அரங்கம் திருமண மாளிகை…
பார்ப்பவர்களைப் பிரமிக்கச் செய்யும், பிரம்மாண்டத்துடன் ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த மாளிகை… ஆடம்பரத்தின் செழுமையே பறைசாற்றியது, பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கட்டப்பட்ட மாளிகையது…
மகிழிசை – தேவமித்ரன் திருமண விழா
திருவிழா போலக் கோலகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அந்தத் திருமணம்… உண்மையில் திருமணமா இல்லை திருவிழாவா என அனைவரும் வியக்கும் வகையில்தான் நடந்து கொண்டிருந்தது அந்தத் திருமணம்…
ஆம், நுழைவுவாயில் முதல் வரவேற்பரை, மணவறை, பந்திபரிமாறும் இடம், பார்க்கிங் இடம், பார்வையாளர்கள் இடம் என அனைத்தும் கண்ணைக் கவரும் வகையில் அழகிய வேலைபாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டு இருந்தன…
பெரிய பெரிய தலைவர்கள் முதல், முக்கியப் பிரமுகர்கள் , உறவினர்கள் என அனைவரும் ராஜ மரியாதையோடு வரவேற்கப்பட்டு, அவர்களுக்கெனத் தனி இருக்கையில் அமர்கிற வரையில் பணத்தின் செழுமை நிரம்பி வழிந்தது… புகைப்படக் கலைஞர்கள், பத்திரிகையாளர்களுக்கெனத் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது…
மணமேடையில் ஆண்மைக்கு இலக்கணமாகக் கம்பீரமாக வீற்றிருந்தான் தேவமித்ரன். ஐயர் சொல்லும் மந்திரத்தை திருப்பிச் சொல்லியவாறு அமர்ந்திருந்தவனின் கண்கள் அடிக்கடி மணமகள் அறையைத் தழுவவும் மறக்கவில்லை.
உண்மையில் அங்கிருந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியின் அலை அடித்துக்கொண்டிருந்தது அவள் ஒருத்தியைத் தவிர…
ஆம், கண்களில் நிற்காமல் வழியும் கண்ணீரோடு, இயலாமையின் சாயலை முகத்தில் பிரதிபலித்து, சிலைப் போல அமர்ந்திருந்தாள் அவள். இசை… மகிழிசை என்ற பெயருக்குச் சொந்தக்காரி.
ஆம், கல்யாண மணப்பெண் அவளே. மணமகள் அறையில் அமர்ந்திருந்தவளை சமாளிக்கும் வழித் தெரியாமல் அனைவரும் விழி பிதுங்கி நின்றிருக்கச் சரியாக ஐயரின் சத்தம் அவர்களின் செவியை நிறைத்தது,”நாளியாவுது பொண்ண அழைச்சுண்டு வாங்க!.”அப்படி அவர் சொல்லியதும் அவர்கள் அனைவரும் அவளைத் தயக்கத்தோடு நோக்க,
அவள் மெல்லிய செப்பி இதழ்களைத் திறந்து சொன்னாள், அழுத்தமாக அதேநேரம் இதுதான் என் இறுதி முடிவு என்பதுபோல,”இந்த கல்யாணம் நடக்காது. நான் இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்க மாட்டேன்!.”
அவளின் பதிலில் அனைவரும் அதிர்ச்சியாகி அவளைப் பார்க்க, அவள் அன்னையோ, ” என்ன விளையாடறியா?. நீ வேணும்னா நடத்துறதுக்கும் நீ வேணாம்னா உடனே நிறுத்துறதுக்கும் இது ஒன்னும் பொம்மை கல்யாணம் இல்லை. ஒழுங்கா கெளம்பி மணமேடைக்கு வா. ” என்றவர் விட்டாள் அடித்துவிடும் மனநிலையில் இருந்தார்.
‘என்ன நினைத்துகொண்டிருக்கிறாள் இந்தப் பெண்.’ என்ற ஆதங்கம் அவர் மனம் முழுவதும் நிரம்பி வழிந்தது.
