நான்கு மணி நேரங்களுக்கு முன்பு…
“ஹலோ!.”
“…………”
“ஹலோ!, யா….ழா. யாழா நான் பேசுறது கேக்குதா?.”
“…………”.
“யாழா இருக்கியா?!.”
“ச்ப்… இப்போ எதுக்குக் கால்(call) பண்ண?.”
“யாழா நான் வந்து…. அது”
“இங்க பாரு மகிழ். நீ எதுவும் சொல்றதுக்கு முன்னாடி நானே பேசிடுறேன்.”
“…………”
“நம்ம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் லவ் பண்ண ஆரம்பிச்சு, கிட்டத்தட்ட மூணு வருஷம் முழுசா முடிஞ்சு போச்சு. ஆனாலும், நீ என்ன இன்னும் முழுசா நம்பல, அப்படித்தானே?.”
“அப்படி இல்லை யாழா…. நான் என்ன சொல்ல வரேன்னா?.”
“நீ எதுவும் சொல்ல வேணாம் மகிழ். நானா வந்து உன்னை ஒன்னும் லவ் பண்றேன்னு சொல்லலையே. நீயாதானே வந்த?. என்ன பிடிச்சிருக்குனும், ரொம்ப நேசிக்குறதாவும் சொன்னே. ”
“…………”
“ என்னை அளவுக்கு அதிகமாகக் காதலிக்குறதா கூடச் சொன்ன. ஆனா, எனக்கு என்னமோ நீ சொன்னது எல்லாமே பொய்யா இருக்குமோனு சந்தேகமா இருக்கு!.”
“யாழா!, ஏன் இப்படி எல்லாம் பேசுற?. நான் ஏன் இந்த விஷயத்thulaபொய் சொல்ல போறேன்?.”
“அதுதான், அதுதான் மகிழ் எனக்கும் சத்தியமா புரியல. என்னை நீ காதலிக்குறதா சொல்லுற இந்தப் பொய் எதுக்கு?”.
“யாழா!, திரும்பத் திரும்ப என்னோட காதலைப் பொய்யின்னு சொல்லாதே. நான் உன்னைக் காதலிக்கறேன். அதுவும் மனசாரக் காதலிக்கறேன்னு உனக்கும் நல்லாவே தெரியும் யூ டேமிட்(you dammit )!.”
“எஸ்(yes), நான் டேமிட் தான் மகிழ். நீ என்னைக் காதலிக்கிற, அதுவும், மனசாரக் காதலிக்கிற, உயிருக்குயிராக காதலிக்கிற. நான் இல்லனா நீ செத்துருவே. அப்படின்னு, நீ சொல்ற பொய் எல்லாம் நம்புறேன் பாரு நான் டேமிட் தான்.”
“உஃப்… யாழா உனக்கு இப்போ என்னதான் பிரச்சனை?.” என்று அவள் கேட்பதற்குள், அந்த அழைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தது…
பேசிக்கொண்டிருக்கும் போதே போனை அணைத்தவன், கோபத்தில் தரையை ஓங்கி உதைத்தான்,”ச்ச!, இன்னைக்கும் எஸ்கேப் ஆயிட்டா!.” என்றவனின் கண்கள் அக்னி அனலை பிரகசித்தது.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவன், சிறிது நேர யோசனைக்குப் பிறகு போனை ஏரோபிளேன் மோடில் போட்டான்.
“ரெண்டு மணி நேரத்துக்கு அப்புறம், தானா நீயே என் வழிக்கு வருவ மகிழ்!. “என்றவனின் முகத்தில் இருந்தது நிச்சயம் குரூர புன்னகை மட்டுமே…
அவன் அருகில் அவனுடன் நின்றிருந்த அவனின் நண்பனுக்குத்தான், அவனின் செயல்கள் அதிர்ச்சியையும் பயத்தையும் ஒரு சேர கொடுத்தன.
