மௌன ராகம் 1

அத்தியாயம் 1: 

​கோயம்புத்தூர்மாநகரத்தின் விடியல் என்பது ஒரு ஓவியனின் தூரிகையில்இருந்து வழியும் வர்ணத்தைப் போன்றது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சிகரங்களைத் தழுவி வரும் மேகக் கூட்டங்கள், சிறுவாணி ஆற்றின் குளிர்ந்த காற்றைத் தன் மடியில் ஏந்திவந்து நகரத்தின் மீது தெளிக்கும். அந்தஅதிகாலை வேளையில், மாநகரமே ஒரு மந்தாரமான போர்வையைப்போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்க, கவிவர்ஷன் மட்டும் விழித்திருந்தான்.

​அவனதுஅறை ஒரு சிறிய நூலகத்தைப்போலக் காட்சியளித்தது. சுவரோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் பாரதியாரும், பாரதிதாசனும், புதுமைப்பித்தனும் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த அதிகாலைக் காற்று, மேசையின் மீது கிடந்த காகிதங்களைமெல்ல வருடிச் சென்றது. அந்தக் காகிதங்களில் சிதறிக் கிடந்த சொற்கள் அனைத்தும் கவிவர்ஷனின் ஆத்மாவின் பிரதிபலிப்புகள்.

​கவிவர்ஷன்எழுந்து ஜன்னல் ஓரம் நின்றான். தெருவோரவிளக்குகள் இன்னும் அணைக்கப்படவில்லை. பால் வண்டிகளின் சத்தமும், தூரத்தில் கேட்கும் கோயில் மணியோசையும் அந்த அதிகாலையின் அமைதியைக்கலைக்காமல் ஒரு இசையாக மாறின. கவிவர்ஷன் ஒரு நடுத்தர வர்க்கத்துக்குடும்பத்தின் தூண். தந்தை சசிதரன், தன் வாழ்நாள் முழுவதும்அரசு அலுவலகத்தின் கோப்புகளுக்கு இடையே நேர்மையை விதைத்தவர். தாய் மீனா, அன்பையேஉணவாகப் பரிமாறும் ஒரு தெய்வம். தம்பிஹர்ஷாந்த், கல்லூரியின் முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ஒரு துருதுருப்பான இளைஞன்.

​”கவி! இன்னும்என்ன பண்ணிட்டிருக்க? இன்னைக்கு உனக்கு முக்கியமான நாள் இல்லையா?” – சமையலறையில் இருந்து மீனாவின் குரல் கேட்டது.

​”விழிச்சுட்டேன்மா… இதோ கிளம்புறேன்,” என்றான் கவி.

​இன்றுகல்லூரியின் இருபத்தைந்தாவது ஆண்டு விழா. கவிவர்ஷன் அந்தக் கல்லூரியின் இறுதி ஆண்டு மென்பொறியியல் மாணவன். ஆனால், அவனது இதயம் கணினியை விட இசையிலும், சொற்களிலுமேஅதிகம் லயித்திருந்தது. இன்று மேடையில் அவன் வாசிக்கப் போகும்கவிதைக்காகக் கடந்த ஒரு வாரமாகத் தூக்கத்தைத்தொலைத்திருந்தான்.

​நேர்த்தியானஒரு நீல நிறச் சட்டையை அணிந்து, கண்ணாடி முன்னால் நின்று தலைமுடியைச் சரிசெய்தபோது, அவனுக்குள் ஒரு இனம் புரியாத நடுக்கம் இருந்தது. அது மேடைப் பயம்அல்ல ஏதோ ஒரு பெரியமாற்றம் இன்று தன் வாழ்க்கையில் நிகழப் போகிறது என்கிற ஒரு உள்ளுணர்வு அந்த உணர்வு அவனது நரம்புகளை மெல்ல மீட்டுக் கொண்டிருந்தது.

