மௌன ராகம் 12

அத்தியாயம் 12:

​திருமணமண்டபத்தின் மேடையில் கவிவர்ஷன் கம்பீரமாக வந்து நின்ற அந்த நொடியில், பிரக்யுவின்நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. கடந்த மூன்று வருடங்கள்… அவை வெறும் நாட்கள்அல்ல, ஒவ்வொரு வினாடியும் கண்ணீரால் கோர்க்கப்பட்ட முள் மாலைகள். கவிவர்ஷன்லண்டன் சென்ற பிறகு, அந்தப் பெரிய பங்களா அவளுக்கு ஒரு மயானமாகவே மாறியிருந்தது.

​கவிவர்ஷன்லண்டன் சென்ற முதல் சில மாதங்கள், பிரக்யுஉணவின்றி உறக்கமின்றித் தவித்தாள். அவளது அறை ஒரு இருட்டுஅறையாக மாற்றப்பட்டது. ரூபன் அவளது அறையின் ஜன்னல்களை இரும்புச் சட்டங்களால் மூடினார். “உன் கவிஞன் வருவான்என்று காத்திருக்காதே, அவன் அங்கேயே ஒருவெள்ளைக்காரப் பெண்ணுடன் செட்டில் ஆகிவிடுவான்” என்று அவர் தினமும் அவளதுகாதுகளில் நஞ்சைக் கலப்பார்.

​அப்போதெல்லாம்அவளுக்குப் புகலிடமாக இருந்தது அவளது தாய் மேனகா மட்டும்தான். மேனகா ஒரு அதிகாரமிக்க கணவனின்நிழலில் ஒடுங்கிப் போன ஒரு சாதாரணப்பெண்மணி. ஆனால், ஒரு தாயாக அவர்தனது மகளுக்காக ரகசியமாக அழுதார்.

​ஒருமுறைநள்ளிரவில், பிரக்யு அழுது கொண்டே தரையில் சுருண்டு கிடந்தபோது, மேனகா மெல்ல அறைக்குள் நுழைந்தார். “பிரக்யு… இந்தாப்பா, கொஞ்சம் பால் குடி. நீஇப்படியே இருந்தா உன் உடம்பு தாங்காது” என்றார்.

​”அம்மா… அவர்அங்க எப்படி இருக்காரோ? அவருக்குக் குளிர் ஒத்துக்காதேம்மா. ஒருவேளை அப்பா சொன்னது போல அவர் என்னைமறந்திருப்பாரோ?” என்று பிரக்யு விம்மினாள்.

​மேனகாஅவளது தலையைத் தனது மடியில் கிடத்தினார். “இல்லைம்மா… ஒரு கவிஞன் தன்கவிதையை மறக்கலாம், ஆனா தன் காதலைமறக்க மாட்டான். உன் அப்பாவுக்குப் பணம்தான் கண்ணை மறைக்குது. ஆனா, எனக்குத் தெரியும்உன் கவிவர்ஷன் நிச்சயம் வருவான். அது வரை நீ உயிர் வாழணும்பிரக்யு” என்று ஆறுதல் சொன்னார். அந்தத் தாயின் வார்த்தைகள் தான் பிரக்யுவை அந்தமுதலாம் ஆண்டு தற்கொலை எண்ணங்களில் இருந்து காப்பாற்றியது.

​இரண்டாம்ஆண்டில், ரூபன் அவளை மீண்டும் கல்லூரிக்குஅனுப்பச் சம்மதித்தார். ஆனால், அது ஒரு நிபந்தனையுடன்அவளைச் சுற்றி எப்போதும் நான்கு ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் இருப்பார்கள். அவள் யாரிடமும் பேசக்கூடாது. அவள் ஒரு கைதியைப்போலவே கல்லூரிக்குச் சென்று வந்தாள்.

​அந்தநாட்களில், மேனகா அவளுக்கு ஒரு ரகசிய உதவியைச்செய்தார். ரூபனுக்குத் தெரியாமல் கவிவர்ஷன் லண்டனில் இருந்து எழுதிய சில கடிதங்களை (அவைஹர்ஷாந்த் மூலம் மேனகாவிடம் வந்து சேர்ந்தவை) பிரக்யுவிடம் சேர்த்தார்.

