“கனவே கலையாதே, என்னவன் வரும் நேரம் நான் கனவில் கூட காத்திருக்கிறேன் “
…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…
பாகம் -3
வர்மா, ஆரண்யாவை தூக்கிச் செல்வதைப் பார்த்த விஜய் ‘யாரிடமும் இவன் இப்படி நடந்து கொண்டது இல்லையே இவளிடம் மட்டும் ஏன், சினிமாவில் காட்டுவது போல் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே நண்பன் காதலில் விழுந்து விட்டானோ ” அதீத கற்பனையில் மிதந்து கொண்டிருந்தவன், வர்மாவின் பின்னே சென்றான்.
ஆரண்யா வீட்டுக்கு முன் நின்றவன், திரும்பி விஜயைப் பார்க்க, வேகமாக வந்தவன் வீட்டின் காலிங் பெல் அழுத்த, நடுத்தர வயதுடைய பெண்மணி கதவினைத் திறந்தாள்.
“யார் நீங்க” விஜயைப் பார்த்து கேட்க,
“இது ஆரண்யா வீடு தானே”
“ஆமா, நீங்க”
விஜய் விலகி நின்று வரமாவைக் காட்ட, வர்மாவின் கையில் ஆரண்யாப் பார்த்தவர்”அச்சோ ஆரண்யா அம்மாக்கு என்ன ஆச்சு”
“சொல்றேன் பயப்படாதீங்க, உள்ள வந்து விளக்கமா சொல்றோம்”
அவர் விலகி வழி விட, வர்மா, ஆரண்யாவை உள்ளே தூக்கிச் சென்றவன் அவள் அறையில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தான்.
வர்மா வெளியே சென்றதும், விஜய் அவரிடம் “அவர் தான் எங்க பாஸ், ஆரண்யா இவர் கிட்ட தான் வேலைக்கு சேர்ந்திருக்காங்க, இன்னைக்கு மீட்டிங் போனோம் அங்க ஜூஸ் குடிச்சாங்க, மயங்கிட்டாங்க, கொஞ்ச நேரத்துல சரி ஆகிடுவாங்க”
பெண் மருத்துவர் வரவும், விஜய்க்கு தெரியுமே வர்மாவிற்கு தெரிந்த ஷியாமளா டாக்டர்,
மயக்கத்தில் இருக்கும் ஆரண்யாவைப் பரிசோதித்து விட்டு, ஒரு இன்ஜெக்ஷன் போட்டவர், “கொஞ்ச நேரத்துல எழுந்துடுவாங்க, சூடா குடிக்க கொடுங்க, கொஞ்ச நேரம் அப்புறம் பசிச்சா சாப்பிட கொடுங்க, எந்த பிரச்சனையும் இல்லை”
ஆரண்யா மயக்கமாய் வந்தது, விஜய், வர்மா வைப் பார்த்து கொஞ்சம் பயந்தாலும், பெண் டாக்டர் வந்தது என, குழப்ப நிலையிலே இருந்தவரிடம், வர்மா, விஜயிடம் கண் காட்ட,
“எங்களைப் பார்த்து பயப்படறீங்கன்னு புரியுது, ஆரண்யா எழுந்ததும் சொல்வாங்க, பயப்படாதீங்க, இது என் நம்பர், ஏதாவது தேவைன்னா கூப்பிடுங்க, நாங்க வரோம், ஆமா கேட்க மறந்துட்டேன் உங்க பேர் என்ன”
“பார்வதி”
“நீங்க இவங்களுக்கு என்ன சொந்தமா”
” தூரத்து சொந்தம், அத்தை முறைங்க “
அவரின் பயந்த முகத்தைப் பார்த்தவன், மேலும் கேட்டு பயமுறுத்த விரும்பாமல், அவரிடம் சொல்லி விட்டு கிளம்ப,
வர்மா காரில் இருந்தான்.விஜய் வந்தது ம், விஜய் தான் கார் எடுத்தான். விஜய்க்கு வர்மாவிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தாலும், வர்மாவின் குழப்பமான முகத்தைப் பார்த்தவன், ஜூஸில் மயக்க மருந்தை யார் கலந்திருப்பார் என்ற யோசனை தான் இருக்கும் என்று புரிந்து கொண்டவன்
