மௌனத்தால் உடைந்த காதல் -6

மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிள்ளைகளை வரவேற்றது என்னவோ, அலங்கோலமாக இருந்த வீடு தான்.
 

 

இருவரும் வீட்டை பார்த்துவிட்டு தங்களது முகத்தை மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள்.
 

 

ஒரு சில நொடி அதை பார்த்தவர்கள். இதே அங்கு இருந்திருந்தால் பாட்டி அனைத்தையும் ஒதுங்க வைத்திருப்பார் .அம்மா காலையில் சீக்கிரம் எழுந்து வீட்டு வேலையும் பார்த்துவிட்டு, வேலைக்கும் செல்கிறார் என்பதை உணர்ந்த இருவரும் .. ஹால் ஷோபாவில்  தங்களது பையை வைத்தார்கள்.
 

 

“மிது நீ வீட்டை கிளீன் பண்ணு. நான் பாத்திரம் தேய்க்கிறேன் சரியா?” என்றான் மகி.
 

 

” சரி “என்று ஆளுக்கு ஒரு வேலையைப் பிரித்து கடகடவென்று அனைத்தையும் ஒதுங்க வைத்தனர். 
 

 

வேலைக்கும் சென்று விட்டு வந்து, அம்மா திரும்ப, இங்கு வந்தும் வேலை செய்ய வேண்டும் . அங்கு ஒன்றும் சும்மா உட்கார்ந்து இல்லை என்பதை உணர்ந்தவர்கள். பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள் என்று தன் கூற வேண்டும். 
 

 

இன்று காலை ஸ்கூலுக்கு கிளம்பும் பொழுது, அம்மாவுக்கு அப்பப்ப கூட மாட வேலை செய்யனும் சரியா , அம்மா ஏதாவது செய்ய சொன்னா செய்ய மாட்டேன்னு சொல்ல கூடாது என்று ஆதி கூறியிருந்தான்.
 

 

“அங்க பாட்டி இருந்தாங்க இல்லையா ? அம்மா வேலைக்கும் போயிட்டு இங்கே நமக்கும் வேலை செய்யணும் இல்லையா? அப்பாவும் என்னால முடிஞ்ச அளவுக்கு ஹெல்ப் பண்ணுவேன். நீங்களும் உங்களால முடிஞ்ச ஹெல்ப் பண்ணனும்னு” சொல்லியே தான் காலையில் சென்று இருந்தான்.
 

 

அதை எண்ணியவர்கள். அவன் இந்த அளவிற்கு எல்லாம் வேலை செய்ய சொல்லவில்லை. ஆனால், அம்மா சொல்லும் வேலையை செய்ய மாட்டேன் என்று கூறாமல் செய்ய சொல்ல.. 
 

 

குழந்தைகளோ ,தாய் ,தந்தையின் நிலையை உணர்ந்தவர்கள். தங்களால் முடிந்த உதவியை செய்ய முன்வந்து, மகி பாத்திரத்தை கழுவ, மிது பெட்ரூமில் அப்படியே போட்டு சென்ற பெட்ஷீட் அனைத்தையும் மடித்து வைத்து , தனக்கு தெரிந்த அளவிற்கு வீட்டை பெருக்கிவிட்டாள்.
 

 

அதன் பிறகு ,இருவரும் கிச்சனுக்கு வர ..இருவருக்கும் லேசாக பசிப்பது போல் இருந்தது. அங்கு ஸ்நாக்ஸ் இருந்தது. இருந்தாலும், ஏதாவது குடித்தால் பரவாயில்லை என்று தோன்ற. இதற்கு முன்பு அங்கிருக்கும் போதே பாட்டி உடன் சேர்ந்து பால் காய்ச்சி இருக்கிறார்கள்.அது ஞாபகத்தில் இருக்க,
 

 

இருவரும் சேர்ந்து ஃப்ரிட்ஜில் இருக்கும் பாலை எடுத்து, அடுப்பில் வைத்து, காய வைத்து  குடித்து கொண்டு இருக்க,
 

 

ஆட்டோ ஹாரன் சத்தம் கேட்டது. 
 

 

வெளியில் வந்து எட்டிப் பார்த்த இருவரும், “அங்கிள் ஒரு பைவ் மினிட்ஸ்.. ! ” என்றனர்..

 

“என்னப்பா ஃபர்ஸ்ட் நாள் லேட்டாயிடுச்சா?”  என்றார்..
 

 

இருவரும் ஆட்டோ டிரைவரிடம் என்ன சொல்வது என்று,” ஆமா நாங்க விளையாடிட்டு இருந்தோம்.. டைம் தெரியல சாரி!”என மன்னிப்பு வேண்டினர். 
 

