“என் மேல் விழுந்த மழைத்துளிகள் உன்னைபோலவே என்னை முத்தமிட்டு மூழ்கடிக்கப் பார்க்குது “
… ஊதாப் பூவின் இதழ்களில் ஒன்று…
பாகம் -8
வர்மாவோடு இது வரை வந்த கார் பயணத்தில் பாடல்களை கேட்டதில்லை, விஜய் இருந்தால் மட்டும் விஜயின் பேச்சை நிறுத்துவதற்காக பாடல்கள் வைப்பான் அதுவும் லைட் மியூசிக் கொண்ட பாடல்களாக இருக்கும். இப்போது ஓடிக் கொண்டிருப்பதோ ஒரு பெண்ணின் காதல் வலியினை பிரதிபலிக்கும் உணர்ச்சி மிக்கப் பாட்டு, காதலைப் புரிந்து கொள்ளாத காதலனிடம் தினமும் வதை படுவதை விட, மரணமே சிறந்தது என்று துணிந்தவள் அவளின் ஜிப்சியின் மேல் அமர்ந்து கொண்டு கடற்கரையில் கடல் அலை தன் மேல் படும் படி இருப்பாள்.
கொஞ்சம் கொஞ்சமாய் அலை அடுத்து தண்ணீரில் விஷப் போகும் நேரம் ஓடி வந்து அவளைத் தூக்கி, தன் மீதான அவளின் காதலை புரிந்து கொண்டு அவளிடம் காதலைக் கூறும் தருணம் அவளின் கண் முன் ஓடியது.
அவளுக்குத் தெரியும் அவனின் குணம். இது நிச்சயமாய் விஜய் வேலை தான். இந்த பாட்டிற்கும், இப்போதைய நிகழ்விற்கும் சம்மந்தம் இருக்கிறதா? இல்லையே, அந்த பாடலில் இருப்பவர்கள் காதலர்கள் இங்கு வெளியே வேடிக்கைப் பார்ப்பது போல் கொஞ்சமாய் இருக்கையில் சாய்ந்து கொண்டு ஓரப்பார்வை பார்த்தாள். அவன் அமர்ந்திருக்கும் விதமும், நெற்றியில் புரளும் முடியும், தோரணையாய் அவன் காரினை இயக்குவதும், வேறு எங்கும் அலைபாயாத அவன் காந்தக் கண்களும், தடித்த மீசையின் கீழே இருக்கும் பெரிய மேல் உதடும் அதற்கு இணையாக இருக்கும் கீழ் உதடும் என அவளின் பார்வையின் போக்கினை நிறுத்திக் கொண்டவள்
இது தப்பு அவர் எங்க, நான் எங்க, ஆழம் தெரியாம காலை வைக்காதான்னு சொல்லுவாங்க, இவரோட பேச்சும், செயலும் புரிய வைக்குதே இவருக்கு காதல், கல்யாணம், கமிட்மென்ட்ஸ் எல்லாம் பிடிக்காது. தொழில்ல முன்னேறணும், கொடுத்த பொறுப்புக்கு தகுந்த வேலை அதுவும் இவர் பதவி ஏத்துகிட்ட உடனே கிடைச்ச பெரிய காண்ட்ராக்ட் இதுல அவருக்கு லாபம், பேர் எல்லாமே கிடைக்கும் இப்போதைக்கு இது தான் அவர் மைண்ட்ல இருக்கும்.
உன்னை ஆபத்துல காப்பாத்துறாரு அதுக்கு அர்த்தம் தேடுறியா, அவர் கிட்ட வேலை செய்ற நீ பிரச்சனைல மாட்டிக்கிட்டா அவருக்கு அது பாதிப்பு தான் அதான் காப்பாத்துறாரு அவ்ளோ தான், கற்பனை பண்றத மூட்டைக் கட்டி ஓரம் போட்டுட்டு இனிமேலாவது கவனமா இரு, அவர் முன்னாடி முட்டாளா நடந்துக்காத,
அது வரை அவனை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் இனி இப்படி பார்த்திடக் கூடாது என்று முடிவெடுத்தவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள, தன்னை துளைக்கும் பார்வை பார்த்தவளை திரும்பிப் பார்க்கும் நேரம் அவள் பார்வை வெளியே இருந்தது.
