மீண்டும் கேட்குமா பூபாளம்
டீசர் 👇01
முருகானந்தத்தின் வீட்டிலிருந்து வெளியே வரும் பொன்னம்பலத்தை,, அங்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் வாணி கண்டவள்
“என்ன அண்ணே இந்த பக்கம்…?” என்று கேட்க
“அட வாணி..! நீ எங்க இங்க..?”
“அத ஏன் கேக்குறீங்க.. அந்த குடிகாரனோட மாரடிக்க முடியலண்ணே.. அதான் ஐயா வீட்ல வேலைக்கு சேர்ந்துட்டேன்…” என்று சொல்ல
“ஓ.. சரி சரி.. நான் கல்யாண விஷயமா தான் ஐயாவ பாத்துட்டு வாரேன்…” என்று பொன்னம்பலம் சொல்ல
“கல்யாணமா..! யாருக்கு துர்க்கா அம்மாவுக்கா…?” என்று ஆவலாக வாணி கேட்க, சட்டுன்னு ஒரு நொடி வீட்டை எட்டிப் பார்த்த பொன்னம்பலம்
“அட நீ வேற ஏம்மா.. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை… இது பெரிய தம்பிக்கு இரண்டாவது கல்யாணம்… 10 நாளைக்கு முன்னாடி என்னைய கூப்பிட்டு விடவும்.. நானும் சந்தோஷமா துர்க்கா பாப்பாவுக்கு பாக்கணுமானு கேட்டுப்புட்டேன்.. அவ்வளவுதான் நெற்றிக்கண் திறந்து என்னைய எரிக்காத குறையா முயற்சி பார்த்தார் ஐயா… அதோட வாய திறக்கலயே நான்
…ஐயாவோட குணம் அறிஞ்சாலும், பயமா இருந்தாலும்.. ரெண்டு தடவை நல்ல வரன் இருக்கு.. துர்க்கா பாப்பாவ பத்தி எல்லாமும் தெரிஞ்சவங்கதான் பேசி முடிச்சிடலாமான்னு கேட்டேன்…
… அதுக்கு அவளுக்கு இனி கல்யாணமும் இல்ல புருஷனும் இல்ல அவ வாழ்க்கை எப்பவோ முடிஞ்சு போச்சுன்னு கராரா சொல்லிட்டாங்க…” என்று கவலையாக சொல்ல ,
“என்னணே இப்டி இருக்காங்க.. அவங்க பெத்த பொண்ணுதானே துர்க்கா அம்மா ஆம்பள பிள்ளைக்கு ஒரு நியாயம் பொம்பள பிள்ளைக்கு ஒரு நியாயமா… பாவம்ணே அந்த பொண்ணு… அறியா வயசுல தெரியாம பண்ணின தப்புக்கு இத்தன வருஷம் சிறைவாசம்…” என்று வாணி பெருமூச்சு விட
“நீயும் நானும் பாவம் பார்த்து என்ன பண்ண முடியும்.. இந்த வீட்டில இருக்கிறவங்களுக்கு அந்த பொண்ணோட உணர்வுகளும் மனசும் புரியலையே…” என்று சொன்னவர்
“சரிமா நான் வாரேன்.. நீயும் விவரம் தெரியாம வார்த்தையை விடாத.. துர்க்கா பாப்பாவுக்கு விடிவுகாலம்னு ஒன்னு வராமல போகும்…” என்று சொல்லிவிட்டு செல்ல ,
ஹூம்..என்று பெருமூச்சு விட்ட வாணி “அதுவும் வயசு புள்ள.. வாழணுமேனு ஏன் யோசிக்க மாட்டேங்கிறாங்க…” என்று புலம்பியவாறு வீட்டினுள் நுழைந்தாள்.
யார் வருந்தியும் ,யார் வேதனை பட்டும் என்ன பயன் அவள் விதியினால் ஒடுக்கப்பட்டவள்…காதலினால் சபிக்கப்பட்டவள்…
