பகுதி 3
மாலை 5 மணிக்கு வேலை முடித்து வீட்டிற்கு செல்ல ஆயத்தமான யாதவி.. தோழி அசையாமல் அமர்ந்திருப்பதை பார்த்து கடுப்பானவள்..
“ஏய் எரும மணி அஞ்சு ஆச்சு, இன்னும் கிளம்பாம ஏன் இப்படி உட்கார்ந்துட்டு இருக்க” என்றாள்.
உடனே அவளை முறைத்த வைரம்.. “உன்கிட்ட மதியமே எல்லாத்தையும் தெளிவாதானே சொன்னேன். தெரிஞ்சிக்கிட்டே மறுபடியும் ஏண்டி கேள்வி கேட்டு, என் உயிரை வாங்குற” என்றாள் எரிச்சலாக.
“சரி டைமண்ட். ஆனா அதுக்கு ஏன் நீ இப்படி உட்கார்ந்திருக்க.
ஓ! நீங்க இப்படியே இங்க உட்கார்ந்திருக்கிறதுனால இந்த ப்ராப்ளம் முடிஞ்சிடும்னு நினைக்கிறியா… சரி.. அப்போ தாராளமா நாளைக்கு காலைல வரயும் இங்கேயே உட்கார்ந்திரு.. நான் கிளம்புறேன்” கூறிவிட்டு தோழியை திரும்பியும் பார்க்காமல் செல்ல…
“அடியேய் நில்லுடி, நானும் வரேன்” வேகமாக அவள் பின்னே ஓடினாள் வைரம்.
ஆனால் அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் நடந்த யாதவி.. பார்க்கிங் சென்றதும், வைரத்தின் கைப்பையிலிருந்த வண்டி சாவியை எடுத்து வாகனத்தை ஸ்டார்ட் செய்து, தோழியை ஏற்றிக் கொண்டு புறப்பட்டாள்.
யாதவி எதுவும் பேசாமல் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்க.. “யாது அப்பா அந்த மாப்பிள்ளையை பார்த்து பேசிட்டு வர சொன்னார்டி” என்றாள் வெறுப்பாக.
“ம்ம்ம், சரி எந்த காஃபி ஷாப்னு சொல்லு, போய் பேசிட்டு வருவோம்” என்றவளிடம்…
“எனக்கு அவங்ககிட்ட பேசுறதுக்கெல்லாம் கொஞ்சம் கூட இன்ட்ரஸ்டே இல்லை யாது” வைரம் கூற..
“சரி அப்போ வீட்டுக்கு போகலாம் வா” என்றாள் யாது.
“ப்ச் போகலனா அப்பா கேட்பாருடி” சலித்துக் கொண்டு கூறும் தோழியை வாகனத்தில் கண்ணாடி வழியே முறைத்துப் பார்த்தவள்..
“சரி அப்போ என்னதான் பண்ணலாம், சொல்லித் தொலை” எனக் கேட்க…
“அதான் எனக்கும் தெரியலை யாது” என்றாள் அவள்.
“இங்க பாரு வைரம், எதுவா இருந்தாலும் சரி.. ஃபேஸ் டு ஃபேஸ் டீல் பண்ணி, பிரச்சினையை முடிச்சி விட்டுரு. சும்மா இழுத்துகிட்டே போனேன்னு வை, நாளைக்கு இது எங்க போய் முடியும்னே தெரியாது. அதனால ஒழுங்கா போய் அந்த மாப்பிள்ளைகிட்ட பேசி உன் மனசுல இருக்குறதை தெளிவா சொல்லிடு. அவர் புரிஞ்சுகிட்டா பாக்கலாம், புரிஞ்சுக்கலையா ஸ்ரைய்டா உங்க அப்பாகிட்ட சொல்லிடலாம்” என்றாள் சாதாரணமாக.
“இங்க பாருடி அந்த மாப்பிள்ளைகிட்ட பேசுறதெல்லாம் எனக்கு சாதாரணமான விஷயம். அதைபத்தி எல்லாம் எனக்கு ஒரு டென்ஷனும் கிடையாது. ஆனா, இந்த விஷயத்தை அப்பாகிட்ட எப்படிடி சொல்றது, அதை நினைச்சிதான் என் வயிறு புளியை கரைக்கிது” புலம்பினாள் வைரம்.
