மௌனத்தால் உடைந்த காதல் -3

ஆதி தன்னவளையும், தன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு செல்வதற்காக மகளை முன்னாடி தூக்கி உட்கார வைக்க..
 

 

இருவரும் நான்தான் முன்னாடி உட்காருவேன் என்று அடம் பிடித்தபடி இருந்தனர்..
 

 

“இரண்டு பேர் எல்லாம் முன்னாடி உட்கார முடியாது. மித்து  முன்னாடி உட்காரட்டும், நீ என் கூட பின்னாடியே உக்காந்துக்கோ..வா” என தன் மகனை அழைத்தாள் சுதா. 
 

 

ஒரு முறை திரும்பி ஆதி தன்னவளை பார்த்தான்..
 

 

இதற்கு முன்பெல்லம் எனக்கு கண்ணாடி தெரிய மாட்டேங்குது என்று கூறினால் கூட, நான் பைக்ல உங்க பின்னாடி தான் உட்கார்ந்து வருவேன் என்று கூறிய, தன்னுடைய அம்மு தான் இப்பொழுதும் பேசுகிறாளா ? என எண்ணும் போது உள்ளுக்குள் உடைபெடுத்த காதல், வலி கொடுத்தாலும், அமைதியாக இருந்தான்..
 

 

சுதா கூறியது போலவே, மிதுவை முன்னால் உட்கார வைத்துக் கொள்ள, கணவன் ,மனைவி இருவருக்கிடையில் உட்கார்ந்து கொண்டான் மகி..
 

 

அங்கிருந்து புறப்பட்டதில் இருந்து யோசனையிலேயே ஆழ்ந்த படி வண்டியை இயக்கினான் ஆதி.
 

 

அவளும் கண்ணாடி வழியாக அவனைத்தான் பார்த்தபடி இருந்தாள்..
 

 

குழந்தைகள் இருவரும் தங்களுக்குள் ஏதோ பேசியபடி இருந்தார்கள். அவ்வப்போது, அம்மா ,அப்பாவையும் தங்கள் பேச்சுக்களில் இணைத்துக் கொண்டார்கள். ஆனால், அப்பொழுதும் தந்தையிடம் இருந்து பதில் வராமல் இருக்க, “அப்பா என்னப்பா நாங்க பேசிட்டு  வரோம் நீங்க அதை கேட்காம ஏதோ யோசிச்சுட்டு இருக்கீங்க ?”
 

 

“ஒன்னும் இல்லடா” என்றவன் மீண்டும் யோசனையில் முழுக..
 

 

அவனுடன் இத்தனை வருடம் வாழ்ந்தவளுக்கு அவனைப் பற்றி தெரியாதா என்ன?” மகி பக்கத்துல எதாவது டீக்கடையில் டீ குடிச்சிட்டு போலாம் டா..” என்றாள்.
 

 

  பட்டென்று சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியவன். கண்ணாடி வழியாக ,அவளைப் பார்த்தான்.. அவளோ, பார்வையை வேறு புறம்  திருப்பிக் கொள்ள. உதடு விரிய லேசாக சிரித்தவன். அருகில் உள்ள டீக்கடையில் வண்டியை நிறுத்தினான்.
 

 

அப்பொழுதும் அவன் யோசனையில் இருக்க.. தன் மகளின் கையை பிடித்து,அவனைக் கைக் காட்டினாள்.
 

 

” அப்பா என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க ?” என்றாள்.
 

 

“நம்ப நம்ம வீட்டுக்கு போயிட்டு அதுக்கப்புறம், இப்ப இருக்க வீட்டுக்கு போகலாமா குட்டிமா ?” என்றவன் பேச்சு என்னவோ தன் மகளிடம் இருந்தாலும், பார்வை முழுவதும் சுதாவிடம் இருக்க.
 