​”அண்ணோய்! வண்டிச் சாவி எங்க?” என ஹர்ஷாந்த் கத்திக்கொண்டே அறைக்குள் நுழைந்தான்.

​”டேய்… இப்போ எதுக்குக் கத்துற? சாவி அங்க டேபிள் மேல இருக்கு பாரு”. “இன்னைக்கு சீக்கிரம் போகனும் இன்னைக்கு பஸ்ட் இயர் எல்லாரும் வாராங்க,” என்றான் ஹர்ஷாந். ச”ரி  சரி வா போலாம்” என தம்பியை சமாதானம்செய்து இழைத்தச் சென்றான் கவிவர்ஷன்.

​கல்லூரி வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கும் தோரணங்கள், நுழைவாயிலில் பிரம்மாண்டமான வரவேற்பு வளைவு. ஆயிரக்கணக்கான மாணவர்கள், வண்ண வண்ண உடைகளில் பட்டாம்பூச்சிகளைப் போலப் பறந்து கொண்டிருந்தனர். கவிவர்ஷன் தன் பழைய பல்சர் பைக்கை பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு இறங்கிய போது, ஹர்ஸாந் நண்பர்களைக் கண்டதும் ஓடிவிட்டான். 

​”கவிஞரே! இன்னைக்கு மேடையில நீங்க வாசிக்கப்போற கவிதைக்கு ஒரு பெரிய ரசிகர்கூட்டம் காத்துட்டிருக்கு. முக்கியமா ஜூனியர் பொண்ணுங்க எல்லாம் ‘கவிவர்ஷன் எப்போ வருவார்னு கேட்டுட்டு இருக்காங்க,” என்று கிண்டல் செய்தவாறு அவனுடன் இனைந்து கொண்டான் அவனது  நண்பன் செல்வா.

​கவிவர்ஷன் மென்மையாகச் சிரித்தான். “செல்வாவின் முதுகில் தட்டியபடி நான் எழுதுறது என் மனசோட வெளிப்பாடு. அது யாருக்காவது பிடிச்சா சரி, அவ்வளவுதான்.”

​அதேசமயம், ஒரு வெள்ளை நிற மெர்சிடிஸ் பென்ஸ் கார் கல்லூரி வாசலில்வந்து நின்றது. அந்தக் காரின் வருகையே ஒட்டுமொத்தக் கல்லூரியின் கவனத்தையும் திசை திருப்பியது. காரிலிருந்து இறங்கியவள் தான் பிரக்யுதாரா. பெரும் தொழிலதிபர் ரூபனின் ஒரே மகள். அவளது வருகை ஒரு பேரழகியின் பிரவேசம் போல இருந்தது. நேர்த்தியான வெள்ளை நிறச் சுடிதாரில், காற்றில் அலைபாயும் கூந்தலைச் சரி செய்தபடி அவள் காரிலிருந்து இறங்கினாள்.

​அவளது தந்தை ரூபன், காரிலிருந்து இறங்காமல் அவளைக் கூர்மையாகப் பார்த்தார். “பிரக்யு, சாயந்திரம் அஞ்சு மணிக்கு கரெக்டா கார் இங்க நிக்கும். ப்ரண்ட்ஸ்சோட வெளியில போறது, சுத்துறது இதெல்லாம் எனக்குப் பிடிக்காதுன்னு தெரியும்ல?” என்று எச்சரித்தார்.

​பிரக்யுவின்முகம் ஒரு நிமிடம் வாடியது. அந்தத் தங்கக் கூண்டின் கதவுகள் அவளை எப்போதும் அழுத்திக் கொண்டிருந்தன. “தெரியும்பா… நான் வந்துடுவேன்,” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு உள்ளே நடந்தாள்.