“அம்மா நீங்க என்னை அடிச்சாலும் அத பத்தி எனக்குக் கவலை இல்லை. என்னால ஆதி வராம கல்யாணம்லா பண்ணிக்க முடியாது.” என்றவளின் பிடிவாதம் அவரையும் மழைக்க வைத்தது.
“ஆதிக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குடா, நான் கண்டிப்பா ரிசெப்சன் முடியறதுக்குள்ள வந்துருவேன். நீங்க எப்படியாவது அவளைச் சமாதானப்படுத்திக் கல்யாணத்தை நடத்துங்கனு சொன்னான்.” என்று ஒரு புதியவர் பொறுமையாக நிதானமாக எடுத்துச் சொல்ல,
“சத்யாம்மா என்ன தப்பா எடுத்துக்காதீங்க. உங்க புள்ள வந்தா நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குறேன். இல்லைனா என்னால முடியாது.”என்றவள் அவள் முடிவில் இருந்து மாறுவதாகத் தெரியவில்லை.
அடுத்து என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு இவர்களின் குடும்பத்தைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு வருவோம்.
ஆதியின் தாத்தா நாராயணச் சேதுபதியும், இசையின் தாத்தா ரத்னவேல் பாண்டியனும், பால்யகாலச் சினேகிதர்கள்…
அவர்களைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ அவர்களின் மகன்களான வீரநாராயணனும் சங்கரவேல் பாண்டியனும் அவர்களைப் போலவே நட்பு பாராட்ட அவர்களின் நட்பு அடுத்தத் தலைமுறையையும் பிணைத்துக் கொண்டது.
நல்ல காரியமோ கெட்ட காரியமோ அந்த இரண்டு இடங்களிலும் ஒரு குடும்பத்தை மட்டும் தனியாகப் பார்ப்பது அவ்வளவு கடினமான ஒன்று. அதேபோல ஒருவர் வீட்டு விசேஷத்தில் இன்னொரு வீட்டின் ஆதிக்கமும் தலைமையும் இருப்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
ஆம், இதோ இப்போது கூட இசையின் திருமணத்தில் வீரநாராயணன்தான் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்துச் செய்து கொண்டிருந்தார். மணமகளின் ஏற்பாடுகளிலிருந்து இன்னும் சில முக்கிய விஷயங்களை அவரின் மனைவியான சத்தியவதியின் கண்காணிப்பில்தான் நடந்து கொண்டிருந்தது..
சொந்த மகள் திருமணத்தில் எந்தக் கவலையும் இன்றி நிம்மதியாக வலம் வந்து கொண்டிருந்தனர் சங்கர வேல் பாண்டியனும் அவரின் மனைவி முத்தமிழும். ஒரே ஒரு மகளின் திருமணம் என்ற எந்தக் கவலையும் அவர்களின் முகத்தில் இருப்பதுபோலத் தெரியவே இல்லை. அந்தக் கவலையெல்லாம் வீரநாராயணனுக்கும் சத்தியவதிக்கும் மட்டுமே…
இவர்கள் இருவருக்கும் பிறந்த மகள்களான நந்தினிதேவி, வெண்மதி, என அந்தக் குடும்பமே பறந்து பறந்து வேலை செய்து கொண்டிருக்க, இத்தனைக்கும் ஐந்து வருடம் காதலித்த ஒருவரை அவள் கரம் பிடிக்கப் போகும் இந்தத் தருணத்தில், அவன் ஒருவனின் வருகை இல்லாததால் இந்தக் கல்யாணத்தை அவள் நிறுத்த சொல்லி நிற்பது அவர்களுக்கும் ஆயாசமாகதான் இருந்தது..
அதேநேரம் அவர்களின் நட்பின் ஆழத்தை எண்ணி அவர்களால் வியக்காமலும் இருக்க முடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் தவித்திருக்க அந்த நேரம் காக்கி உடையில் கம்பீரமாக உள் நுழைந்தான் ஆதித்த கரிகாலன் .
