மௌனத்தால் உடைந்த காதல் – 10

ஆதி மாலை வரை குழந்தைகளுடன் இருந்து, மாலை டீயும் குடித்துவிட்டு, அதன் பிறகு குழந்தைகளை தன்னுடன் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

போகும் வழியிலே ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி, குழந்தைகளின் கன்னத்தை தாங்கிப் பிடித்தவன்.” அப்பா ஏதாவது தப்பு செஞ்சிட்டேனா” என்று கேட்டான்.

அழுகையுடனே இருவரும் அவனது கண்ணீரை துடைத்து விட்டபடி,” இல்ல” என்று தலையசைக்க.

“அத்தை பேசினது” என்றவனுக்கு  அடுத்த வார்த்தை வரவில்லை..

என்ன பேசினாள் என்று தெரியாது. ஆனால், அவள் அதிகமாக ஏதோ பேசி இருக்கிறாள். குழந்தைகளின் மனது புண்படும்  படி என்பதை மட்டும் உணர்ந்து அவன் நிறுத்த.

வேகமாக இருவரும் அவனை கட்டி அணைத்தபடி,” இல்லப்பா தாத்தாவும், பாட்டியும் நல்லாதான் பாத்துக்கிட்டாங்க. அத்தை தான்” என்றவர்களுக்கு மேற்கொண்டு பேச முடியாமல் தொண்டை அடைக்க .

இருவரையும் இன்னும் இறுக்கி அணைத்து பிடித்தவன்.” இனி நம்ப அங்க போக வேணாம்” என்றான்.

“இல்ல பா.நம்ப தாத்தா, பாட்டியை பார்க்க போலாம். அத்தையை அங்க வர வேணாம்னு  பாட்டி சொல்லிட்டாங்க ” என்றனர்.

எதுவும் கூறாமல், இருவரது கண்களையும் பார்த்துக் கொண்டு இருந்தான் .

அவனது கண்ணீரை துடைத்து விட்டவர்கள்.” நாங்க அம்மா கிட்ட எதுவும் சொல்ல மாட்டோம் “.

அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை .குற்ற உணர்ச்சி மேலெழும்பியது. இருந்தாலும், தன்னை அடக்கியவன். குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்ல .

அப்படி ஒன்று நடந்ததை பற்றி ஒரு வார்த்தை கூட சுதா குழந்தைகளிடமும் சரி, தன்னவனிடமும் கேட்டுக் கொள்ளவில்லை .அதுவே அவனுக்கு இன்னும் ரணத்தை தான் உண்டு பண்ணியது.

அன்று இரவு  தூங்குவதற்கு முன்பு அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை இட்டவன் .எதுவும் பேசாமல் நகர..

” கண்டதையும் யோசிக்க வேணாம். நான் எதையும் நினைக்கல “என்றவள் வேறு எதுவும் பேசாமல் கண்ணை மூடிக்கொண்டாள் .

இப்பொழுது கூட தனக்காக யோசிக்கிறாளே. ஆனால் ,அன்று இவளை தான்  நாம் அந்த நிலையில் நிற்க வைத்தோம் என்று நினைத்தவனுக்கு நாண்டு கொண்டு  சாவலாம் போல் இருந்தது.

தன் கையறு நிலையை எண்ணி எதுவும் பேசாமல் படுக்கையில் சரிந்தான். ரொம்ப நேரமாக உருண்டு உருண்டு படுத்தவன். விடியலில் தான் தூங்கி இருந்தான். தினமும் அவளுக்கு அவனும் கூட மாட ஒரு சில வேலைகள் செய்ய, குழந்தைகள் காலையில் எழுந்து, குளித்து முடித்து, தங்களின் வேலையைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு சரியாக இருக்கும்.

மாலை பள்ளி முடிந்து வந்து தான் தாய் விட்டு சென்ற வேலைகளை பார்ப்பார்கள். அவள் எவ்வளவு கூறினாலும் ,கேட்காமல் செய்தனர். இப்படியே நாட்கள் உருண்டோடியது.இரண்டு வாரங்கள் தன் தாத்தா, பாட்டியை பார்த்துவிட்டு வந்தனர். பேரப்பிள்ளைகள். அவனும் காலையில் விட்டுவிட்டு மாலையில் அழைத்துக் கொண்டு வந்தான் .