​பிரக்யு நடந்து வந்த போது, அவளது கொலுசின் சத்தம் அந்தச் சிமெண்ட் தரையில் ஒரு தாளத்தை உருவாக்கியது. கவிவர்ஷன் தற்செயலாகத் திரும்பிய போது, அவள் அவனைக் கடந்து சென்றாள். அந்த ஒரு நொடி… கவிவர்ஷனின் இதயம் ஒரு துடிப்பைத் தவற விட்டது. மல்லிகைப் பூவின் மெல்லிய வாசம் காற்றில் மிதந்து வந்து அவனது சுவாசத்தைத் தீண்டியது. அவளது விழிகளில் ஒரு ஆழமான சோகம் ஒளிந்திருப்பதை அவனது கவிஞன் இதயம் சட்டெனக் கண்டுகொண்டது.

​’யார்இவள்? இவளது மௌனம் ஏன் இவ்வளவு கனமாக இருக்கிறது?’ என்று கவிவர்ஷன் வியந்தான்.

​நேரமாகவேஅரங்கத்தினுள் நுழைந்தான். அவ் அரங்கம் மாணவர்களால் நிரம்பியிருந்தது. மேடையில் விளக்குகள் பிரகாசித்தன. கல்லூரியின் முதல்வர் உரையைத் தொடர்ந்து, கவிதை வாசிப்பதற்கான அறிவிப்பு வந்தது.

​”அடுத்து… நம்கல்லூரியின் கவிஞன், கவிவர்ஷன்!”

​அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. கவிவர்ஷன் மேடைக்கு வந்து மைக் முன்னால் நின்றபோது, அவனது பார்வை தற்செயலாக ஐந்தாவது வரிசையில் அமர்ந்திருந்த பிரக்யுதாராவின் மேல் விழுந்தது. அவளும்அவனைப் பார்க்கத் தயாராக நிமிர்ந்து அமர்ந்தாள். கவிவர்ஷன் தன் டைரியைத் திறக்கவில்லை. அவன் கண்களை மூடி, தன் இதயத்திலிருந்து வந்தவரிகளை அப்படியே பேசினான்:

​”பெயரற்ற ஒருதேடலில்என்பேனாமுனைதவித்துக்கொண்டிருந்தது…

யார் நீ? என்கனவின்மிச்சமாஅல்லதுநிஜத்தின்ஆரம்பமா?

உன் மௌனம்ஆயிரம்மொழிகளைக்கற்றுத்தருகிறது…

அந்த மௌனத்தின்மொழிக்கு – என்

கவிதைகளை அர்ப்பணிக்கவா?”

​அவன்கவிதையை முடித்தபோது அரங்கத்தில் மயான அமைதி நிலவியது. சில நொடிகள் கழித்து இடி முழக்கத்தைப் போலக்கைதட்டல் கேட்டது. ஆனால், கவிவர்ஷனின் கண்கள் பிரக்யுவை மட்டுமே பார்த்தன. அவள் முகத்தில் ஒரு சிறு மாற்றம். அவளது உதடுகள் மெல்லத் துடித்தன. இதுவரை அவளது மௌனத்தை யாராவது மொழி பெயர்ப்பார்கள் என்று அவள் நினைத்ததே இல்லை.

​அன்று மாலை விழா முடிந்து வெளியே வரும் போது, பிரக்யு கவிவர்ஷனைத் தேடினாள். அவன் ஹர்ஷாந்துடன் கேன்டீன் ஓரம் நின்று பேசிக் கொண்டிருந்தான். அவளும் நிலாவுடன் கேண்டீன் வந்தமர்ந்தாள்

எதிரேவந்த ஒரு மாணவன் கவிவர்ஷனில் மோதியதில், கவிவர்ஷனின்கையில் இருந்த கவிதை டைரி நழுவித் தரையில் விழுந்தது. அது சரியாகப் கேன்டீனில் இருந்த  பிரக்யுதாராவின் காலடியில்போய் நின்றது.