“வேணா மச்சான், நீ தப்பு பண்ற. அந்தப் பொண்ணு உன் மேல உயிரையே வச்சுருக்குடா.” என்றவனுக்குச் சத்தியமாக நண்பனின் செயலில் சிறிதளவு கூட உடன்பாடு இல்லை.
“ச்ச!… உயிர வச்சிருக்கு, ம**ர வச்சிருக்கு. எந்தக் காலத்துலடா இருக்க. இந்தக் காலத்துல எல்லாமே பணம்தான். கேள்விப்பட்டதில்லை பணம்னா பொணம் கூட வாயப் பொளக்கும்னு. அப்படி இருக்கும்போது நான் உயிருள்ள மனுஷன் நான் என்ன பண்ணட்டும் சொல்லு.
அதுமட்டுமில்ல, நானா ஒன்னும் போய் அவ பின்னாடி சுத்தலையே. அவளாதான வந்தா அப்ப கூட விலகி வராதான்டா பாத்தேன். ஆனா, கடவுளா பாத்து ஒரு ஜாக்பாட் அடிச்சா நான் என்ன பண்ண.” என்றவன் தன் மீது தவறே இல்லை என்பதுபோலப் பேச நண்பனுக்குத்தான் என்னைச் செய்வதென்றே புரியவில்லை.
“அதில்ல மச்சான்.” என்றவன் ஏதோ சொல்ல வருவதற்குள், அவன் செல்போனில் ஏதோ நோட்டிபிகேஷன் வந்ததற்கான அடையாளமாக, ஒலி எழுப்ப என்னவென்று பார்த்தவனின் கண்கள் அகல விரிந்தன. ஆம், அவனது வங்கி கணக்கில் ரூபாய் ஒரு லட்சம் ஏறியதற்கு அடையாளமாய் வந்த ஒலிதான் அது.
“நான்தான் மச்சான் அனுப்புனேன் கை செலவுக்கு வச்சுக்கோ. யார்கிட்டயும் இதைப் பத்தி மூச்சு விடாத. இது மட்டும் கரெக்டா முடிஞ்சா உன் அக்கௌன்டுக்கு இன்னும் ஒரு ரெண்டு லட்சம் போட்டு விடுறேன் சரியா.” என்றவனைப் பார்த்தவன் எச்சிலை கூட்டி விழுங்கியவாறே,
“மச்சான் போலீஸ்ல எதுவும் மாட்டிற மாட்டோம்ல. இதுக்கு முன்னாடி, நம்ப ஏதோ சின்னச் சின்னத் தப்பு பண்ணிட்டு இருந்தோம். ஆனா, இது ரொம்பப் பெரிய விஷயம்டா. அதுமட்டுமில்ல, நீயும் அந்தப் புள்ளையும் லவ் பண்றது உன் தங்கச்சி வரைக்கும் தெரியும்டா. நாளப் பின்ன உன் பேர உன் தங்கச்சியே சொல்லிட்டா பெரிய பிரச்சனை ஆயிடும்டா.” என்றான்.
“என்னைய என்ன அவ்வளவு பெரிய முட்டாள்னு நெனச்சுட்டியா. இதுக்குப் பின்னாடி இருக்குற ஆளுங்களோட பவர் தெரியாம பேசிக்கிட்டு இருக்க. நாம்ப அவங்களுக்கு விஸ்வாஷமா இருக்குற வரைக்கும் நமக்கு ஒரு இம்மி அளவுக்கூடப் பிரச்சனை வராது. ஆனா, அதேநேரம் அவங்களுக்கு ஒரு துளி அகைன்ஸ்ட்டா இருக்கோம்னு தெரிஞ்சாக்கூட நம்ப உயிர் நமக்குச் சொந்தம் இல்லை புரிஞ்சுதா.” என்றவன் அவ்வளவுதான் என்பதுபோல
” சரி மச்சான் டைம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன். இனிமே நானா கால் பண்ற வரைக்கும் நீ எனக்குக் கூப்படாத. இது முடிஞ்சு ஒரு வாரம் கழிச்சு நானே உன்ன பாக்க வரேன் சரியா. ” என்றவன் வண்டியில் கிளம்ப, அவன் சென்ற சிறிது நேரத்திலேயே எங்கிருந்தோ வந்த லாரி அவனைத் தூக்கி வீசியது……
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
கையில் இருந்த பத்திரிக்கையைப் படித்தவள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து, மீண்டும் எழுந்து அதையே திரும்பப் படித்து, மீண்டும் மயங்கி விழுந்து, மீண்டும், மீண்டும், அதையே செய்தவளை கடுப்போடு நோக்கி கொண்டிருந்தான் சித்தனைச்செல்வன் அவன்.
