நிலவின் நிழல் நானடி
அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா.
ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி ‘தான் தான்’ என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது.
மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