அவன் விழிகளில் அவளின் உருவம், சாலையில் ஒரு கண்ணும், அவள் மீது ஒரு கண்ணும் வைத்தவன் ஒவ்வொரு பார்வையிலும் அவளின் ஒவ்வொரு பாகமாய் ரசித்தான். அவள் திரும்பி இருந்ததால் அவள் கூந்தல் முதுகில் பரந்து விரிந்து மயில் தோகைப் போல் இருக்க, “நைஸ்” என்றது அவன் உதடுகள்
கூந்தலை ஒதுக்கிடும் அவள் பஞ்சு விரல்கள் செவியில் பட்டு காதணியை உரச, அது ஆடிடும் ஆட்டத்தில் இவனும் சேர்ந்தே அசைந்தான். அவள் கழுத்தினில் தவழும் வெள்ளி நிற சங்கிலி அவனை அங்கேயே கட்டிப் போட்டது சிறிது நேரம்.
ஒரு பக்க கன்னம் மின்னிய மினு மினுப்பு தொட்டுப் பார்க்க தூண்டியது, அவளின் உடை ஓவியத்தில் இருந்து எடுக்கப்பட்டதோ என்ற எண்ணத்தில் மூழ்கடித்தது. இவ்வளவு நேரம் என்னை த் தானே பார்த்துக் கொண்டிருந்தால் இப்பொழுது ஏன் திரும்பவே இல்லை. அவளின் முகத்தினை இப்பொழுதே பார்த்திட வேண்டும்.
எப்படி கூப்பிடுவது, நான் ஏன் கூப்பிட வேண்டும், அவள் திரும்பட்டும் என்று முகத்தை திருப்பிக் கொண்டவன் உடனே திருப்பிக் கொண்டான் அவளின் புறம், வெளியே சுக்கு காபி விற்கும் சைக்கிள் தெரிய, வண்டியை நிறுத்தினான் உடனே,
அவள் திரும்பிப் பார்த்தாள் இவன் புறம், இத்தனை நேரம் பார்த்திட மாட்டாளா என்று பார்த்திருந்தவன் இப்பொழுது அவள் முகம் பார்க்காமல் வெளியே இருந்த சுக்கு காபி மீது இருக்க, இவளுக்குத் தான் ஏமாற்றமாக இருந்தது. தான் பார்ப்பது இவருக்கு பிடிக்கவில்லையோ, ஒரு முறை கூட பார்க்கவில்லையே, தான் அவருக்கு பிடித்த மாதிரி இல்லையோ,
அவனுக்கு சுக்கு காபியே பிடிக்காது இவளால் தான் அதை ரசித்துக் குடிக்கின்றான் அவளுக்கு இது தெரியாதே, சுக்கு காபியின் மீது பொறாமை கொண்டாள்.
வண்டியை விட்டு இறங்கியவன் அவள் இருக்கும் பக்கம் வந்தான். அவன் வந்ததும் காரின் கதவினை திறந்தவள் அவனைப் பார்க்க, “இங்கயே இரு நான் வாங்கிட்டு வரேன் ” அவன் நகர, இவளோ “சார் ” என்றாள் அவனை தடுக்க,
நின்றவன் ” வேற என்ன வேணும் “
சொல்வதற்கு தயங்கியவள் “நானும் வரட்டுமா சார் அங்கேயே குடிக்கலாமே “அவன் வாங்கி வந்து இவள் குடிப்பது ஏனோ சங்கடமாக உணர்ந்தாள்.
யோசித்தவன் அவள் முதல் முறை கேட்டிருக்கிறாள் மறுக்க தோன்றவில்லை “வா “என்றான் உரிமையாய் அவள் அந்த உரிமையை உணர்ந்தாளா என்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.
