ஆதி தன்னவளைப் பார்க்க.
அவளோ ,தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்தவன். ‘இப்போ எதுக்கு முறைச்சிட்டு இருக்கான்னு தெரியலையே?’ என்று எண்ணியபடி , நேரம் ஆகுவதை உணர்ந்து பிள்ளைகளை தூங்க வைக்க ரூமுக்கு அழைத்துச் சென்றான்.
ரூமுக்குள் நுழைந்த சுதா,” டேய் ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணிட்டீங்களா?” என்று கேட்க.
” முடிச்சிட்டோம் மா” என்று கூற,
“சரி காட்டுங்க” என்று ஒரு முறை அனைத்தையும் சரிபார்த்தவர்கள். படித்து விட்டதாக கூறியதையும், சொல்ல சொல்லி கேட்க ஆரம்பித்தாள்..
” நான் பாக்குற சுதா” என்றான்.
” சரி “என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கிச்சனுக்குள் நுழைந்தாள்.
இவன் குழந்தைகளிடம் வீட்டுப்பாடம் கேட்டுவிட்டு, அவர்களை உறங்க வைத்தான்.
இங்கு கிச்சனில் உருட்டும் சத்தம் கேட்டு வந்தவன், அவள் பாத்திரம் கழுவி கொண்டு இருக்கவும், “இதை காலையில பார்த்துக்கலாம் இல்ல”என்றான்.
அவள் அமைதியாக இருக்க .
“உன் கிட்ட தாண்டி பேசுறேன்!”
“காலைல நேரம் இருக்காது”என்றவள் வேறு எதுவும் பேசாமல் இருக்க.
” பார்த்துக்கலாம் நீ வந்து தூங்கு இப்போ”
“இல்லை” என்று அனைத்தையும் கழுவி வைத்துவிட்டு ஹாலுக்கு வர..
அவளது கைகளை பிடித்துக் கொண்டவன்,” ப்ளீஸ் அம்மு! பேசாம மட்டும் இருக்காத டி முடியல.. “என்றான் உருக்கமாக,
அவனை நேருக்கு நேராக பார்த்து மார்பின் குறுக்கே கைகளை கட்டியவள், ” இனி பெரியவங்க விஷயத்தை குழந்தைங்க கிட்ட கொண்டு போறத நிறுத்திக்கோங்க. இதுவே ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்டா இருக்கட்டும்.
பெரியவங்களுக்குள்ள ஆயிரம் சண்டை , சச்சரவு ,மனஸ்தாபம் இருக்கட்டும். அதை குழந்தைங்க முன்னாடி காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. இப்பவும் சொல்றேன், அவங்க மனசுல ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு இடம் இருக்கு. அதை நாம என்னைக்கும் கீழே இறக்கி காட்டுற வேலை இருக்கக்கூடாது. நம்ம கிட்ட இருக்குற மாதிரி புள்ளைங்க கிட்ட எல்லாரும் இருப்பாங்கன்னு அவசியம் கிடையாது, இப்போ சொல்றதுதான்.இனி இப்படி பசங்க முன்னாடி பேசாதீங்க” என்றவள் நகரப் போக,
அவளை வேகமாக இழுத்து தன்னுள் புதைத்துக் கொண்டான்.
” சரிடி ஓகே! நான் தான் ஏதோ ஒரு வேகத்துல கேட்டுட்டேன் தப்பு தான். இனி பசங்க கிட்ட அப்படி கேட்கல, பேசல.. “என்றவன் நிறுத்தி ,
” அம்மு!” என்றான் காதலாக அவளை இன்னும் தன்னுடன் இறுக்கிக் கொண்டு,
ஒரு சில வினாடியே ஆனாலும், இருவரும் அப்படியே நின்றனர்..
அதன் பிறகு, அவள் நெளிய தொடங்க ..
“எதுவும் பண்ணலடி. உன் விருப்பம் இல்லாம உன்கிட்ட நெருங்க மாட்டேன். ஆனா, அதுக்காக இந்த ஹக் கூட இல்லாம பண்ணிடாத, உன்னோட சுவாசத்தை உணரமா இருந்தா மூச்சு முட்டியே செத்துருவேன்டி! நான் வேற எதுவும் கேக்கலடி
” என்றான் உள்ளுக்குள் ஏற்பட்ட வலியுடன்,
அவனை முறைத்து விட்டு, எதுவும் பேசாமல் ரூமுக்குள் நுழைந்து கட்டிலின் அந்த பக்கம் சென்று படுத்து விட்டாள்.