 

ஒரு சில நொடி புருவம் முடிச்சிட அவனைப் பார்த்தாள்..’எதற்கு?’ என்று அவளுக்கும் தெரியாது. ஆனால், அவன் இவ்வளவு கூறிய பின்பும், அங்கு அழைத்து செல்கிறேன் என்று கூறுகிறான் என்றால் ,ஏதாவது இருக்கும் என்று யோசனையில் இருக்க..
 

 

 

 

“ப்ளீஸ்மா ! எனக்கு பாட்டி தாத்தாவெல்லாம் பாக்கணும். ரொம்ப நாள் ஆகுது இல்ல..” என்றாள் மிது..
 

 

” சரி போலாம் !”என்று தலையசைத்தவள். வேறு எதுவும் பேசவில்லை .
 

 

சரி என்று டீ குடித்துவிட்டு நால்வரும் இதற்கு முன்பு அவர்கள் வாழ்ந்த வீட்டை நோக்கி சென்றார்கள்.
 

 

தன் மகனின் வருகைக்காக  காத்திருந்த சித்ராவோ, ரோட்டையே பார்த்தபடி உட்கார்ந்து இருந்தார். அப்பொழுது குடும்பமாக நால்வரும் இறங்கி வருவதை பார்த்தவரின் கண்ணில் முதலில் பட்டது என்னவோ சுதா மட்டும் தான்..
 

 

வேகமாக தன் புடவையை இழுத்து இடுப்பில் சொருகியவர் வெளியே வர ..
 

 

அப்போதுதான்,” பாட்டி!” என்று சந்தோஷ கூச்சலுடன் கீழே இறங்கி வேகமாக ஓடி வந்தாள் மிது. ஆனால், இவ்வளவு நேரம் தன் பேத்தியை கூட்டிக்கொண்டு வருமாறு கூறிய சித்ராவிற்கு பேத்தில் கண்ணில் படவில்லை.. சுதா மட்டுமே கண்ணில் பட ..
 

 

அவள் வீட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காகவே வேகமாக எழுந்தவர் .. “என்னடா இவளை அப்படியே வெட்டி விட்டுட்டு வர சொன்னா.. திரும்பவும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்க?”என்று வேகமாக சத்தமிட..
 

 

தான் வந்ததை பெரிதாக கருத்தில் கொள்ளாமல், தன் தாயையும் வீட்டிற்குள் வர வேண்டாம் என்று கூறும், அதுவும் இந்த அளவிற்கு சத்தம் போடும்  பாட்டியை பார்த்த, மிது பயந்து நடுங்கி இரண்டடி  பின்னால் நகர்ந்து அதிர்ச்சியுடன் விழித்தபடி நின்றாள்..

 

  “அம்மா!” என்று வேகமாக கத்தியபடி வந்தவனின் ,காலை ஒட்டி நின்றுக் கொண்டாள் மிது..

 

மகளை  காலோடு ஒட்டி அணைத்து  நின்றான்..
 

 

அதன் பிறகே புத்தியில் உரைத்தது சித்ராவிற்கு பேத்தி இருப்பது..
 

 

“மிது குட்டிமா!” என்று பாசமாக அடுத்த நிமிடம் அழைக்க..
 

 

அவளோ, தன் தந்தையின் காலை இன்னும் இறுக்கிப் பிடித்தாள்.
 

 

” இப்படி பண்ணாதீங்கன்னு உங்களுக்கு பல டைம் சொல்லிட்டேன். இப்போ எப்படி பாப்பா பயந்துட்டா பாருங்க உங்களால..” என்று தாயை குற்றம் சாட்டியவன்..
 

 

” நீ வா !”என்று தன் மனைவியின் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்து செல்ல முயல..
 

 

இவ்வளவு நாள் குற்ற உணர்வில் தவித்துக் கொண்டிருந்தவன். அவளை பெரிதாக நேருக்கு நேராக கூட பார்க்காமல் இருந்தான். இப்பொழுது அவளுக்கு நான் தான் அனைத்தும் என்பதை சுற்றியுள்ளவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று எண்ணியே அவளின் கையை இறுகப் பிடித்தான்.
 

