனதில் வெவ்வேறு மன நிலையில் மனதோடு பேசிக் கொண்டிருப்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இணை பிரியா காதலர்கள் பேசிக் கொள்வது போல் தோன்ற, அங்கிருப்பவர்கள் பார்வை அவர்களிடம் தான் இருந்தது.
 

 

‘இந்த டிரஸ்லாம் யாருக்கு’ என்று கேட்க நினைத்தாலும் இவராக சொல்லாமல் எப்படி கேட்பது 
 

 

“சார்”
 

 

“சொல்லு ஆரா”
 

 

“சார் என் பேரு ஆரண்யா” அவனுக்கு தன் பேர் தெரியாது என்ற நினைப்பில் சொல்ல,
 

 

“ஆரா” தான் தெரிந்து தான் உன்னை கூப்புடறேன். இன்னொரு முறை அழுத்திக் கூறியவன். அங்கிருந்த சேல்ஸ் கேர்ளிடம் “பேக் திஸ்”
 

 

ஆரண்யாவிடம் “போகலாம்” என்றவன் நடக்கக, “வர்மா, நிதிஷா அழைப்பில் திரும்பாமல் நிற்க,
 

 

வேகமாக அவன் முன் சென்று நின்றவள்”வர்மா, என்னை தெரியலயா”
 

 

டைட் ப்ளூ ஜீனும், குட்டையான லைட் எல்லோ சட்டையும் அணிந்திருந்தாள். கண்களில் இருந்த காஜல், பெயிண்ட் அடித்திருந்தது போல் பூசி இருந்த லிப்ஸ்டிக் என எதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை. அவள் முகத்தை அவன் பார்க்கவும் இல்லை. 
 

 

யார் நீ என்பது போல் இருந்தது அவன் பார்வை, “வர்மா நான்” அவள் சொல்ல வருவதற்குள் 
 

 

“ஆரா டைம் ஆச்சு”
 

 

அவள் கேட்டதற்கு இவளிடம் பதில் சொல்ல, கடுப்பானவள், “வர்மா, இவ நேத்து என்ன பண்ணான்னு தெரியுமா” அவள் மேல் இருந்த பொறாமையில் உளறிவிட
 

 

நக்கலாக சிரித்தவன் “யூ ரெடி டு பே பார் இட் “சொன்னவன், ஆரண்யா கைப் பிடித்து அழைத்து சென்றான். நிதிஷாவை வெறுப்பேற்ற,
 

 

அவன் கைப் பிடித்தலை எதிர் பார்க்காத ஆரண்யா, அந்த மேனா மினுக்கியை வெறுப்பேற்ற தான் இப்படி நடந்துக்குறாரு நல்லாவே புரியுது ஆனா எதுக்கு என்கிட்ட இப்டி நடந்துக்கணும். அது தான் புரியல
 

 

கை பிடித்து அழைத்து சென்றவன் காரில் ஏறச் சொல்லி விட்டு கடையில் வாங்கிய துணிகளை எடுத்து வந்த டெலிவரி பாயிடம் காரின் பின் பக்கம் வைக்கச் சொல்லி விட்டு காரில் அமர்ந்தான். 
 

 

கம்பெனிக்கு போகும் வழியில் அவன் எதுவும் பேசவில்லை. அவளும் பேச நினைத்தாலும் பேசாமல் வந்தாள். ஏனோ அந்த மேனா மினுக்கியைப் பார்த்ததில் இருந்து வர்மாவின் முகம் இறுகி இருந்தது. இவளுக்கும் அதைப் பார்த்து பயம் வர, பேசாமலே இருந்தாள்.
 

 

கம்பெனி வந்ததும் காரிலிருந்து இறங்கி நேராக அவன் அறைக்கு சென்று விட்டான். அவன் இறங்கிய பின்னே இறங்கியவள் பெரு மூச்சினை இழுத்து விட்டு ‘யார் கேள்வி கேட்டாலும் பிடிக்காது நினைக்குறேன்,  அதான் பதிலே சொல்ல மாட்றாரு, அவர் கேட்டா பதில் சொல்லவோம், இல்லையா அமைதியா இருப்போம். நாம வந்தது வேலை செய்ய, அதை மட்டும் செய்வோம் நாம எதுக்கு எல்லாத்தையும் ஆராயனும். 
 