பின் பனி கால பனியில் அந்த இடமே இருளில் இருந்தது ஆங்காங்கே மஞ்சள் நிற விளக்குகள் ஒளிர இருளும்,ஒளியும் சேர்ந்து இரவின் தொடக்கத்தை அழகாய் தொடங்கி இருந்தது.
அவள் பக்கத்தில் நடந்து வருகிறாள் மெல்லிய பன்னீர் ரோஜாவின் வாசனை அவன் கூர் நாசியில் உரசிட அவள் வாசனை தான் என்பதில் அவன் மனம் உற்சாகமாகியது.
இருவரும் டீ விற்கும் சைக்கிளின் முன் நிற்க “அண்ணா நீங்களா, அன்னைக்கு சுக்கு காபி வாங்குனீங்களே, மீதி காசு வாங்காம கிளம்பிடீங்க, இந்தாங்க ” மீதி பணம் 20 ரூபாயை அவன் வர்மாவிடம் நீட்டிட, ஆச்சர்யத்துடன் வர்மாவின் விழிகள் அவனைப் பார்த்தது.
“ரெண்டு காபி கொடு”
“நம்ம கடையோட டேஸ்ட் அப்டி தேடி வந்துருக்கீங்க பாருங்க, உங்களுக்கு ஸ்பெஷலா தரேன் சார்” சிரித்த முகத்துடன் காபியை இரு சில்வர் டம்ளர்களில் ஊற்றி தட்டில் வைத்துக் கொடுத்தான். வர்மா, ஆரண்யாவிடம் ஒன்றை எடுத்துக் கொடுத்து விட்டு அவனும் எடுத்துக் கொண்டான்.
“அக்கா காபி எப்படி இருக்கு “
சூப்பர் என்பதாய் அவள் விரலை வளைத்து சொல்ல அவனும் சிரித்தான். இருவரும் குளிர் காற்றுக்கு இதமாக சுக்கு காபியினை குடித்து முடித்து விட்டு, வர்மா பணத்தினை கொடுக்க,
“சார் உங்க காசு 20 ரூபாய் இருக்கு என் கடைக்கு தேடி வந்திருக்கீங்க உங்களுக்கு இதை கூட செய்ய மாட்டேனா”
கோடிக் கணக்கில் வியாபாரம் செய்பவனுக்கே அவன் வியாபார நுனுக்கத்தை சொல்லிக் கொடுக்கிறான். விற்பவர், வாங்குபவர் இடையே இருக்கும் உறவு தொழிலுக்கு எவ்வளவு முக்கியம் எப்படி பேசி மீண்டும் வர வழைப்பது பேச்சு சாமர்த்தியம் இதை இவனிடம் மேலும் தெரிந்து கொண்டான்.
அவன் வாங்க மறுத்தாலும் பணத்தை கொடுத்து விட்டே வந்தான்.
காரினுள் இருவருக்கும் மகிழிச்சியான மனநிலை பேசிக் கொள்ளவில்லை தான் ஆனாலும் பிடித்த செயலை செய்ததன் விளைவு இருவரின் மனமும் மகிழ்வு கொண்டிருந்தது. அவனுக்கு கோவம் இருப்பது இவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
அந்த வருண் வந்து பேசியதற்கு நான் என்ன செய்ய முடியும். இவர் சீக்கிரமே வந்திருந்தாள் அவனிடம் சீக்கிரமே விடு பட்டிருக்கலாம் ஏன் வரவில்லை என்னை ஏன் தனியே விட்டார். உரிமையாக கோவம் தானாக எழ, அவள் உள் மனமோ வேண்டாம் இந்த விபரீத ஆசை, இத்துடன் நிறுத்திக் கொள் அபய மணி போல ஒலித்துக் கொண்டிருக்க, கண்களோ அவனை ரசிக்கும் பணியை கள்ளத்தனமாக செய்து கொண்டிருந்தது.