 

அவள் எதுவும் கூறவில்லை. ஒரு நொடி அதிர்ந்தாலும், அடுத்த கணம் அமைதியாக அவன் கைக்குள் தன் கையை கொடுத்த படி இருக்க..
 

 

” டேய் என்னடா நான் இங்க கத்திக்கிட்டு இருக்கேன். நீ என்னவோ அவ கைய புடிக்கிற?”
 

 

“ஏன்? அவ கைய புடிச்சா என்ன? அவ என் பொண்டாட்டி. அவ கையை நான் பிடிக்காம வேற யார் பிடிப்பா ?”
 

 

“டேய் அவ பண்ணதெல்லாம் மறந்திருச்சா? என்ன பண்ணானு”
 

 

” முதல்ல ரோட்ல நின்னு கத்துறதை விட்டுட்டு வீட்டுக்குள்ள விடுங்க. “என்றவன் தன் தந்தையை பார்க்க.
 

 

” சித்ரா வீட்டுக்குள்ள வா” என்றார் சத்தமாக  நேசன்..
 

 

“அண்ணா என்ன ண்ணா? இது..”என்று உதயாவும் கேட்க.
 

 

எதுவும் பேசாமல் தன் மனைவியோடு ஹாலுக்கு வந்து நின்றவன்.” இப்போ என்ன உங்களுக்கு தெரியணும் இப்ப சொல்லுங்க ?”என்றான் அவள் கையை விட்டுவிட்டு, தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி ..

அப்பா நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ..என்றவன் தன் குழந்தைகள் இருவரையும் ரூமுக்கு போக சொன்னான்.

அவர்களும் எதுவும் பேசாமல் ரூமுக்குள் நுழைந்து கொண்டார்கள் .
 

 

சுதா எதுவும் பேசவில்லை. பார்வையாளராக மட்டுமே நின்றாள்.
 

 

” இவள அங்கவே வெட்டி விட்டுட்டு புள்ளையை மட்டும் கூட்டிட்டு வர சொன்னா. இவளையும் கூட்டிட்டு வந்து இருக்க?”  என்றார் மீண்டும்..
 

 

” என் பொண்டாட்டியை எங்க விட்டுட்டு வரணும்னு தெரிஞ்சுக்கலாமா?”
 

 

“டேய் என்னடா இப்படி பேசுற?” 
 

 

“திரும்பத் திரும்ப அதையே ஆரம்பிக்காதீங்க. உங்களுக்கு ஆரம்பத்தில் இருந்து இவ வேலைக்கு போறது புடிக்கலைன்றதால்தான் நீங்க ஒவ்வொரு நாளும் என்ன சொன்னாலும் அமைதியா போனேன். முக்கியமான விஷயம் நீங்க பேசும்போதெல்லாம் அமைதியா இருந்ததுக்கு காரணம் நீங்க சொல்றதுக்கெல்லாம் தலை ஆட்டிட்டுன்னு அர்த்தம் கிடையாது.
 

 

உங்கள என் பொண்டாட்டியே ஆனாலும், அவ முன்னாடி விட்டுக்கொடுத்துற கூடாதுன்றதுக்காக மட்டும்தான். ஆனா ,உங்களை யோசிச்ச அளவுக்கு அவளை யோசிக்க மறந்துட்டேன்.. அவயிடத்தில இருந்து பார்க்க மறந்துட்டேன்.அவளை  உங்க முன்னாடியே விட்டுக் கொடுத்துட்டேன் அன்னைக்கு.
 

அன்னைக்கு நீங்க பேசுனா பேச்சு கொஞ்ச நஞ்சம் இல்ல”
 

“ஆதி.அம்மா

இப்பவும் சொல்றேன் அவ வேலைக்கு போறதுல எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனா, அவ தொடர்ந்து கொஞ்ச நாளாவே ஒருத்தன் கூட வந்துட்டு இருந்தா டா மறந்துட்டியா? “
 

 

“மா.. நீங்க அதிகமா பேசிட்டு இருக்கீங்க. உங்க பொண்ணு வேலைக்கு போய், இப்படித்தான் தினமும் ஒருதன் கூட வந்தா பேசுவீங்களோ?” என்றான் சத்தமாக..
 

