முரடன் 8

பகுதி 8

 

 

காலை நடந்த சம்பவத்தால் மன உலைச்சலடைந்த பைரவன்,  ப்ரசாந்துடன் வெளியே சென்றவிட்டு..  மாலை 6 மணி போல  அலுவலகத்திற்கு வந்திருந்தான்.   

 

 

அப்போது..“பைரவா, சம்மந்தி போன் பண்ணாரு. நீ   பொண்ண வந்து பார்க்கலைனு சொன்னாரு. ஏன்ப்பா” என கவலையாக கேட்க..

 

“இல்லப்பா, அதுக்குள்ள ஒரு சின்ன பிரச்சனை.  அதனாலதான்  பாக்காமலே வந்துட்டேன்” என்றான் அவன்‌.

 

“என்னப்பா பிரச்சனை” பதட்டமா  கேட்டவரிடம்…

 

“அது.. ஒன்னும் இல்லப்பா, நான் பாத்துக்குறேன் விடுங்க.. அப்புறம் பொண்ணை இன்னொரு நாள் மீட் பண்ணுகிறேனு சொல்லிடுங்க” என்றான்.

 

“என்னப்பா இது,  ஒவ்வொரு தடவையும் இப்படி தள்ளி போட்டுக்கிட்டே இருந்தா அவங்க என்ன நினைப்பாங்க” என சங்கடமாக சிவம் கேட்க…

 

“அதுக்கு நான் என்னப்பா பண்ண முடியும். கிளம்பும்போதெல்லாம் ஏதோ ஒன்னு ஆயிடுது” என்றான் பைரவன்.

 

 

“சரி, நான் பேசுகிறேன் விடு… அப்புறம் கல்யாண தேதியை குறிச்சாச்சி, உன் தாய் மாமா வீட்டுக்கு சொல்லிட்டு…‌ பத்திரிகை அடிக்க கொடுத்துட வேண்டியதுதான்” என்றவரிடம், தேதியை கேட்டு தெரிந்து கொண்டவன், தன் அறைக்கு சென்றிருந்தான்‌.

 

 

 

பிறகு கந்தசாமிக்கு அழைத்த பரமசிவம்… மகன் வேலை விஷயமாக வேறு இடத்திற்கு சென்றதனால் இன்று அவனால் வர முடியவில்லை.  அடுத்த வாரம் கண்டிப்பாக வருவான் என சமாதானம் கூற… 

 

 

அவரிடம் கந்தசாமி சரி என்று கூறியிருந்தாலும்,   ஏதோ  சரியில்லை என்றே அவர் மனதிற்கு தோன்றியது.

                    *******

 

இரவு 7 மணிக்கு தங்கத்தின் வீட்டிற்கு வந்த சேர்ந்த ப்ரஷாந்திடம்.. 

 

“ஏங்க… உங்களுக்கு பொண்டாட்டி நானா இல்ல,  உங்க ஃப்ரண்டா.‌ அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு, கடைசியில் அவர் ஃபோன் பண்ணாவுடனே, அவர்கூட போயிட்டீங்க” என  கோபமாக கேட்க..

 

“உன்கிட்ட சொல்லிட்டுதான தங்கம் போனேன்.   அப்புறம் என்ன மறுபடியும் கேக்குற” என்றான் அவன். 

 

“ஆமா.. சொன்னிங்க. ஆனா என்ன சொல்லிட்டு போனீங்க, மதியம் கண்டிப்பா வந்துருவேன், வந்து கூட்டிட்டு போறேன் தானே சொன்னீங்க” என   கேட்டவளிடம்…

 

“கொஞ்சம் வேலை இருந்தது தங்கம்.  அதனால தான் வர முடியல” எனக் கொஞ்சியவன்… ஹாலில் யாரும் இல்லாததால் மனைவியை அணைத்திருந்தான்.    

 

கணவன் அணைத்துமே அவளின் கோபமெல்லாம் பறந்திருக்க… “ஐயோ, விடுங்க யாரது வந்துடப் போறாங்க”  என வெட்கப்பட்டவள்.. “ இப்படி ஏதாவது பண்ணியே என்னை சமாளிச்சிடுங்க” என்றவள், தாயை அழைக்க..

