பழி வாங்கும் நடவடிக்கை

நிலா sticky நோட்ஸ் மாதிரி எழுதி எழுதி அவளுடைய டைரி குள்ள அந்தந்த நாளுக்கு தகுந்த மாதிரி என்ன நடந்துச்சோ, அது எல்லாத்தையுமே ஒரு அழகான மெமரிஸ் ஆக அவள் வைத்திருந்தாள்.

இதை அங்கு இருக்கிற ஒரு பொண்ணு அந்த டைரியை எடுத்து அர்ஜுன் கிட்ட காட்டி அதை வாசிக்க ஆரம்பித்தாள்.

இன்று நானும் அவனும் ஒரே நேரத்தில் ஆடைகள் அணிந்து இருக்கின்றோம். ஏதோ நாங்கள் ஒரே வீட்டில் இருந்து வந்தது போல ஒரு உணர்வு. அவர் மனதில் நான் மட்டும் இருப்பது போல நான் முழுவதுமாக உணர்கிறேன், ஆனால் கற்பனையாக..

இப்படி எழுதி வைத்திருந்தாள்.

ஓஹோ…

இரு, அடுத்ததை படிக்கிறேன்.

என்னை மரியாதை குறைவாக நடத்தும் இந்த சமூகம். ஆனால் என் சமூகம் எப்போதும் என்னை அன்பாகவும், அனுசரணையாகவும், பண்பாகவும், என்னை முழு மரியாதையோடு நடத்தும் ஒரு மாமனிதர் என் அர்ஜுன். இப்படி எழுதி இருந்தா,

இதைப் பார்த்ததே பயங்கரமாக சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. போதும் டா சாமி, இந்த ரெண்டு கவிதைக்கு மயங்கி போயிட்டோம் மாமனிதரே… இது பயங்கரமான லவ்சா இருக்கும் போல?… சாருக்கு எப்படி?..

அர்ஜுன், அப்படி ஒரு ஆசை இருந்தா குழி தோண்டி புதைத்திரு. இங்கே எத்தனையோ பொண்ணுங்கள் உன்ன சுத்தி சுத்தி வந்துட்டு இருக்காங்க. அதை விட்டுட்டு இந்த அருக்காணியை கல்யாணம் பண்ணிக்கிறாதடா.

அப்படி மட்டும் எதுவும் பண்ணின அவ்வளவுதான். இப்படி ஒரு பொண்ணு சொல்லும் போது, அதுக்கு பக்கத்துல இருக்கிறவன், பரவாயில்லை மச்சி, கல்யாணம் பண்ணிக்க. ஒரு சூப்பர் பையனுக்கு ஒரு டொக்கு ஃபிகர் தான் அமையும்.

உனக்கு ஏத்த அருக்காணி தான் டா…. டேய், அருக்காணி புருஷா!

இப்படி எல்லாம் எல்லாரும் அவனை பிடிச்சு கலாய்க்கும் போது, அடச்சே, நிப்பாட்டுங்க.

இது ஒரு விஷயம். இன்னும் பெருசா பேசிட்டு இருக்கீங்க. என்னோட டேபிளில் இதுபோல ஏதாவது இருந்தா தான் நீங்க என்ன இந்த மாதிரி எல்லாம் கிண்டல் பண்ணனும். இந்த ஆபீஸ்ல எத்தனை பொண்ணுங்க என் பின்னாடி வந்துட்டு இருக்குன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்.

அதுல இதுவும் ஒன்னு. ஆனா இவளை நான் இப்படி எல்லாம் சும்மா விட மாட்டேன். இன்னைக்கு எல்லாரும் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி இருக்கு அவளுக்கு.

என்னடா செய்யப் போற மச்சி?… புருஷனாகவே மாற போறியா?…

இப்படி கிண்டல் பண்ண, டேய், பேசாம இருடா.

என் அழகுக்கும் அறிவுக்கும் நீங்க சொன்ன மாதிரி இது அருக்காணிக்கு மேல அருக்காணி டா. அப்படி ஒரு தண்டம். சும்மா என் வேலை ஆகணும் என்பதற்காக வச்சிருந்தா? அவள் மனசுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா?…

சரி, மீட்டிங் முடிஞ்சிடுச்சு போல. அவங்க இடத்துல போய் உட்காருவோம் என்று சொல்லிட்டு எல்லாரும் அங்கிருந்து கலைந்து போயிட்டாங்க.

மணிய பார்க்கும்போது நாலு மணி ஆக இன்னும் 15 நிமிஷம் தான் இருக்கு. நாலு மணிக்கு ஆபீஸ் முடிஞ்சுரும். ஆபீஸ் முடியறதுக்காக அவன் காத்துக் கொண்டிருந்தான்.