 

  உதயாவோ ,”உன் குடும்ப பிரச்சனையில என்னை ஏன் ண்ணா இழுத்து  பேசுற?” என்றாள் வேகமாக..
 

 

“பாருடா இப்பதான் இது என் குடும்ப பிரச்சனைனு தெரியுதோ ?இதுக்கு முன்னாடி தினமும் வந்து பிரச்சனையை மூட்டிவிட்டுப் போகும் போது தெரியலையோ?  என் குடும்ப பிரச்சனையில நீ ஏன் தலையிடுற ? உன்ன தான் கட்டி கொடுத்தாச்சுல, பொறந்த வீட்டுக்கு வந்தமா போனமானு இரு..
 

 

ஒன்னும் இல்லாத விஷயத்தை ஊதி பெருசாக்கி ,அம்மாவையும் தப்பு தப்பா யோசிக்க வைக்காத! அவ்வளவு தான் சொல்லுவேன்!” என்று தங்கையை பார்த்து மிரட்டியவன் ..
 

 

“உங்க எல்லாருக்கும் இன்னைக்கு சொல்றது தான் .அன்னைக்கு நான் அமைதியா இருந்ததுக்கு காரணம், அத்தையும் வந்து இருந்தாங்க.. அவங்க முன்னாடி என்ன பெத்தவங்களை விட்டுக் கொடுத்துடக்கூடாதுனு ..ஆனா, அன்னைக்கு நான் பண்ண பெரிய தப்பே.. அவங்க முன்னாடியே அவங்க பொண்ண விட்டுக்கொடுத்துட்டு நின்னது தான்..
 

 

அது எந்த இடமா இருந்தாலும்,நான் என் பொண்டாட்டியை  விட்டு கொடுத்து இருக்க கூடாது.. அன்னைக்கு நான் பேசாம இருந்ததால நீங்க சொல்ற எல்லாமே சரின்னு சொல்ற போல ஆகிடுச்சு.. எனக்கு தெரியும் என் பொண்டாட்டி எப்படிப்பட்டவன்னு அதை அடுத்தவங்க சொல்லி நான் தெரிஞ்சுக்கணும்னு அவசியம் கிடையாது. 
 

 

அன்னைக்கு நான் அமைதியா இருந்ததுக்கு தான் நான் இவ்ளோ நாள் தண்டனை அனுபவிச்சிட்டேன். என் கூட சேர்ந்து என் புள்ளைங்களும் அவதிப்பட்டுட்டாங்க. இனியும் அவங்களுக்கு பிரிவையும் , வலியையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல நினைக்கிறேன். 
 

 

எந்த இடத்தில பேசணுமோ அங்க பேசிதான் ஆகணும்றதையும்  உணர்ந்துட்டேன். உங்களுக்காக பார்த்து பார்த்து என் பொண்டாட்டியை விட்டுக் கொடுத்துட்டேன்னு நல்லாவே புரிஞ்சிடுச்சு. எந்த அளவுக்கு நீங்க முக்கியமோ ?அதே அளவுக்கு அவளும் எனக்கு முக்கியம்தான். அதுக்காக உங்களை விட்டுடுவேன்னு அர்த்தம் கிடையாது.”என்றவன்

“அப்பா ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..”என்று நேசன் புறம் திரும்ப,
 

“என்னடா  ஆதி!” என்றார் நேசன்.
 

 

” அப்பா நான் ஒரு வீடு பார்த்துட்டேன்..”
 

 

“எதுக்கு டா”  என்றார் வேகமாக சித்ரா.
 

 

” எதுக்குனா என் பொண்டாட்டி பிள்ளைகளோட என் வாழ்க்கையை வாழ தான்..”
 