“அக்கா ஆதி அண்ணா வந்துட்டாங்க!.”அவனின் வருகையைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி ஓடிச் சென்று அவளிடம் சொன்னாள். அடுத்த நிமிடம் கண்களில் கண்ணீரோடு அவனின் முன்பு அவள் நிற்க அவனோ இவளை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
அவனின் முகமோ கடுமையாகி இறுகிப் போயிருக்க, இப்படி ஒரு முகத்தை அவனிடம் பார்த்திராதவள் தவித்துப் போய் நின்றிருக்க, மணமேடையில் அமர்ந்திருந்த தேவமித்ரனும் அவள் அழுவதைப் பார்த்து மெல்ல எழுந்து வந்து அவளின் முன்பு நின்றான்.
அங்கும் இங்கும் ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்த வீரநாராயணன் மேடையில் இருந்து மணமகன் இறங்கி வருவதைப் பார்த்துப் பதறிக் கொண்டு அவர்களின் முன்பு வந்து நின்றார்,”ஆதி!, என்ன இது?. இதுதான் நீ கல்யாணத்துக்கு வர நேரமா?. சரி வந்தது தான் வந்த இந்தக் காக்கி யூனிபார்ம் எல்லாம் கழட்டி வச்சிட்டு வந்திருக்கலாம்ல. அட்லீஸ்ட் உனக்குத் தான் நேரம் இல்லன்னா உன் கூட வேலை பார்க்கிறவங்களையாவது டிரஸ் மாத்திட்டு வர சொல்லி இருக்கலாம்ல.” என்றவரை அழுத்தமாகப் பார்த்தவன்,
“அப்பா!, ஒரு நிமிஷம் இருங்க.” என்றவன் நேரடியாகத் தேவ மித்ரனிடம் திரும்பி,
“யூ ஆர் அண்டர் அரெஸ்ட் மிஸ்டர்.தேவமித்ரன்!.” என்றவன் கையில் இருந்த விலங்கை அவன் முகத்திற்கு நேராக நீட்ட அங்கிருந்த அனைவரின் முகமும் அதிர்ச்சி அலைகளை அளந்து கொண்டிருந்தது..
சிறிது நேரத்திற்குப் பிறகு, அங்கே ஒரு போர்க்களமே நடந்து முடிந்திருக்கத் தேவமித்திரன் கைது செய்யப்பட்டுப் போலீஸ் வாகனத்தில் ஏறி அமர்ந்திருந்தான்.
தேவ மித்திரனை பெற்றோர்களும் உறவினர்களும் சண்டை போட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பி இருக்க, சங்கரவேல் பாண்டியனும் முத்தமிழும் தலையில் கை வைத்து அங்கேயே அமர்ந்துவிட்டனர்.
அடுத்து என்ன என்பது பற்றி அவர்களால் கற்பனை கூடச் செய்துவிட முடியவில்லை. நாளை பத்திரிக்கையில் பெரிய எழுத்தில் அவளின் மகளின் பெயரோடு சேர்த்துக் கல்யாணம் நின்ற செய்தியோடு தேவமித்ரனின் கைதான செய்தியும் வெளியாகும்.
அதன் பிறகு தன் மகளை யார் திருமணம் செய்வார்கள் என்ற கேள்வி பூதகரமாகக் கண் முன்னே தோன்ற, அதைவிட அவனின் கைது செய்தியை கேட்டதில் இருந்து திக்பிரமையில் பிடித்தவள் போல் நின்றிருந்த அவளின் நிலைதான் அவர்களை இன்னும் பயமுறுத்தியது.…
அவனைக் கைது செய்து ஜீப்பில் ஏற்றியவன், இவர்களிடம் பேசிவிட்டுச் செல்லலாம் என உள்ளே வர, அப்போது அவனின் செவியைத் தீண்டியது அவர்களின் குரல்.