 

“வாங்க தம்பி” என வரவேற்றார் விஜயா.

 

அதன்பின் அங்கு வந்த ஏகாம்பரம்… அவனது நலம் விசாரித்தவர்.‌.. “என்ன மாப்ள, வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு” என்றார்.

 

“நல்லாதான் போய்க்கிட்டு இருக்கு மாமா.. ஆனா  என்ன  பெட்ரோல் விலை ஏறிட்டதால, நம்மளால திடீர்னு   வாடகையை  ஏத்த முடிய மாட்டேங்குது. அதுதான் கொஞ்சம் சிரமமா இருக்கு” என்றான் ப்ரசாந்த்.

 

“அதுக்காக ரேட் ஏத்தாம விட்ட நம்மளுக்கு தான் மாப்ள நஷ்டமாகும்.  கஸ்டமருக்கு சொல்லி புரிய வைங்க” என்றவர், ப்ரசாந்த் நடத்த வரும் டிராவல்ஸ் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

 

சிறிது நேரம் நால்வரும்  பேசிக் கொண்டிருக்க.. அப்போது, “அத்தை எங்க வைரத்தை ரொம்ப நேரமா ஆளையே காணோம்” என்றான் ப்ரசாந்த்.

 

“அவ பையனோட ரூம்ல விளையாண்டுட்டு இருக்கா, இருங்க கூப்டுறேன்” என்ற விஜயா, இளைய மகளை அழைக்க… குழந்தையை தூக்கிக் கொண்டு  வந்தாள் வைரம்.

 

 

தந்தையை கண்ட குழந்தை, உடனே தந்தையிடம் தாவிவிட..

 

“இவ்ளோ நேரம் என்கிட்ட ஓட்டிட்டு இருந்த..  இப்போ உங்க அப்பாவை பார்த்ததும் அவர்ட்ட ஓடுறியாடா”  என்றவள்…  “ஹாய் மாமு, எப்போ வந்தீங்க” என்றாள் புன்னகைத்த வண்ணம்.

 

 

அவள் கூறியதை கேட்டு கடுப்பான விஜயா.. “ஏண்டி உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன், இப்படி கூப்பிடாதேனு.  அழகா மாமானு கூப்பிட தெரியாதா உனக்கு”  என்று கடிய…

 

“அம்மா, அவ எப்படியோ கூட்டிட்டு போறா விடுங்கம்மா” என்றாள் தங்கம்.

 

“நீ சும்மா இருடி அவளை எது சொன்னாலும் உடனே சாப்போட்டுக்கு வந்துற வேண்டியது” என  மூத்த மகளையும் அவர் திட்ட…

 

“அத்தை, அவ அப்படி கூப்பிடுறதுதான் எனக்கு பிடிச்சிருக்கு. விடுங்க” என்றான் ப்ரசாந்த்.

 

அதன்பிறகு அவர்  பேசுவார என்ன..  “சரி நான் சமையலை பாக்குறேன்” என்ற விஜயா, பணிப்பெண்ணுடன்…‌ இரவு உணவிற்கான வேலையை பார்க்கச் சென்றிருந்தார்.

 

உணவு தயாராகும் வரை,  உடன்பிறப்புகள் இருவரும் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்க..  மாமனார் மருமகனும் அவரவர் தொழில் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

 

அரை மணி நேரத்தில் உணவு தயாராகிவிட.. குழந்தைக்கு கொடுக்க பால் எடுத்து வந்த விஜயா.. “ஏங்க சாப்பாடு ரெடி ஆயிடுச்சு. நீங்களும் தம்பியும் போய் சாப்பிடுங்க… தங்கம் நீயும் போ” என மூவரையும் அனுப்பியவர்..‌‌   “வைரம் இந்த..  இந்த பாலை குழந்தை கொடுத்து தூங்க வச்சிட்டு வா. நான் போய் அவங்களுக்கு சாப்பாடு போடுறேன்” என பால் பாட்டிலை அவள் கையில் திணித்துவிட்டு, சென்றிருந்தார்.