உதயா அங்கு வராதவாறு பார்த்துக் கொண்டார் .சனி இரவு அவளுக்கு போன் செய்து கூறி விடுவார் சித்ரா, “நாளைக்கு இங்க வந்துராது , அசைவம் செய்றத அப்பா கைல கொடுத்து அனுப்புறேன். புள்ளைங்கள மட்டும்  அப்பா கூட அனுப்பிவிடு” என்றார் .

முதல் வாரம் முறுக்கி கொண்டாள்.இரண்டாவது வாரம்  அண்ணன் பிள்ளைங்க மட்டும் போகணும், என் பிள்ளைங்க போக கூடாதா ? என்று வீம்புக்கு தன் பிள்ளைகளை அனுப்பி வைத்தாள்.

குழந்தைகளிடம் எந்த பாகுபாடும் இல்லாமல் இருவரும் பார்த்துக் கொண்டார்கள். குழந்தைகள் நாள் வரும் ஒன்றாக தான் விளையாடினர் .அவர்களுக்கும் எந்த பாகுபாடும் கிடையாது. மூன்றாவது வாரம் ஞாயிறு அன்று  பிள்ளைகளை தாய் வீட்டிற்கு அழைத்து செல்வதற்கு கிளப்பிக்கொண்டு இருக்க.

அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்தார் சுதாவின் அம்மா கமலா.

கமலாவிற்கும் இப்பொழுது இங்கே அருகில் இருப்பது மகள் மட்டும்தான் . இதற்கு முன்பு மகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்க வார வரம் வந்துவிடுவார். வார இறுதி நாட்களில் அவளால் தன்னை பார்க்க வர முடியவில்லை என்றால், அவர் அங்கு வந்து பார்த்துவிட்டு செல்வார் .

ஆனால் ,இப்பொழுது பேரப்பிள்ளைகளும் டியூஷன் செல்வதால், மாலை வேளையிலும் வராமல் இருக்க. ஞாயிற்றுக்கிழமை சம்மந்தி வீட்டிற்கு சென்று விட.

பேர பிள்ளைகளை பார்க்க அவர் வந்துவிட்டார்.

“வா  மா” என்று வரவேற்றவள். “வரன்னு சொல்லவே இல்லை” என்று  கேட்டாள்

“சுதா!” என்றான் கண்டிப்பான கணவனாக..

‘ வீட்டிற்கு வந்தவங்க கிட்ட  இப்படியா பேசுவது?’ என்ற பார்வை அவனிடம்.. நாக்கை கடித்துக் கொண்டவள் .எதுவும் பேசாமல் தாயை பார்க்க .

“ஏண்டி என் மக வீட்டுக்கு வரதுக்கு கூட நான் சொல்லிட்டு வரணுமோ ? நீயும் மூணு வாரமா வருவனு பார்த்த. வரவே இல்லை. மாப்பிள்ளைக்கு போன் பண்ணுனா, வீட்டு அட்ரஸ் சொன்னாரு, அதுக்கு முன்ன நான் கேட்டாலும் அவரும் சொல்லல. நானே கொடுக்கிறேனு சொன்னாரு, கொடுப்பாருனு பார்த்தா கொடுக்கல ஏதோ  நேத்து தான்  போன் பண்ணவும் அட்ரஸ் கொடுத்தாரு”என்றவுடன் தன் கணவனை  முறைத்தாள்.

என்னிடம் தன் தாய் பேசியதை சொல்லவே இல்லையே! என்று குற்றம் சாட்டும் பார்வை.

இப்பொழுது மாமியார் வந்திருக்க ,பிள்ளைகளை அழைத்து செல்ல முடியாதே! என்று அவன் யோசனையில் உழன்று  கொண்டிருக்க.

” நீங்க ஏன் நின்னுட்டு  இருக்கீங்க ?பிள்ளைகளை கூட்டிட்டு போக வேண்டியது தானே” என்ற உடன் ,

கமலா,” எங்கடி பிள்ளைகளை கூட்டிட்டு போக போற?” என்றார்.

“இது என்னமா கேள்வி? பசங்க வார வாரம் அங்க போறாங்கன்னு சொன்னேன் தான?”

” நீ வரமாட்டேங்குறனு தானே நான் பிள்ளைகளை பார்க்க வந்தேன். இப்ப வெறும் வீட்ட சுத்தி பாத்துட்டு போக வா நான் இங்க வந்து உட்கார்ந்து இருக்கேன்”

அவனுக்குமே அந்த கேள்வி இருக்கத்தான் செய்தது. பேர பிள்ளைகளை பார்க்க தானே வந்திருக்கிறார்.