​பிரக்யுதாரா குனிந்து அந்த டைரியை எடுத்தாள். அந்தச் சிறிய அசைவில் அவளது கையில் இருந்த வளையல்கள் எழுப்பிய ஓசை, கவிவர்ஷனின் காதுகளில் ஒரு சங்கீதமாக விழுந்தது. அவள் டைரியின் அட்டையைப் பார்த்தாள். அதில் கவிவர்ஷனின் அழகான கைப்பட “மௌனங்களின் மொழி” என எழுதப்பட்டிருந்தது.

டயரியை எடுக்க வந்தவனின் காதில் ” எக்ஸ்கியூஸ் மீ”  என பிரக்யுதாராவின் குரல்கேட்டு கவிவர்ஷன் நின்றான்.

​அவளது குரல் தேன்கூட்டில் இருந்து வழியும் தேனைப் போல மிக மென்மையாக இருந்தது.

​”உங்க கவிதை… அது… எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது,” என்று சொன்னாள்.

​கவிவர்ஷன்அவளது கண்களைப் பார்த்தவன். “தேங்ஸ். என் கவிதைக்கு ஒருஅர்த்தம் கிடைச்சிருக்கு,” என்றான்.

​”இது உங்களோடதா?”

​”ஆ… ஆமா… என்னோடது தான்,” என்று கவிவர்ஷன் திணறினான். அவனது நாக்கு தழுதழுத்தது. ஒரு கவிஞனாகச் சொற்களை ஆள்பவன், இன்று ஒரு பெண்ணின் முன்னால் சொற்களைத் தேடி அலைந்தான்.

​பிரக்யுதா அந்த டைரியை அவனிடம் நீட்டினாள். அவளது விரல்கள் கவிவர்ஷனின் விரல்களைத் தொட்ட அந்த ஒரு விநாடி… அது ஒரு மின்சாரத் தாக்குதலைப்போல அவனது உடலெங்கும் பரவியது. அவள் லேசாகப் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையில் ஆயிரம் கவிதைகள் ஒளிந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

அப்படியேசில நாட்கள் சென்றிருக்கும் கல்லூரியில் பிரக்யுதாரா அடிக்கடி கவி வர்சனின் கண்ணில் பட்டாள்.அவனும் மௌனமாய் கடந்து விடுவான்.  இப்பாழுதெல்லாம் கவிவர்சனின் இரவுகளின் கனவுகளை பிரக்யுதாராவே நிறைத்திருந்தாள். எப்போதாவது எழுதும் கவிதை இப்போது அடிக்கடி எழுதுவதாய் இருந்தது. ஹர்ஷாந்தும்  அண்ணனின் போக்கு புதிராய் இருக்க அவனின் கவிதையை பார்க்கக் கிடைத்ததில் அண்ணனின் காதலையும் புரிந்து கொண்டான்.

இவ்வாறு சில நாட்கள் செந்றிருக்கும்  வர்ஷனுக்கு கல்லூரி  கடைசி வருடம் என்பதால் அதிகமா லைஃப்ரரியிலே செலவழித்தான். அங்கு அடிக்கடி பிரக்யுதாராவை காணக் கிடைத்தது  சிறு  புன்னகையோடு இருவரும் கடந்து விடுவர். தன்னைப் பார்க்கும் போது  அவள் பார்வையில்  காதல் நிரம்பி வழிந்தது.

​அன்று மாலை, கல்லூரி முடிந்த பிறகும் கவிவர்ஷன் வீட்டிற்குச் செல்லவில்லை. மழை வலுவாகப் பெய்வதால் தம்பிக்காக காத்திருந்தான். மைதானத்தின் ஓரத்தில் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து மழையைப் பார்த்துக் கொண்டிருந்தான். மழை இப்போது வலுப்பெற்றுச் சாரலாகத் தூவிக்கொண்டிருந்தது. மண்ணின் வாசம் நாசியைத் துளைத்தது.

​அப்போது, ஒரு குடை அவனுக்குப் பின்னால்வந்து நின்றது.