அதே நேரத்தில் நிலா கிட்ட அவளுடைய அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. தங்கச்சி உடைய ட்ரெஸ் எடுத்து வச்சிருக்கேன். அவளோட மேக்கப் திங்ஸ் எல்லாம் உள்ள இருக்கு. ஒழுங்கா வரும்போது நீட்டா வா. டிரஸ் எல்லாத்தையும் மாத்திக்கிட்டு வா. ஆட்டோ புடிச்சு கூட வீட்டுக்கு வந்துரு. உனக்கு அவ்வளவு அசிங்கமா இருந்துச்சுன்னா, பொழுதுக்கும் நாலு பக்கம் பின்னு குத்திக்கிட்டு என்ன வழிஞ்சுகிட்டு திரியாதே. அப்படி இருக்கிறத பார்த்துதான் எவனும் ஒன்னும் கட்ட மாட்டேங்குறான்.

இதுல ஒரு ஸ்ப்ரே இருக்கு. அத தலையில அடிச்சுக்கிட்டா எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்கும் என்று உன் தங்கச்சி சொன்னா.

நீ ஒன்னும் பண்ண வேணாம். தலையை கலைத்துவிட்டு நல்லா சீவி பின்னி போடாம ஒரு கிளிப்ப மட்டும் குத்து. முன்னாடி கொஞ்சம் முடியை விடு. அதுதான் உனக்கு அழகாய் இருக்கும். வரும்போது பட்டையை போட்டுட்டு வந்து விடாதே.

ஐடி கம்பெனில வேலை பார்க்கிற பொண்ணு மாதிரியா இருக்க?…

இப்படி அவங்க அம்மா பயங்கரமாக திட்டி தான் அந்த பொருள்களை உள்ள எடுத்து வச்சு அனுப்பி வச்சாங்க.

சரி, நம்ம வீட்டுக்கு எப்படி போகணும்னு அவளுக்கு உள்ளே ப்ரிப்பேர் பண்ண ஆரம்பிச்சா. அப்படி பண்ணும் போது தான் பக்கத்துல இருக்குற எல்லாரையும் சுத்தி சுத்தி பார்க்க ஆரம்பிச்சா. அவங்க என்ன மாதிரியா தன்னோட தலை முடியை மைண்டைன் பண்றாங்க, எல்லாரும் எப்படி மேக்கப் போட்டு இருக்காங்க. வீட்டுக்கு போகும்போது எல்லாருமே டச் அப் பண்ணிட்டு தான் போறாங்க. இது எல்லாத்தையுமே அவள் கவனிச்சிட்டு இருந்தா.

கொஞ்ச நேரத்துல ஒவ்வொரு ஆளா கிளம்ப ஆரம்பிச்சிட்டாங்க. அவள் விறுவிறுன்னு பாத்ரூமுக்கு அவளுடைய பேக்கை எடுத்துட்டு ஓடினாள்.

அதை பார்த்ததுமே அர்ஜுனன் அவனுடைய பிரண்ட்ஸும் நேராக அந்த பாத்ரூமுக்கு போய் வெளிப்புறமாக இருக்கிற கதவை லாக் பண்ணிட்டு வந்துட்டாங்க.

பூட்டும் சாவியும் அதே கதவில் தொங்கிக்கிட்டு இருந்துச்சு. அதனால பூட்டிட்டு அவங்க அங்கிருந்து வேக வேகமா வெளியில போயிட்டாங்க. எல்லாரும் பயங்கரமாக சிரித்துக்கொண்டே, இன்னைக்கு எதுக்கு பங்கமான வேலை. என்ன பத்தி நீ எழுதி வச்சிருக்க. நாளைக்கு காலையில நீ என்ன நிலைமைக்கு ஆளாகி இருக்கிறாய் என்று நான் பார்க்கிறேன். இனிமேல் நீ கனவுல கூட ஒரு ஆம்பளையை பத்தி நினைக்கவே கூடாதுன்னு, அர்ஜுன் அவனோட பிரண்ட்ஸோட பேசிகிட்டு அங்கிருந்து கிளம்பி போயிட்டான்.

ஆனா அந்த பாத்ரூமுக்குள்ள அவள் மட்டும் தான் இருக்கா.

அப்போ வாட்ச்மேன் கிட்ட, ஆனா எல்லாரும் கிளம்பிட்டாங்க. நீங்களும் ஷிப்ட் மாத்திட்டு கிளம்புங்கன்னு சொல்ல,

ஆளு கொஞ்சம் லேட்டா தான் வரும் சார். இன்னும் அவன் வரதுக்கு ரெண்டு மணி நேரம் முழுசா இருக்கு. நீங்க போயிட்டு வாங்க. நாளைக்கு பாக்கலாம்.