 

“சரி சீக்கிரம் வாங்க! டியூஷனுக்கு நேரம் ஆகுது பாருங்க. நானும் அடுத்த சவாரி பார்க்கணும் இல்லையா?”
 

 

” சரி “என்றவர்கள் வேகமாக முகம், கை, கால் கழுவி வேறு உடைக்கு மாறியவர்கள்.
 

 

தாங்கள் அணிந்து இருந்த உடையை அங்கு உள்ள கூடையில் போட்டுவிட்டு கிளம்பி இருந்தனர். 
 

 

இரவு ஏழு மணி போல் வீட்டிற்கு வந்தாள் சுதா.
 

 

வீடு பூட்டி இருக்க,’ இன்னும் பசங்க வரலையா?’ என எண்ணினாள்.
 

 

‘ஆதிக்கு  அழைக்கலாமா ? வேணாமா? ‘ என யோசித்து  அவனுக்கு அழைப்பு  விடுக்க..

 

இரண்டு மூன்று ரிங்கில் எடுத்தவன்.. 
 

 

“சொல்லு சுதா!” என்க ..
 

 

” எங்க இருக்கீங்க ?” என்றாள் திணறலுடன்..
 

 

இங்கு வாய்க்குள் சிரித்துக் கொண்டவன். “நான் இப்பதான் வந்துட்டு இருக்கேன் . நீ வீட்டுக்கு வந்துட்டியா?”
 

 

“ஹம்!” என்றாள் வெளிவராத குரலில்,
 

 

” பசங்க!” என்றாள் .
 

 

“பசங்க டியூஷன் போயிருப்பாங்க அம்மு. சாவி  அங்க வச்சிருப்பாங்களே!”
 

 

” இ..இல்ல இன்னும் வரலையே அதான்..”
 

 

” பசங்களுக்கு எட்டு மணிக்கு தான் டியூஷன் முடியும். அவங்க ஆட்டோவில் வந்துருவாங்க, பயப்பட வேணாம். தெரிஞ்சவங்க தான், நான் உனக்கு அவங்க டியூஷன் மிஸ் நம்பர் அனுப்புறேன்.  இல்லனா பயமா இருந்துச்சுன்னா கால் பண்ணி பேசி பாரு அவங்க கிட்ட. ஏற்கனவே உன்னோட நம்பர் அவங்க கிட்ட நான் கொடுத்து இருக்கேன் . அப்புறம் நான்  அப்பா வீட்டுக்கு போயிட்டு அப்படியே வர கொஞ்சம் லேட் ஆகும்..”
 

 

“சரி” என்றவள் அமைதியாக இருக்க.
 

 

” வேற ஏதாவது வேணுமா? எதும் வாங்கிட்டு வரணுமா ?”என்க 
 

 

” இல்லை எதுவும் இல்லை..” என்றவள் பட்டென்று  வைத்துவிட்டாள்.
 

 

சிரித்துக்கொண்டே தலையை கோதியவன்.. தாய், தந்தை இருக்கும் வீட்டிற்கு வண்டியை விட்டான் ..
 

 

அவர்களை பார்ப்பதும் தன்னுடைய கடமை தானே! என்பதை மறக்கவில்லை. அவ்வளவு வேலைக்கு நடுவிலும், அதையும் செய்ய தான் செய்தான்.
 

 

இவ்வளவு நேரம் வந்த வேகத்தில் பசங்களை பற்றி கேட்க தான் தோன்றியது. வீட்டு கதவைத் திறக்கும் போதே..’ ஐயோ! வீட்டை எப்படி போட்டுட்டு போனேன் காலைல இப்போ அவங்க எல்லாம் வரதுக்குள்ள வேலையை முடிக்கணும்!’  என்று தலையில் தட்டிக்கொண்டு கதவைத் திறக்க.
 

 

வீடு அத்தனை சுத்தமாக இருந்தது. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை, சுற்றி முற்றி பார்த்தபடி இருந்தாள்.
 

 

பாத்திரம் கழுவி வைக்கப்பட்டிருந்தது, வீடு சுத்தம் செய்யப்பட்டு இருந்தது, பிள்ளைகளின் லன்ச் பேக் என   அனைத்தும் அங்கங்க நேர்த்தியாக இருக்க. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
 

 

யோசனை உடனே  நேரமாகுவதை உணர்ந்தவள் நேராக ரூமுக்கு சென்று, தன்னை சுத்த படுத்திக் கொண்டு ,வீட்டில் அணிய இலகுவான உடைக்கு மாறியவள். இரவு உணவு தயார் செய்ய ஆரம்பித்தாள் .
 

