1.. மௌனத்தின் கடைசி எல்லை
சென்னையில் பிரம்மாண்டமான ‘சத்யா & நாதன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ அலுவலகத்தின் நாற்பதாவது மாடியில் நிலவிய அந்த நிசப்தம், ஒரு புயலுக்கு முந்தைய அமைதியைப் போல இருந்தது. சத்யா மற்றும் நாதன் இருவருமே தங்கள் பிசினஸ் சாம்ராஜ்யத்தை இணைக்க ஒரு பலமான அடித்தளத்தைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.
“என்ன நாதன் அமைதியா இருக்க.”கேட்டார் சத்யா..
“இல்ல சத்யா இந்த முடிவு சரியா வருமா.”சற்று தயக்கமாகவே கேட்டார் நாதன்.
“இது தான் ஒரே வழி நாதன்.. உனக்கு வேற சாய்ஸ் கிடையாது எனக்கு வேற சாய்ஸ் கிடையாது..”சொன்னார் சத்யா..
“ஓகே நாதன் இதுவரைக்கும் பிசினஸ் பார்ட்னரா இருந்தோம் இனி பேமிலி மெம்பர்ஸா இருக்கலாம் நானும் வீட்ல போய் பேசுறேன் நீயும் பேசு.”சொன்ன நாதன்..
அங்கு இருந்து கிளம்பினார் இவர் மட்டுமல்ல சத்யாவும் அங்கிருந்து கிளம்பி அவரவர் வீட்டிற்கு சென்றனர்..
சத்யா வீடு..
இது வீடு என்று சொல்வதை விட ஒரு பெரிய அரண்மனை என்று சொல்லலாம்.. மிக பிரம்மாண்டமான நுழைவாயில் அதன் முன்பு சத்யாவின் கார் வந்து நிற்க கார் வந்து நின்று அடுத்த நொடி அந்த பிரம்மாண்டமான நுழைவாயில் திறக்க சத்யாவின் கார் உள்ளே சென்றது உள்ளே நுழைந்த கார் வீட்டை அடைய சாரி அந்த அரண்மனையை அடைய ஐந்து நிமிடங்கள் பிடித்தது.. கார் வாசலை அடைந்ததும் ஒரு வேலையால் ஓடி வந்து கார் கதவை திற கம்பீரமாக காரில் இருந்து இறங்கிய சத்தியா வீட்டுக்குள் நுழைய இவரை பார்த்ததும் அனைத்து வேலையாட்களும் இவருக்கு வணக்கம் வைக்க அதை எதையும் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைந்த சத்யா..
“மீரா எங்க.”கேட்டார் சத்யா..
“சார் மேடம் ஷாப்பிங் போனாங்க.”ஒரு வேலையால்..
சரியாக அந்த சமயம் உள்ளே நுழைந்தா..
“ என்னங்க ஆபீஸ் டைம்ல ஆபீஸ்ல இல்லாம வீட்டுக்கு வந்து என்ன தேடிட்டு இருக்கீங்க.” கேட்டார் மீரா..
“ மித்ரன் கல்யாண பத்தி பேசணும்.” சொன்னார் சத்யா..
“ என்னங்க திடீர்னு இப்படி சொல்றீங்க .” புரியாமல் கேட்டார் மிரா..
“ வர முகூர்த்தத்தில் கல்யாணம் நானும் நாதனும் முடிவு பண்ணிட்டோம். நீ மித்ரன் கிட்ட பேசு ” சொன்னார் சத்யா..
“ என்னங்க திடீர்னு இப்படி சொல்றீங்க.” கேட்டார் மீரா..
“ மொத சொன்னத செய் மீரா மித்ரன் கிட்ட பேசு.” அழுத்தமாக சொன்னார் சத்யா..
“ அவன் இப்போ இங்க இல்ல எனக்கு நைட்டு தான் இங்க வரான்.” சொன்னார் மீரா..