இப்படி சொல்லிட்டு அவரை அவங்களை அனுப்பி வச்சிட்டு வெளி பக்கமாக அந்த ஆபீஸை பூட்டிட்டாரு.

உள்ளே இருக்கிற டிரஸ் என்னன்னு அவள் அப்போதுதான் பார்த்தா. அவங்க அம்மா பட்டு சேலை எடுத்து வச்சிருப்பாங்கன்னு நெனச்சா, உள்ள இருந்ததோ ஒரு மாடர்ன் saree.

அதுவும் டிரான்ஸ்பரண்டாக இருக்கு. அந்த பிளவுஸ்ல பின் பக்கம் எந்த ஹூக் வைக்காம முடிச்சு போடுற மாதிரி இருக்கு. அதை பார்த்ததுமே அவ முகம் எல்லாம் மாறி போயிடுச்சு. அம்மா இதையா எனக்கு வச்சு விட்டார்கள் என்று சொல்லி…

அது ஏதோ துணி மாதிரி இருக்கு. பிளவுஸ் மாதிரியே இல்லை. ஆனா அவளுக்கு தெரியாத ஒரு விஷயம், அவளோட தங்கச்சி அந்த டிரஸ்ஸை மாற்றி வைத்தது தான்.

அம்மாவுக்கு எவ்வளவு திமிரு. என்னோட டிரஸ் அவளுக்கு கொடுக்காத, கொடுக்காதன்னு எத்தனை தடவை சொல்றேன். என்னோட காஸ்ட்லியான பட்டு சாரி எடுத்து வச்சிருக்காங்க. அவள் எப்படி இதை போடுறான்னு நான் பார்க்கிறேன். இனிமேல் அவள் என் டிரஸ் பார்த்தாலே பயப்படனும்னு சொல்லிட்டு இருக்குறதிலேயே ரொம்ப ட்ரான்ஸ்பரண்டாக இருக்கிற சாரியும், ரொம்ப ஓபனா இருக்குற பிளவுஸ். அதுக்குள்ள அவள்தான் மாத்தி வச்சா.

வரும்போது நீ பட்டிக்காடு மாதிரி தாண்டி வரணும்.

இப்படி அவள் ஒரு மிகப்பெரிய வேலையை செஞ்சிருக்க. இது தெரியாத நிலா, அது பார்த்ததுமே முகமெல்லாம் வாடி போய் பயங்கரமாக அழுக வந்தது. இத போட்டுட்டு நான் எப்படி வெளிய வர போறேன்? எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு. இந்த கல்யாணம் எல்லாம் எனக்கு முக்கியமா?… ஏன்னா கல்யாணம் பண்ணி தான் வாழணுமா?…

இப்படி சொல்லி அவள் அழுதுகிட்டு முகத்தை கழுவிட்டு அந்த ட்ரெஸ்ஸ வேண்டாம் வெறுப்பா போட்டு, அந்த சேலையை வைத்து முழுசா போர்த்திக்கிட்டு முகத்துக்கு மேக்கப் போட ஆரம்பிச்சா.

அத போடும்போதெல்லாம் அவளுக்கு ஒரு மாதிரி எரிச்சலாக இருக்கு.

லைட்டா அதை வச்சு சின்ன சின்ன விஷயங்களை மட்டும் பண்ணிக்கிட்டு, இப்ப அவள் வெளியில் வரலாம்னு கதவை திறந்தா, ஓபன் பண்ண முடியல.

யாரு வெளிய நிக்கிறா? தயவு செஞ்சு கொஞ்சம் கதவை திறங்க. விளையாடாதீங்க, எப்போதும் போல.

எனக்கு வீட்டுக்கு நேரம் ஆயிடுச்சு. நான் இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு போகணும். வீட்டுக்கு கெஸ்ட் வராங்க. ப்ளீஸ், கதவை திறங்கன்னு அவள் திருப்பி திருப்பி அந்த கதவை தட்டி தட்டி சொல்லிக்கிட்டே இருக்க.

சுத்திலும் யாருமே இல்ல. அங்க இருக்கிற ரெஸ்ட் ரூம் மாடியில இருக்கு. இப்ப வெளி பக்கமாக அந்த ஆபீஸ் சும்மாதான் அடைக்கப்பட்டிருக்கு. ஆனாலும் கூட அங்க போடுற சவுண்டு வெளியில் யாருக்கும் கேட்க போறது கிடையாது. ஃபுல்லா கிளாஸ் வச்சு க்ளோஸ் பண்ணி இருக்காங்க.

உள்ளயே அவள் வசமாக மாட்டிக்கிட்டா. கொஞ்சம் கொஞ்சமா அங்கு இருக்கிற மெயின் லைட் எல்லாம் ஆப் ஆக ஆரம்பிச்சது.