​”இந்தாம்மா… இதைஉன் அப்பா பார்த்தார்னா என் உயிரே போயிடும். சீக்கிரம் படிச்சிட்டு இதை எரிச்சிடு” என்றுமேனகா அந்தத் தாள்களை நீட்டுவார்.

​அந்தக்கடிதங்களில் இருந்த கவியின் வரிகள் பிரக்யுவுக்கு ஆக்சிஜனாக அமைந்தன. பிரக்யு, உனக்காக நான் ஒரு சாம்ராஜ்யத்தையேவென்று வருவேன்’ என்று கவி எழுதியிருந்தான். மேனகாதனது மகளின் முகத்தில் அந்த ஒரு நொடிப்புன்னகையைப் பார்ப்பதற்காகத் தனது கணவனின் கோபத்தையும்எதிர்கொள்ளத் தயாராக இருந்தார். ரூபன் ஒருமுறை மேனகாவைக் கண்டித்தபோது, “அவள் என் மகள், அவளுக்கு நான் துணை இருப்பேன்” என்று முதல்முறையாக அவர் எதிர்த்துப் பேசினார். அதற்காக அவர் ஒரு வாரம்அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டார். அந்தத் தாயின் தியாகம் பிரக்யுவின் காதலுக்கு உரமானது.

​மூன்றாம்வருடம் முடிந்தபோது, ரூபனின் பொறுமை இழந்தது. மும்பையைச் சேர்ந்த ராகுல் என்பவனுடன் திருமணத்தை உறுதி செய்தார். பிரக்யு பிடிவாதமாக மறுத்தாள்.

​”நான் யாருக்கும்கழுத்தை நீட்ட மாட்டேன் அப்பா! கவிவர்ஷன் வருவார்!” என்று அவள் கத்தினாள்.

​ரூபன்அவளது கையைப் பிடித்துத் திருகினார். “வருவானா? அவன் அங்க சொகுசாஇருக்கான். இதோ பார், அவன்வேறொரு பெண்ணுடன் இருக்கும் இந்தப் புகைப்படத்தைப் பார்!” என்று மார்பிங் செய்யப்பட்ட ஆதாரங்களைக் காட்டினார்.

​மேனகாஅங்கே வந்து குறுக்கிட்டார். “நிப்பாட்டுங்க! என் மகளை இப்படிச்சித்திரவதை பண்ணாதீங்க. அவளுக்கு விருப்பம் இல்லைன்னா விட்டுடுங்க” என்று கதறினார்.

​ரூபன்மேனகாவைப் பிடித்துத் தள்ளினார். “நீ வாயை மூடு! இவளுக்குக் கல்யாணம் நடக்கும். இல்லைன்னா, அந்த கவிவர்ஷன் தம்பிஹர்ஷாந்த் இப்போ காலேஜ் போயிட்டு இருக்கான்ல… அவன் உயிரோட இருக்கமாட்டான்” என்று மிரட்டினார்.

​தம்பியின்உயிருக்காகப் பிரக்யு மண்டியிட்டாள். “வேண்டாம் அப்பா… அவனை விட்டுடுங்க. நான்கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறேன்” என்று அழுதாள்.

​அந்தகடைசி ஆறு மாதங்கள் மேனகாவும்பிரக்யுவும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டே அழுதார்கள். “மன்னிச்சுடும்மா… உன்னைக் காப்பாத்த இந்தத் தாயால முடியலையே” என்று மேனகா புலம்புவார். பிரக்யுவோ, “பரவாயில்லைம்மா… என் காதல் தோற்றாலும், கவிவர்ஷன் எங்கோ ஓரிடத்தில் நிம்மதியாக வாழட்டும்” என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

உண்மைஅதுவல்லவே அவளோ காதலுக்காக பிரிவைஏற்றாள் ஆனால் அத் தாயோ மகனின்முன்னேற்றத்திற்காகவும்வெற்றிக்காகவும் பிரிவை ஏற்றாள். இருவரின் பிரிவையும் ஏற்றது கவியல்லவா அவன் அடைந்த கஷ்டம்அங்கு பலவல்லவா

​இதோ… இப்போது அதே கவிவர்ஷன் அவள்முன்னால் நிற்கிறான். பழைய மெலிந்த கவிஞனாகஅல்ல, ஒரு மாபெரும் சக்தியாக.