“ நாளைக்கு காலைல ஆபீஸ் வந்து என்ன பாக்க சொல்லு.” சொல்லியவர் அங்க இருந்து அவர் அறைக்கு சென்று விட்டார் சத்யா.
அதே நேரம் இங்கு..
ஆபீஸ்ல இருந்து கிளம்பிய நாதன் வீடு வந்தார்.. சத்யாவின் அரண்மனை போல தான் இவருடையதும்.. இவர் கார் வந்து நின்றதும் அந்த அரண்மனையின் கேட் திறக்க கார் வாசலை நோக்கி சென்றது இவர் கார் உள்ளே நுழையவும் அனைத்து வேலையாட்களும் படபடப்பாக அவருக்கு மரியாதை செலுத்த காரில் இருந்த படியே சிறு தலையசைத்தவர் காரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைய..
“ என்னங்க முக்கியமான மீட்டிங் இருக்குன்னு போனீங்க ரெண்டு மணி நேரத்துல திரும்பி வந்துட்டீங்க.” கேட்டார் சுதா.
“ மீட்டிங்க விட ரொம்ப முக்கியமான விஷயம் அதனால தான் வீட்டுக்கு வந்துட்டேன்…” சொன்னார் நாதன்..
“ என்னங்க ஏதாவது பிரச்சனையா..” கேட்டார் சுதா..
“ பிரச்சனை எதுவுமே இல்ல சுதா நம்ப யூதிகா கிட்ட பேசணும்..” சொன்னார் நாதன்..
“ என்னங்க சொல்றீங்க யூதி கிட்டயா அவளுக்கு ஏதாவது பிரச்சனையா அதான் இருக்கிற மீட்டிங் எல்லாம் விட்டுட்டு வந்துட்டீங்களா.” டென்ஷன் ஆக கேட்டார் சுதா..
“ எந்தப் பிரச்சினையும் இல்லன்னு சொல்றேன்ல. யூதி, இப்ப எங்க இருக்க..” கேட்டார் நாதன்..
“ இப்ப தான் வந்தா டயர்டா இருக்குன்னு அவ ரூமுக்கு போய் இருக்கா.” சொன்னார் சுதா..
“ சரி நான் அவ கிட்ட பேசிக்கிறேன்.” சொல்லியவர்..
அங்கிருந்து தன் மகளின் அறைக்கு வந்தார் நாதன்.. அப்பொழுதுதான் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உறங்கலாம் என்று யூதி செல்ல..
“ யூதி உன் கிட்ட கொஞ்சம் பேசணும் டா இப்ப பேச முடியுமா இல்ல ரொம்ப டயர்டா இருக்கியா..” கேட்டார் நாதன்..
“ இல்லப்பா சொல்லுங்க என்ன பேசணும்.” கேட்டாள் யூதி என்கிற யூதிகா..
“ அது வந்து மா.” சற்று தயங்கினார் நாதன்..
“ என்னப்பா ஏதோ பேச வந்துட்டு இப்படி தயங்குறீங்க எதுக்கு என்கிட்ட உங்களுக்கு தயக்கம் என்ன சொல்லுங்க.” மென்மையாக கேட்டால் யூதிகா..
தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவளிடம் தான் சொல்ல வந்ததை சொல்லி முடித்தார் நாதன்.
“ என்னப்பா சொல்றீங்க உங்க பிசினஸுக்காகவா.” சற்று கோபமாக யூதிகா..
“ ஆமா யூதி..” சொன்னார் நாதன்..
“ சாரிப்பா இது என்னால முடியாது. “ சொன்னாள் யூதி..
“ எனக்கு இதை விட்டா வேற ஆப்ஷன் இல்ல அதனால தான் நான் ஓகே சொல்லிட்டேன் என் பேச்சை மீற மாட்டேன்னு நினைக்கிறேன்.” சொன்னார் நாதன்..
“ நீங்க ஓகே சொல்றதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம் இல்ல.. நான் உங்க பிசினஸ் அப்பா உங்க பொண்ணு அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா.” கேட்டால் கோபமாக யூதிகா..