” நான் அடுத்த வாரம் பிள்ளைங்களை அங்க கூட்டிட்டு வரேன் .இல்லன்னா நாளைக்கு சாயங்காலமா கூட கூட்டிட்டு வரேன், இல்ல மதியத்துக்கு மேல் கூட்டிட்டு வந்து, அங்க நான் கொஞ்ச நேரம் இருக்கேன் ..”

“ஏன்டி பெத்தவ உன் வீட்டுக்கு உன்ன தேடி வரக்கூடாதா?”என்றார் வேதனையாக .

“மா அப்படி இல்லம்மா” என்று அவள் பேச வரும் போதே,

“சுதா கொஞ்ச நேரம் இரு!” என்று மனைவியின் கையை பிடித்தவன். அவள் கையில் தட்டி கொடுத்துவிட்டு,” பசங்க இங்க தான் இருப்பாங்க, நீங்க இருங்க உங்க மக பேசுறத தப்பா எடுத்துக்காதீங்க “என்றவன் பிள்ளைகளை மாமியாரிடம் விட்டுவிட்டு ,அவளை கிச்சனுக்கு அழைத்து சென்றவன் அவளை இறுக்கி அணைத்து விடுவித்து,
” எப்பயும் போல இருடி .அத்தை அவங்க பேர பிள்ளைகளை பார்க்க வந்திருக்காங்க. ஏன் அப்பா ,அம்மாவுக்கு எந்த அளவுக்கு புள்ளைங்கள பாக்குற உரிமை இருக்கோ !அதே அளவுக்கு அத்தைக்கும் இருக்கு தான. அங்கயாச்சும் அப்பாவுக்கு அம்மாவும், அம்மாவுக்கு அப்பாவும் துணையா இருக்காங்க .

அத்தை பாவம் டி தனியா  இருக்காங்க .நீ எத்தனை நாள் சொல்லி இருப்ப, பசங்கள கூட்டிட்டு போயிருக்க தானே, இரண்டு பக்கமுமே பேரப்பிள்ளைகளை பார்க்காம இருப்பது கஷ்டமா இருக்கும். உன் தம்பியும், அவன் பொண்டாட்டியும் இங்க இல்ல .அது இல்லாம இங்க வர போகவும் அவங்களுக்கு பெருசா பேச்சு வார்த்தையும் இல்லை.அது உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும் ,இப்போ நம்ப தான அத்தையையும் பார்க்க செய்யணும்” 

“ஆனா இப்போ பசங்களை மாமா எதிர்பாத்துட்டு இருப்பாரே!” என்றவள் மாமியார் என்ற வார்த்தையை ஒரு நூல் அளவு கூட வாய் திறந்து கூறவில்லை .

“அதை நான் பார்த்துக்கிறேன். எப்படியாவது பேசி சமாளிச்சுக்கிறேன்” என்றவன்”சரி நீ அத்தையைப் பாரு “என்று வெளியே வர .

குழந்தைகள் பாட்டியுடன் ஐக்கியமாகி விளையாடிக் கொண்டிருந்தனர்.

வரும்போது பிள்ளைகளுக்கு பிடித்தமான தின்பண்டங்களை தன் கையாலே செய்து எடுத்துக் கொண்டு வந்திருந்தார். ஒரு சில விளையாட்டுப் பொருட்களும் எடுத்துக் கொண்டு வந்திருக்க. பிள்ளைகளிடம் காட்டி தான் கொண்டு வந்ததை ஊட்டி விட்டபடி இருந்தார் .

“வாங்கத்தை சாப்பிடலாம்!” என்க .

“இல்ல மாப்ள அது ..”என்றவர் தன் மகளைத்தான் பார்த்தார்.

“நான் ஏதோ தெரியாம சொல்லிட்டேன் மா. வா சாப்பாடு எல்லாம் ரெடியா தான் இருக்கு”என்றாள்.

அவரும் பிள்ளைகளுடன் உட்கார.  சாப்பாடு போட்டபடி தன்னவனை தான் நொடிக்கு ஒரு முறை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவன் கண் மூடி திறந்து விட்டு, தன் மாமியாருடன் உட்கார்ந்து இரண்டு சப்பாத்தியை மட்டும் சாப்பிட்டவன்.

” சரித்த எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு . நீங்க பாருங்க, ஏதாவது வேணும்னா போன் பண்ணு சுதா “என்று தன்னவளையும் பார்த்து கண் மூடி திறந்துவிட்டு, பிள்ளைகளிடமும் சொல்லிவிட்டு கிளம்பியவன். நேராக தன் தாய் தந்தையிருக்கும் வீட்டிற்கு தான் சென்றான்.