 

அவளும் குழந்தைக்கு பாலை புகட்டி, உறங்க வைத்துவிட்டு.. தன் அறைக்குள் நுழைய.. 

 

“வைரம் சாப்பிட போம்மா” என்றார்,  அவள்  பின் நின்றிருந்த ஏகாம்பரம்.

 

“இல்லப்பா எனக்கு பசிக்கலை, வேண்டாம்” என சோர்வாக அவள் கூற…

 

மகளின் மனநிலை புரிந்த கொண்ட ஏகாம்பரம்..  “வைரம்..  மனசு சரியில்லன்னு உடம்பையும் சேர்த்து வருத்திக்க கூடாதும்மா,  புரியுதா…  போ, போய் சாப்பிடு” என்று வற்புருத்த.. தந்தையின் பேச்சிற்கிணங்கி உணவு உண்ணச் சென்றிருந்தாள். 

 

தங்கமும் ப்ரசாந்தும்  பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருக்க அவர்களுடன் அமர்ந்தவள், அவர்களின் பேச்சிலும் கலந்து கொண்டாள்.

 

அப்போது தங்கம்.. “பைரவன் அண்ணாவோட மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணியாச்சா” எனக் கேட்க..

 

“இன்னும்  பண்ணல தங்கம்” என்றான் அவன்.

 

“இன்னும் டேட்டே ஃபிக்ஸ் பண்ணல, அதுகுள்ள கல்யாண வேலையெல்லாம் ஆரம்பிச்சுட்டாங்களா” என்றவளிடம்.. 

 

“கல்யாண வேலையெல்லாம் இனிமேதான் ஆரம்பிக்கணும்” என்று கூற..

 

“அப்புறம் இன்னைக்கு ஏதோ கல்யாண வேலையா வெளிய போறன்னுதானே சொல்லிட்டு போனீங்க என்கிட்ட” என்று கணவனை முறைத்தவள், “அப்போ பொய் சொல்லிட்டு, உங்க ஃப்ரண்டோட ஊர் சுத்த போயிருக்கீங்கல்ல” என்றாள்.

 

“ஐயோ, ஊர் சுத்தலாம் எங்கேயும் போகல தங்கம். ஃபர்ஸ்ட் டைம் ஒரு பொண்ணை  பாக்க போறேன். தனியா போக ஒரு மாதிரியா இருக்கு,  நீயும் வாடான்னு கூப்பிட்டான். அதான் போனேன். ஆனா, பார்க்காமலே திரும்பி வந்துட்டோம்” என்றான்.

 

“என்னது பொண்ணையே இன்னைக்குதான் பாக்க போனிங்களா.  அப்போ ஏற்கனவே போனப்ப பாக்கலையா” என்றவள், “போயிட்டு ஏன் பாக்காமலே வந்துட்டீங்க” என்றாள்.

 

உடனே ப்ரஷாந்த்..  “அது.. ஒரு இம்போர்ட்டன்டான வேலை வந்துருச்சி, அதான்  கிளம்பி வந்துட்டோம்” என பொய்யுரைத்தவன், “அன்னைக்கு  பொண்ணு பாக்க கிளம்பும்போது சக்திவேல் வைஃப்புக்கு டெலிவரி பெயின் வந்துருச்சுன்னு ஹாஸ்பிடலுக்கு போயிட்டான், அதனால் பார்க்கலை” என்றான். 

 

“ஓ!.. சரி.. சரி” என்றவள், வேறு எதையோ பேச.. இவ்வளவு நேரம் பைரவன் திருமணத்தைப் பற்றி பேசுவதை,  உயிர் போகும் வலியுடன் கேட்டுக் கொண்டிருந்த வைரத்திற்கு.. அவன் மணப்பெண்ணை இன்னும் பார்க்காதது மனதிற்கு சற்று இதுமாகவே இருந்தது.

 

தான் நேசித்த ஒருவனை வேறொருத்தி..‌ அவனுக்குரியவனாக பார்ப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனாலே இன்னும் அவர்களின் சந்திப்பு நிகழவில்லை என்று தெரிந்ததும், உள்ளுக்குள் ஒரு  மகிழ்ச்சி.