 

அவள் இருக்கையில் அமர்ந்தாள். யோசனை மட்டும் வேறு எங்கோ இருக்க, சிறிது நேரம் கழித்து, “ஆரண்யா மேடம் அங்க இருக்கிறது ஒரு பிரிண்டர், 2 ஏ4 ஷீட் பண்டல், ஒரு சேர் அவ்ளோ தான் இதை எதுக்கு மா இவ்வளவு நேரம் பார்த்துட்டு இருக்க” விஜயின் குரலில் பார்வையை திருப்பியவள்
 

 

“சார் அது வந்து ” அவள் தடுமாற,
 

 

“இப்போ எதுக்கு மா இப்டி டைப் அடிக்குற, ரிலாக்ஸ், நான் ஒரு விஷயம் கேள்வி பட்டேனே அதை விசாரிச்சிட்டு போகலாம்னு வந்தேன்”
 

 

“என்ன சார்” 
 

 

“வர்மா உன்னை வெளிய கூட்டிட்டு போனானாமே உண்மையா”
 

 

“ஆமா சார்”
 

 

“ஓ, அந்த கவர்மென்ட் டெண்டர் விஷயமாவா”
 

 

“இல்லை சார்”
 

 

“புதுசா ஆரம்பிக்க போற ஒர்க் விஷயமாவா”
 

 

“இல்லை சார்”
 

 

“அதுவும் இல்லையா, அப்போ வேற எதுக்கு”
 

 

“அது வந்து.. மால் கூட்டிட்டு போனாரு”
 

 

“என்னது மால் கூட்டிட்டு போனானா”
 

 

“ஆமா சார்”
 

 

“என்ன வாங்குனீங்க”
 

 

“அது அவங்க தங்கச்சிக்கு டிரஸ் சார்”
 

 

அவள் சொன்னதும் சத்தமாக சிரித்தவன், “வர்மா, அவன் தங்கச்சிக்கு டிரஸ் எடுக்க போனானா, அதுக்கு வாய்ப்பே இல்லையே, அது உனக்காக தான் இருக்கும்”
 

 

“சார் என்ன சொல்றீங்க”
 

 

“இரு இரு நான் உனக்கு இதை சொல்றேன். இப்போ கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு, என்ன டிரஸ் வாங்குனீங்க”
 

 

“அது மாடர்ன் ட்ரெஸ், அவர் தான் எடுத்தாரு, அங்க கூட ஒருத்தவங்க வந்தாங்க, சார் அவங்க கிட்ட பேசவே இல்லை”
 

 

“இது யாரு டா புது கேரக்டர், இவனை தேடி வந்தாளா, அந்த நிதிஷாவா தான் இருக்கும்”
 

 

“அவங்க தான் சார்”
 

 

“உன்கிட்ட முடிஞ்சிது இரு அவன் கிட்ட போய் விசாரிச்சிட்டு வரேன்”
 

 

ஆரண்யா தான் இன்னும் குழப்பத்திலே இருந்தாள். அப்பொழுது தான் நியாபகம் வந்தது காலை வந்ததும் வர்மா கொடுத்த வேலை, அவசர அவசரமாக வேலையை முடித்து, வர்மாவிற்கு மெயில் அனுப்பியவள். எப்டியோ அவர் சொன்ன டைம் குள்ள முடிச்சிட்டேன்.

டேபிளில் அடுக்கி இருந்த பைல் களைப் பார்த்தவள்,  இதை எல்லாம் இன்னைக்குள்ள முடிக்கணுமே, அதை நினைக்க தலையே சுற்றியது.