​”மழையில நனைஞ்சா உடம்புக்கு ஆகாது கவி…”  அவள்ஒரு பெரிய நீல நிறக் குடையை ஏந்தி நின்றிருந்தாள். குடையின் விளிம்பிலிருந்து மழைத்துளிகள் முத்துப் போலக் கீழே விழுந்து கொண்டிருந்தன.

​”உனக்கு என் பேர் எப்படித் தெரியும்?” – கவிவர்ஷன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

​”உங்க  டைரியோட முதல் பக்கத்துல எழுதியிருந்தது. உங்க கவிதைகள் ரொம்பஅழகா இருக்கு. அதோட  காலேஜ்ல புள்ளா உங்களப் பற்றி தான் பேசினாங்க  ​ “அதோட காலேஜ்லேயே பேமஸான ஆளாச்சே”என்றவள் சிரிப்போடு அவனருகில் அமர்ந்தாள். அந்தச் சிறிய பெஞ்சில், மழைச் சாரலுக்கு நடுவே, ஒரு ஏழை மாணவனும்ஒரு கோடீஸ்வரரின் மகளும் அமர்ந்திருந்தனர். இருவருக்கும் இடையே இருந்த அந்தச் சில அங்குல இடைவெளி, ஒரு பெரிய சமுத்திரத்தைப் போலத் தோன்றினாலும், அவர்களின் மனங்கள் ஏற்கனவே ஒரு பாலத்தை அமைக்கத்தொடங்கியிருந்தன.

​பிரக்யுதாஅவனை உற்றுப் பார்த்தாள். அவளது கண்களில் இருந்த அந்த ஒளியில் கவிவர்ஷன் தன்னை இழந்தான். அவளது விழிகளில் ஒரு மர்மமான காந்தசக்தி இருப்பதை அவன் உணர்ந்தான். அவளுக்கும் தன்னை பிடித்துள்ளது என்பது  அவளது பேச்சில் புரிந்து கொண்டான்.

​வளாகத்தில்இருந்த மரங்கள் அசைந்தாடி அவர்களுக்கு ஆசி வழங்கின. அந்தத்தூரத்து நிலவு இப்போது கவிவர்ஷனின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் இருந்தது. ஆனால், அந்த நிலவை அடைய அவன் எத்தனை போராட்டங்களைச் சந்திக்கப் போகிறான் என்பது அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

​ ​பிரக்யுதா கிளம்பிச் சென்ற பிறகும், கவிவர்ஷன் அங்கேயே அமர்ந்திருந்தான். அவளது வாசனை இன்னும் அந்தப் பெஞ்சில் தங்கியிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவன் தனது டைரியைத் திறந்து ஒரு புதிய பக்கத்தில் எழுதினான்:

​”தூரத்து நிலவுதரையில்இறங்கிவந்திருக்கிறது…

“சாரல் மழையில்நனைந்தபடிஎன்இதயத்தைக்கேட்டிருக்கிறது!

“பதில் சொல்லத்தெரியாமல்என்மௌனம்சிரிக்கிறது…

“இனி சொற்கள் தேவையில்லை, உன்விழிகளேபோதும்!”

​அந்தமாலை நேரத்து இருளில், கவிவர்ஷனின் இதயத்தில் ஒரு தீபம் ஏறியிருந்தது. அது காதலின் தீபம். அந்தத் தீபம் அவனது வாழ்நாள் முழுவதையும் ஒளிரச் செய்யப் போகிறது, அல்லது அவனைச் சுட்டெரிக்கப் போகிறது. காலம் தான் அதற்கான விடையைச்சொல்ல வேண்டும். அந்த முதல் அறிமுகத்தில், ஆயிரம் கதைகள் பேசப்படாமல் இருந்தன. அந்த மௌனமே அவர்களின்காதலின் முதல் அத்தியாயமாக மாறியது.

❤️ Loading reactions...
அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மௌன ராகம்
2,468 124 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page