அவளின் வீடு வந்திருக்க, இவளுக்குத் தான் ‘ச்சே இவ்ளோ சீக்கிரம் வந்திருக்கு இன்னும் கொஞ்ச நேரம் அவர் பக்கத்துல இருந்தா நல்லா இருந்திருக்கும் ‘ அவள் அமைதியாக அமர்ந்திருந்தால்,
“இன்னும் எவ்ளோ நேரம் இப்டியே இருக்க போற, எனக்கு டைம் ஆச்சு,”
அவன் குரலில் வேகமாக கதவினை திறக்க முயல அவனோ லாக் செய்திருந்தான் அவளிடம் விளையாட்டு காட்டிட,
முயன்று பார்த்தவளுக்கு கதவினை திறக்க முடியாமல் போக, “சார் திறக்க முடியல ” அவள் முக பாவனையில் இருந்த குழந்தைத் தனம் அவனுக்கு பிடித்திருந்தது அவளுக்கு தெரியாமல் லாக் விடுவித்தவன்,
மீண்டும் அவளை நெருங்கி அவளின் ஆடையில் உரசிய வண்ணம் கதவினை திறக்க, ‘இவர் திறந்தா திறக்குது இது எப்படி’ அவன் கள்ளத்தனம் புரியாமல் குழம்பியவளைப் பார்த்தவனுக்கு சிரிக்கத் தோன்றினாலும் சிரிக்க முடியாமல் கட்டுப் படுத்தியவன் அவள் வெளியே செல்லும் வரை பார்த்துக் கொண்டே இருந்தான்.
கதவினை மூடி விட்டு “கிளம்புறேன் சார் ” அவள் சொல்லி விட்டு பதில் வருமா, தேர்வு எழுதி விட்டு காத்திருக்கும் மாணவி போல காத்திருந்தாள். தலை அசைப்புடன் காரினை எடுத்து சென்று விட, இது தெரிந்தது தானே இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டதே பெரிது என்ற நினைப்புடன் வீட்டுக்கு சென்றாள்.
அவளுக்காக காத்திருந்த வசந்தியோ “பாப்பா நீ நடந்துக்குறது சரி இல்லை, வந்த வேலையை மட்டும் பாரு, தேவை இல்லாதது எதுவும் பண்ணாத ” எச்சரிக்கை செய்தாள், எங்கே வர்மாவை காதலித்து விடுவாளோ என்ற எண்ணத்தில்,
இதற்க்கு என்ன பதில் சொல்லுவாள் கனத்த இதயத்துடன் தனது அறைக்கு சென்றாள் பதிலின்றி,
வர்மாவுக்கோ என்றும் இல்லாத இதழ் புன்னகையுடன் வீட்டிற்கு வந்தான். அவன் அம்மா வர்மாவிற்க்காக காத்திருந்தார். அவனைக் கண்டதும் அவனுக்கு திருஷ்டி எடுத்தவர் “ரொம்ப சந்தோஷமா இருக்கேன் கண்ணா, உன்கிட்ட முக்கியாமான விஷயம் சொல்ல தான் காத்திட்டு இருந்தேன் என்ற சொல்லில் மனதில் இருந்த புது உணர்வுகள் எல்லாம் மறைந்து போக
“உங்க விருப்பம்” என்ற வார்த்தையை மட்டும், சொல்லி விட்டு அறையை அடைந்தவன். “இனி இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் விஜயிடம் பேசி விட்டே தூங்கினான்.
புது டெண்டரை குறித்த தேதிக்கு முன்னதாக முடித்திட யார் யார் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பது பற்றிய அட்டவணை தயார் செய்யப்பட்டு நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது.
இருவருமே வேலையில் பிஸியாக இருந்ததால் பார்க்கவோ, பேசிக் கொள்ளவோ முடியவில்லை.
வர்மா சாருக்கு கல்யாணம் நடக்கப் போகுதாம் ரொம்ப கிராண்டா உனக்கு தெரிஞ்சிருக்குமே உடன் வேலை செய்யும் கீர்த்தி, ஆரண்யாவிடம் கேட்க வலியுடன் அவளைப் பார்த்தாள் ஆரண்யா.
மீதி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