தன் அலுவலக அறையில் அமர்ந்து கொண்டு சிசிடிவி வழியே ஆரண்யாவைப் பார்த்தவன் திருப்தியுடன் அவள் அனுப்பிய மெயிலைப் பார்த்தவன். ஓகே சென்ட் டு அட்மின் டீம், அவள் அனுப்பிய மெயிலுக்கு பதில் அனுப்பி விட்டு, டெண்டர் பற்றிய கோப்பினை பார்க்க,

“எக்ஸ்கியூஸ்மீ மே ஐ கம் இன்” விஜயின் குரலைக் கேட்டவன்

“எஸ் கெட் இன்” அவனுக்கே உரித்தான கம்பீர குரலில் சொல்ல’சார் இப்போ சீரியஸ் மூட்ல இருக்காரு போன உடனே இதைப் பத்தி பேசக்கூடாது, அப்புறம் அவ்ளோ தான்’ மனசுக்குள்ளே முடிவெடுத்தவன்

“சார் டெண்டர் கொட்டேஷன்  ரெடி, நீங்க பார்த்துட்டு ஓகே சொல்லிட்டா, அனுப்பிடலாம்”

விஜய் கொடுத்த பைலை வாங்கியவன், ஆரண்யா கொடுத்த கொட்டேஷனையும் அவனிடம் கொடுக்க, இரண்டிற்கும் வித்தியாசம் 1000 ரூபாய் தான். ஆரண்யா  1000 ரூபாய் குறைவாக கொட்டேஷன் தயார் செய்திருந்தாள்.

“யூ ஆர் கரக்ட் சார்” ஆரண்யாவை வேலைக்கு சேர்க்கும் போது, விஜய்க்கு இவள் இந்த வேலைக்கு பொருத்தமாக இருப்பாளா என்ற தயக்கம் இருந்தது. அன்று முதல் நாள் மீட்டிங்கிலே அவள் திறமையை நிரூபித்து இருந்தாள். இன்று இந்த கொட்டேஷன் மூலம் இவள் மட்டும் தான் இந்த வேலைக்கு சரியாய் இருப்பாள் என்று முடிவே செய்து விட்டான்.

“எஸ் ஐ அம் ஆல்வேஸ் கரெக்ட்”

“இந்த பைல்ல இருக்குற அமௌன்ட் கோட் பண்ணி கொட்டேஷன் ரெடி பண்ணிட்றேன்”

அதற்க்கு வர்மா சொன்ன பதிலில் ஆடிப் போனான் விஜய். இவன் ஏன் இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு சிஇஒ ஆனான் என்பதை இங்கு வந்த ஒவ்வொரு நாளும் வர்மாவை நினைத்து ஆச்சர்யப் பட்டு கொண்டே இருக்கிறான்.

“ஆச்சர்யப்பட்டது போதும் என்ன கேட்கணும் நினைச்சி வந்தியோ அதை கேட்கலாம், இப்போ நான் சீரியஸ் மூட்ல இல்லை”

வர்மாவிடம் நெருங்கிய விஜய் “போதும் டா, இவ்ளோ ஸ்மார்ட்டா இருக்காத டா, எனக்கே உன்னை லவ் பண்ணனும் தோணுது”

விஜய் சொன்னதற்கு டேபிளில் இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து வீச, அதை கேட்ச் பிடித்தவன் “யப்பா ஜஸ்ட் மிஸ்” என்று சொல்ல, வர்மா சிரித்தான்.

வேலையை முடித்த ஆரண்யா நேரத்தைப் பார்க்க மணி 6.45 என்று இருக்க, “அய்யோ இவ்ளோ லேட் ஆகிடுச்சே, வேகமாக மெயில் அனுப்பி விட்டு, எழுந்தவள் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள் லிப்ட் நோக்கி சென்றாள். கிரௌண்ட் புளோர் பட்டனை அழுத்தி விட்டு மூச்சினை விட, பக்கத்தில் கேட்ட  குரலில் வெளி வந்த மூச்சு அவளுக்குள் மீண்டும் சென்றது போல் இருந்தது…

என்னவா இருக்கும்??? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page