மயங்கினேன் மாயவிழியில்
” இந்த உலகத்துல எனக்கு பிடிக்காத ஒருத்தன் இருக்கான்னா அது நீ ஒருத்தன் தான். உன்னை பார்த்தாலே எரிச்சலா வருது. இவங்க எல்லாரும் உன் பின்னாடி இருக்காங்கன்னு நீ ஒன்னும் ரொம்ப நல்லவன் கிடையாது. நான் பார்த்ததுலையே கேவலமான பிறவி நீ மட்டும் தான்” என வெறுப்பை உமிழ்ந்து விட்டு சென்றாள் சாதனா.
” என்ன மச்சான் அந்த பொடுசு உன்னை இந்த கிழி கிழிச்சிட்டு போறா ஆனா நீ அமைதியாக நின்னுட்டு இருக்க. என்ன அவகிட்ட விழுந்திட்டியா ” என அவன் நண்பன் கேட்க ” என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது” என முறைத்தான் ஆதித்யா.
” பின்ன ஏன் நீ எதும் பேசலை” என கேட்டவனிடம் ” அவளுக்கு நான் யாருனு காட்டுறேன் டா இவன்கிட்ட எதுக்குடா நாம வம்பு வச்சிக்கிட்டோம்னு அவள் ஒரு ஒரு நாளும் அழுகனும் அழ வைக்குறேன்” என விசமதனமாக சிரித்தவன் தான் அடுத்து செய்ய வேண்டியதை பற்றி அவன் நண்பன் கௌதமிடம் கூறினான்.
” என்ன மச்சி சீனியர் உன்கிட்ட கவுந்துட்டாரா இல்லை நீ அவருகிட்ட கவுந்திட்டியா. உங்க ரெண்டு பேருக்கும் அடிக்கடி முட்டிக்குது. நீங்க ரெண்டு பேரும் செம பேர் டி” என அவள் தோழி புவனா கூற ” நான் மட்டும் அவனை லவ் பண்ற சிட்யூவேஷன் வந்தா அதோட வாழ்க்கையை வேணாம்னு சூசைட் பண்ணிக்குவேன்” என்றாள் அவன்மேல் உள்ள அளவுக் கடந்த வெறுப்பில்.
வெறுப்பின் பிடியில் இருக்கும் இருவரும் எப்படி காதல் வலையில் விழுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