“மச்சான் எனக்கு என்னமோ, நாம டெண்டர் எடுக்குற விஷயத்துல நமக்கு போட்டியா இருக்குறது அந்த ஆர் கே குரூப் தானே, அவங்க வேலையா இருக்குமா”
இல்லை என்பது போல் தலை அசைக்க,
“வேற யாரா இருக்கும்”
“நாளைக்கு தெரியும்”
“கண்டுபிடிச்சிட்டியா வர்மா”
“டவுட் இருக்கு, நாளைக்கு கன்பார்ம் பண்ணிடுவேன்”
“யாருன்னு சொல்லு மச்சான் இப்பவே சொல்லேன், எனக்கு சஸ்பென்ஸ் தாங்காது மச்சான்”
“ம்ம் க்ளு கொடுக்குறேன் கண்டுபிடி டா”
“ஏன் டா நான் மக்குன்னு உனக்கு தெரியாதா, நான் எப்படி டா”
“அப்போ வெயிட் பண்ணி நாளைக்கு தெரிஞ்சிக்கோ”
“போ டா” வர்மாவிடம் கோவம் கொண்டு அமைதியாய் வண்டியை ஒட்டியவனிடம்,
“ஹோட்டல்ல நீ வேற யார்னா பார்த்தியா” வர்மா கேட்க,
“ஹோட்டல்லயா ” யோசித்தவன், “யாரும் தெரிஞ்சவங்க பார்த்த மாதிரி இல்லையே”
“நிதிஷா” வர்மா சொல்ல
சடன் பிரேக் போட்ட விஜய் “என்ன டா அவளா, அவ ஏன் டா ஆராண்யாவுக்கு மயக்க மருந்து கொடுக்கணும்”
“உன்னை மாதிரி அவளும் ஒரு முட்டாள் அதான்”
“என்ன டா பொசுக்குன்னு என்னை முட்டாள் சொல்லிட்ட, அதுவும் அந்த ஜிங்கிடி கூட சேர்த்து வச்சு சொல்ற”
“நீயும் அவ நினைக்குற மாதிரி தானே நினச்ச” சொல்லி விட்டு புருவம் உயர்த்த,
‘நாம நினைச்சது இவன் எப்படி கண்டுபிடிச்சான்’ மனதில் நினைத்தவன், ‘ஓ அந்த ஜிங்கிடியும் வர்மா, ஆரண்யாவை லவ் பண்றான்னு நினைச்சி தான் பண்ணிருக்காளோ’
“அதே தான் டா” வர்மா, விஜய் மனதில் நினைத்ததற்கு பதில் சொல்ல,
“இல்லை மச்சான், நீ யார் கிட்டயும் இப்டி தூக்கி பார்த்தது இல்லை, அவ வீடு கூட தெரிஞ்சி வச்சிருக்க, அதான் மச்சான் உனக்கு ஆரண்யாவைப் பார்த்ததும் இந்த சினிமாவுல காட்டுவாங்களே பார்த்தும் லவ் பத்திக்கும்னு, அதுவும் இல்லாம அவ வேற ரொம்ப அழகா, ஸ்மார்ட்டா, கியூட்டா வேலை செய்றா, வாய்ஸ் அதுக்கு மேல ஸ்வீட் அதான் மச்சான் நீ லவ்ல விழுந்துட்டியோன்னு நினைச்சிட்டேன்”
விஜய் சொல்வது உண்மை தான் ஆரண்யா அழகு தான், அவள் வேலை செய்வது, பேசுவது என அனைத்திலும் நேர்த்தியான அழகு தான், இது மட்டும் போதுமா, வர்மா மனதில் இப்போதைக்கு காதல் எண்ணம் இல்லை, தொழிலில் முதல் இடத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே
விஜய்யை முறைத்தவன் “என் பி. ஏ வை நீ ஏன் டா சைட் அடிக்குற, அப்டியே வர்ணிக்குற ம்ம்” வர்மாவுக்கு விஜய் ஆரண்யா பற்றி சொன்னது பிடிக்கவில்லை அது எரிச்சலைத் தான் தந்தது.