 

“அப்ப எங்களை தனியா விட்டுட்டு போக போறியா?”என்றார் திகைப்பாக சித்ரா. 
 

 

தன் மகன் இவ்வளவு நேரம் தன்னை எதிர்த்து பேசியதே  அவரால் நம்ப முடியாமல் இருக்க .இப்பொழுது மேலும் தன்னுடன் இல்லாமல் தங்களை தனியாக விட்டு விட்டு செல்ல போகிறேன் என்றவுடன் இன்னும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தார்.
 

 

“அண்ணா!

என்ன  ண்ணா இப்படி பேசுற ?”
 

 

“இப்பதான் சொன்னேன்..”
 

 

” இல்ல ண்ணா..அ..அது “
 

 

“இப்ப  நீ அமைதியா இல்லனா. நான்  மாப்பிள்ளைக்கு போன் போட  வேண்டி வரும். எப்படி வசதி “என்றவுடன் அவள் அமைதியாக..
 

 

” ஆதி என்ன பேசிட்டு இருக்க.?டா .. ஏன் இப்படி எல்லாம் பேசுற?” என்றார் அதிர்ச்சி விலகாமல் சித்ரா.
 

 

தன்னை மிரட்ட இப்படி பேசுகிறானோ ?என்று உள்ளுக்குள் நினைத்து,
 

 

” என்ன இப்படி பேசுறனா ? வேற எப்படி பேசணும்னு சொல்றீங்க? இப்பவே சொல்றேன். உங்கள விட்டுட்டு போகணும்னு நான் நினைச்சது கிடையாது.. இப்போ வர அப்படி ஒரு எண்ணம் எனக்கு இருந்ததே கிடையாது. ஆன,நான் என் பொண்டாட்டியை , என்ன நம்பி வந்தவளை எந்த இடத்திலும்  விட்டுக் கொடுத்து இருக்கக் கூடாது..  ஆனா, நீங்க ஒவ்வொரு நாளும் அவள பேசின பேச்சு கொஞ்ச நஞ்சம் கிடையாது. அதெல்லாம் கூட அவ பொறுத்து இருந்துட்டா.. கடைசியா நீங்க அவளோட கேரக்டரையே தப்பா பேசுறீங்க. “
 

வேலைக்கு போயிட்டு லேட்டா வந்தா. ஒரு மாமியாரா நான் அவள கேள்வி கேட்க கூடாதா?”

 

“அன்னைக்கு நீங்க கேட்டதுக்கு பேர் கேள்வியா?”
 

 

“டேய் அவ தினமும் ஒருத்தன் கூட வந்துட்டு இருந்தா அந்த ஒரு வாரமும், உனக்கு அது நினைவுல இருக்கா இல்லையா?”
 

 

“ஆமா வந்தா அதுக்கு என்ன இப்போ?”

 

“என்னடா நீ இப்படி பேசுற?”

 

“வேற எப்படி பேசணும்னு சொல்றீங்க சொல்லுங்க. அதையும் கேட்கலாம்..  அவ ஆபீஸ்ல வொர்க் பண்றவங்களோட வர்றது எனக்கும் தெரியும். அந்த ஒரு வாரம் அவளுக்கு ரொம்ப இம்போர்ட்டான ஒர்க் போய்ட்டு இருந்துச்சு .ப்ராஜெக்ட் போயிட்டு இருந்துச்சு.. அவ வரதுக்கு லேட்டாகும்னு எனக்கு தெரியும்.
 

 

என்னோட ஆபீஸ் ஒரு பக்கம் இருக்கு, அவளோட ஆபிஸ் ஒரு பக்கம் இருக்கு ,நான் போயிட்டு அவளை கூட்டிட்டு வருதுன்றது நடக்காத காரியம். அந்த ஒரே காரணத்துக்காக மட்டும்தான், அலைச்சலும்  வேணான்றதால இங்க நம்ம வீட்டு பக்கமே இருக்க அவ கூட  வொர்க் பண்ற பையன் கூட வந்துட்டு இருந்தா.
 