இவனும் ஒரு சில நொடி நின்று அவளை பார்த்து விட்டு, அனைத்து கதவுகளும் அடைத்திருக்கிறதா ?என்று ஒரு முறை பார்த்துவிட்டு, இந்த பக்கம் வந்து படுத்தான்.
அவளது நினைவுகள் பின்னோக்கி சென்றது.. ‘வேண்டாம் என்று நினைக்க கூடாது என்று நினைத்தாலும், நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவளை தூங்க விடாத இரவாக அல்லவா? தினமும் செல்கிறது.? அன்றைய ஒரு நாள் இரவு பொழுது என்ன வார்த்தை பேசிவிட்டார்கள் ,கேட்க கூடாத வார்த்தை அல்லவா? தான் வருடாக்கணக்காக வாழ்ந்த வாழ்க்கைக்கு இதுதான் தனக்கு கிடைத்த பலனா ?என்று தான் அவளுக்கு தோன்றியது.
அவ்வார்த்தையை அவள் தன் மாமியாரிடம் இருந்து எதிர்பார்க்கவும் இல்லை .அதுவும் அதைக் கேட்டு தன் கணவன் மௌனமாக இருப்பான் என்று அவள் ஒரு துளியும் கனவில் கூட எண்ணி இருக்க மாட்டாள்.
தன்னை நன்றாகத் தான் பார்த்துக் கொள்கிறான். இருந்தாலும் ,தனக்காக நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல் அமைதியாக, மௌனமாக நின்றது..அவரின் மௌனம் என்னை நடைப்பிணமாக.. கொல்லாமல், கொல்லும் என்பதையும், இவ்வளவு பெரிய வலியை தனக்கு கொடுக்கும் என்பதை உணராமல் போய்விட்டார் அல்லவா? என்ற எண்ணம் இப்பொழுது வரை அவளை தூங்கவிடாமல் உள்ளுக்குள் அரித்துக்கொண்டே இருக்கிறது.
கண்களில் வழியும் நீரை கூட துடைக்க தோன்றாமல், அப்படியே அழுகையில் கரைந்தபடி இருக்க.
வேகமாக எழுந்து வந்து அவளது கைகள் பிடித்துக் கொண்டவன். “ப்ளீஸ் அம்மு! அதையே நினைச்சுட்டு இருக்காத. எப்படியாவது சீக்கிரம் சரி பண்ணனும்னு நினைக்கிறேன். ஆனா, நீ அதையே யோசிக்காத டி. என்னோட அமைதி உன்னை எந்த அளவுக்கு பாதிச்சிருக்குன்னு புரியுது . அந்த இடத்தில் நான் அமைதியா இருந்து இருக்க கூடாது தான் …”
விரக்தியாக சிரித்தாள் ..
“என்னோட மௌனம் உன்னை தினமும் தூங்க விடாம நெருப்பில் இட்ட புழுவாக துடிக்க வைக்கிறது என்பதும் புரியுதுடி! சீக்கிரம் சரி பண்ண பாக்குற ..எனக்கு டைம் கொடுடி! “
அவள் எழுந்து உட்கார..
“அம்மு!”..
“போய் தூங்குங்க, எனக்கு காலையில வேலை இருக்கு, உங்க கிட்ட பேசுறது என்னோட வேலை இல்ல..”
” ப்ளீஸ் டி.. பிள்ளைகளுக்காக இங்க இருக்கேன்னு மட்டும் சொல்லிடாத அம்மு! இப்போ என் கூட வந்து இருக்கிறதுக்கும் பிள்ளைங்க தான் காரணம் சொல்லிடாதடி.. வெறுத்துடாத டி என்ன.. உண்மையா.. அப்புறம் உன்னோட ஆதி நடப்பிணமா தான் வாழ்வான்..” என்றவன் எதுவும் பேசாமல் எழுந்துக் கொள்ள..
கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்து நின்றது.. அவளுக்கு மட்டும் ஆசையா என்ன ?ஆனால், பிள்ளைகளுக்காக என்று சொல்லிவிட முடியாதே! அவன் மீது அளவு கடந்த பாசமும் , நேசமும் வைத்திருக்கிறாள்.. அவளது ஒவ்வொரு அணுவும் அவனது பெயரை கூறிக்கொண்டு இருக்க.. அப்படி இருக்கும் போது எப்படி பொய் கூறுவாள்?