“ உன்ன பத்தி யோசிக்காம இருப்பனா நீ என் பொண்ணுடா நீ நல்லா இருக்கணும்னு தான் நானும் யோசிப்பேன்.. நீ எந்த அளவுக்கு நல்லா இருக்கணும்னு நினைக்கணும் அதே அளவு என் பிசினஸும் எனக்கு வேணும் அதுக்காக தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். நீ என் பேச்சை மீற மாட்டேன் என்ற ஒரே நம்பிக்கையில எல்லாத்துக்கும் சரின்னு சொல்லிட்டு வந்து இருக்கேன் .” சொன்னார் நாதன்..
“ என்னதான் நீங்க எதுவும் கேட்கல.. அவங்கள கேட்டீங்களா. இதுல அவங்களுக்கு ஓகேவா ” என்றால் தன் மனதில் ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு யூதிகா..
“ சத்யா பேசறேன்னு சொல்லி இருக்கான்டா நாங்க பார்ட்னர் இருக்கிறதை விட சம்பந்தி ஆனா இன்னும் பல கொடு லாபங்கள் கிடைக்கும்.” சொன்னார் நாதன்..
“ உங்க பிசினஸ்காக உங்க பொண்ணையே விட்டுத்தர முடிவு பண்ணிட்டீங்க இல்ல.. சரிப்பா இந்தக் கல்யாணம் எனக்கு வேண்டாம்னு சொன்னா.” கேட்டால் யூதிகா..
“ என்னையும் உங்க அம்மாவையும் இதுக்கு அப்புறம் நீ பார்க்க மாட்ட டா.. எந்த அளவுக்கு எனக்கு என் குடும்ப முக்கியமோ அதை விட என் பிசினஸ் முக்கியம். என் பிசினஸ்க்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்.. இந்த கல்யாணம் நடக்கும் யூதிமா..” சற்று கோபமாக நாதன்..
“ சரிப்பா உங்களுக்கு உங்க பிசினஸ் தான் முக்கியம் உங்க பொண்ணு வாழ்க்கைய பத்தி கவலை இல்ல.. சொல்லிட்டீங்க பட் எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு இதுக்கு மித்ரன் ஓகே சொன்னா மட்டும் தான் இந்த கல்யாணம் நடக்கும் அதுவோ என் முன்னாடி சொல்லணும் இல்லனா இந்த கல்யாணம் எப்போதுமே நடக்காது இதுக்கப்புறம் என்கிட்ட நீங்க கல்யாண பேச்சை எடுக்கவே கூடாது.” சொன்னாள் யூதிகா.
“யூதி நான் இதுவரைக்கும் பொறுமையா பேசிட்டு இருக்கேன் உன்னோட அப்பாவா என்ன ஒரு பிசினஸ்மேனா பேச வைக்காத இந்த கல்யாணம் எப்படியா இருந்தாலும் நடக்கும்.” சொல்லியவர்..
அங்கிருந்து கீழே வந்தவர்.. அங்கு நிற்கும் தன் மனைவியை பார்த்து..
“ வர முகூர்த்தத்தில் மித்ரன் யூதிகா கல்யாணம்.” சொல்லியவர் அங்கு இருந்து சென்று விட்டார் நாதன்..
அதைக் கேட்ட சுதாக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை என்ன திடீர் என்று இப்படி சொல்லி விட்டு செல்கிறாரே என்று தான் பார்த்தார்..
சத்யாவும் நாதனும் கிட்டத்தட்ட 20 25 ஆண்டுகளாக பிசினஸ் பார்ட்னர் ஆக இருந்து வருகிறார்கள் இப்பொழுது அதையும் தாண்டி தனது பிசினஸை வலுவாக்க வேண்டும் அதேபோல் பார்ட்னரிலிருந்து தங்களின் உறவை மேம்படுத்த வேண்டும் என்று அதன் அடித்தளம் தான் மித்ரன் மற்றும் யூதிகாவின் திருமணம்.