இவனும் சைட் அடிக்க மாட்டான் சைட் அடிக்குற என்னையும் திட்டுவான். புடவை கட்டிட்டு அழகா இருந்தா பார்க்க தானே செய்வாங்க விஜய் முனு முனுப்புடன் சொல்ல,
வர்மாவின் வீடும் வந்து விட, இவனை நாளைக்கு பார்த்துக்கலாம் மனதில் திட்டியவன் “விஜய் நீ கார் எடுத்துட்டு போ, காலைல சீக்கிரம் வந்துடு, அப்டியே ஆரண்யாவை கூட்டிட்டு வந்துடு”
எல்லாம் அக்கறையா செய்ய வேண்டியது கேட்டா மட்டும் முறைக்க வேண்டியது. வர்மாவை திட்டிக் க்கொண்டே காரை எடுத்துக் கொண்டு செல்ல, விஜய் பேசுவது காதில் விழுந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் வீட்டின் உள்ளே சென்றான்.
வர்மாவின் அம்மா காத்திருக்க “என்ன வர்மா சிரிச்சிட்டே வர”
“அது ஒன்னும் இல்லை மா, விஜய் கிட்ட பேசிட்டு இருந்தேன்”
“ஓ அவனா, சரி பா நீ போய்ட்டு பிரெஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம்”
“சரி மா” என்றவன் தனது அறைக்கு சென்று பிரெஷ் ஆகி வந்தவன் இரவு உணவை குடுபத்துடன் சாப்பிட்டதும், அப்பாவிடம் இன்று நடந்ததை சொல்லி, நிதிஷா பற்றிய சந்தேகத்தையும் சொல்ல,
“சுனில் பார்வையே சரி இல்லை, எனக்கும் அந்த எண்ணம் இருந்தது. ஆனா எப்போ இவ்ளோ மோசமா நடந்துகிட்டாங்களோ இனி இது சரி வராது, அந்த பொண்ணுக்கு எதுவும் ஆபத்து இல்லையே”
தனது அப்பா சொன்ன பிறகு தான் ஆரண்யா நினைவு வந்தது.
“இல்லை பா, பிரச்சனை எதுவும் இல்லை”
“வர்மா உனக்கு நிதிஷா மேல இன்ட்ரெஸ்ட் இருந்தா சொல்லு, பேசிக்கலாம்” மகனுக்கு விருப்பம் வந்திருக்குமோ என்ற எண்ணத்தில் கேட்க
“இல்லை பா, இப்போ எனக்கு கல்யாணம் பண்ணிக்குற எண்ணம் இல்லை, இந்த காண்ட்ராக்ட் பிடிக்கணும், இந்த தொழில்ல நம்பர் 1 இடத்தைப் பிடிக்கணும்” அப்பாவிடம் பேசி விட்டு வெளியே வந்தவன் தனது போனில் அழைத்து ஒருவரிடம் பேசி விட்டு தூங்கச் சென்றான்.
இரவு கண் விழித்த ஆரண்யாவுக்கு, உடம்பெல்லாம் அடித்து போட்டார் போல வலி, கடினப்பட்டு எழுந்தவள், எங்கே இருக்கிறோம் தலையை பிடித்த படி பார்க்க,
பார்வதி அருகே வந்து “என்ன மா ஆச்சு, நான் பயந்தே போய்ட்டேன். டாக்டர் சொன்னது கூட சந்தேகமா தான் இருந்தது இப்போ நீ கண் முழிச்ச அப்புறம் தான் உயிரே வந்த மாதிரி இருக்கு”
“எனக்கு ஒன்னும் இல்லை, தலை தான் கொஞ்சம் பாரமா இருக்கு, ஆமா யார் என்னை கூட்டிட்டு வந்தாங்க, விஜய் சாரா”
“ரொம்ப ஹைட்டா கலரா இருந்தாரே அவர் தான் மா”
“ஹைட்டாவா” ‘விஜய் சார் தான் யார்னா ஆளுங்கள வச்சு கூட்டிட்டு வந்திருப்பாரு ‘ என்று நினைத்து
“கம்பெனில வேலை செய்றவங்களா இருக்கும் “
“நீ அவர் கிட்ட தான் வேலை செய்றேன்னு கூட வந்த தம்பி சொல்லுச்சு, அவர் உன்னை கட்டில்ல படுக்க வச்சிட்டு கிளம்பிட்டாரு மா”
வர்மா சாரா தூக்கிட்டு வந்தாரு, ஆபீஸ்ல ஒரு வார்த்தை அவர் பேசறதை கேட்கவே அவ்ளோ நேரம் ஆகும். அவரா தூக்கிட்டு வந்தாரு, தலை பாரமெல்லாம் வர்மாவை நினைத்ததும் ஓடி ஒளிந்து கொண்டு, அவளிடம் மன்னிப்பு கேட்டது போல் தோன்றியது.