“டைமண்ட், முதல்ல இந்த மாப்பிள்ளைட்ட பேசி முடிக்கலாம்டி. அதுக்கு அப்புறம் உங்க அப்பாவை டீல் பண்ணிக்கலாம், சரியா” என்றவள், வைரம் கூறிய காஃபி ஷாப்பிற்கு வண்டியை விரட்டினாள்.
ஐந்து ரோடு ரிலையன்ஸ் மாலில் அமைந்திருக்கும் பிரபல காஃபி ஷாப்பிற்குள் நுழைந்த இருவரும், சுற்றியும் அவனை தேட…
இவர்களுக்காகவே காத்துக்கொண்டிருந்த கௌதம்.. “ஹாய் வைரம்” என கையை அசைத்து.. தான் இருக்கும் இடத்தை அவர்களுக்கு காட்டியிருந்தான்.
அப்போது யாதவி.. “அட இவன்தான் மாப்பிள்ளையாக, நல்லா மாக்கான் மாதிரியே இருக்கான் டி. அதுவும் சாதாரண மாக்கான் இல்ல, மஞ்சமாக்கான் மாதிரியே இருக்கான்” என்றவள், அவனை கேலி பேசியபடியே வைரத்துடன் நடந்தாள்.
அவள் கூறியதைக் கேட்டு வைரத்திற்கு சிரிப்பு வந்த போதிலும்., அடக்கிக் கொண்டு அவனது டேபிளை நோக்கி வந்தவள்.. “ஹாய்” என்றாள் சம்பிரதாயமாக.
உடனே “உட்காருங்க” என்று கூறியவன், இருவரும் அமரவே, வைரத்திடம்.. “இவங்க உன்னோட ஃப்ரண்டா” என்றான் ஒருமையில்.
அதை கேட்டு எரிச்சலடைந்தவள்… “ஆமா” என்றாள் முகத்தை மாற்றாமல்.
“ம்ம்ம்” மெல்லிய புன்னகையை உதிர்த்த கௌதம்.. “அது வந்து உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசலாமேன்னு நினைச்சேன். ஆனா நீ உன் ஃப்ரண்டை கூட்டிட்டு வந்திருக்க” என்றவன், யாதவியை பார்க்க..
“ஹோ சாரி, யூ பீப்பிள் கண்டினியூ” என கூறியவள்.. சற்று தள்ளி அமர்ந்து கொள்ள. கௌதமின் மேல் கொலை வெறியே வந்தது வைரத்திற்கு.
ஆனால், இதையெல்லாம் உணராத கௌதம்.. “நம்ம ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்க போறவங்க.. சோ கொஞ்சம் பிரைவசி வேணும் இல்லையா, அதான்” என அவளிடம் கூற..
“அப்படினு நீங்களே சொல்லிக்ககூடாது… அண்ட் ஒன் மோர் திங், நான் ஒன்னும் உங்ககிட்ட பேசி இந்த மேரேஜ் ப்ரோபோசலை நெக்ஸ்ட் லெவல்க்கு கொண்டு போக வரல. எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை. அதை சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்” என்றாள் கடுப்பாக.
அவள் வார்த்தையில் திடுக்கிட்டவன்.. “ வாட்.. வாட் ஆர் யூ சேயிங்” எனக் கேட்க…
“எஸ் ஐ யம் சேயிங், ஐ டோன்ட் வான்ட் ட்டூ மேரின்க் யூ” என்றாள் திட்டவட்டமாக.
“பட், உங்க அப்பாவும் அம்மாவும் நாங்க கேட்கும்போது பரிபூரண சம்மதம்னு தானே சொன்னாங்களே” என்றவனுக்கு, அவள் மறுப்பை ஏற்றுக் கொள்ளவே முடியாவில்லை.
“அவங்க சம்மதம் சொல்லிட்டா.. கல்யாணம் நடந்திடுமா” மிடுக்காக கூறியவள், “லுக் மிஸ்டர் கௌதம், எனக்கு இந்த கல்யாணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை, இதைச் சொல்லத்தான் இங்க வந்தேன், குட் பாய்” என நகர..
“ஒன் மினிட்” என அவளை அவன் நிறுத்த..