 

ஆனால், இது தற்காலிகம்தான் என்று எண்ணியவளுக்கு, ஏற்கனவே அறைகுறையாக சென்று கொண்டிருந்த உணவு கூட சுத்தமாக இறங்கவில்லை.

 

எப்படியோ கடினபட்டு அந்த இரண்டு இட்லிகளை உள்ளே தள்ளியவள், எழுந்து கை கழுவ செல்ல.. ப்ரசாந்தின் அலைபேசி இசைக்கத் தொடங்கியது.

 

 

உண்டு முடித்து கை கழுவிய ப்ரசாந்த்.. அலைபேசியை எடுத்துக் கொண்டு தனியே வந்தவன்… “ஹலோ, ஹலோ..  என்னடா திடீர்னு கான்ஃபிரன்ஸ் போட்டிருக்கீங்க.. என்ன விஷயம்” என்றான்.

 

“நான் போடலடா, பைரவன்  போட்ருக்கான். அவன்கிட்டதான் கேட்கணும், சொல்லுடா ஏதாவது முக்கியமான விஷயமா” என சக்தி கேட்க…

 

“ஆமாண்டா, மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க. அதான் சொல்லலாமேன்னு கூப்பிட்டேன்” என்றான் அவன் சாதாரணமாக.

 

“ஹே, சூப்பர் மச்சி..”  என ப்ரசாந்தும், சக்தியும் மகிழ்ச்சியில் கோரசாக  கூச்சலிட.. 

 

காதை அடைத்துக் கொண்ட பைரவன்.. “ஏண்டா கத்துறீங்க, காது கிழிஞ்சிடும் போல” என்றான்.

 

“இதுக்கே இப்படின்னா எப்படி மச்சி,   கல்யாணம் ஆனதுக்கப்புறம் தானே கச்சேரியா இருக்கு” என்ற சக்தி.. “சரி சரி டேட் எப்பன்னு சொல்லு” எனக் கேட்க..

 

“வைகாசி 15 வச்சிருக்காங்கடா. அதுக்கு முதல் நாள் நிச்சயம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க” என்றவனின் பேச்சில் திருமணத்திற்கான எந்த ஆர்வமும் இல்லை. 

 

இதை அறிந்து கொண்ட நண்பர்கள் இருவரும்.. “என்னடா இப்படி பேசுற…. மதியம் சாப்ட போலன்ற மாதிரி மேரேஜ்   டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்கன்னு சாதாரணமா சொல்ற.  கொஞ்சம்கூட ஒரு சந்தோஷமே தெரியலையேடா உன் குரலில்” என்றான் ப்ரசாந்த்.

 

“இதுல என்னடா சந்தோஷம் இருக்கு, எல்லாருக்கும் நடக்க போற மாதிரி எனக்கும் கல்யாணம் நடக்க போது அவ்வளவுதானே” எனகூற…

 

“ஊர்ல இருக்க எல்லாரோட கல்யாண வேலையும் பார்த்து பார்த்து..  இவனோட கல்யாணத்தையும் ஒரு வேலை நினைச்சுட்டான் போலடா” என சிரித்தான் சக்தி.

 

உடனே ப்ரசாந்த்.. “மச்சி இது அடுத்தவன் கல்யாணம் இல்லடா.  உன்னோட கல்யாணம்தான். மாப்பிள்ளை நீதான் ஞாபகம் வச்சுக்கோ. கொஞ்சமாவது கல்யாணம் கனவுல மிதடா” என்று கூற..

 

“ஏன்டா, கல்யாணம்னா.. உடனே கனவு காண ஆரம்பிச்சுடனுமா. போங்கடா…   இங்க அவவனுக்கு தலைக்கு மேல வேலையிருக்கு.  இதுல எங்க போய் நான் கனவுல மிதக்க”…  என்றவன்,   “அதுமில்லாம நீங்க சொல்ற மாதிரி எனக்கு அந்த ஃபீல்லாம் வரவே இல்லடா” என்றான்‌.