மறுநாள் காலை..
சத்யா & நாதன் அலுவலகம்..
அந்த ஆபீஸ் மிக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க அதை இன்னும் பரபரப்பாக ஆக்குவது போல் உள்ளே நுழைந்தான் மித்ரன்.. அவனைப் பார்த்தவுடன் அனைவர் கண்ணிலும் ஆர்வம் மகிழ்ச்சி இவனை வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க மாட்டோமா என்று நினைத்துக் கொண்டிருக்க இன்று அவனின் காட்சியை கண்டதும் அனைவருக்கும் சொல்ல முடியாத ஆனந்தம்.. இதை எதையும் கண்டுகொள்ளாதவன் தனது அழுத்தமான காலடிகளுடன் சத்யாவின் அறைக்குள் நுழைந்தான் மித்ரன் அவரின் அனுமதி கூட பெறாமல்.. அறையின் கதவை யாரோ திறப்பது போல் இருக்க லேப்டாப்பில் இருந்து நிமிர்ந்து பார்த்தார் சத்யா அவர் முன்பு மிகவும் கோபத்துடன் நின்று இருந்தான் மித்ரன் ஆனால் அதை எதையும் கண்டு கொள்ளாமல்..
“ என்ன மித்ரன் உள்ள வரதுக்கு முன்னாடி பர்மிஷன் கேட்கணும்னு சென்ஸ் இல்ல இப்படித்தான் பர்மிஷன் இல்லாம உள்ள வருவியா.” கேட்டார் சத்யா..
“ உங்களோட ரூம்குள்ள பர்மிஷன் இல்லாம வந்ததற்கே உங்களுக்கு எவ்வளவு கோவம் வருதே அப்போ என்னோட லைஃப்ல என்னோட பர்மிசனே இல்லாம நீங்க டிசிஷன் எடுக்கும் போது எனக்கு எவ்வளவு கோபம் வரும்.” கேட்டான் மித்ரன்..
“ உன்னோட லைஃப்ல டிசிஷன் எடுக்க எனக்கு யாரு பர்மிஷன் கொடுக்கணும் நான் உன்னோட அப்பா எனக்கு எல்லாம் ரைட்ஸும் இருக்கு.” சொன்னார் சத்யா..
“ இங்க பாருங்க என்ன கேட்காம என்னோட கல்யாணத்துல முடிவெடுத்தது தப்பு நான் தான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவு பண்ணனுமே தவிர நீங்க கிடையாது.. எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் கிடையாது..” மிகுந்த கோபத்துடன் சொன்னான் மித்ரன்.
“ உன்னோட விருப்பத்தை நான் கேட்கல மித்ரன்.. என்னோட பைனல் டெசிஷன் உனக்கும் யூதிகாக்கும் கல்யாணம் வரும் முகூர்த்தத்தில் இதை யாராலும் மாற்ற முடியாது..” சொன்னார் சத்யா..
“ அத நான் மாத்தி காட்றேன்.” சொன்னான் மித்ரன்..
“ ஓகே மித்ரன் உன்னோட விருப்பம் இது ஆனா நீ தாராளமா பண்ணு ஆனா உங்க அம்மாவ இதுக்கப்புறம் நீ பார்க்க கூடாது அதுவும் எப்பவுமே பார்க்கக்கூடாது எப்பவும் நீ தனியா தான இருக்க அப்படியே இருந்துக்கோ.” சொன்னார் சத்யா..
“ என்ன எங்க அம்மாவ வச்சு என்ன பேட்மெயில் பண்றீங்களா இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் எனக்கு எப்போ தோணுதோ அப்போ நான் எங்க அம்மாவ பாப்பேன் அதை யாராலயும் தடுக்க முடியாது.” கோபமாக சொன்னான் மித்ரன்..
இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..
இப்படிக்கு உங்கள் அன்பு தோழி