 

நேற்றும், காலையும் தோசை ஊற்றியதால்..சப்பாத்தி மாவு இருப்பதை பார்த்தவள். சப்பாத்தி சுட்டுக் கொள்ளலாம் ,அதற்குத் தேவையானவற்றையும் இருக்கிறதா ? என்று பார்த்து விட்டு,  பச்ச பட்டாணி  வேக வைத்து,  குருமா வைத்து, சப்பாத்தி சுட ஆரம்பித்தாள்.
 

 

அவள் சப்பாத்தி திரட்டி முடித்து தோசை கல்லை அடுப்பில் வைக்கும்  பொழுது தான் ஆதி வீட்டிற்குள் நுழைந்தான் ..
 

 

அவன் நேராக  கிச்சனுக்குள் நுழைய, அவனை திரும்பிப் பார்த்தவள்.. மேலிருந்து கீழ் வரை பார்த்து விட்டு “டீ வேணுமா ?”என்று சுவற்றிடம் பேசுவது போல் திரும்பி கொள்ள..
 

 

அவளை பின்பக்கம் இருந்து கட்டி அணைத்து, அவளது கழுத்து வளைவில் முகத்தை புதைத்தவன்.” இல்லடி இப்பதான் அம்மா போட்டு கொடுத்தாங்க குடிச்சிட்டு வரேன். உனக்கு வேணும்னா குடி, இல்லன்னா நான் போட்டு தரட்டா?” என்றான்..
 

 

” இல்ல வேணாம் .குடிச்சிட்டேன்..” என்றாள்.
 

 

பொய் சொல்க்கிறாளோ? என்று சுற்றி கண்களை  சுழல விட..
 

 

பாத்திரம் அங்கு சிங்கில் இருப்பதை பார்த்தான்.
 

 

குழந்தைகள் தங்கள் பால் குடித்ததையும் கழுவி வைத்துவிட்டு தான் சென்றிருந்தனர்.” வீட்டுக்கு நடுவுல வந்துட்டு போனீங்களா ?”என்றாள்.
 

 

“என்ன பார்த்து பேசுடி!”  என்றான்..
 

 

அப்பொழுதும் அவளிடம் சிறிதும் மாற்றம் இல்லாமல் இருக்க, தான் அவளை பின்பக்கம் இருந்து அணைத்து இருக்க ,அவள் அமைதியாக இருப்பதே தனக்கு இப்பொழுது போதுமானதாக இருக்க.. எதுவும் கூறாமல், ஒரு சில நொடி அவளது வாசத்தை உணர்ந்தவன் ..அப்படியே அதில் லயித்து இருந்தான்..ரொம்ப நாட்களுக்கு பிறகு  அவளின் வாசத்தை உணர்கிறானே!
 

 

” அப்பா!” என்று கத்திக் கொண்டே குழந்தைகள் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்..
 

 

ஆட்டோ சத்தத்தை உணரும் நிலையில் கூட இருவருமே இல்லை என்று தான் கூற வேண்டும்.
 

 

அவள் தோசைக்கல்லை அடுப்பில் வைத்திருக்கும் பொழுதே, அடுப்பை ஆப் செய்து விட்டான். எப்படியும் தான் கட்டியணைத்தவுடன் தன்னுடன் உருகி நின்று விடுவாள் என்பது அவன் அறியாததா? கோபத்தோடு விலகவும் மாட்டாள். தன்னை எண்ணி என்று அவனுக்கும் தெரியுமே!
 

 

அது மட்டும் இல்லாமல் தன் அணைப்பு இப்போது அவளுக்கும் தேவையானது தானே! என்பதை உணர்ந்து அமைதியாக இருந்தாள்.
 

 

குழந்தைகளின் குரலில் இருவரும் பதறி விலகி நின்றனர். “அப்பா நீயும் வந்துட்டியா ?”என்று குழந்தைகள் அவனிடம் கேட்க..
 

 

மகளை அவன் தூக்கிக்கொள்ள, மகனை கீழே குனிந்து கன்னத்தில் முத்தமிட்டு அவனது தலையை வருடி விட்டவள் இருவரையும் பார்த்து,  “ரெண்டு பேரும் என்ன வேலை பார்த்து வச்சிருக்கீங்க ?நீங்க பார்த்த வேலை தானே!” என்றாள் .
 

 

இருவரும் திருட்டு முழி முழிக்க..
 

 

“மா..!” என இருவரும் தடுமாற.
 