“நான்தான் சொன்னல்ல, நீதான் நம்பல பாரு இப்போ அவளோட கல்யாணம் நின்னுப்போச்சு. அவ ஒரு ராசி கெட்டவ, அவளோட பேர் இந்த வயசுல எல்லார் முன்னாடியும் கலங்க படணும்னு எழுதியிருக்கு. அத யார் நெனச்சாலும் மாத்த முடியாது.”
“ஆமாடி, நீ சொன்னப்ப கூட நானும் நம்பல. ஆனா, இப்போ எல்லாரு முன்னாடியும் அவ கல்யாணம் நின்னது மட்டும் இல்லாம அவனையும் போலீஸ் புடிச்சிட்டு போயிருச்சு. நாளைக்குக் காலைல இதுதான் ஹெட்லைன் நியூஸ். அதுக்கப்பறம், அந்த பொண்ண யாரு கல்யாணம் பண்ணிக்குவா.”
“சட் அப்!.” கோபத்தில் அந்த இடமே அதிர கத்தியவன், “இன்னொரு தடவை என் இசை பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசுனீங்க நடக்குறதே வேற.” என்றவன் கைநீட்டி எச்சரித்துவிட்டு வேகமாக விருவிருவென உள்ளே சென்றவனை சூழ்ந்துகொண்டனர் அவன் அன்னையும் தந்தையும்.
அவர்களை பார்த்தவன், ” அம்மா இசை அப்புறம் அங்கிள் ஆண்ட்டி எல்லாரையும் நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு போயிருங்க. நான் கொஞ்ச நேரத்துல வந்துறேன். அப்புறமா உங்களுக்கு என்ன நடந்துச்சுனு எஸ்பிளைன் பண்றேன். ” என்றவன் சிலை போல உறைந்து நின்றவளின் அருகில் சென்றவன் அவளின் கையை இறுக்க பிடித்து,
“பயப்படாத இசை!. நான் கொஞ்ச நேரத்துல வந்துறேன்.”என்றவன் அங்கிருந்து கிளம்ப தயாராக அவனை வலிமறித்து நின்றார் வீரநாராயணன்.
இவனோ அவரை புரியாமல் குழப்பத்துடன் பார்க்க,” போய் மனமேடையில உக்காரு ஆதி. இப்போ உனக்கும் இசைக்கும் கல்யாணம். ” என்றிட கண்கள் அகல விரிய
“வாட்!, என்ன விளையாடுறீங்களா?. அப்பா இசையும் நானும் நல்ல பிரண்ட்ஸ். ஒருவாட்டி ஒரு பொண்ணோட கல்யாணம் நின்னா யாரும் அவளை திரும்ப கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கன்னு இங்க யாரவது சொல்றத கேட்டு நீங்களும் தப்பான முடிவு எடுக்காதீங்க. நம்ப இசைக்கு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் பொறுப்பு.” என்றவனை பார்த்தவர் மீண்டும் ஏதோ பேச வர அதற்குள் அவள் பேசி இருந்தாள்.
“என்ன கல்யாணம் பண்ணிக்கோ ஆதி.” காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் அதிர்ச்சி மேலிட அவளை பார்க்க
“என்ன கல்யாணம் பண்ணிக்கோ ஆதி, ப்ளீஸ்!.” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தே விட, ஒருநிமிடம் கண்ணை இறுக்க மூடித் திறந்தவன் அவளை இழுத்துச் சென்று மண மேடையில் நிறுத்தியவன், கீழே விழுந்து கிடந்த தாலியை கையிலேடுத்தவன் அடுத்த நொடி அதை அவளின் கழுத்தில் கட்டியிருந்தான்..
அதே கையோடு, பத்திரிகையாளர்களின் முன்பு அவளை நிறுத்தியவன், “நாளைக்குப் பத்திரிகைல யார் யாருக்கு இவளப் பத்தி எழுதணுமோ தாராளமா எழுதுங்க. ஆனா பேர் மட்டும் மிஸ்ஸ. மகிழிசை ஆதித்த கரிகாலன் மறந்துராதீங்க. “என்றவன் அவ்வளவுதான் என்பதுபோல அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்.
தொடரும்…