வாசலையே எதிர்பார்த்து உட்கார்ந்த சித்ராவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

” என்னடா புள்ளைங்க எங்க? நீ மட்டும் வர ?”

“சொல்றேன் மா வா” என வீட்டிற்குள் நுழைய .

திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே வந்த தன் தாயின் கையை பிடித்து அழைத்துக்கொண்டு ஹாலில் வந்து உட்கார்ந்தவன்.” அத்தை வந்துட்டாங்க .அதான் ..” என்றவுடன்

அவருக்கு கோபம் வர..”அதுக்கு? உன் மாமியார் வந்ததுக்கு என் பேர புள்ளைங்களை விட மாட்டேன்னு சொல்லிட்டாளா உன் பொண்டாட்டி? “
 

தன் தந்தையை பாவமாக பார்த்தான் .

“ஏன்டி உனக்கு பேர புள்ளைங்க மாதிரி தானே சம்மதிக்கும் பேர புள்ளைங்க , அதனால புள்ளைங்கள பார்க்க சம்மந்தி வந்திருப்பாங்க. இங்க இருக்கும்போது புள்ளைங்க அங்க ஒரு எட்டு போயிட்டு வருங்க இல்ல. அவங்க இங்க ஒரு எட்டு வந்திட்டு போவாங்க தானே, உனக்கே தெரியும் தானே. இத்தனை வருஷமா அவங்க அங்க தனியா தான இருக்காங்க. இங்க வர போவ இருந்துட்டு இருந்தாங்க, இப்ப இருந்து இருந்து இப்பதான் பேர புள்ளைகங்களை பார்க்க வந்திருப்பாங்க. சாயங்கால நேரத்துல பொழுது போயும் புள்ளைங்கள பாக்க முடியாது. டியூசன் போதுங்க, மூணு வாரமா இங்க வந்துட்டு தான இருந்துச்சுங்க” என்றவுடன் தன் கணவனிடம் முகத்தை வெட்டி திருப்பியவர்.

“விட மாட்டேன்னு சொல்லிட்டா இல்ல உன் பொண்டாட்டி ” என்றார் மகனை பார்த்து,

“ஏமா எப்ப தான் நீ அவளை புரிஞ்சுப்ப “என்றவன் வேகமாக குரலை உயர்த்த.

” என்ன வசியம் வச்சாளோ உனக்கு” என்று கூற.

இப்பொழுது அவனுக்கு கோபம் மூண்டு கொண்டு வந்தது. இப்பொழுதும் தன் மனைவி மீதுதானே குற்றம் சாற்றுகிறார். என்று எண்ணியவன் வேகமாக பேச வாய் திறக்க போக.

நேசனே பேச ஆரம்பித்தார் . “திரும்பத் திரும்ப தப்பு மேல தப்பு பண்ணிட்டு போற சித்ரா. அந்த புள்ள பொறுமையா இருக்கவும் தான், இப்போ உன் பேர புள்ளைங்க கூட உன்னை பார்த்துட்டு போக ,வந்திட்டு போக இருக்குங்க சரியா? ஒருவேளை பேரப்பிள்ளைங்க இங்க வர்றது பிடிக்காம இருந்திருந்தா இங்க வீட்டுக்கு வர போக விட்டிருக்காது. சுதா வேணான்னு சொல்லியும் பிள்ளைங்க வர வேண்டிய அவசியம் கிடையாது. வார்த்தை தகாத வார்த்தை எல்லாம் சுதாவை பார்த்து நீ சொன்னத மறந்துடாத. என்னைக்கு நீ எல்லாம் உன் தப்பை உணர்ந்து திருந்த போறியோ தெரியல ?இப்படியே பேசிட்டு திரிஞ்சனா வரப்போக இருக்க உன் பையனும் வராமல் போயிடுவான். அம்புட்டு தான் சொல்லுவேன். அப்புறம் புள்ளன்ற உறவை நீ அறுதுட்டு தான் நிக்கணும். முதல்ல தான் செஞ்ச தப்ப உணர பாரு ,மன்னிப்பு கேட்கலனா கூட தப்ப உணர்ந்து அமைதியா இரு”என்றவர் மகனின் தோளில் கை போட்டு வெளியே அழைத்துக் கொண்டு வந்தார்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page