பாதுகாப்பா இருக்க

இந்த விஷயம் அந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கிற எல்லாருக்கும் பரவ ஆரம்பிச்சது.

அந்த பிளாட் உடைய செகரட்டரி விக்ரமுக்கு போன் பண்ணி, பயங்கரமாக கேள்விகளாக கேட்க ஆரம்பிச்சாரு. “என்னென்னமோ சொல்றாங்க, இதெல்லாம் உண்மையா?… தினமும் அந்த பொண்ணு உன்னுடைய வீட்டுக்கு வரும்னு சொல்றாங்களே, என்ன நடக்குது? நீ நல்ல பையன்னு தான நான் நினைச்சுட்டு இருந்தேன்.”

உன் மேல நிறைய பேர் கோபத்தில் இருந்தாங்க, ஆனாலும் கூட நான் உனக்காக சப்போர்ட் பண்ணி இருக்கேன். அசோசியேசன் தலைவர் கூட உன் மேல கொஞ்சம் வருத்தத்தில் இருக்காரு. “நீ குடிச்சிட்டு அன் டைம்ல வர்றேன்னு சொல்லிட்டு,” நான் தான் அவர்கிட்ட நிறைய தடவை பேசி இருக்கேன், உனக்காக.

அந்த பையன், அவன் பாட்டுக்கு வரான் போறான். “அவனை எதுக்காக வம்பு இழுத்துட்டு இருக்கீங்க?”ன்னு நான் எல்லார்கிட்டயும் சண்டை போட்டு இருக்கேன். ஆனா, இப்போ இவங்க சொல்றது எல்லாம் கேட்டா என்னால நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல.

இப்ப அந்த நிலா உன் கூட தான் இருக்கா?… நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா தான் இருக்கீங்களா? அப்படியிருந்தா சீக்கிரம் வீடு வந்து சேருங்க. அவங்க அப்பா எங்க பெரிய பிரச்சனை பண்ணிட்டு இருக்காரு. இது ரொம்ப அமைதியான இடம். இந்த குடும்ப பிரச்சனையினால, இங்க இருக்குற எல்லாருடைய நிம்மதியும் போகுது. கம்ப்ளைன்ட் மேல கம்ப்ளைன்ட் ஆக வருது. இப்படி அவர் கோபமா சொல்லிட்டு போன கட் பண்ணும் போது, அவனுக்கு ஒண்ணுமே புரியல.

சம்பந்தமே இல்லாம நிலாவை என்னோட சேர்த்து பேசிட்டு இருக்காங்க, “இங்க என்ன நடக்குது?…” அப்ப நீ எல்லாம் இன்னும் வீட்டுக்கு வரலையா?.. இப்படி யோசித்தவன் வேக வேகமாக அவள் வேலை செய்ற கம்பெனிக்கு தான் ஓடினான்.

அந்த கம்பெனிக்கு வெளியில கொஞ்சம் தூரத்தில் தான் அவன் நின்று கொண்டிருந்தான். இந்த செய்தி கேட்டதுமே, அவன் அங்கு பதறி அடிச்சுக்கிட்டு போய் பார்க்க.

இப்ப இன்னொரு டியூட்டிக்கு வர்ற வாட்ச்மேன். அப்போதான் வந்து உட்கார்ந்தார். பகல் வாட்ச்மேன் கிளம்பிட்டாரு. இப்போ, அவன் நேராக ஓடி வந்ததும், அவனைப் பார்த்து அவர் வேகமாக சல்யூட் அடித்தார். “வாங்க சார், ரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த பக்கம் வந்து…”

“என்ன ஆச்சு சார், எதுக்காக இப்படி ஓடி வர்றீங்க?.. ஏதாச்சும் ப்ராப்ளமா?..” இப்படி கேட்கும் போது, சீக்கிரமாக டோரை ஓபன் பண்ணுங்க, உள்ள போய் நான் பயோமெட்ரிக் அட்டனன்ஸ் செக் பண்ணனும்” சொல்லிக்கிட்டே, அவன் கதவு பக்கத்துல போக, கதவு ஓப்பன்ல தான் இருந்துச்சு. அதை பார்த்ததுமே, “என்னண்ணே?.. ஏன் இப்படி ஒழுங்கா க்ளோஸ் பண்ணாம இருக்கு? உள்ள என்னதான் நடக்குது?..” இப்படி கோபமாக பேசிக்கொண்டே நேராக உள்ளே வந்தான்.