கிட்டத்தட்ட கால் மணி நேரமாக அதையே செய்து கொண்டிருந்தவளை பார்த்தவன், கடுப்பில் அவள் கையில் இருந்த பத்திரிகையை அவளிடம் இருந்து பிடுங்கினான்.
“நான் கண் முன்னே காண்பதெல்லாம் உண்மைதானா கோபால்?. இல்லை கனவுதான். கனவு மட்டும் தான். கனவுதான் என்று ஒரே ஒருமுறை சொல்லுங்களேன் கோபால்!.” தன் கையில் இருந்ததைப் பறித்தவனைப் பார்த்தவள் நாடக பாவனையில் பேச, எதிரில் இருந்தவானோ கொலை வெறியோடு முறைத்துக் கொண்டிருந்தான்.
” ஏன்?, எதுவும் பேச மறுக்கிறீர்கள் கோபால்!. இந்தப் பத்திரிகையில் இருக்கும் செய்தி உண்மைதானா?. அப்படி உண்மைதான் என்றால் நான் நினைத்ததெல்லாம் வெறும் கற்பனை மட்டும்தானா கோபால்!. பதில் சொல்லுங்கள் கோபால்!, பதில் சொல்லுங்கள்.” என்றவள் அவன் கையைப் பிடித்து உலுக்கி அழுவது போன்ற பாவனையோடு கண்கள் இரண்டையும் தன் ஒரு விரலால் துடைத்துக் கொண்டாள்.
அவளின் செயலில் தலையில் அடித்துக் கொண்டவனுக்குக் காலையிலே ஏன் இவளை அழைத்துச் செல்ல வந்தோம் என்று இருந்தது.
” ச்ச்!…காலையில் கடுப்பேத்தாத ஷாதனா!. ஒழுங்கா போய்க் கிளம்பி வா, ட்யூட்டிக்கு டைம் ஆச்சு.” என்றவனிடம்,
” போகிறேன் கோபால்!, போகிறேன். அதற்கு முன்பு என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.” என்றவள் அதிலே உறுதியாக நிற்க, இவனுக்குதான் பேசாமல் இவளை விட்டுவிட்டு சென்றுவிடுவோமோ என்று கூடத் தோன்றியது.
ஆனால், அந்த யோசனையை அடுத்த நொடியே கைவிட்டவன் அவளிடம், ” இப்ப என்ன உனக்கு?. இந்தப் பத்திரிகைல இருக்கிறது உண்மையானு தெரியணும்?. அதான?, அகல்யா மேல சத்தியமா இந்தப் பத்திரிகையில இருக்கிறது உண்மைதான். போதுமா, இப்ப போய்க் கிளம்பி வா, போ!. ” என்றவன் அவளைப் பிடித்து முன்னே தள்ள
” அப்படியென்றால் மெய்யாகவே ஆதிசாரும் இசை மேமும் காதலிக்கவில்லையா கோபால்?. ” என்றவளை பார்த்தவன் பெருமூச்சை இழுத்துவிட்டு,
” ஏன்டி!, சாவடிக்கிற. நான் எப்பயாவது ஆதிசாரும் இசைமேமும் லவ் பண்றாங்கன்னு சொல்லி இருக்கனா?. இல்ல அவங்க தான் சொல்லி இருக்காங்களா?. இசைமேமும் ஆதிசாரும் சின்ன வயசுல இருந்து க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். வெறும் பிரண்ட்ஸ் மட்டும்தான். அது மட்டும் இல்ல தேவ் சாரும் இசைமேமும் கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா லவ் பண்றாங்க. இது தெரியாம சாரும் மேமும் பழகுறதை பார்த்து நீ தப்பா புரிஞ்சுக்கிட்டா நான் என்ன பண்ண?.” என்றவன் அவ்வளவுதான் என்பது போலப் பார்க்க இவள் தான் குழப்பமான முகபாவனையோடு நின்றிருந்தாள்.
