நலம் தானா ஊதாப் பூவே!! -14

“வெட்டி வைத்த வெள்ளரிப் பழத்தின் வாசம் நீ சென்ற பின்பும் என் இதழ்களில் ஒட்டிக் கொண்டு உன்னைப் போல போகாமல் அடம் பிடிக்கிறது என்னிடம் “

…… ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று….

பாகம் -14

அவளின் பாரா முகம் அவனின் கோவத்தை தூண்டி விட்டது. அவன் செய்யலாம் ஆனால் அவள் எப்படி செய்யலாம்.

பக்கத்தில் வந்து அன்பான பார்வை பாசமான வார்த்தை, அவளின் ரோஜாப்பூ வாசம் அவன் நாசியைத் துளைத்து இதயத்தில் இதமாய் நுழைந்து அவனின் மன நிலையை மாற்றிட நினைத்தானோ என்னவோ,

கையெழுத்து வாங்க வந்தவளின் இடைவெளி தன் அருகாமையை நாசுக்காய் தவிர்த்து விட்டு நின்றாள் அவன் சும்மா விடுவானா

அவனின் திடமான நீண்ட கரங்களில் சிக்கிய அவளின் மென்னிடை நோகும் படி அவனின் பிடி  இறுகி இருக்க, இழுத்து அவன் மடியில் அமர்த்திக் கொண்டான்.

சூறாவளி சுழன்று தாக்கியது போல் உணர்ந்தவள் பயத்தில் அவன் வெற்றுத் தோளில் பதிந்த விரல்கள் பிடிமானத்திற்காக அழுத்தம் கொடுத்தது.

அவளின் பூ போன்ற மேனி அவன் வன் உடலில் மெல்லிய உணர்வினை கொஞ்சம் கொஞ்சமாய் செலுத்திக் கொண்டிருந்தது. காய்ச்சல் கண்ட அவன் உடல் அவளின் குளிர் கரங்களில் இதம் கண்டது.

விரிந்த அவளின் விழிகளில் நெடு நேரம் நீந்தி செல்ல முயன்றான். நோவு கண்ட அவளின் இடையை பார்த்து பரிதாபம் கொண்டவள் நெளிந்து வலியினை அவனுக்கு உணர்த்த,

கரைந்து போகும் அவளின் வெண்ணை இடையில் பிடியை தளர்த்தி வழுக்கிச் செல்லும் அவனின் கரங்களை வருடலாக்கி அணைத்தவனின் நெருக்கம் அவளுக்கு இன்னுமே பயத்தைத் தான் கொடுத்தது.

அவனின் உடல் சூடு உணர்ந்தவள் நடுங்கும் தன் விரல்கள் கொண்டு அவன் நெற்றியில் தொட்டுப் பார்க்க அவன் தேடியது கிடைத்ததும் அவன் மனம் நிம்மதி கண்டது அவன் மூடிய விழிகளின் மூலம் அவள் புரிந்து கொண்டாள்.

“சார் ” அவன் என்ன உணர்கிறான் என்பதை கேட்டறிய வேண்டுமே, இப்படியே இருந்திட முடியாதே

அவன் மூடிய விழிகள் திறக்கவில்லை, உடலில் வெப்பம் உயர்வது போல் தோன்றியது. அவன் என்ன எதிர்பார்க்கிறான், தன் மனது இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறதே அது உண்மையா,

அந்த நினைப்பு அவளுக்கு கனவில் மிதப்பது போல் தோன்ற, தைரியத்தை வர வழைத்துக் கொண்டு வறண்டு போன அவளின் இதழ்கள் நாவினை கொண்டு ஈரப்படுத்திக் கொண்டாள்.

“மாறா “

“மாறா “

அவளின் அழைப்புகள் அவனை வேறு உலகத்துக்கு அழைத்துச் சென்றது. விழிகள் மெல்ல திறந்தது. அவள் சிரித்தாள் அவனும் சிரித்தான். முதல் முறை இருவரும் ஒன்றாக சிரித்தார்கள்.

அவனின் மூச்சு விடும் சத்தம் கூட மெல்லிசையாய் அவளுக்கு இனித்தது. அவளின் சிரிப்பின் ஒலியை பிடித்த இசை போல் கேட்டுக் கொண்டிருந்தான்.

“ஆரு ” இது வரை அவன் குரல் கண்டிராத மென்மை… சிலிர்த்து சிவந்த பெண்ணவள்… அவளின் மற்றொரு கரத்தினை அவனின் இடப்பக்க தோளில் வைத்து இருபுறமும் தன்னுடைய கைகள் கோர்த்து மாலையாக்கியவள்

“சைன் போடுங்க ” என்றாலே பார்க்கலாம்.

அவ்வளவு தான் சினம் கொண்ட சிங்கத்திடம் சிக்கிக் கொண்டோமோ என்று நொடியில் பயப்பந்து உருள,

“ஏன்டி இப்படித்தான் பைல்ல சைன் கேட்பாங்களா ” உரிமையுடன் பேசிய இந்த வர்மா அவளுக்கு புதிராக, புதியதாக தெரிந்தான்.