ஆனால், அவளால் அன்றைய இரவை மறக்க முடியாதே! அதிலிருந்து வெளியே வர தானே அவளும் ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். ஆனால் அவளது ஒவ்வொரு முயற்சியும் தோல்வியை அல்லவா தழுவுகின்றன.. அவனுக்காகவும், தனக்காகவும் தங்களது வாழ்க்கைக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தானே இப்பொழுது அவனுக்கு ஒரு வாய்ப்பையும் கொடுத்து அவன் உடன் வந்து இருக்கிறாள்..
ரொம்ப நேரமாக படுக்கையில் யோசனையில் ஆழ்ந்து இருந்தாள். அதன் பிறகு, ஆதி தூங்கிவிட்டான் என்பதை உணர்ந்தவள், எழுந்து வந்து அவனுக்கு நேராக சுவற்றில் சாய்ந்து, ஒற்றை காலை சுவற்றில் ஊன்றியபடி அவனைத் தான் பார்த்துக் கொண்டு நின்றாள். ..
‘
என்னால அன்னைக்கு நடந்ததை மறக்க முடியல ஆதி! நீங்க எனக்காக பேசி இருக்கணும் இல்ல, இதுக்கு முன்னாடி நிறைய விஷயம் நடந்திருக்கு, அதெல்லாம் நான் கடந்து போய் இருக்கேன், அதுக்கெல்லாம் நீங்க ஏன் எனக்காக பேசலனு நான் கேட்க மாட்டேன். ஆனா அன்னைக்கு அவங்க பேசின வார்த்தை என்ன? அதை கேட்டும், நீங்க அமைதியா இருந்து இருக்கீங்க? அப்போ உங்க மனசுல அந்த மாதிரி ஒரு எண்ணம் இருந்துச்சா? உங்களோட அமைதி என்ன எந்த அளவுக்கு கொலையா கொல்லுதுன்னு உங்களுக்கு புரியலையா? பேச வேண்டிய இடத்துல எனக்காக நீங்க என் பக்கம் நிக்கணும்னு நினைக்கிற என்னோட எதிர்பார்ப்பு தப்பா?
அந்த எதிர்பார்ப்பு எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்க தானே செய்யும். எதிர்பார்த்து அந்த ஏமாற்றத்தோட வலியை என்னால் ஏத்துக்க முடியல, அந்த வலி என்னை தினமும் நிம்மதியா தூங்க விடாம உள்ளுக்குள்ள ரணமா வலிக்குது.. மொத்தமா என் தூக்கத்தை கெடுக்குது ஆதி ..இப்போ இந்த இடைப்பட்ட காலத்துல நிம்மதியான தூக்கமே இல்ல ஆதி..உங்க அம்மா பேசியதை விட உங்களோட மௌனம் என்ன வாட்டி வதைக்கிது .
இத்தனை வருஷம் உங்க கூட நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன ? அப்போ?’ என மனதிற்குள் அவனைப் பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டவள்.
இதை கேட்பதினால், இப்பொழுது இருக்கும் சிறு பேச்சுவார்த்தை கூட இல்லாமல், அவன் கூறியது போல் வெறுத்து விடுவோமோ ?என்று அவளுக்குள்ளையே பயம் ஏற்பட ..
அஞ்சி தன் கண்ணீரை துடைத்தபடி சென்று படுக்கையில் சரிந்தாள்.
இவ்வளவு நேரம் தூங்குவது போல் இருந்தான்.. உண்மையாவே தூக்கத்திற்கு தான் சென்று இருந்தான் அலைச்சல் வேறு.. ஆனால் ,ரொம்ப நேரமாக அவள் தன்னையே குறுகுறு வென பார்த்தபடி இருக்க..
தூக்கத்தில் கூட தன்னவளின் குறுகுறு பார்வையை உணர்ந்தவன். கண்களை திறக்காமல் இருந்தான்..
அவள் கொலுசொலி சத்தம் அங்கு இருந்து நகர்வதை உணர்த்த பிறகு,மெதுவாக கண்ணை திறந்தவன்.. கண்களில் நீர் வழிந்தது..
‘ சீக்கிரம் சரி பண்றேன் டி அம்மு!என்னோட தப்பு தான் ,வெறுக்க மட்டும் செஞ்சிடாத டி ..என்னுடைய பயமே இப்போ அதுவா தான் இருக்கு..’ என்று எண்ணியபடி அவனும் தூங்கி இருந்தான்.
மறுநாள் காலை எழுந்தவன். தன்னவள் அசதியில் உறங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து , வேகமாக சமையலறை சென்று காலை உணவு தயாரிக்க ஆரம்பித்தான்.
குக்கர் சத்தம் கேட்டு எழுந்தவள். கிச்சனுக்கு அடித்து பிடித்து வர..
