மயக்கம் -தயக்கம் 3

டாக்டரின் பார்வையின் அர்த்தம் புரியாத அளவுக்கு அவள் ஒன்றும் சிறிய பெண் அல்லவே! ஆயாசம்தான் மிஞ்சியது. தான் ஒன்றும் பெரிய அழகி என்றோ, மற்ற எதிர்பார்ப்புகளோ ,கனவுகளோ நிச்சயம் அவளுக்கு கிடையாது.சொல்லப் போனால் இன்றைய மார்க்கெட் நிலவரத்தில் ஒரு மருத்துவரை மணக்கவேண்டும் என்றால் அதற்கான டிமாண்டுகளே நிறையத்தான். அதே சமயம் சிறு வயதில் உடன் விளையாடிய தோழனும் கூட.

மறுப்பதற்கான காரணங்கள் புறத்தில் அதிகம் இல்லை.ஆனால், அகத்தில் இருக்கிறதே! தான் மீளவே முடியாத ஒரு மலைபோன்ற காரணம். அவளுடன் நிற்கிறது.என்ன செய்ய முடியும்? எப்படியும் இந்த விஷயத்தை பெற்றவர்களிடம் சொன்னால்,அதற்க்கான பிரதிபலிப்பு என்னவென்று தெரியும்.வெகு காலமாக இவளது திருமணத்தை கனவில் மட்டும் நிகழ்த்திக்கொண்டு இருப்பவர்கள். கையில் இருக்கும் எல்லாவற்றையும் சேர்த்தாவது திருமணத்தை முடிக்க பார்ப்பார்கள்.அதோடு டாக்டர் வீட்டில் அவரது திருமணம் பற்றிய விருப்பங்களும் எண்ணங்களும்?

சிறு வயதில் விளையாடப் போகும்பொழுதே அவரது அம்மாவுக்கு ஏனோ இவளை பிடிக்காது.ஏதாவது காரணம் சொல்லி அங்கிருந்து நகர செய்து விடுவார்.அவரது பேச்சில் இவர்கள் குடும்ப நிலைமை பற்றிய இளக்காரம் இருக்கும். அப்போதெல்லாம் காரணம் தெரியாது.இதோ இப்போதும் ஒரு சில விஷயங்களை சந்தனாவால் புரிந்துக்கொள்ளத்தான் முடிவது இல்லை.

அப்படி இருக்கும்பொழுது இப்போது இன்னமும் அவர்களுக்கு சந்தனா வீட்டைப் பற்றிய எண்ணங்கள் அப்படியேதான் இருக்கும்.போதாத குறைக்கு அரவிந்தன் மருத்துவர்.இவளோ அங்கே நர்ஸ். அவருக்கு நிச்சயம் படிக்க பரம்பரை பணமெல்லாம் இல்லை. அது தெரியும்.பிறகு மருத்துவ படிப்பிற்கென்று கடன் இருக்கும், இப்போது தங்கையின் திருமணம் வேறு.

இதெல்லாம் நிச்சயம் சரி வராது என்று முடிவு செய்தவள் ,ஹாலில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினாள். சானல்களை மாற்றிக்கொண்டே வந்தவளுக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. டெல்லியை தலைமை இடமாகக் கொண்ட அந்த தனியார் செய்தி தொலைக்காட்சியில் விஜய ராகவனின் பேட்டி நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

அவனது முன்னேற்றம், அவனது கம்பெனி ,அதன் நிர்வாகம், தொழிலில் அவனது முயற்சிகள் என்று பேட்டி ஒரு மணி நேரத்திற்கு நீண்டது. சில பெண்கள் வேறு அழைத்து ஜொள்ளி கொண்டிருந்ததை கண்ட சந்தனாவுக்கு சிரிப்புதான் வந்தது. அவளது அப்பா உள்ளே நுழையவும் தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு எழுந்தாள்.

அவளது எண்ணம் முழுவதையும் விஜயனே ஆக்கிரமிப்பு செய்திருந்தான். சென்ற வாரத்தில் ஒரு நாள் குழந்தை தயாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று அவனே நேரே அழைத்துக்கொண்டு வந்திருந்தான். டாக்டர் அரவிந் தான் பார்த்தார். ஏனோ விஜயராகவனின் மனைவி ஒருமுறை கூட குழந்தையை கூட்டிக்கொண்டு வந்து அங்கே யாரும் பார்த்தது இல்லை.

உடனிருக்கும் நர்ஸுகள் சிலபேர் அவனை பற்றிய அந்தரங்க விஷயங்களை பேசினாலும் கேட்பதற்கு இவளுக்கு விருப்பமும்,நேரமும் இருக்கவில்லை. விஜயனை பற்றிய ஏதேதோ யோசனைகள். அதற்குள் அம்மாவும் வந்து விட நால்வருக்குமான இரவு உணவை முடித்துக்கொண்டு தூங்க சென்றார்கள்.

ராகினி படுத்தவுடன் தூங்கிவிட அவளின் தலையை கோதி விட்டுக்கொண்டே மெதுவாக கண்களை மூடினாள் சந்தனா. ஏதேதோ கனவுகள் அவளை வழக்கம்போல் ஆக்கிரமிப்பு செய்து கொள்ள தூங்க இயலாமல் ஒரு தவிப்பு. கண்களில் அவள் அறியாமலே கண்ணீர் வழிந்தது.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மயங்கினேன் சொல்ல தயங்கினேன்!
133 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page