“ப்ச், என்ன” புகைச்சலாக கேட்டவளிடம்… “ஏன் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சுக்கலாமா” என்றான் அவன்.
“இட்ஸ் நன் ஆஃப் யூர் பிஸ்னஸ்” என்றவள், தோழியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தாள்.
இப்போது வாகனத்தை வைரமே ஓட்ட.. பின்னால் அமர்ந்திருந்த யாதவி.. “ஏன் டைமண்ட், அவகிட்ட அவ்வளவு ஹார்சா பேசினே.. கொஞ்சம் ஸ்மூத்தா சொல்லி இருக்கலாமில்ல” என்றாள்.
“நான் ஸ்மூத்தா சொல்ற அளவுக்கா அவன் நடந்துகிட்டான்” வைரம் கூற..
“ஓ.. அப்போ, அவன் என்ட்ட அப்படி பேசினதுனாலதான், நீ அவன்ட்ட கோபமா பேசினியா” என்றாள் யாது.
“ஏன்.. அப்படி இல்லனு உனக்கு தோணுதா” என வைரம் கேட்க..
“நன்பேண்டா” என அவளை அணைத்துக் கொண்டவள்.. “டைமண்ட் இதுக்கு மேல உனக்கு டைமில்லடி.. சீக்கிரம் எப்படியாவது உங்க அப்பாகிட்ட உன் லவ் விஷயத்தை பேசிடு. அப்படி முடியலையா.. உங்க மாமா ப்ரசாந்த்கிட்டயாவது சொல்லிடு. அவர் உன் ஆள்ட்டயும் உங்க அப்பாட்டையும் பேசிக்குவாறு” என்றாள்.
“ம்ம்ம்” என தலையை அசைத்தவள்.. அவளை விட்டுவிட்டு… வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள்.
வீட்டிற்குள் நுழைந்தாலும் அவளை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த.. அவளது தாய் விஜயா..
“என்னம்மா, மாப்பிள்ளை பார்த்து பேசிட்டியா, உனக்கு ஓகேதானே. அப்போ இன்னும் மூணு மாசத்துல கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்ணிடலாமில்ல” கேட்டுக் கொண்டே இருந்தவர், மகள் கூறியதை கேட்டு ஆத்திரமடைந்தார்.
“அம்மா எனக்கு அந்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை.. சோ இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அதனால நீங்களும் இதை பத்தி பேசாதீங்க” கூறிவிட்டு, மடமடவென தன்னறைக்கு செல்ல…
“ஏய், நில்லுடி” என தடுத்த விஜயா… “உன் மனசுல நீ என்ன தாண்டி நினைச்சுகிட்டிருக்க” என்றார் கோபமாக.
உடனே.. “உன் மருமகன் பைரவனை தான் நினைச்சுகிட்டு இருக்கேன்” என மனதிற்குள் கவுண்டர் கொடுத்தவள்.. தாயை பாவமாக பார்க்க…
“என்ன.. இப்படி பாவமா பார்த்தா உன்னை சும்மா விட்ருவேன்னு நினைக்கிறாயா. இந்த அப்பாவி மூஞ்சியெல்லாம் உங்க அப்பாகிட்ட காட்டு. அவர் நம்புவாரு. ஆனா நான் நம்பமாட்டேன்” என கத்தியவர்…
“அந்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல்னு.. வேணாம்னு சொல்லிட்டு வந்த. அதுவும் எங்ககிட்ட ஒரு வார்த்தைகூட கேட்காம, நீயா எப்படி இந்த முடிவெடுத்த” என்றவர்…
“நானும் ஆறு மாசமா கேட்டுகிட்டு இருக்கேன்.. இப்ப வேணாம், இப்ப வேணாம்னு தட்டி கழிச்சுக்கிட்டே இருக்க. அப்படி என்னதான்டி உன் மனசுல இருக்கு.. அதையாவது சொல்லி தொலையேன்” என்றார் ஆத்திரமாக.