 

“ஒருவேளை இன்னும் பொண்ண பார்க்காததனால அப்படி எதுவும் தோணலனு நினைக்கிறேன்.  சீக்கிரமா போய் பொண்ண பாரு. அதெல்லாம் தான வரும்” என்று சக்தி கூற..

 

 

“ஆமாடா பொண்ணு மட்டும் பார்த்துட்டு வா,  அப்புறம் கல்யாண கனவுல மத்த யாரும் உன் கண்ணுக்கு தெரிய மாட்டாங்க” என  கேலி செய்து சிரித்தான்‌ ப்ரசாந்த்.

 

உடனே பைரவன்.. “டேய்” என மிரட்ட.. 

 

“சரி மச்சி டென்ஷனாகாத” என்று சக்தி.. “நானும் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்டா” என்றவன்,  “வெள்ளிக்கிழமை குழந்தைக்கு பேர் வைக்கிற ஃபங்க்ஷன் வச்சிருக்கோம்டா. அம்மா அப்பா தங்கச்சி எல்லார்கிட்டயும் சொல்லிடுங்க. கண்டிப்பா  எல்லாரும் ஃபேமிலியோட வந்துருங்க” என்றான்.

 

உடனே பைரவன்,  “டேய்..  என்னடா ஏதோ சொந்தக்காரங்களை கூப்பிடுற மாதிரி முறையா கூப்பிடுற,  வாங்கன்னா வந்துடப் போறோம்” என்றான்.

 

“எங்களுக்குதான் சொந்தக்காரங்கன்னு யாரும் இல்லையே மச்சி. அதனாலதான் உங்களை முறையா கூப்பிடுறேன்” என்று வருத்தமாக சக்தி கூற..

 

“ஃபீல் பண்ணாத மச்சி இப்போதான் குழந்தை பிறந்திருச்சில்ல. இனிமே எல்லாம் தானா வந்துருவாங்க விடுடா” என்றான் பைரவன்.

 

“நீ சொல்ற மாதிரி நடந்துட்டா அதைவிட பெரிய சந்தோஷம் வேற எதுவுமே இல்லடா பைரா” என்றவனின், வருத்தத்தை போக்குமாறு நண்பர்கள் இருவரும் பேசியவர்கள், சற்று நேரத்தில் அணைப்பை துண்டித்திருந்தனர்.

 

சக்திவேல் அவனுடன் பயின்ற நேன்சியை காதலித்ததால், மத வேறுபாடு காரணமாக இரு பெற்றோர்களும் அவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. எனவே நண்பர்களின் உதவியோடு பெற்றோர்களை   எதிர்த்து  திருமணம் புரிந்து கொண்டதால், இன்றுவரை இரு வீட்டு பெரியவர்களும் அவர்களுடன் எந்தவித உறவும் வைத்துக் கொள்வதில்லை.

 

நண்பர்களுடன் பேசிவிட்டு வந்த ப்ரசாந்திடம்.. “யார்கிட்டங்க இவ்ளோ நேரம் பேசிட்டு வரீங்க” என, குடும்பத்தாருடன் அமர்ந்திருந்த தங்கம் கேட்க..

 

“பைரவன்தான் போன் பண்ணி இருந்தான்மா. மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களாம் அத சொல்லதான் கூப்பிட்டிருந்தான்” என்றான்.

 

“அப்படியா.. எப்போ” என மகிழ்ச்சியாக கேட்ட மனைவியிடம்.. 

 

“இவ கூட இவ்வளவு சந்தோசமா கேட்கிறா,   ஆனா மாப்பிள்ளை” என எண்ணிய ப்ரசாந்த்.. திருமண தேதியை  கூறியவன், சக்தி குழந்தையின் பெயர் சூட்டு விழாவை பற்றியுமா மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான்.

 

பைரவனின் திருமண தேதியை கேட்ட வைரத்தின் கண்கள் அவளையும் மீறி கலங்கிட…  யாருக்கும் தெரியாமல்  அதை துடைத்துக் கொண்டவளுக்கு தெரிந்திக்கவில்லை, தந்தையின் கண்கள் தன் கண்ணீரை கவனித்துக் கொண்டிருந்ததை.‌ 

 

 

    தொடரும்….

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page