சட்டென முகம் வாடியவள் தன்னை தவறாக நினைத்து விட்டானோ என்ற நினைப்பில் எழுந்து கொள்ள முயல, அவன் விட வேண்டுமே

அவன் நாசி கொண்டு அவள் நாசியை உரசியவன், “உனக்கு கோவம் கூட வருமா ” என்றான் வில் எய்தும் பார்வையில் தாக்கி புருவத்தினை உயர்த்தி,

அது என்ன கோவம் கூட வருமா, வேறு என்ன வரும் எனக்கு கயல் விழிக்கு சொந்தக்காரி வினா தொடுத்தால் பார்வையில்

“நான் சொல்லட்டுமா வேற என்ன வரும்னு “

அவன் வார்த்தைகள் அவளின் சிவந்த மூக்கின் வழி இதழினை அதிரச் செய்து செவியை அடைய

“சொல்லுங்க “

“சொல்லனுமா ” கிறங்கி கிறு கிறுக்க வைத்தான்.

அவனின் சீண்டல் மொழியில் சிவந்தவள் வந்த நோக்கம் மறந்தாள், அவனிடம் வேலை செய்பவள் என்பதும் மறந்தாள். இல்லை இல்லை அவனால் மறக்கடிக்கப்பட்டாள்.

“ம்ம்ம் ” வேறு என்ன பேச பேதைக்கு வார்த்தைகள் வரவில்லை.

“உங்களுக்கு காய்ச்சல் இன்னும் இருக்கு” அவன் உடல் வெப்பம் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்க அவன் காய்ச்சல் காரணம் தான் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறானோ என்றே எண்ணி மனதை தேத்திக் கொண்டாள்.

“ம்ம் “

“மாத்திரை சாப்டீங்களா ” அவளின் குழந்தைத் தனமான பேச்சு அவனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது.

“நீ சாப்பிட்டியா “

“எனக்கு என்ன நல்லா தான் இருக்கேன். உங்களுக்கு தான் “

“அப்போ என்ன பண்ணலாம் ” அவளிடமே விருப்ப மனு போட்டான் காரியக்காரன்.

“மாத்திரை போடணும்னா சாப்பிடணும், நீங்க சாப்டீங்களா “அவனுக்கு வேண்டியது இந்த உள்ளம் உருக வைக்கும் அன்பு தானே அதுவும் மனதிற்கு பிடித்தவளிடம் இருந்து வரும் பொழுது,

“இல்லை ” பொய் சொன்னான் அவளிடம்

“பொய் சொல்றீங்க “

“அப்டியா” அவனுக்கு வியப்பு கண்டு பிடித்து விட்டாளே

அவன் சாப்பிட்ட தட்டினைக் காட்டினால்  கண்களால்

அவன் சிரித்தான், தலையை அசைத்து இல்லை என்று சாதித்தான்.

மாத்திரை எடுக்கட்டுமா, அவனிடம் இருந்து எழுந்து கொள்ள பார்த்தாள்.

“எனக்கு வேண்டிய மருந்து ” அவன் பார்வையின் கோணம் மாற,

“கொஞ்சம் கை எடுங்களேன் “

“எதுக்கு டி “

“ப்ளீஸ் திரும்ப வந்துடறேன் ” கொஞ்சினால் கண்கள் சுருக்கி,

மனமின்றி கைகளை எடுத்தான். விருட்டென எழுந்து டேபிளில் இருந்த மாத்திரையை எடுத்தாள். தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வந்தவள் அவனிடம் நீட்ட,

“நீ சாப்பிடு உனக்கும் காய்ச்சல் இருக்கு, அவன் கைகளை, அவள் அமர்ந்திருந்த இடத்தினைக் காட்டிட, ‘அய்யோ ‘ என்று பதறித் துடித்தது அவளின் மனம்

“நான் சாப்பிட்டா நீங்க சாப்பிடுவீங்களா ” அவனிடம் டீல் பேசினாள்.

சம்மதமாய் தலை அசைத்தான். அவன் பேச்சை நம்பி மாத்திரையை அவள் வாயில் போட்டுக் கொண்டவள் தண்ணீரை ஊற்ற, உலகம் தலை கீழாய் சுற்றியது போல் அவள் வாயில் போட்டுக் கொண்ட மாத்திரை அவன் தொண்டைக்குள் இறங்கியது தண்ணீருடன்.

கண்கள் மூடி திறந்தவள் எப்படி நடந்தது என்று யோசனையில் மூழ்க,

“எதுவா இருந்தாலும் பழைய இடத்துல வந்து பேசு ” ஷோபாவில் உட்கார சொல்வது போல் அவன் அழைத்தான்.

‘வந்தா எங்க பேச விட்றாரு ‘ அவளின் முனு முனுப்பு தெளிவாக கேட்க, பைலை எடுத்து அவனிடம் கையெழுத்து போட சொன்னாள் சீக்கிரம் கிளம்பி சென்று விடவே நினைத்தாள்.