‘அப்ப நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டனா?. ஆனா, இசைமேம பார்க்கும்போது ஆதிசார் கண்ணுல தெரியறது நிச்சயமா காதல் தான். இசைமேம் கண்ணிலையும் அதே அளவு பீலிங்க நான் பார்த்திருக்கேன். ஆனா இவன் என்ன என்னமோ சொல்றான் . என்னவோ என்ன நடந்தாலும், அது அவங்க வாழ்க்கை. அதைப் பத்தி யோசிச்சு நம்ப என்ன பண்றது.’ என்று நினைத்தவள்,
“இருடா, ஒரு பத்து நிமிஷத்துல கிளம்பி வரேன்.” என்று உள்ளே செல்ல, இவனுக்கும் அதே உறுத்தல் இருக்கத்தான் செய்தது.
ஒவ்வொரு தடவை இசை பற்றி அவன் பேசும்போதும் அவன் கண்களில் தெரிந்தது நிச்சயம் காதல் தான் என்று நூறு சதவீதம் சொல்வான். அப்படி இருக்க இசையின் காதலில் இருந்து இப்போது ஒரு வாரத்தில் திருமணம் நடைபெற போகிறது வரை அவன் மனதிலும் அந்தக் குழப்பம் இருக்கத்தான் செய்தது.
ஆனால், பத்திரிகை கொடுக்கும் போது இசை கண்களில் தெரிந்த மகிழ்ச்சி அவனுக்கு அவனின் எண்ணம் பொய்யோ என்று தோன்ற, அதே நேரம் ஆதியும் இந்த விஷயத்தைப் பெரிதாக அலட்டிக் கொண்டதாகவே அவனுக்குத் தெரியவில்லை.
அதனால் நடப்பது நடக்கட்டும் என்று அதன் போக்கிலே விட்டுவிட்டான்…
தொடரும்…
எனக்கும் காதல் தான்…
தமிழின் மீதும்…
தமிழ் எழுத்தின் மீதும்…
எழுத்தினால் ஆனா சொல் மீதும்…
சொல்லால் உருப்பெரும் வார்த்தைகள் மீதும்…
வார்த்தைகளால் உருவாக்கும் வரியின் மீதும்…
வரியினால் உருவாகும் கவிதையின் மீதும்…
கவிதையின் பிறப்பிடமான காதல் மீதும்…
காதலால் உருவெடுக்கும் கதையின் மீதும்…
கதையின் தீரா ரசிகையான என் மீதும்…
என்னை படைத்த இறைவன் மீதும்…
எனை ஈண்ட என் அன்னை மீதும்…
என் எழுத்தின் மீதும்…
எப்போதும் காதல்தான்…
தீரா காதல்…
தீராது காதல்…
என்னடா இவ தீடீர்னு சம்மந்தமே இல்லாம கவிதை சொல்லிக்கிட்டு இருக்கானு பாக்குறீங்களா இன்னைக்கு காதலர் தினம் இல்லையா?, அதான்…அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள் பிரண்டஸ்…மறக்காம லைக் பண்ணுங்க பிரண்ட்ஸ்…நன்றி