ஆதி அங்கு நின்றிருந்தான்..” நேரம் ஆயிடுச்சா ?என்ன எழுப்பி இருக்கலாம் இல்ல.. சாரி நல்லா தூங்கிட்டேன் போல!” என்று வருந்தினாள்.
இதழ்களில் புன்னகை அரும்ப திரும்பியவன்,” நைட் தூங்க லேட் ஆகிடுச்சு தான ..அது மட்டுமில்லாம அசதியில தூங்கி இருப்ப. ஒன்னும் பிரச்சனை இல்ல.. எனக்கு காலைல தனியா மதியம் தனியா செய்யவும் வரல.. அதும் இல்லாம நேரமும் இல்ல. ரெண்டுத்துக்கும் சேர்த்து தக்காளி சாதம் குக்கரில் வச்சிருக்கேன். ஓகேவா! உருளைக்கிழங்கு ப்ரை பண்ணி இருக்கேன். பசங்க சாப்பிட்டுப்பாங்க .உனக்கு ஓகே வா.இல்ல வேற ஏதாச்சும் செய்யணுமா?”
“நான் செய்றேன் நீங்க வாங்க..இப்படி..”
” நேரமாகுது பாரு. நீ போயிட்டு கிளம்பு ,பசங்களை எழுப்பி விடு! இதோ முடிஞ்சிருச்சு.. அவ்வளவுதான்!”
நேரம் ஆகுவதை உணர்ந்து வேகமாக பசங்களை அவள் எழுப்பிவிட்டு, பிரஷ் செய்ய சொல்லி விட்டு, குளியல் அறைக்குள் புகுந்து கொள்ள.
பசங்களும் எழுந்து அவள் வெளியே வந்தவுடன் அவர்களும் குளித்து கிளம்பி வந்தனர்.
நால்வரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட, ஆட்டோ ஹாரன் சத்தம் கேட்டவுடன் பசங்களை ஆட்டோவில் ஏற்றிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
அவனுக்கும் நேரம் ஆகுது, அவள் அவனின் லன்ச் பேக் ,ஆபீஸ் பேக் எடுத்து நீட்ட..
அதை வாங்கிக் கொண்டவன்..வேகமாக அவளின் அருகில் நெருங்கி நின்று, நெற்றியில் இதழ் பதித்து “ஐ லவ் யூ டி அம்மு! சீக்கிரம் சரி பண்ற .” என்ற வார்த்தையுடனே அங்கிருந்து நகர..
“இதே வேலையா போச்சு! தினமும் ..இவருக்கு..”என்று அவள் வாய் விட்டு முனகியபடி திரும்ப…
அங்கு தான் கதவில் சாய்ந்தபடி நின்று, இவளை குறுகுறு பார்வையால் நோக்கினான்.
நாக்கை கடித்துக் கொண்டு, அவள் தன் தோள் பையை எடுத்துக் கொள்ள..
” பஸ் ஸ்டாப்ல டிரா பண்ணட்டா?” என்றான்.
அவளோ,அவனுக்கு நேரமாகுவதை உணர்ந்து அமைதியாக அவனைப் பார்க்க..
“என்னடி ?”என்றான். அருகில் வந்து அவள் இடுப்பில் கிள்ளியவாறே ,
துள்ளிக் குதித்து நகர்ந்தவள்..
” எனக்கு நேரம் இருக்கு நீங்க கிளம்பலாம் ..!”
“
சரிடி!” என்று வேகமாக அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அங்கிருந்து அவள் திட்டுவதற்குள் சிட்டாக பறந்து இருந்தான் ..
அவனது ஒவ்வொரு செயலும், தன் மனதில் இதம் பரவுவதை உணர்ந்தவள்.. எதுவும் பேசாமல் புன் சிரிப்புடன் தன் வேலைக்கு கிளம்பினாள்.
அன்று மாலையும் குழந்தைகள் வந்து தங்களால் முடிந்த வேலைகளை செய்தனர்.
என்னதான் அவள் சீக்கிரம் எழுந்து வேலை செய்தாலும், பாத்திரத்தை அப்படியே போடுவது போல் தான் இருந்தது..
அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு ,குழந்தைகள் சென்று இருந்தனர்.
கிட்டத்தட்ட ஒரு வாரம் இப்படியேதான் சென்றது.. எவ்வளவுதான் குழந்தைகளிடம் வேண்டாம் என்று கூறினாலும், இருவரும் கேட்பதாக இல்லை.
” நாங்க செய்றோம் ..எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல ..”என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டனர்..
அவனுமே,” செய்யட்டும் விடு சுதா!” என்றான்..