அவன் உள்ள போனதுமே, வாட்ச்மேன் மெயின் லைட் பவர் சிஸ்டத்தை ஆன் பண்ணதும், அந்த ஆபீஸ் முழுவதும் லைட் எரிஞ்சது. அவ நேராக போய் அட்டனன்ஸ் சிஸ்டம் செக் பண்ணதுமே.

நிலா மட்டும் வெளியில் போகவே இல்லை. உள்ள வந்திருக்கா, ஆனா அவள் இன்னும் வெளியில போகல. இதை பார்த்ததும், அவன் ஷாக் ஆகி நேராக அவள் டேபிளுக்கு ஓடினான்.

அங்க போன் சைலன்ட்ல ரிங் அடிச்சுக்கிட்டே இருக்கு. ஸ்விட்ச் ஆஃப் ஆகப்போகிற நிலைமையில் அந்த ஃபோனை அவன் கையில எடுத்ததுமே, அந்த போன் ஆப் ஆனது.

“நிலா…. நிலா”ன்னு அவன் அந்த ஆபீஸ் முழுவதும் சத்தம் போட்டுட்டு இருக்க, “என்ன ஆச்சு சார், யாருமே இல்லையே…” எப்படியும் அந்த வாட்ச்மேன் செக் பண்ணிட்டு தான் கதவை லாக் பண்ணி இருப்பான்னு சொல்ல, எங்க லாக் ஆகி இருந்துச்சு?.. இவ்வளவு பெரிய ஆபீஸ், இவ்வளவு சிஸ்டம் இருக்கிற இடத்துல, அசால்டா கதவை சும்மா அடைச்சு வச்சிட்டு வந்து இருக்கீங்க.. இது எல்லாத்துக்கும், நாளைக்கு நீங்க பதில் சொல்லி தான் ஆகணும். முதல்ல, இங்கே ஒரு பொண்ணு இருக்கு, அதை தேடணும்.

சிசிடிவி ஃபுட்டேஜ் இருக்கிற ரூம் அதுவாச்சும் லாக் ஆகி இருக்கா? இப்படி அவன் பேசிக்கிட்டே, அந்த ரூம் திறக்க, அதுவும் திறந்ததா இருந்துச்சு.

எப்படி இந்த ஆபீஸை நடத்திட்டு இருக்கீங்க பாருங்கன்னு அவன் சொல்லிகிட்டே, இப்போ ஆபீஸ் விடுகிற நேரத்தை கணக்கு பண்ணி உள்ள ஓபன் பண்ணி பார்த்தான். அவள் கடைசியாக பேக் எடுத்து, ரெஸ்ட் ரூம் பக்கத்துல போய் கதவை அடைத்தது மட்டும், அதில் ரெக்கார்ட் ஆகி இருக்கு. பின்னாடியே, ஒரு செட் ஆஃப் ஃப்ரெண்ட்ஸ் அவளை வெளிப்பக்கமாக வைத்து லாக் பண்ணுது, அந்த சிசிடிவி ஃபுட்டேஜ்ல பதிவாகி இருந்தது.

அதை பார்த்ததும், பயங்கர கோபத்தோட அவன் வேக வேகமாக ரெஸ்ட் ரூம்மை நோக்கி ஓடினான்.

வெளி பக்கமாக பூட்டி, சாவியை அதிலேயே வைத்துவிட்டு போய் இருக்காங்க. அவன் வேக வேகமாக திறந்ததுமே, அங்க நிலா மயங்கி கிடந்தா.

அவளை பார்த்ததும், “நிலா… எழுந்திரு நிலா” இப்படி சொல்லி, அவளை தட்டி தட்டி எழுப்பி பார்த்துக் கொண்டிருக்கும் போது, வாட்ச்மேன் பின்னாடியே வந்து, “ஐயோ சார், என்ன ஆச்சு?… இந்த பொண்ணு என்ன உள்ள இருக்கு?..” இப்படி கேட்கும் போது, அண்ணே, “தண்ணி எடுங்கனே முதல்ல.”

சீக்கிரமா, தண்ணி கொண்டு வாங்கன்னு சொன்னதும், அங்கே இருக்கிற பைப்ல, அவரு தண்ணீரை பிடிச்சு அந்த பொண்ணோட முகத்தில் தெளிச்சதுமே.