 

என்ன செய்தார்கள் என்று தெரியாத காரணத்தினால் ,ஏதோ தவறு செய்து விட்டார்களோ ?என்று எண்ணியவன் .”இப்பதான் பசங்களே வராங்க. பசங்க கிட்ட எதுக்கு சத்தம் போடுற சுதா. நீ சப்பாத்தி சுடு. பசங்களுக்கு பசிக்கும் இல்லை” என்றவன் குழந்தைகளை நேக்காக அங்கிருந்து நகர்த்திக் கொண்டு சென்றான் .
 

 

கணவனை முறைத்தவள் ,”என்ன செஞ்சாங்கன்னு கூட கேக்கல. அதுக்குள்ள புள்ளைங்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டு, கூட்டிட்டு போறத பாத்தியா ? இவரு இருக்க வரைக்கும் இதுங்க அடங்காதுங்க, செல்லம் கொடுத்து கெடுக்க வேண்டியது!” என்று  வாய் விட்டே முனகினாள்.
 

 

அதை காதில் வாங்க தான் செய்தான் .இருந்தாலும், கண்டுகொள்ளாமல் குழந்தைகள் படித்து விட்டார்களா? என்பதை ஒரு முறை பார்த்தவன்.” இருங்கடா இப்பதான் அப்பா வந்தேன்  ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்!”என தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வர …
 

 

சப்பாத்தி ஹாலில் எடுத்து வைக்கப்பட்டிருந்தது ..”அம்மா சப்பாத்தி பட்டாணி குருமா!” என்று இருவரும் குதுகலிக்க .
 

 

“உங்களுக்கு பிடிக்கும் இல்ல!”என்றாள்.
 

 

“ஹம்!” என்று தலையசைத்து ருசித்து ரசித்து சாப்பிட்டனர்.
 

 

அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். இருக்கும் அலைச்சலில் இப்பொழுது சப்பாத்தி செய்ய வேண்டுமா ?என்ற எண்ணம் அவனுக்கு ..
 

 

அவனின் பார்வையை உணர்ந்தவள். மீண்டும் பிள்ளைகளிடம்,” எதுக்கு ரெண்டு பேரும் இந்த வேலை பார்த்தீங்க? உங்களை நான் பார்க்க சொன்னேனா ? “என்றாள்.
 

 

இதையே திரும்பவும் கேட்கிறாள் என்றால் பிள்ளைகள் பெரிதாக ஏதாவது செய்திருப்பார்கள் என்பதை உணர்ந்தவன்.
 

 

” என்னடா பண்ணீங்க ?”என்று இருவரையும் பார்த்து  கேட்க.
 

 

அவர்கள் அப்பொழுதும் பேந்த பேந்த முழித்தபடி இருக்க.
 

 

” நான் டைம் ஆயிடுச்சுன்னு அப்படியே வீட்ட போட்டது போட்டபடி போட்டு போயிட்டேன்.வீடு ஃபுல்லா கிளீன் பண்ணி ,பாத்திரம் கிளீன் பண்ணி வச்சிருக்காங்க ரெண்டு பேரும் ..” என்றவுடன்,
 

 

கண்களை அகல விரித்தான்.

 

” உண்மையாவா?” என்று ,
 

 

இருவரும் லேசாக சிரிக்க..
 

 

” குட்டிமா! இவ்வளவு வேலை செய்ய சொல்லலடா சின்ன பசங்க டா  நீங்க..”என்க.
 

 

“நாங்களும் வேலை செய்யனும் . ஒரு சில விஷயம் கத்துக்கணும் நீங்க தானே சொல்லிக் கொடுத்திருக்கீங்க. பாட்டியும் தாத்தாவும் கூட ஒரு சில வேலைகள் செய்ய சொல்லுவாங்க”
 

 

” எது நீங்க அங்க இருக்கும்போது இந்த வேலை செய்வீங்களா ?” என்று பதறினான். அதையும் தான் அறியவில்லையோ ? என்று ,
 

 

உடனே, தன் கணவனை அவள் முறைக்க.
 

 

அவனும் பிள்ளைகளை பார்ப்பதில் மும்மரமாக இருந்ததால் இவளை கவனிக்கவில்லை..
 

 

” அங்க பாட்டி இந்த வேலையெல்லாம் செய்ய சொன்னது இல்ல பா. டீ குடிச்ச கிளாஸ், சாப்பிட்ட தட்டு எல்லாம் கழுவுற இடதுல போட சொல்லுவாங்க அவ்வளவுதான்!” என்றனர் .
 

 

அவனோ,நெஞ்சில் கை வைத்து பெருமூச்சு விட்டபடி,இப்போது தான் தன்னவளை பார்த்தான்..அவளோ,இன்னும் இவனை கண்களால் எரிப்பது போல் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page