“எனக்கும் உங்ககிட்டலாம் சொல்லணும்னு ஆசைதான். ஆனா இன்னும் என் லவ்வை அவன் அக்சப்ட் பண்ணலையே, அப்புறம் எப்படி சொல்ல முடியும்” எண்ணிக் கொண்டவள், அந்த அப்பாவி முகத்தை இன்னும் மாற்றாமலிருக்க…
அதேநேரம் வீட்டிற்கு வந்த ஏகாம்பரம்.. “என்ன விஜி.. ஏன் இப்படி சத்தம் போட்டுட்டு இருக்க” கேட்டுக் கொண்டே.. மகளின் முகத்தையும், மனைவியின் முகத்தையும் பார்த்தவருக்கு.. என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது.
ஆனாலும் எதுவும் தெரியாதது போல்… “என்னடா ஆஃபீஸ்ல இருந்து வந்து, இன்னும் ஃப்ரஷாகாம இருக்க.. போ போய் ஃப்ரஷ் ஆகிவிட்டு வா” என சாதாரணமாக மகளிடம் பேச..
அவரை முறைத்து விஜயா.. “வாங்க வாங்க… உங்க பொண்ணு என்ன வேலை பண்ணியிருக்கான்னு தெரியுமா…. கல்யாணம் வேணாம்னு அந்த பையன்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கா… எல்லாம் உங்களால தான். நீங்க குடுக்கற இடம்தான்.. அவ இப்படி சொல் பேச்சு கேட்காம சுத்தறத்துக்கு காரணம்” என கணவரை பிடித்துக் கொண்டார்.
உடனே அதை பயன்படுத்திக் கொண்ட வைரம்., வேகமாக தன் அறைக்கு சென்று, கதவை பூட்டி கொள்ள.. “போய்ட்டாளா.. போகட்டும் போகட்டும்… எப்படியும் சாப்பிட வெளியே வந்து தானே ஆகணும். அப்போ பேசிக்கிறேன் அவளை” என்று கத்திவிட்டு சமையலறைக்குள் சென்றார்.
மகளும் மனைவியும் செல்லவே.. சோபாவில் கண்மூடி அமர்ந்த ஏகாம்பரம்.. “ஏன் இவ இப்படி இருக்கா.. ஒருவேளை யாரையாவது மனசுல நினைச்சிட்டிருக்காளா” யோசித்தவர்.. இதைபற்றி மகளிடம் பேச வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார்.
********
“சம்பத், அந்த கஸ்டமருக்கு கால் பண்ணி, ஆர்டர் கன்பார்ம் பண்ணியா” தன்னிடம் பணிபுரிபவனிடம்.. பைரவன் கேட்க…
“கேட்டுட்டேன் ண்ணே. ஆர்டர் கன்ஃபார்ம் ஆகல” என்றான் அவன்.
“என்னடா சொல்ற.. ஏன் கன்ஃபார்ம் ஆகல. என்ன ப்ராப்ளம். அமௌன்ட் ஏதாவது குறைக்க சொல்லி கேட்குறாரா” என்றவனிடம்..
“அதெல்லாம் ஒன்னும் இல்லண்ணே” என்றான் அவன்.
“அப்றம் ஏன்டா ஆர்டரை கேன்சல் பண்ணாங்க” பைரவன் கேட்க..
“அவன் ஏதோ அப்ரோட் போறேன்.. அதனால கேன்சல்.. அது இதுன்னு மென்னு முழுங்குனான். ஆனா, எனக்கு என்னமோ கல்யாண பொண்ணுதான் கல்யாணம் வேணாம்னு நிறுத்தி இருக்கணும்னு தோணுது” என்றான்.
“அது எப்படித்தான் இந்தப் பொண்ணுங்கயெல்லாம், டேட் ஃபிக்ஸ் பண்ணி, எல்லா வேலையும் முடிச்சதுக்கு அப்புறம்.. கல்யாணம் வேணாம்னு சொல்லி நிறுத்திட்டு போறாங்களோ தெரியல. இந்த மாதிரி பொண்ணுங்களை எல்லாம் என்னதான் பண்றதோ” என்ற பைரவனுக்கு தெரிந்திருக்கவில்லை, தனக்கும் இப்படித்தான் நடக்கும் என்று.
தொடரும்…
ஹாய் வாசகர்களே.. ஸ்டோரி எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க. ஸ்டோரி ஸ்லோவா போகுதுன்னு நினைகாதீங்க போகப்போக ஸ்பீடாகிடும்.