​மேடையில்மேனகா ஒரு ஓரமாக நின்றுகொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். தனக்கு எல்ல வளமும் கிடைத்தலும்ரூபன் கைதியாகவல்லாவ தன்னை வைத்திருந்தர் அவரின் விரப்பப்படி மட்டுமே வாழ்ந்தார். இல்லை வாழ வைக்கப்பட்டார் மேனகா. மகயுக்கும் அந்நிலை வரக்கூடாது என த் தாயுள்ளம்விரும்பியது.  வர்ஷனோடுதன் மகளின் வாழ்வு சிறக்கும் என அத் தாயுள்ளம்எண்ணியதால் அல்லவா இவ்வளவு நாளும் அவளுக்கு பக்கபலமாக இருந்தார். 

“என் மகளோடதவம் பலிச்சுடுச்சு… கவிவர்ஷன் வந்துட்டான்!” என்று அவர் மனதிற்குள் வேண்டிக்கொண்டார்.

​கவிவர்ஷன்பிரக்யுவின் அருகில் சென்றான். அவளது கண்கள் கடந்த மூன்று வருட வலியைக் கதையாகச்சொல்லிக் கொண்டிருந்தன. கவி மெதுவாகத் தனதுகையை நீட்டி அவளது கன்னத்தில் இருந்த கண்ணீரைத் துடைத்தான்.

​”பிரக்யு… இனிஅந்த மூன்று வருஷ நரகம் உனக்குத்தேவை இல்லை. உன் அம்மா உனக்காகப்பட்ட கஷ்டத்துக்கு ஒரு அர்த்தம் கிடைக்கிறநேரம் வந்துடுச்சு” என்றான் மேனகாவை பார்தபடி கவிவர்ஷன்.

​ரூபன்ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றார். “டேய்! யார் நீ? என்பொண்ணைத் தொட உனக்கு என்னதகுதி இருக்கு? செக்யூரிட்டி! இவனை இழுத்துட்டுப் போய்வெட்டுங்கடா!” என்று கத்தினார்.

​ஆனால், மண்டபத்தைச் சுற்றியிருந்த ரூபனின் அடியாட்கள் அனைவரும் கவிவர்ஷனின் பிரத்யேகப் பாதுகாப்புப் படையினரால் ஏற்கனவே சுற்றி வளைக்கப்பட்டிருந்தனர்.

​கவிவர்ஷன்ரூபனின் கண்களை நேருக்கு நேர் பார்த்தான். “தகுதியா சார்? நீங்க வச்சிருக்கிற அந்தஸ்து, பணம் எல்லாம் இப்போஎன் காலடியில இருக்கு. நீங்க மிரட்டிச் சாதிச்ச அந்த மூன்று வருஷக்கதையை நான் இப்போ ஒருநொடியில முடிக்கப் போறேன். ஹர்ஷா! அந்த ஃபைலை எடு!”

​ஹர்ஷாந்த்ஓடி வந்து ஒரு முக்கியமான கோப்பைரூபனிடம் நீட்டினான். “பார் சார்! உங்கசாம்ராஜ்யத்தோட சாவு மணி இதோஎன் அண்ணன் கையில இருக்கு” என்றான் ஹர்ஷாந்த் ஆவேசமாக.

​மேடையில்இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பிரக்யுவின் கண்களில் மட்டும் ஒரு புதிய நம்பிக்கைமின்னியது. மேனகா தனது மகளின் கையைப்பற்றிக்கொண்டு, “பயப்படாதேம்மா… விடியல் வந்துடுச்சு” என்று முணுமுணுத்தார்.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மௌன ராகம்
2,489 124 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page