சின்ன சின்ன லைட் மட்டும் தான் அந்த ஆபீஸ்க்கு ஒரு சின்ன வெளிச்சத்தை கொடுக்குது. இப்படி இருக்கிற நிலைமையில் அவளுக்கு பயங்கரமாக பயம் ஏற்பட ஆரம்பித்தது.

அவளுடைய பர்ஸ் வெளியே இருக்கு. அதுக்குள்ள தான் போன் இருக்கு. உள்ள இருக்கிற லைட் எல்லாமே ஆஃப் ஆயிடுச்சு. ஆனா பாத்ரூம்ல ஒரு சின்ன லைட் மட்டும் எரியுது. அவளுக்கு மூச்சு திணறுகிற மாதிரி அவ்வளவு பயம்.

அவள் தட்டி தட்டி பார்த்தாலும் திறக்கல. அப்போதான் சின்ன கேப் வழியா பார்க்கும்போது, அதை யாரும் பூட்டி இருக்கிறது நல்லா தெரிஞ்சது. ஹெல்ப் பண்ணுங்க, ப்ளீஸ்…. நான் வீட்டுக்கு போகணும், ப்ளீஸ்…

இப்படி கத்தி கதறி அழுக ஆரம்பிச்சிட்டா. ஆனா அங்க இருக்கிற யாருக்குமே அந்த சத்தம் கேட்கவே இல்லை.

இப்படி இருக்கிற நேரத்துல இவள் இன்னும் வீட்டுக்கு வராதது வீட்டில் இருக்கிற எல்லாருக்குமே ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது.

அந்த நேரத்துல தான் ஒரு ரெண்டு காரு அந்த அப்பார்ட்மெண்டுக்குள்ள நுழைந்தது. அப்ப வாட்ச்மேன் நிப்பாட்டி அவங்க கார் நம்பர் நோட் பண்ணி உள்ள அனுப்பி வச்சாரு.

அங்க இருக்குறவங்க பார்க் பண்ணிட்டு இருக்கும்போது, அந்த வாட்ச்மேன் பைப் சரி பண்ற பிளம்பரை கூப்பிட்டுகிட்டு அந்த ஓரமாக போய் அவங்க காதுல விழுகிற மாதிரி பேச ஆரம்பிச்சாரு.

அய்யோ அப்பா…

அந்த பையன் என்னமோ குடிகாரன்னு தான் எல்லாருக்கும் தெரியும். அவன் கொஞ்சம் மோசமானவன். யாருமே அவன் கிட்ட பேச மாட்டாங்க. ஆனா அந்த சங்கர் மகள் இருக்கு பாரு. அவ பேரு என்னமோ…

நிலா.

அந்த பொண்ணு என்ன பண்ணுது தெரியுமா? கோலம் போடுகிறேன் என்ற பெயரில் நாலு மணிக்கு எல்லாம் எழுந்திருக்கிறது. அவன் நாலு மணிக்கு தான் வீட்டுக்கு வருகிறான், நல்லா குடிச்சு போட்டுட்டு.

வந்ததுமே இந்த பொண்ணு அவன் வீட்டுக்குள் போயிடுது. என்னென்னமோ சத்தம் கேட்குது, கசமுசான்னு.

அதுக்கப்புறம் ஒரு அஞ்சரைக்கு மேல தான் அந்த பொண்ணு அந்த பையனுடைய ரூம்ல இருந்து வெளியே வருது. உடம்பெல்லாம் வேர்த்து போயி, டிரஸ் எல்லாம் கலந்து. சீ, கருமம்…

ஆனா அந்த ஆளு ஊர் நியாயம் பேசுவான் பயங்கரமாக. பார்க்க தான் பட்டிக்காடு மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு சுத்துது. ஆனா சரியான கேடி. என்ன பார்த்து ஒரு தடவை கண்ணடிச்சுச்சு தெரியுமா?…

இப்படி சொல்லும்போது அதுக்கு அந்த பிளம்பர், ஆமானே… நானும் பார்த்து இருக்கேன். இந்த பிள்ளை எதுக்குடா நாலு மணிக்கு எல்லாம் கோலம் போடுவது என்று. ஆனா அவனும் தினமும் நாலு மணிக்கு தான் வருகிறான். என்னமோ இருக்கு தான் போல.

இப்படி ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசிட்டு இருந்தாங்க. இதை அங்க வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கூர்ந்து கவனிச்சாங்க.

இனி இந்த பொண்ணு பாக்குற விஷயம் எப்படி நடக்க போகுது?… அதுக்கு தகுந்தார் போல அவளும் அங்க மாட்டிக்கிட்டா. இனி என்ன நடக்குதுன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page