அவள் மெல்ல மெல்ல கண்களை திறந்தாள். அவள் கண்ணு திறந்ததுமே, விக்ரம் அவளை இறுக்கி கட்டி பிடிச்சு ஒரு செகண்ட்ல, “நான் பயந்து போயிட்டேன்” ஒரு மாதிரி, பதற்றத்தோடு பேசினான். அவளுக்கு இப்ப என்ன நடக்குதுன்னு, ஒன்னும் புரியல; தலை எல்லாம் ஒரு மாதிரி சுத்திக்கிட்டு இருக்கு.

சார், அந்த பொண்ணு வெளிய கூட்டிட்டு வாங்க சார், கொஞ்சம் காத்தாட உட்கார்ந்தாலே சரியா போயிடும். “நான் போய் ஏர் கூலரை போட்டு விடுறேன்னு” சொல்லிட்டு, அவர் அங்க இருக்கிற பெரிய ஏர் கூலர் ஆன் பண்ணிட்டு இருக்க. அவன் கொஞ்சம் கூட யோசிக்கலாம்; அவள அப்படியே தூக்கிட்டு வந்துட்டான்.

அவளுக்கு இவ்வளவு நேரம் இருந்த பயம் கொஞ்சம் கூட போகவே இல்லை. அரை மயக்கத்திலும் கூட, அந்த பயத்தில் அவனுடைய கையை இறுக்கமாக பிடித்து, கண்களை இறுக்கமா மூடிகிட்டு, பற்களை கடித்துக் கொண்டாள்.

பயங்கரமாக வேர்த்து போய், அவங்க அம்மா சொன்ன அதே மேக்கப் எல்லாம் கலைந்த நிலைமையில, அவளை தூக்கிட்டு வந்து அங்கே இருக்கிற சோபாவுல படுக்க வைத்தான்.

அண்ணே, “நீங்க கொஞ்சம் வெளியில இருங்க… நான் பார்த்து கூட்டிட்டு வரேன்னு” அவர்கிட்ட கொஞ்சம் நாசுக்காக சொல்ல, அவரும் புரிஞ்சுகிட்டு வெளியில போயிட்டாரு.

“ரிலாக்ஸ், நிலா…”

“நீ சேஃபா தான் இருக்க, பயப்படாத, உன் கூட நான் இருக்கேன். ஒன்னும் இல்ல, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு, கண்ணு திறந்து பாரு… நீ ஒரு சேஃபான இடத்துல இருக்க, உன் கூட நான் இருக்கேன்” பாருன்னு, அவள் கைகளை இறுக்கி பிடிச்சு அவன் சொல்லிக்கிட்டே இருக்க.

மெல்ல மெல்ல, அவள் கண்களை திறந்து பார்த்து, பயந்து போய் ஒரு மாதிரி உலுக்கி விழுக.

“ஒன்னும் இல்ல, நான் இருக்கேன்னு” அவன் மறுபடியும் சொல்லிக்கிட்டே, அவள் தோள்பட்டையோடு இருக்க, அனைத்து படி ரிலாக்ஸ், ரிலாக்ஸ் என அவள் கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கும்போது, அவள் வேகமாக அவனுடைய கைகளை தட்டி விட்டாள்.

“சாரி, சாரி…”

“ஒன்னும் இல்ல, பயப்படாதே.., நான் யாருன்னு தெரியுதுல, நான் தான் விக்ரம்” இப்படி சொல்லிக்கிட்டு, அவளுடைய கைகளை மட்டும் மறுபடியும் இறுக்கி பிடித்துக் கொண்டான்.

கொஞ்சம் காத்தாட இருந்தது. அப்புறம் தான் அவள் கொஞ்சம் நிதானமாகவே மாறினாள். “ஆர் யூ ஓகே?… ஏதாவது வேணுமா?…. சாப்பிட ஏதாவது வர வைக்கட்டுமா?..” இப்படி அவன் கேட்கும் போது,

“என்ன ஆச்சுன்னு தெரியல, நான் உள்ளே இருக்கிறது தெரியாம வெளியில பூட்டிட்டு போயிட்டாங்க”ன்னு நினைக்கிறேன்.