‘அவர் ஏதோ பரிதாபப்பட்டு தூக்கிட்டு வந்திருப்பாரு, நீ ஏதும் கற்பனை பண்ணிக்காத புரியுதா, அவளே அவளுக்குள் ஏதேதோ சொல்லி சமாளிக்கப் பார்த்தாலும், அவன் தொட்டு தூக்கியது, அவளுக்குள் உடல் முழுவதும் குறுகுறுப்பை ஏற்படுத்த,
‘நாம வந்த வேலையை மட்டும் பார்க்கணும், அவர் நினைப்பை இத்தோடு மறந்துடனும் புரியுதா, மனதுக்கு பாடம் எடுத்துக் கொண்டவள் மறு நாள் அலுவலத்தில் அவனுக்கு முன்னதாக சென்றவள், அவனைப் பார்த்ததும் எழுந்த சுக அதிர்வில் மெல்ல மீண்டு, அவனிடத்தில் சென்று
“குட் மார்னிங் சார்”
தலை அசைப்பைக் கொடுத்தவன் “இப்போ எப்படி இருக்கு, ஆர் யூ ஓகே” இன்டெர்வியூ நடத்தும் போதும், நேற்று வரை அவன் குரல் அதட்டலாக தான் இருக்கும் என்று நினைத்தவளுக்கு அவனின் மென்மையான இந்த குரல் இனிமையாய் தோன்ற, அவள் இரவு எடுத்த முடிவு இவனாலே தவிடு பொடி ஆனது.
“நான் நல்லா இருக்கேன் சார், இப்போ எந்த பிரச்சனையும் இல்லை”
அவ்வளவு தான் வர்மா கணினியின் திரையில் தன் கவனத்தை செலுத்த, தனது இருப்பிடத்திற்கு வந்தவள் காண்ட்ராக்ட்க்கான கொட்டேஷன் தயாரிக்கும் வேலையை செய்யத் தொடங்கினாள்.
அங்கு வந்த விஜய் “ஆரண்யா இப்போ எப்படி இருக்கு மா”
“நல்லா இருக்கேன் சார்” சிரித்த முகத்துடன் சொல்ல,
விஜயும் சிரிப்புடன் பேசி விட்டு வர, வர்மா, விஜயை பேக்டரிக்கு அனுப்பி பார்த்து விட்டு வர சொல்ல, காலையில் சென்றவன் மாலை தன் வர முடிந்தது.
வர்மாவும், ஆரண்யாவும் காரில் சென்று கொண்டிருந்தனர். ஒரு ஷாப்பிங் மால் முன்பு நிறுத்தியவன் காரில் இருந்து இறங்க, ஆரண்யாவும் இறங்கினால், மாடர்ன் டிரஸ் எடுக்க சொல்ல, அவளும் அவன் தங்கைக்கு தான் எடுக்க சொல்கிறான் என்று நினைத்து எடுக்க, அவள் எடுக்கும் ட்ரெஸை எல்லாம் நிதிஷா தனக்கு வேண்டும் என்று சண்டை போட, ஆரண்யா சொன்னதில் அடிக்க சென்ற நிதிஷா, வர்மாவின் செயலில் அதிர்ந்து நின்றாள்.
வர்மா என்ன செய்திருப்பான் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்….