 

இதுக்கு முன்னாடி அவ இதுபோல வந்திருக்களா? நீங்க பாத்திருக்கீங்களா? அந்த ஒரு வாரமா மட்டும் தான வந்தா? அப்ப கூட அவ அந்த பையன் கூட வர யோசிச்சா, பஸ்ல வர தான் முடிவு எடுத்தா ,அவ வர்ற நேரத்துக்கு பஸ்ஸும் கிடையாது. மிஸ் பண்ணிடா. அதனால மட்டுமே அந்த பையன் கூட வந்தா. அவங்க ஆபீஸ்ல ஒர்க் பண்ற பையன் கூட ஹெல்ப் கேட்டு வந்தாளே தவிர, வேற எந்த தப்பான எண்ணமும் கிடையாது.
 

 

இதை உங்களுக்கு ,நீங்க ஃபர்ஸ்ட் நாள் என்கிட்ட பேசும் போதே சொன்னேன். ஆனா, உங்க மக உங்களை என்ன சொல்லி ஏத்திவிட்டானு  தெரியல அதையே தொடர்ந்து நீங்க பேசிட்டு இருந்து இருக்கீங்க.. அன்னைக்கு வார்த்தையை அதிகமாவே விட்டுட்டீங்க மா..இதே மாதிரி ஒரு விஷயம் உங்க பொண்ணுக்கு நடந்து இருந்தா அப்பவும் அப்படித்தான் பேசி இருப்பீங்களா ?
 

 

ஒரு பொண்ணா தப்பா பேசுறீங்க அசிங்கமா இல்லமா ?இப்படித்தான் எந்த பொண்ணா இருந்தாலும் தரை குறைவா பேசுவீங்களா. ? அன்னைக்கு நான் பேசாம இருந்ததுக்கு காரணமும் கூட அத்தை வந்துட்டாங்களேன்னு.. இன்னொரு பக்கம் என் பொண்டாட்டிய என் முன்னாடியே என் அம்மா இப்படி எல்லாம் பேசுறாங்களேன்னு அதிர்ச்சியில் இருந்தேன் ..

ஆனா, அந்த இடத்தில் நான் பேசி இருந்திருக்கணும் ,பேசாம விட்டது என்னோட தப்பு.. அந்த தப்ப இப்போ எப்படி சரி பண்ணலாம்னு யோசிச்சிட்டு  இருக்கேன். அதுக்கான ஒரு வாய்ப்பு மட்டும் தான் இது. இப்பயும் என் வாழ்க்கையில புகுந்து விளையாடலாம்னு பார்க்காதீங்க என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..
 

 

உங்களுக்கு பையனா என்ன செய்யணுமோ அது எல்லாத்தையும் இனியும் செய்வேன். பணம், காசு மட்டும் சொல்லல.. உங்களுக்கு பையனா எல்லாத்தையும் செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கு. அதுல இருந்து கொஞ்சமும் விலக மாட்டேன்.

உங்கள தினமும் வந்து பார்த்துட்டு போறேன்..பசங்கள வாரத்துல ஒரு நாள் கூட்டிட்டு வரேன். அவ்வளவுதான் இப்போதைக்கு என்னால சொல்ல முடியும்..”
 

டேய் என் பேர பசங்கள பாக்காம எப்படிடா இருப்பேன்..”
 

 

விரக்தியாக சிரித்தவன்.. “நீங்க சொன்ன அந்த பேர புள்ளை உங்களை பார்க்க அவ்வளவு பாசமா ஓடி வந்துச்சு பாட்டின்னு…

 

ஆனா, அதுக்கு நீங்க என்ன பண்ணீங்க என்றத மறந்துறாதீங்க ..”

தன் பேரப்பிள்ளைகள் இருக்கும் ரூம் கதவை பாவமாக பார்த்தார் சித்ரா..
 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மௌனத்தால் உடைந்த காதல்
587 29 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page