கையெழுத்து போட்டவன் எதுவும் பேசவில்லை. அவனுக்கே புரிகிறது இவளிடம் அத்து மீறி நடந்து கொள்வது. என்ன செய்வது அவனுக்கு பிடித்திருக்கிறதே, அது போதாதா…

போதாது. அவன் செய்வது தவறு. எல்லை மீறிய தொடுதலாக நினைத்தாள். இன்னொருவளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு முடிந்தும் ஏன் இப்படி நடந்து கொள்கிறான், நானும் அவனுக்கு இசைந்து கொடுக்கிறேனே, அவள் மீதே அவளுக்கு கோவம் வர, போதும் நிறுத்திக் கொள்ளலாம். இங்கிருந்து சென்று விடு , அவன் நலமாகத் தான் இருக்கிறான். சீக்கிரமே அலுவலகம் வந்து விடுவான்.

மனம் கேள்வி கேட்டு பதிலும் சொல்லியது. “நான் கிளம்புறேன் சார் ” மாறா என்ற அழைப்பு சார் என்றாகியது. போதை தெளிந்தவன் தான் எங்கு இருக்கிறோம். இனிமேல் குடிக்கவே கூடாது என்று சத்தியம் செய்வது போல் வந்த வேலை முடிந்ததும் கிளம்ப தயாராகி நிற்பவளிடம் பேச நினைப்பது வீண் முயற்சி.

தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலை, மனதில் இருப்பது பேசவோ, செய்திடவோ முடியவில்லை. ச்சே என்ன வாழ்க்கை இது, தலையை அழுந்தக் கோதியவன்,

திரும்பி நின்றான். அவளாக வந்தாள்  அவளாகவே செல்லட்டும். என் சூழ்நிலை மாறினால் அவள் என் வாழ்வில் இல்லை என்றால் நடப்பது எப்படியோ,

அவன் திரும்பி நிற்பது அவள் மனது பிசைய்ந்தது அவன் திரும்பி நின்றாலும் அவன் உள்ளத்து உணர்வுகள் அவளுக்கு புரியும். அவளும் இப்போது ஒரு முடிவு எடுத்தாள். விழி வழி வழிந்த கண்ணீரைத் துடைத்து அவனை நெருங்கி பின்னிருந்து அணைத்துக் கொண்டாள்.

“இது தப்பு தான் தெரியுது. நீங்க என்ன நினைக்குறீங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியல, நீங்க சொல்ல மாட்டீங்க, அதுக்கும் காரணம் கேட்க எனக்கு உரிமை இருக்கான்னு தெரியல

ஆனா இந்த நிமிஷம் உங்க கண்ணுல இருக்குற எனக்கான பார்வை, உங்க நெருக்கம்,தொடுதல், இது எனக்கும் இருக்கு பிடிச்சிருக்கு, உங்க மேல மட்டும் தப்பு வேணாம், நானும் பங்கு போட்டுக்கிறேன்.

அவன்  முதுகில் இருந்த அவளின் முகம் நகர்ந்து கொண்டே வந்து அவன் தோளினை கடந்து இதயத்தில் வந்து நிற்க, மேல் நோக்கி நகர்ந்தது அவளின் கண்ணீரில் நனைந்த கண்கள் அவனுக்கான கண்ணீர் இது அவன் கண்களும் கலங்கி இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாய் மேல் நோக்கி வரும் அவளின் ஸ்பரிசம் இரண்டு முறை அவன் தான் செய்தான் இப்பொழுது அவள் முறை அதை ஏற்றுக் கொள்வது மட்டும் அவன் செய்வது என்று முடிவெடுத்து விட்டான்.

இருவரின் இரு வரி கவிதைகளும் ஒன்றாய் ஒருமித்து வீணையின் நாதம் போல தங்களை இசை மீட்டிக் கொண்டிருந்தது. முதலில் அமைதியாக இருந்திட தான் நினைத்தான். ஏனோ அவள் தீர்க்கமான முடிவுடன் தான் தன்னை நெருங்கி இருக்கிறாள் என்பது அவன் உள்ளம் உணர்ந்து கொண்டது.

இனி இது எப்போது கிடைக்குமோ இப்போது வேண்டும் அவளின் பின்னந்தலை அவனால் பற்றி இழுக்கப்பட்டு அவள் மலர் இதழ்கள் வலிமையான அவன் இதழ்களால் கொய்யப்பட்டு, உண்ணப்பட்டு, உறிஞ்சப்பட்டது காதல் கொண்டு

முத்தம் என்பது இதழ்கள் செய்யும் வேலை மட்டும் இல்லை அது இரு மனங்களின் காதல் ஒப்பந்ததிற்க்கான கையெழுத்து. அது அழகாய் இருந்திட அவசியம் இல்லை, ஆனால் அவசியம் என்பது உயிருக்கு உயிரான நேசத்தை பரிமாறிக் கொள்பவர்களுக்கு மட்டுமே அது சொர்க்கத்தை கண் முன் நிறுத்திடும்.

உயிர்கள் இருவருக்குள்ளும் கூடு விட்டு கூடு பாய்ந்து கொண்டிருந்தது முத்தத்தின் வழி தென்றல் கூட ஜன்னலினை சாத்தி விட்டு சென்றது அவர்களை தொந்தரவு செய்யாமல் சிறிது நேரம்…

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் 
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page