ஒரே இருட்டு. சின்னதா வெளிச்சம் கம்மியா, ஒரு லைட் மட்டும் தான் இருந்துச்சு. ரொம்ப பயந்துட்டேன்; தட்டி தட்டி பார்த்தேன். கொஞ்ச நேரத்துல இருட்ட ஆரம்பிச்சது; வெளிச்சம் குறைய, குறைய, எனக்கு என்ன ஆச்சுன்னு, எனக்கு ஒன்னும் புரியல.

இப்போ, ஓகேவா தான் இருக்கேன், இப்படி சொல்லிக்கிட்டு, அவள் கால்களை எடுத்து தரையில வைத்தாள். அப்போதான் புரிஞ்சது, அவள் அந்த சேலையில இருப்பது; அவள் வேகமாக தன்னோட முந்தானையை எடுத்து, முழுசாக தோள்பட்டையோடு சேர்த்து இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

சரி, போகலாமா?… ரொம்ப நேரம் ஆயிடுச்சு, உங்க வீட்ல தேட போறாங்கன்னு, அவன் சொல்ல. அவள் மெல்ல எழுந்திருச்சு, அவளுடைய பேக், போன் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, அவன் கூட வெளியில் வர.

“சாரி, சார்… இனிமே இந்த மாதிரி நடக்காதுன்னு” வாட்ச்மேன் சொன்னாரு. “உள்ள யார் இருக்காங்க, என்னன்னு செக் பண்ணாம, இந்த மாதிரி எல்லாம் பண்ணாதீங்க. நான் கிளம்புறேன்னு” அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியில் வந்தான்.

“கேப் எதுவும் புக் பண்ணட்டுமா?… இல்ல, ஆட்டோவில் போலாமா?..” இப்படி கேட்க, அதுக்காக தாங்கிக்கிட்டே, இல்ல, நான் தனியா போறேன். சேர்ந்து போனா, அது ஒரு மாதிரி தப்பா போயிடும். ஏற்கனவே லேட் ஆயிடுச்சு, எனக்கு பயமா இருக்கு; போன் வேற ஆன் ஆக மாட்டேங்குது.

இன்னைக்கு, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றதா சொல்லி இருந்தாங்க. அதனால தான் இந்த புடவை எல்லாம் கட்டி கிளம்புனேன். அதுக்குள்ளே, எப்படி இப்படி நடந்துச்சுன்னு தெரியல; வீட்டுக்கு போனா என்ன ஆகப்போகுதுன்னு எனக்கு பயமா இருக்கு. இதுல நான் உங்க கூட வந்தேனா, அது இன்னும் ஒரு மாதிரி போயிடும். ஆட்டோ மட்டும் பிடிச்சு கொடுங்க, நான் கிளம்புறேன்னு” அவள் சொன்னதும்.

விக்ரம் எதுவும் பேசல சரி; வானு கையை மட்டும் ரோடு பக்கமாக காட்டிட்டு, இரண்டு ஸ்டெப் டிஸ்டன்ஸ்லையே அவளை அழைத்து வந்தான்.

அவள் மனசுக்குள்ள ரெண்டு, மூணு கேள்வி வந்துகிட்டே இருக்கு. அதைக் கேட்க ஒரு மாதிரியா, தயக்கத்தோட அவனைப் பார்க்க. அந்த நேரத்தில், ஒரு ஆட்டோ தூரத்துல போய்கிட்டு இருந்துச்சு. அதை பார்த்ததும், ஆட்டோ….

“நிப்பாட்டுங்க” என்று அவன் வேகமாக ஓடினான். அவளும் பின்னாடியே போக, ஆட்டோக்காரர்கிட்ட பேசிட்டு. அவன் திரும்பி நிலாவை பார்க்கும் போது, அவள் அந்த சேலையை கட்டிட்டு, ஓடி வர முடியாமல் வரும்போது, “நில்லு, நில்லு… நான் வரேன்னு அண்ணே, திருப்பிட்டு வாங்கண்ணே” இப்படி சொல்லிக்கிட்டு.

அவள் பக்கத்தில் இறங்கும்போது, ரொம்ப ஸ்பீடாக ஒரு கார் நிலாவை இடிக்கிற மாதிரி, பயங்கர வேகமாக வந்துட்டு இருந்துச்சு. கண்ணிமைக்கும் நொடியில, “நோ…..” இப்படி ஒரு சத்தம் மட்டும்தான் கேட்டுச்சு.

ஆட்டோக்காரர் ஒரு பக்கம் வேகமாக ஓடி வந்தார்.

இனி என்ன நடந்துச்சுன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page