அவனை பொறுத்தவரை பிள்ளைகள் இப்போது இருந்து ஒரு சில வீட்டு வேலைகள் செய்யலாம் என்ற எண்ணம்…இப்போ இருந்தே பழகுவது நல்லது ..என்றே எண்ணினான்.
மேற்கொண்டு எதுவும் கூற முடியாமல் அமைதியாகிவிட்டாள். இப்படியே ஒரு வாரம் சென்றிருந்தது ..
அன்று சனி இரவு டியூஷன் சென்று பிள்ளைகள் வீட்டிற்கு வந்த பிறகு, சாப்பிட்டு நாளைக்கு லீவு என்பதால் பேசிக் கொண்டு இருந்தனர் ..
அப்போது குழந்தைகளின் அருகில் உட்கார்ந்தவன்…” குட்டி மா ! கண்ணா! உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு விஷயம் கேக்கணும்..” என்றான்.
இருவரும் அவனது முகத்தையே பார்க்க.
” நாளைக்கு தாத்தா பாட்டியை பார்க்க போலாமா ?உங்களுக்கு விருப்பமா?” என்றான்.
இருவரும் தன் தாயை ஒரு நிமிடம் பார்த்தனர். அவள் கண்மூடி திறந்தவுடன்,” போலாம் பா.. எங்களுக்கும் பாக்கணும் போல இருக்கு .” என்றனர்.
பிள்ளைகளின் விருப்பத்தையும் கேட்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தான். ஒருவேளை அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் தன் தாய், தந்தையை மட்டும் கருத்தில் கொண்டு அழைத்துக் கொண்டு செல்ல முடியாதே ஆகையால்,
” போயிட்டு அப்படியே ரிட்டன் அப்பா கூட வரீங்களா ? இல்ல, அங்க இருக்கீங்களா?”
சிறிதும் யோசிக்காமல், “எங்களுக்கு தாத்தா பாட்டி கூட இருக்கணும்..பார்த்து ரொம்ப நாள் ஆகுது, காலைல போயிட்டு ஈவினிங் வரலாம்பா. “
“அப்பா இருக்க மாட்ட.. அப்பாவுக்கு வேலை இருக்கு. நீங்க கிளம்பும் போது கால் பண்ணுங்க நான் ஈவினிங் வந்து உங்கள பிக் அப் பண்ணிக்கிறேன். ஓகேவா!”
” சரி!” என்று இருவரும் குதூகலித்தனர்.
தினமும் அவன் வீட்டிற்கு போய்விட்டு வரும்பொழுது ,சித்ரா என்னதான் தவறு செய்திருந்தாலும், பிள்ளைகள் மீது இப்பொழுது வரை பாசம் வைத்திருப்பவர் தான்..
பேரப்பிள்ளைகளுக்காக வருந்தி கொண்டு தான் இருக்கிறார். தினமும் ஆதி பார்க்க வரும்போது எல்லாம் ,”டேய் புள்ளைங்க என் கண்ணுக்குள்ளே நிக்குதுடா! எப்ப தாண்டா கூட்டிட்டு வருவ?” என்று கேட்க.
“அவங்க டியூஷன் போறாங்க மா..” என்றான்.
“என்ன?” என அதிர்ச்சி ஆனார்..
” சாயங்காலம் பிள்ளைங்க வர ஆட்டோவிலே இங்க கொண்டு வந்து விட சொல்லு டா.. நீ வரும்போது உன் கூடவே கூட்டிட்டு போவ.. அவங்களும் என் கூட கொஞ்ச நேரம் இருந்த மாதிரி இருக்கும். நான் இருக்க ஏன்டா புள்ளைங்கள யார்கிட்டயோ கொண்டு போய் விடுற? சாயங்காலம் நம்ம வீட்டுக்கு வந்துட்டா கூட , நீ போகும்போது கூட்டிட்டு போகலாமே
.! “என வருந்தினார் சித்ரா.
அதுக்கு நேசம் தான்,” சித்ரா இது எல்லாமே உன்னால தான். உன்னோட தவறால மட்டும் தான். உன்னோட முட்டாள் தனத்தால தான் மறந்துடாத! .. நம்ம கூடவே இருக்க வேண்டிய புள்ளைகளை பாக்குறதுக்கு கூட கெஞ்சிட்டு நிக்க வேண்டி இருக்கு”என்றார் வேதனையாக..
அடிபட்ட உணர்வு சித்ராவிற்கு எதுவும் பேச முடியவில்லை.மகனை பாவமாக பார்த்தார்..
